Saturday, March 5, 2011

உயிரை (உண்மையிலேயே ) கொடுத்த வீரர் – மறக்க முடியாத கிரிக்கெட் சம்பவங்கள்- 1



கிரிக்கெட் இன்றைய அவசர காலத்துக்கு ஏற்ப வெகுவாக மாற்றம் அடைந்து விட்டது.
இது நல்லதுதான் என்றாலும், இதில் ஒரு முக்கிய இழப்பு ஏற்பட்டுள்ளதை நீண்ட நாள் ரசிகர்கள் மறுக்க முடியாது.
ராஜஸ்தான் ராயல் அணி சென்னையை , ட்வெண்டி ட்வெண்டி ஃபைனலில் , முன்பொரு ஃபைனலில் வீழ்த்தியது அல்லவா? அப்போது சென்னைக்கு பாதகமாக என்ன நிக்ழந்தது? அந்த போட்டியிம் டர்னின்ங் பாயிண்ட் என்ன?
இப்போது யாருக்கும் நினைவு இருக்காது… காரணம் அடுத்தத்து நடக்கும் பந்தயங்கள்.. அடுத்தடுத்த நிகழ்வுகள்…அதற்கு பின், சென்னை வென்றது…
அதில் கடைசி கட்டத்தில் அமைத்த ஃபீல்டிங் வியூகம் , வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது..
முன்பெல்லாம் இது போன்ற சம்பவங்கள் வெகுகாலம் மனதில் நிற்கும்.. இப்போது அப்படி இருக்க வாய்ப்பில்லை…
அந்த வகையில், நினைவில் நிற்கும் சில பழைய சம்பவங்களை யோசித்து பார்த்தால் , கிரிக்கெட் எவ்வளவு தூரம் கடந்து வந்து இருக்கிறது என்பது புரியும்…
இதோ சில சுவையாக சம்பவங்கள் உங்கள் பார்வைக்கு…

இப்படி ஓர் ஐடியா
  • இங்கிலாந்தும் , மேற்கு இந்திய தீவுகளும் ஒரு போட்டியில் கடுமையாக மோதின.. பரபரப்பான கட்டம்.. மே.இ. தீவுகளுக்கு மூன்று ரன் தேவை… கடைசி பந்து.. இங்கிலாந்து கேப்டன் மைக் பிரர்லீ ஓர் ஐடியா செய்தார்.. அனைத்து ஃபீல்டர்களையும் – விக்கட் கீப்பர் உட்பட- எல்லை கோட்டுக்கு அனுப்பினார்…. பத்து பேரும் எல்லை கோட்டில்… ஆகவே ஃபோர் அடிக்க வாய்ப்பே இல்லை… சிக்ஸ் அடித்தால்தான் உண்டு… அந்த வியூகம் இங்லாந்துக்கு வெற்றி தேடி தந்தது… ( ஆனால் இது போல அனைவைரையும் , எல்லை கோட்டுக்கு அனுப்ப கூடாது என பிறகு விதி முறை கொண்டு வரப்பட்டது. )
திருட்டு வெற்றி அல்ல,,, உருட்டு வெற்றி
  • ஆஸ்திரேலியா – நியூசிலாந்து போட்டி. இறுதி ஆட்டம்… நியூசிலாந்துக்கு ஆறு ரன் தேவை, கடைசி பந்தில்.. ஆஸ்திரேலியா கேப்டன் கிரக் சேப்பல் , அப்போது பந்து வீசிய தன்  தம்பிக்கு ஐடியா கொடுத்தார்..
        என்ன ஐடியா?
         பந்தை உருட்டி விடு..அவர்கள் எப்படி சிக்ஸ் அடிக்கிறார்கள் பார்க்கலாம்..
இந்த ஐடியா வேலை செய்தது… ஆஸி அணி வென்றது ( இந்த கொடுமையை எதிர்த்து அனைவரும் குரல் கொடுக்கவே, இப்படி உருட்ட கூடாது என பிறகு விதி முறை கொண்டு வரப்பட்டது )

 

    image
போட்டி வேண்டாம்.. கோப்பை வேண்டும்
  • மூன்றில் இரண்டு போட்டிகளில் வெல்லும் அணிக்கு கோப்பை என்ற நிலை. முதல் ஆட்டத்தில் மே.இ. தீ அணி வென்றது . பரபரப்பான இரண்டாம் ஆட்டம்… கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்தால் வெல்லலாம் என்ற நிலையில், மே இ அணி இருந்தது.. ஆனால் வெற்றி ரன் எடுக்க முடியவில்லை… அதாவது மேட்ச் டை ஆகி விட்டது . இரண்டு ஆட்டங்கள் முடிந்த நிலையில், மே இ அணி 1-0 என்ற நிலையில் முன்னணியில் இருந்தது… “ நாங்கள்தான் முன்னணியில் இருக்கிறோம். கடைசி ஆட்டத்தில் நாங்கள் தோற்றாலும், தொடரை இழக்க மாட்டோம்..  எனவே மூன்றாம் ஆட்டம் வேண்டாம்.. கோப்பையையும், கன்வேயன்சையும் கொடுங்கள் ..கிளம்புகிறோம் “ என்று அடம் பிடித்தனர் மே இ அணியினர்.. ஆனால் இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது… தொடர் சமன் ஆனாலும் பரவாயில்லை என கடைசி ஆட்டத்தை நடத்தினர்… நல்லவேளையாக அதில் வென்று 2-0 என்ற கணக்கில் மே இ அணி கோப்பையை கைப்பற்றியது…
கிரிக்கெட் விளையாட்டில் ஜெயித்தேன்.. விதியின் விளையாட்டில் ?
  •     கவாஸ்கர் ஓய்வு பெற்று விட்ட நிலையில், நல்ல ஓப்பனர் இல்லாமல் இந்தியா தடுமாறியது.. அப்போது File:Ramanlambadelhi1.jpgவந்து அணியில் சேர்ந்தவர்தான் ராமன் லம்பா… டெஸ்டை விட, ஒரு நாள் போட்டியில் அசத்தினார்…. ஒரு ரவுண்ட் வருவார் என அனைவரும் எதிர்பார்த்தனர்.
ஆனால் அப்போது நடந்த உள்ளூர் ஆட்டம் அனைத்தையும் மாற்றும் என யாரும் எதிர்பார்த்து இருக்க முடியாது..
துலீப் டிராப்பி ஆட்டத்தில் மேற்கு மண்டலமும் , வடக்கு மண்டலமும் மோதின.. அப்போது இரு அணியினருக்கும் அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டு வந்தது… கடைசி நாள் ஆட்டத்தில், ரஷீத் பட்டேலுக்கும் ( இவர் ஒரு போட்டியில் இந்தியாவுக்கு ஆடியுள்ளார் ) , ராமன் லம்பாவுக்கும் கடும் சண்டை ஏற்பட்டு , கைகலப்பில் முடிந்தது…இதனால் இருவரது கிரிக்கட் வாழ்வும் முடிவுக்கு வந்தது..
இந்திய அணியில் இடம் இல்லை என்ற நிலையில், வங்க தேச கிளப் ஆட்டங்களில் ஆட தொடங்கினார் லம்பா.
ஓர் ஆட்டத்தில், ஷார்ட் லெக்கில் , பேட்ஸ்மேனுக்கு அருகில், நின்று ஃபீல்ட் செய்தார் லம்பா.. ஹெல்மட் அணியவில்லை.. அப்போது பேட்ஸ் மேன் அடித்த ஒரு பந்து அவர் தலையை கடுமையை தாக்கியது… பதறிபோன அனைவரும், அவர் அருகில் சென்றனர்.. “ என்ன ஆச்சு ? “ என்றார் விக்கட் கீப்பர் .. “ நான் சாக போகிறேன் “ வேதனையில் முனகினார் லம்பா…
அதன் பின் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார் அவர்…

( தொடரும் )

15 comments:

  1. /“ நான் சாக போகிறேன்“ நான் சாக போகிறேன்//

    இதெல்லாம் அவர் சொல்லவில்லை. மருத்துவனையில் சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் பிறகு இறந்தார். தவறான தகவல்களை போடாதீங்க

    ReplyDelete
  2. படிக்க சுவாரஸ்யமா இருந்தது

    ReplyDelete
  3. படிக்க சுவாரஸ்யமா இருந்தது"

    ந்ன்றி

    ReplyDelete
  4. /“ நான் சாக போகிறேன்“ நான் சாக போகிறேன்//

    இதெல்லாம் அவர் சொல்லவில்லை. மருத்துவனையில் சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் பிறகு இறந்தார். தவறான தகவல்களை போடாதீங்க ”””

    நண்பரே.... நான் கொடுத்தது சரியான தகவல்தான்...

    இதோ அந்த செய்தி..உங்கள் பார்வைக்கு

    Batsman Mehrab Hossain hit the ball hard, and it hit Lamba in the head and rebounded to wicket-keeper Khaled Mashud. Mohammad Aminul Islam, the former Bangladesh captain, recalled "I was the new man in and asked Raman if he was okay. He said, 'Bulli [Islam's nickname is Bulbul] main to mar gaya' [I am dead, Bulli]

    ReplyDelete
  5. ஆகா ..தெரியாதா பல சுவாரசியமான கிரிக்கெட் நிகழ்வுகள் ..நன்றி .. இவற்றின் ஒளிப்படங்கள்(வீடியோ ) இல்லையா ?

    ReplyDelete
  6. சூப்பர்...! அப்படியே...ரீவைண்ட் பண்ணிப்பாத்தது மாதிரி இருந்தது போங்க...! ரெண்டாவதா "திருட்டு வெற்றி அல்ல.., உருட்டு வெற்றி", அந்த 'அண்டர் ஆர்ம் போட்டி....', அது மகா கொடுமைங்க...!

    ReplyDelete
  7. மருத்துவனையில் சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் பிறகு இறந்தார்”

    உணமைதான்..

    அவர் இறந்து விடுவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை.. கடும் காயம் காரணமாகவும், வலி காரணமாகவும், அவர் அப்படி சொன்னாலும் ( நான் சாக போகிறேன் ) அவர் குணமாகி விடுவார் என்றே அனைவரும் நினைத்தனர்... மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்...

    வேறு இடத்தில் நின்று ஃபீல்ட் செய்து கொண்டு இருந்த அவர், அங்கு வர முடிவு செய்ததும் கெட்ட நேரமாகி விட்டது

    ReplyDelete
  8. சார் சூப்பரா இருக்கு , பந்து உருட்டி ஜெயித்ததெல்லாம் நம்பமுடியலையே அந்த மேட்ச் நடந்த ஆண்டையும் சேர்த்து போடுங்க தலைவரே

    ReplyDelete
  9. காலத்திற்கேற்ற பதிவு. அருமை நண்பா : ) பாவம் லம்பா :(

    ReplyDelete
  10. சார் சூப்பரா இருக்கு , பந்து உருட்டி ஜெயித்ததெல்லாம் நம்பமுடியலையே அந்த மேட்ச் நடந்த ஆண்டையும் சேர்த்து போடுங்க தலைவரே"

    நடந்தது 1981 ல்...

    ReplyDelete
  11. எல்லா மேட்ச் நடந்த ஆண்டையும் சேர்த்து போடுங்க சார்

    ReplyDelete
  12. ஆகா ..தெரியாதா பல சுவாரசியமான கிரிக்கெட் நிகழ்வுகள் ..நன்றி .. இவற்றின் ஒளிப்படங்கள்(வீடியோ ) இல்லையா ?”

    இதோ இணைத்து விட்டேன்...

    சிலர் ஒளிப்படங்களை விரும்புவதில்லை ..எனவேதான் நான் இணைப்பதில்லை...உங்களுக்காக இணைத்துள்ளேன்

    ReplyDelete
  13. எல்லை கோட்டுக்கு அனுப்பிய ஆண்டு - 1980, சிட்னி

    உருட்டல் மூலம் உலகை மிரட்டியது - 1981

    ””டை ஆகி மண்”டை” காய வைத்த சம்பவம் - 1984


    ராமன் லம்பா= ஃபிப் 1998 , டாககா

    ReplyDelete
  14. கேள்விப்படாத புதிய தகவல்.

    ReplyDelete
  15. தெரியாத தகவல்கள்.. தொடருங்கள்..

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா