Wednesday, March 30, 2011

மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட ஒரு குறள்...2

முதல் பகுதி    மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட ஒரு குறள்...

இரண்டாம் பகுதி


அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை 
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.



இந்த குறளை பார்த்து வருகிறோம்..


பல்வேறு சிந்தனைகளுக்கு இடம் அளிப்பதே இந்த குறளின் தனி தன்மை..


அதுதான் குறளை தனித்துவம் வாய்ந்த நூல் ஆக்குகிறது. 


தட்டையாக ஒரு விஷயத்தை சொன்னால் , ஒரு வாசிப்பிலேயே அதன் சுவையை கிரகித்து விடலாம்.. ஆனால் ஒரு குறள் அப்படி அல்ல.


ஒவ்வொரு முறை படிக்கும்போதும், ஒவ்வொரு அர்த்தம் தரும்..


இந்த குறளுக்கு நாத்திக , ஆத்திக விளக்கம் பார்த்தோம்..


இந்த குறளுக்கு நாத்திகவாதியான கலைஞர் என்ன அர்த்தம் சொல்கிறார் ?


பல்லக்கு சுமப்பவனையும் , அதில் செல்பவனையும் பார்த்து , இது ஊழ்வினை அல்லது பாவபுண்ணியம், அல்லது இறை சித்தம் என நினைக்க வேண்டாம் என்ற நாத்திக டெம்ப்ளேட்டில் அர்த்தம் சொல்வார் என்றுதான் எதிர்பார்த்தேன்..


ஆனால் இனிய அதிர்ச்சி..


சற்று வித்தியாசமாக உரை எழுதியுள்ளார் அவர்.


நல் வழியில் , அற வழியில் நடப்பவர்கள், இன்ப துன்பங்களை சம்மமாக கருதி தம் வழியில் தொடர்ந்து செல்வார்கள். பல்லக்கில் செல்பவனை , தரையில் இருக்கும் மேடு பள்ளங்கள் பாதிக்காது. அதே போல வாழ்வில் இன்பதுன்பங்கள் அறவழியில் நடப்பவர்களை பாதிக்காது.


பல்லக்கை சுமப்ப்பவன், தரையில் கிடக்கும் கல், முள் , மேடு பள்ளத்தால் துன்பம் அடைவான். தவிர பல்லக்கயும் சுமக்க வேண்டும். அதே போல தீய வழியில் செல்பவர்கள், இன்பத்தில் அமைதி காண மாட்டார்கள். துன்பத்தை தாங்கி கொள்ள மாட்டார்கள்.. வாழ்வே அவர்களுக்கு பெரும் சுமையாக இருக்கும்.


இது கலைஞரின் விளக்கம்..




ரசிக்க வைக்கும் விளக்கம் இது.


இந்த உரைகளில் , ரசிக்க முடியாத உரை என்றால் அது சுஜாதாவின் உரைதான்.. தட்டையாக எழுதி இருப்பார்.. 


டைட்டானிக் படத்தின் கதை என்ன என்று கேட்டால், கப்பல் கவிழ்ந்தது   காதல் கவிழவில்லை  என்று சொல்வது போல அவர் எழுதி இருப்பார். 




மு வ நடு நிலையுடன் எழுதி இருப்பார்..


எந்த கருத்தையும் சொல்லாமல், இந்த குறள் ஏற்படுத்தும் மன சித்திரத்தை மட்டும் பதிவு செய்து இருப்பார்..




முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்றெல்லாம் பேசுகிறோம்..


எத்தனையோ திறமை சாலிகள், உழைப்பாளிகள் கடும் கஷ்டத்தில் வாழ்வதை மறுக்க முடியாது..


தன்னம்பிக்கையுடன் போராடினால் வெற்றி கிடைக்கும் என்பதெல்லாம் எவ்வள்வு தூரம் சரி என சொல்ல முடியாது..


சில எதிர்பாராத உதவிகள், எதிர்பாராத சம்பவங்கள், நல்லவர்களின் வழி காட்டுதல்- இவையே நம்மை உயர்த்தும்.. நல்ல நிலைக்கு வந்தவுடன், அதை எல்லாம் மறந்து விட்டு, நம் உழைப்பால் முன்னேறியதாக நினைப்போம். இது இயல்பு..




outliers புத்தகம் அலசுவது இந்த விஷயத்தைதான்..


இது ஒரு புறம்..


இந்த குறளுக்கு என்னதான் அர்த்தம்..


 அறவழியில் நடப்பது நல்லது..
ஆனால் நல்ல வழியில் நடப்பதற்கும் , அன்றாட வாழ்வில் நாம் காணும் வெற்றி தோல்விகளுக்கும் சம்பந்தம் இல்லை...


நடைமுரையில் அதுதானே நடக்கிறது?


தீய வழியில் செல்பவர்கள் பலர் சிறப்பாகத்தானே இருக்கிறார்கள் !!!




ராமகிருஷ்ணர் கதையில் வரும் தேள் தனது கொட்டும் பண்பை கை விடாமால் தன்னை காப்பாற்றும் துறவியை கொட்டுகிறது.. அந்த துறவி தன் நல்ல பண்பை கை விடாமல் அந்த தேளை காப்பாற்றுகிறார்..


அதே போல நல்ல வழியில் நடப்பது நம் இயல்பாக மாற வேண்டும்.... 


வாழ்வின் உலகியல் வெற்றி தோல்விக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை..


அதற்கு வேறு வகை யுக்திகள் தேவை .

7 comments:

  1. பதிவில், எழுத்துக்கள் மிகவும் சிறியதாக இருக்கின்றன.

    ReplyDelete
  2. சில எதிர்பாராத உதவிகள், எதிர்பாராத சம்பவங்கள், நல்லவர்களின் வழி காட்டுதல்- இவையே நம்மை உயர்த்தும்.. நல்ல நிலைக்கு வந்தவுடன், அதை எல்லாம் மறந்து விட்டு, நம் உழைப்பால் முன்னேறியதாக நினைப்போம். இது இயல்பு..

    .... சரியாக சொல்லப்பட்டு இருக்கிறது.

    ReplyDelete
  3. கலைஞரின் உரை சிறப்பு. அந்த அதிகாரத்தில் இருக்கும் மற்ற குறள்களையும் படிக்கும்போது கலைஞரின் உரைதான் பொருத்தமானதாகத் தோன்றுகிறது

    ReplyDelete
  4. ஆஹா, கலைஞரின் விளக்கம் மிக அருமை

    ReplyDelete
  5. கலைஞர் அரசியலில் இல்லாமல் இலக்கியத்தில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாமோ?!!..

    ReplyDelete
  6. ///அதே போல நல்ல வழியில் நடப்பது நம் இயல்பாக மாற வேண்டும்.... வாழ்வின் உலகியல் வெற்றி தோல்விக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை..அதற்கு வேறு வகை யுக்திகள் தேவை//

    Super.

    ReplyDelete
  7. letters are too small to read. solve the problem.

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா