1 தொப்பி தொப்பி;
இவரது சமூக அக்கறை எனக்கு பிடிக்கும்.. பெரும்பாலும் உடன்படுவேன்.சில சமயம் முரண்படுவேன்.
ஆனால் ஒட்டு மொத்தமாக முரண்பட்டது இவரது மகளிர் தின கட்டுரையில்தான்.
பெண்கள் கையில் அதிகாரம் கொடுத்தால் நாட்டுக்கு கெட்டது, பெண்கள் ஆண்களை சுரண்டுகிறார்கள் என்றெல்லாம் எழுதி இருந்தார்.. சும்மா நகைச்சுவைக்காக எழுதி இருக்கிறார் என நினைத்தேன்.. ஆனால் பின்னூட்டங்களை படித்த போதுதான், உண்மையிலேயே அப்படி எழுதி இருக்கிறார் என்பது புரிந்தது.
வெளி நாடுகளில், பேருந்தில், பொது இடங்களில் பெண்களுக்கென ஒதுக்கீடு தேவை இல்லாத அளவுக்கு ஆண்கள் நடந்து கொள்வார்கள்.. இங்கோ பெண்கள் சீட்டில் அமர்ந்து கொண்டு எழ மறுத்து அராஜகம் செய்வார்கள்.. நானெல்லாம் பொது சீட்டில் அமர்ந்து இருந்தாலும், பெண்களுக்கு எழுந்து இடம் கொடுப்பவன்..
அவரது அந்த கட்டுரை எனக்கு பிடிக்கவில்லை. இருந்தாலும், அவர் அப்படி எழுதியதில், அவர் தரப்பு நியாயங்கள் இருக்க கூடும்,, அந்த கட்டுரையில் முழுமை இல்லை… இன்னும் விரிவாக அவர் தரப்பை சொல்ல வேண்டும் என்பது கோரிக்கை…
உதாரணமாக , சோனியா , மாயாவதி போன்ற பெண் அரசியல்வாதிகளின் தவறை சுட்டி காட்டி, பெண்கள் கையில் ஆட்சி சென்றால் தீமை என்று சொல்லும் இவர், ஆண்கள் இப்படி செய்வதில்லை என ஆதாரபூர்வமாக நிறுவ வேண்டும்.
ஸ்விஸ் வங்கியில் கோடி கோடியாக சேர்த்து வைத்துள்ளவர்கள் ஆண் அரசியல்வாதிகள் அல்லர் என அடித்து சொல்ல வேண்டும்.
முப்பது ஆண்டுகளாக கோமா நிலையில் இருக்கிறாரே நர்ஸ் அருணா, இன்னும் பலர் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகி வருகின்றனரே.. இதை எல்லாம் செய்வது ஆண்கள் அல்லர் என நிரூபிக்க வேண்டும்
பேருந்துகளில் தனி சீட்டு பெண்களுக்கு தேவை இல்லை.. அவர்கள் பாதுகாப்பாக நின்று கொண்டே செல்ல முடியும் என சொல்ல வேண்டும்..
அப்படி ஒரு முழு நீள கட்டுரை எழுதி, பெண்கள் ஆதிக்கம் செலுத்தும் நிலையில் இருக்கிறார்கள்..ஆண்கள்தான் பாவம் என நிரூபித்தால் மகிழ்வேன்
2 செங்கோவி
மெக்கானிக்கல் இஞ்சினியரிங் என்பது பாவப்பட்ட ஒரு பிரிவு.. அதை யாரும் கண்டு கொள்வதில்லை.. ஆனால் அது தொடர்பாக தொடர்ந்து எழுதுபவர் என்பதால் இவர் மேல் எனக்கு தனி அன்பு உண்டு..
மெக்கானிக்கல் இஞ்சினியரிங் என்பது கடல் போன்றது. இதில் கற்பதற்கு முடிவே இல்லை .
நேற்று கூட ஒரு நண்பர் ஹீட் ட்ரீட்மெண்ட் பற்றி புதிய தகவல்களை ஒரு மணி நேரம் பேசினார்.
எனக்கு இந்த பிரிவில் அனுபவம் உண்டு.. ஆனாலும் அவர் சொன்னது எனக்கு புதிதாக இருந்தது.. எனவே இதை பற்றி டிஸ்கஸ் செய்வதற்கு எப்போதுமே விஷ்யம் உண்டு..
இவரும் அவருக்கு தெரிந்த ஒரு பிரிவை பற்றி ஒரு தொழில் நுட்ப பதிவு வழ்ங்க வேண்டும் எனப்து என் கோரிக்கை..
3 அரபு தமிழன்.
ஆன்மீகம் , நகை சுவை, கவிதை என கலக்குபவர் இவர்.
இவரிடம் ஒரு கேள்வி..
தர்க்கா வழிபாடு.
இதை இஸ்லாமியர் சிலர் ஏற்பதில்லை… அதே சமயம் இது இஸ்லாம் சார்ந்த வழிப்பாட்டு தலம் என நினைத்து மாற்று மதங்களும் ஏற்பதில்லை..
ஆனால் மதம் என்ன சொல்கிறது என கவலைப்படாமல், தர்க்கா சென்று வழிபடுபவர்கள் எல்லா மதத்திலும் உள்ளனர்.. நானெல்லாம் தர்க்கா செல்வதில் விருப்பம் உள்ளவன் ( இது குறித்து விளக்கமாக எழுத இருக்கிறேன் )
தர்க்கா வழிபாடு பயனற்றதா..பயன் மிக்கதா? என்பதை பற்றி இவர் எழுதினால் படிக்க ஆவலாக இருக்கிறேன்.
4 mrinzo Nirmal
நாளுக்கு நாள் மெருகேறும் எழுத்து இவருடையது..
இவர் ஆர்வம் உயர்ந்த ஓர் இடத்தில் இருப்பது புரிகிறது… அதை அவர் தொடர வேண்டும் என்பதே என் விருப்பம்..
ஆனால் எல்லா வகை எழுத்தும் பழகுவது நல்லது.. எனவே அவருக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் ஒரு ஆக்ஷன் த்ரில்லர் கதையோ. சைன்ஸ் ஃபிக்ஷனோ இவர் ஒரு முறை முயல வேண்டும் எனப்து என் விருப்பம்
5 தனிக்காட்டு ராஜா
ஒரு ஜாலியாக ஆளாக தன்னை காட்டி கொண்டாலும், பல
விஷயங்கள் தெரிந்த கில்லாடி இவர்… ஓர் முழு நீள ஆன்மீக கட்டுரை அல்லது கதை இவர் எழுதி, அதை நான் படிக்க ஆசை ( சற்று வித்தியாசமான ஆசை.. ஹி ஹி )
6 தம்பி கூர்மதியன்
அனைத்து விஷயங்களையும் தீர்க்கமாக அலசுபவர் என்ப்தால், இந்த விஷய்த்தை எழுத தகுதியான ஆள் அவர்தான்..
உலக தலைவர்களில், இன்று நாம் ரோல் மாடலாக கொள்ள வேண்டிய தலைவர் யார்? ஏன்? எப்படி அவர் சிறந்த தலைவராக உருவெடுத்தார்? தலைமை பண்புகள் எப்படி உருவாகின்றன?
7 வெண்ணிற இரவுகள்
ஒரு பொருளை விற்க செல்கிறோம் என்றால், வாடிக்கையாளர் கேட்பது ரெஃபரன்ஸ். அதாவது வேறு எங்காவது இந்த பொருள் நல்ல முறையில் பயன்பட்டு வருகிறதா? தன் மதிப்பை நிரூபித்துள்ளதா? என்று கேட்பார்கள்.
அதே போல இடது சாரி கருத்துக்களை இந்தியாவில் பிரச்சாரம் செய்யும்போது, இந்திய மக்கள் கேட்பார்களே.. இடது சாரி தத்துவம் எந்த நாட்டிலாவது வெற்றி பெற்ற வரலாறு இருக்கிறாதா என்று..
என்ன பதில் சொல்லி அவர்களை கன்வின்ஸ் செய்வீர்கள்?
8 ஆர்.கே.சதீஷ்குமார் (நல்ல நேரம்)
பார்வை 1 ) பா ம க, ம தி மு க போன்ற கட்சிகள் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து ஒரு தேர்தலை சந்தித்தபின் தான், தமிழ் நாட்டின் ஒரு முக்கிய அரசியல் சக்தியாக மாறின..அந்த தேர்தலில் அந்த கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. அ தி மு கவும் பலன் பெற்றது..
அந்த வகையில், தே மு தி க வின் கூட்டணி முடிவு , நல்ல முடிவு..தமிழ் நாட்டில் மாற்றம் நிகழும்.. இரு கட்சிகளுக்கும் நல்லது…
பார்வை 2 ) தே மு தி க பெற்றது இரு கழகங்களுக்கும் எதிரான ஓட்டுக்களையே… அ தி மு க கூட்டணியால் அந்த ஒட்டை அவர் இழப்பார்
இந்த இரு பார்வைகளை அலசவும்…
( விருப்பம் தொடரும் )
பகிர்வுக்கு நன்றி நண்பரே
ReplyDeleteஏங்க ஏற்கனவே தொப்பி தொப்பி அவர்கள் எழுதிய அந்த கட்டூரையை படித்து எரிச்சலாகிபோய் உக்காந்திருக்கன்.. இதுல இன்னும் வேற அவர தூண்டிவிடுறீங்களா.???
ReplyDeleteஅரபு தமிழன் தலைப்பை எதிர்நோக்குகிறேன்..
ReplyDeleteஎன்னுடைய தலைப்பு.. எனக்கு மிகவும் பிடித்த ஒன்று என்றே சொல்லலாம்.. கண்டிப்பாக எழுதுவேன்.. நன்றி
ReplyDeleteநல்ல நேரம் சதீஷ் டாபிக் செம..
ReplyDeleteகண்டிப்பாக எழுதுவேன்."
ReplyDeleteஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
இதுல இன்னும் வேற அவர தூண்டிவிடுறீங்களா.?”
ReplyDeleteஎன்னதான் சொல்றாருனு பார்ப்போமே..
தங்கள் அன்புக்கு நன்றி நண்பரே..நான் பணி புரியும் 'PIPING DESIGN' பற்றி ஒரு மெகா தொடர் எழுத உள்ளேன்..அது பின்னால் வரும்..அதற்கு முன் உங்கள் விருப்பத்திற்கிணங்க ஒரு சிறப்புப் பதிவு சீக்கிரம் போடுகிறேன்..என்ன ஒன்னு, அதுல நமீதா படம் போட முடியாது..அதை நினைச்சாத்தான் வருத்தமா இருக்கு!
ReplyDelete..நான் பணி புரியும் 'PIPING DESIGN' பற்றி ஒரு மெகா தொடர் எழுத உள்ளேன். ”
ReplyDeleteவாவ்.. எழுதுங்கள்... அனத பற்றி தெரிந்து கொள்ள காத்து இருக்கிறேன்..அனைவருக்கும் பயன்படும்
”அதற்கு முன் உங்கள் விருப்பத்திற்கிணங்க ஒரு சிறப்புப் பதிவு சீக்கிரம் போடுகிறேன்”
ப்ளிஸ் .
விரைவாக போடுங்கள்..
அடடா தோழரே, இப்படி மாட்டி விட்டீங்களே :), பெயர்க்காரணத்திலிருந்து
ReplyDeleteதப்பித்தேனென்று மகிழ்ந்தால் அடுத்த கொக்கி போட்டு விட்டீர்களே :)
இந்த சப்ஜெக்ட் ரொம்ப நாசூக்கானது, ஒரு வரியிலேயே பதில் சொல்லி
விட முடியாத அளவுக்கு இருதலைக் கொள்ளி எறும்பு போலத் தவிக்கிறேன்.
தரீக்கா,தவ்ஹீது இரண்டிலும் சேராமல் இரண்டிலும் இருக்கும் நல்ல
விஷயங்களை ரசிக்கும் எனக்கு இது ஒரு பொறுப்பான சோதனைதான்.
இந்த இடுகை மூலமாக இருவரையும் இணைக்க இறைவன்தான்
துணை செய்ய வேண்டும்.
//ஆண்கள் இப்படி செய்வதில்லை என ஆதாரபூர்வமாக நிறுவ வேண்டும். //
ReplyDeleteஅது முடியாத காரியம் என்று உங்களுக்கே தெரியாதா? :-))))))
அது முடியாத காரியம் என்று உங்களுக்கே தெரியாதா? :-)))))"
ReplyDeleteஒரு வேளை அவரால் முடியலாம் :-))))
ஒரு வரியிலேயே பதில் சொல்லி
ReplyDeleteவிட முடியாத அளவுக்கு இருதலைக் கொள்ளி எறும்பு போலத் தவிக்கிறேன்.”
விரிவான பதில் தேவை என்பதே அனைவரின் விருப்பம்..ஒரு மாணவன் போல பதிலுக்காக ஆவலாக காத்து இருக்கிறென்
நேயர் விருப்பம் அருமையான டாபிக்...தே.மு.தி.க பற்றி இன்னும் நான் எழுத தூண்டிய உங்களுக்கு நன்றி...விரைவில் எழுதுகிறேன்...
ReplyDeleteஉலக தலைவர்களில், இன்று நாம் ரோல் மாடலாக கொள்ள வேண்டிய தலைவர் யார்? ஏன்?//
ReplyDeleteயாரை பற்றி தம்பி கூர்மதியான் எழுத போகிறார் என தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறது
சோனியா , மாயாவதி போன்ற பெண் அரசியல்வாதிகளின் தவறை சுட்டி காட்டி, பெண்கள் கையில் ஆட்சி சென்றால் தீமை என்று சொல்லும் இவர், ஆண்கள் இப்படி செய்வதில்லை என ஆதாரபூர்வமாக நிறுவ வேண்டும்//
ReplyDeleteஇதையும் சமாளிப்பாரா தொப்பி தொப்பி..?
நல்ல நேரம் சதீஷ் டாபிக் செம..//
ReplyDeleteநன்றி கூர்மதியான் ...பார்க்கலாம் சரியான தீனி போடுவேனா என்று
//ஒரு ஜாலியாக ஆளாக தன்னை காட்டி கொண்டாலும், பல
ReplyDeleteவிஷயங்கள் தெரிந்த கில்லாடி இவர்… ஓர் முழு நீள ஆன்மீக கட்டுரை அல்லது கதை இவர் எழுதி, அதை நான் படிக்க ஆசை ( சற்று வித்தியாசமான ஆசை.. ஹி ஹி ) //
தல ,
மறுபடியும் சொல்லுறேன் ...நீங்க நினைக்கற அளவுக்கு நான் வொர்த் ஆனா ஆள் இல்லை....
கொஞ்சம் திரும்பி பாருங்க ....ரெண்டு பேரு காறி என் முகத்துல துப்ப வருவதை ...:))
உண்மையை சொல்ல போனால் ....நான் அதிகம் படித்தது ஓஷோ புத்தகங்கள் தான் ...
எனி வே .....கண்டிப்பாக நான் உங்கள் அவாவை நிறைவேற்றுகிறேன் .....
பெரும்பாலான பதிவர்கள் பற்றிய உங்கள் கருத்துடன் ஒத்துப்போகிறேன்.
ReplyDeleteஏன் நல்லநேரம் தவிர மற்றவர்களுக்கு லிங்க் கொடுக்கவில்லை.?
இவர்கள் எல்லோருடைய பதிவுகளையும் படித்திருக்கிறேன் என்பது எனக்கான சந்தோஷம். உங்கள் எதிர்பார்ப்புக்கள் நியாயமானவையே..
ReplyDeleteஏன் நல்லநேரம் தவிர மற்றவர்களுக்கு லிங்க் கொடுக்கவில்லை.? "
ReplyDeletethat is my mistake .. thanks for point out this...
கண்டிப்பாய் பதில் சொல்வேன் நண்பா. பதிவு செய்துவிட்டு சொல்கிறேன்
ReplyDelete