Pages

Saturday, March 12, 2011

சில பதிவர்களிடம் நான் எதிர்பார்க்கும் இடுகைகள்- நேயர் விருப்பம் – பாகம் 1

 

நேர்மையான எழுத்து என்றால் அதை பதிவுலகில்தான் காண முடிகிறது .. நிறைய விஷயங்கள் அச்சு ஊடகத்தில் வருவதில்லை.. அவௌ பதிவுலகில் படிக்க கிடைக்கின்றன.. சுவையாக , பலவித பாணியில் பலர் எழுதுகிறார்கள்.

இந்த காரணங்களால், அனைத்து பதிவர்களையும் ஆர்வமாக கவனிப்பது என் இயல்பு..

சில பதிவர்களை அருமையான எழுத்துக்களை படிக்கும்போது, இவர்கள் வேறொரு  விஷ்யத்தை எழுதினால் எப்படி இருக்கும் என எனக்குள் ஓர் எண்ணம் ஓடும் …

அவ்ர்களுக்கு தோன்றுவதை சிற்ப்பாக எழுதுகிறார்கள்.. எனக்கு தோன்றுவதை அவர்கள் பார்வையில் , அவர்கள் பாணியில் எழுதினால் எப்படி இருக்கும்?

கண்டிப்பாக நன்றாக இருக்கும்.. வித்தியாசமாகவும்  இருக்கும்…

அந்த வகையில், சில பதிவர்கள் இந்த விஷ்யங்கள் குறித்து எழுதினால் எப்படி இருக்கும் என நான் யோசித்து வைத்தது நிறைய இருக்கின்ற்ன.. சில மட்டும் உங்கள் பார்வைக்கு..

நேரம் கிடைத்தால் அவர்கள் இது குறித்து எழுத வேண்டும் என்பது என் கோரிக்கை

இது முதல் கட்ட பட்டியல்… அடுத்தடுத்து பட்டியல் தொடரும்…

*********************************************************************

1 நா.மணிவண்ணன் ( வம்ப வெலைக்கு வாங்குவோம்ல)

      இவர் சுய தொழில் செய்பவர்,,, தொழிலின் வெற்றிக்கு என்ன காரணம்..எப்படி திட்டமிட வேண்டும் ..என்ன சிக்கல்கள் வரும் என்பது போன்று ஆங்கிலத்தில் வரும் பிசினஸ் கட்டுரைகள் போல ஓர் இடுகை இவர் எழுதி, அதை படிக்க ஆசை..

2 கொஞ்சம் வெட்டி பேச்சு சித்ரா மேடம்.

     தரமான நகைச்சுவைக்கு மறுபெயர் இவர் பெயர்தான்…  அட்லீஸ்ட் ஒரு மெல்லிய புன்னகையாவது இல்லாமல் இவர் எழுத்தை படிக்க முடியாது… சற்று மாறுதலுக்கு ஒரு சீரியஸ் பதிவு எழுதி , அதை படிக்க வேண்டும் என்பது என் ஆவல் ..

 

3 வெண் தயிர் மனசு (செல்ல நாய்குட்டி )

தரமான கதைகளை, மனித உறவுகளை , மன்ங்களை கவனித்து, காட்சி படுத்தி எழுதுபவர் இவர்… இவர் ஒரு கிரைம் கதை, பேய் கதை, எழுதினால் அது மிக சிறப்பாக வரும்… எழுதுவாரா?

 

4 வானம் தாண்டிய சிறகுகள் (ஜீ )

சினிமா குறித்து இவர் எழுதுவது அபாரம்.. கவனிப்புதன்மை இவர் பிளஸ் பாயிண்ட்… ஒரு மாறுதலுக்கு, படம் பற்றி எழுதாமல் பாடல் பற்றி எழுதினால் எப்படி இருக்கும்..

மலேஷியா வாசுதேவன் பற்றிய கட்டுரை அருமை…  எஸ் பி பாலசுப்ரமணியம் பாடிய சில பாடல்கள் , அவருக்க்கான பாடல்களே இல்லை.. அதை அவர் பாடி இருக்க கூடாது என சில சமயம் தோன்றும்… அவருக்கு என்று இல்லை..எல்லா பாட்கர்களுமே சில சமயம் த்மக்கு ஒவ்வொத பாடல்கள் பாடி இருக்கலாம்…  உங்கள் பார்வையில் அப்படிப்பட்ட தவறான பாடல்க்ள் என்ன ?

5 middleclassmadhavi

பேணி வளர்த்த பெற்றோருக்கு வலைப்பூவை சமர்ப்பிப்பவர் இவர்.. அருமையான பெற்றோர், அருமையான வாழ்க்கை துணைவர் , நல்ல குழந்தைகள் என கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர் . இப்படி பட்டவர் தன் இயற்பெயரில் ஒரு ட்விஸ்ட் இருக்கிறது என சொன்னது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது..அது என்ன என்பதை படிக்க விரும்புகிறேன் என சொல்லவில்லை…( அதை வேறொரு சந்தர்ப்பத்தில் சொல்வதாக சொல்லிவிட்டார் ) 

 

இவரிடம் எதிர்பார்ப்பது, முதலில் ஒரு கதை எழுதினாரே..சவால் சிறுகதை போட்டிக்கு…அதை பற்றி… எப்படி கதை தோன்றியது… எப்படி டெவலப் செய்தார்… அந்த அனுபவ கட்டுரை…

6  Gopi Ramamoorthy (  R கோபி )

வாசிப்பனுபவம், எழுத்தனுபவம் மிக்கவர் இவர்.. பிடித்த புத்தகங்கள், சினிமாக்கள் பற்றி எழுதுவதை ரசித்து படிப்பேன்…

ஓவர் ரேட்டட் புக்ஸ் / ஸ்டோரீஸ் பட்டியல் ( தகுதிக்கு அதிகமாக புகழ்ப்பட்டும் புத்தகம் ஏமாற்றம் அளித்த புத்தகம் பட்டியல் ) இவர் வெளியீடு, அதற்கு காரணமும் சொன்னால் , சுவையாகவும் இருக்கும்,, பயன்படவும் செய்யும்… அல்லது அண்டர் ரேட்டட் புத்தகங்கள் பற்றியும் சொல்லலாம்

7 பிலாசபி பிரபாகரன்..

இவர் கொஞ்ச நாளாக எழுதவில்லை.. எனவே என்ன எழுதினாலும் நல்லதுதான்…எழுதுவதை தொடர்ந்தால் சரி.

8 மெட்ராஸ் பவன் சிவகுமார்

மாணவர்களின் படிப்பை கிரிக்கெட் கெடுப்பதை பற்றி நானும் அவரும் விவாதித்தோம்.. சிலர் கிரிக்கெட்டை விட சினிமாதான் படிப்பை கெடுக்கிறது என்று சொலவது குறுத்து சினி ப்ரியரான இவர் என்ன சொல்கிறார்…சினிமா கிரிக்கெட்- ஓர் ஒப்பீட்டு கட்டுரை இவர் எழுதி படிக்க ஆசை

9 கனாகாதலன்..

நான் டெல்லியில் இருந்தபோது, கை ரிக்‌ஷாவில் ஏற ஒருவர் அழைத்தபோது குழம்பினேன்… ஏறாவிட்டால், அவருக்கு கிடைக்க வேண்டிய கூலியை தடுப்பது போல ஆகும்.. ஏறினால், ஒருவர் நம்மை வைத்து இழுப்பதை பார்க்கும் கொடுமையை பார்க்க நேரும்..

வட நாட்டு போக்கு வரத்து வசதிகள் குறித்து இவர் எழுதியதை படித்த போது என் நினைவுக்கு வந்தது இது..

ஆனால் சில விஷ்யங்களில் வட நாடு முன்னேறி இருக்கிறது… மக்கள் கலாச்சாரம், பழகுதல் என்பதிலும் வேறுபாடு இருக்கிறது.. வட மானிலங்கள் , தமிழ் நாடு – ஒப்பிடுக .. இதற்கான பதிலே நான் எதிர்பார்ப்பது

10 ஹைக்கூ அதிர்வுகள் ஆனந்தி

ஆண்களை கிழி கிழி என கிழித்து ஒரு பதிவு இட்டிருந்தார் இவர்… அனைத்து ஆண் பதிவர்களும்  , அவர் தம்மை தவிர மற்றவர்களை சொல்கிறார் என நினைத்து அந்த இடுகையை பார்ரட்டினர்.. உரிமைக்கு குரல் கொடுத்தவன் நான் மட்டும்தான்..

அதுவல்ல நான் சொல்ல வருவது..

ஆண்களுக்கே உரிய ஐந்து நல்ல விஷ்யங்கள். பெண்களுக்கு மட்டுமே உரிய ஐந்து நல்ல பண்புகள்…இந்த தலைப்பில் இவர் எழுதினால் ???

 

 

( விருப்பம் தொடரும் )

17 comments:

  1. பார்வையாளன், ஏன் இந்தக் கொலைவெறி:-)

    ReplyDelete
  2. //உரிமைக்கு குரல் கொடுத்தவன் நான் மட்டும்தான்..//

    ஹலோ.. என்னோட பின்னூட்டத்தை படிக்கலையா.??? ஆனந்திக்கு கொடுத்த தலைப்பு எனக்கு பிடிக்கவில்லை..

    பிடித்த தலைப்பு என்றால் ஜீ,மாதவி,சிவகுமார் மற்றும் கனாகாதலனுக்கான தலைப்பு..

    ReplyDelete
  3. ஆனந்திக்கு கொடுத்த தலைப்பு எனக்கு பிடிக்கவில்லை"

    பாஸ்..உங்களுக்கான தலைப்பு அதை விட டெர்ரரா இருக்கும்... வெயிட் அண்ட் சீ

    ReplyDelete
  4. .பார்வையாளன், ஏன் இந்தக் கொலைவெறி:-)”

    பொது வாழ்க்கைல , இதை எல்லாம் சந்திச்சுதான் ஆகணும்

    ReplyDelete
  5. " நண்பன் கேட்டா வாங்கிக்கன்னு சொல்லுவேன் " :)

    ReplyDelete
  6. //
    கொஞ்சம் வெட்டி பேச்சு சித்ரா மேடம்.

    தரமான நகைச்சுவைக்கு மறுபெயர் இவர் பெயர்தான்… அட்லீஸ்ட் ஒரு மெல்லிய புன்னகையாவது இல்லாமல் இவர் எழுத்தை படிக்க முடியாது… சற்று மாறுதலுக்கு ஒரு சீரியஸ் பதிவு எழுதி , அதை படிக்க வேண்டும் என்பது என் ஆவல் //
    //

    நீங்க சரியா படிக்கலைன்னு நினைக்கிறேன். அவுங்க நிறைய சீரியஸ் பதிவு எழுதி இருக்காங்க. முக்கியமா அவுங்க எழுதுன இரட்டை சகோதரிகள் பதிவை நான் இன்னும் மறக்கல.

    ReplyDelete
  7. அவுங்க எழுதுன இரட்டை சகோதரிகள் பதிவை நான் இன்னும் மறக்கல."

    நானும் மற்க்கலை ந்ண்பா.

    மற்க்க முடியாது...

    சோக மயமான பதிவு அது..இனி அப்படி ஒரு பதிவு எழுதும் நிலை என்றுமே வரக்கூடாது என்பது என் விருப்பம்..

    நான் சொல்வது அது அல்ல..

    ஒரு சீரியஸனா பிரச்சினை குறித்து, சீரிய்சனா நடையில் எழுதுவது....

    ReplyDelete
  8. என்னைப் பாராட்டி எழுதியிருக்கிறீர்கள், நன்றி.

    கடவுளின் ஆசிகள் எளிதில் கிடைப்பதில்லை, பல சோதனைகள், இன்னல்கள் என்று பரிட்சித்த பிறகே அவரின் ஆசிகள்; இவற்றை முழுமையாக நான் இன்னும் அடையவில்லை என்பது என் தாழ்மையான கருத்து!

    நீங்கள் கேட்பது கதை எழுதிய அனுபவக் கட்டுரை தானே! ஏற்கெனவே பாதி எழுதியாச்சு! மிச்சமும் எழுதினால் போச்சு! நன்றி!

    ReplyDelete
  9. சார் சார் ஏன் சார் நா அவ்வளவு பெரிய ஆள் இல்ல சார் , ஆஹா சரிதான் என்னைய வச்சு காமெடிக்கு ட்ரை பண்றீங்களா ?

    ReplyDelete
  10. சார் சார் ஏன் சார் நா அவ்வளவு பெரிய ஆள் இல்ல சார் ,

    ஒவ்வொருவரும் பெரிய ஆள்தான்..

    உங்கள் அனுபவம் அனைவருக்கும் பயன்படவேண்டும் என்பதே என் நோக்கம்..

    தயவு செய்து எழுதுங்கள்..அல்லது தொலைபேசி பேட்டி எடுத்து பிரசுரிக்கிறேன்

    ReplyDelete
  11. கடவுளின் ஆசிகள் எளிதில் கிடைப்பதில்லை, பல சோதனைகள், இன்னல்கள் என்று பரிட்சித்த பிறகே அவரின் ஆசிகள்”

    இது போன்ற கருத்துக்களுக்காகத்தான் உங்களை எழுத சொன்னேன்,.

    ReplyDelete
  12. என்னைப்போன்ற கத்துக்குட்டி பேர் எல்லாம் பதிவுல வருது. மகிழ்ச்சி. சினிமா, கிரிக்கெட் இரண்டும் அளவுக்கு மீறி ஒரு தனிமனிதன் வாழ்வில் ஆதிக்கம் செலுத்துவதுதான் பிரச்சனையே. நேரவிரயம், பணத்தை சக்திக்கு மீறி செலவிடுதல் போன்றவற்றிற்கு வழிவகுக்கும். நான் சினி பிரியன் என்பதை விட நல்ல சினிமாக்களின் பிரியன் என்று சொல்லலாம். அதிக ரத்தம், ஆபாசம், மத இன தாக்குதல், காப்பி அடித்தல், சுய புராணம் பாடுதல் போன்ற சினிமாக்கள் என் விருப்பப்படங்களின் லிஸ்ட்டில் இருக்காது என்பது தங்களுக்கு தெரியும்.

    ReplyDelete
  13. ///ஒவ்வொருவரும் பெரிய ஆள்தான்..

    உங்கள் அனுபவம் அனைவருக்கும் பயன்படவேண்டும் என்பதே என் நோக்கம்..///

    நல்ல நோக்கம் சார்
    நா பண்றது சீசனல் பிசினஸ் சார் , அந்த அளவிற்க்குலாம் அனுபவம் இல்லை அந்த ஆரம்பிச்சே கொஞ்ச நாள் தான் ஆகுது , பவர் கட் இருந்தாதான் நா அந்த பிசினஸ் பண்ணுவேன் ,இப்பவே வேற பிசினஸ் பண்ணலாமா யோசிக்கிறேன்

    ஒரு கட்டுரை எழுதுற அளவிற்க்கெல்லாம் அனுபவம் இல்லை சார்நம்புங்க சார் (யாரையாச்சு சிக்கல் மாட்டிவிடறதே வேலையா போச்சு சார் உங்களுக்கு )

    ReplyDelete
  14. மணிவண்ணன் சார் . நிறைகுடம் தழும்பாதுனு ப்ரூ பண்றீங்க . பரவாயில்ல . சில கேள்விகள் அனுப்புறேன் . பதில் அனுப்புங்க

    ReplyDelete
  15. ஆகா! என்ன பாஸ்! இப்படி மாட்டிவிட்டுட்டீங்களே! ஏன் இந்தக் கொலவெறி? :-)

    சரி முயற்சி செய்து பார்க்கலாம்! ஆனா எப்போ எழுத முடியும்னுதான் சொல்லத் தோணல!! :-)

    ReplyDelete
  16. மிக்க நன்றி பார்வையாளன். இப்போ தான் பார்த்தேன். நான் த்ரில் கதை எழுதி யாராவது இதை எழுதியது நீங்க தானா னு கத்தியோட வந்திட்டா நீங்க காப்பாற்ற தயாரா? ஒண்ணு தெரியுமா சின்ன வயதில நான், ஆண்டு விடுமுறையில் சொல்லும் திகில் கதைகளுக்கு ஒரு ரசிகர் கூட்டமே இருந்தது. எல்லோருக்கும் பத்து வயதுக்குள் தான் இருக்கும்.கடந்த கால நினைவுகளை தூண்டிவிட்டீர்கள்

    ReplyDelete
  17. அன்பின் பார்வையாளன், பணியிடமாறுதல் காரணமாக நீங்கள் கேட்ட பதிவை என்னால் உடனடியாக எழுத இயலவில்லை. மன்னிக்கவும். ஆனால் தாமதமானாலும் கண்டிப்பாக எழுதுவேன். நன்றி.

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]