Saturday, March 5, 2011

சுஜாதா , நகுலன் , கடவுள் – படித்ததில் பிடித்தவை

 

கடவுள் பற்றி எழுத்தாளர் சுஜாதா..

 

இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய விஞ்ஞானி ஐன்ஸ்டீன் நாத்திகர் அல்ல. ஒரு முறை ஒரு யூத மதகுரு “ நீங்கள் கடவுளை நம்புகிறீர்களா” என தந்தியடித்து கேட்டார். ஐன்ஸ்டீன் பதில் தந்தி அடித்தார்.

“ நான் ஸ்பினோஸாவின் கடவுளை நம்புகிறேன். பிரபஞ்சத்தின் அத்தனை விதிகளின் ஒருமைப்பாட்டிலும் தன்னைக் காட்டிக்கொள்ளும் கடவுளைத்தான் நம்புகிறேன். நம்முடைய தின வாழ்வின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் கடவுளை அல்ல “

நவீன க்வாண்டம் மெக்கானிக்ஸில் சிருஷ்டியைப்பற்றி சில ஆதாரமான சந்தேகங்கள் வந்துள்ளன. சில கோட்பாடுகள் ரொம்ப உதைக்கின்றன. ஹைசன்பர்க்கின் ‘ நிச்சயமில்லா தத்துவத்ததை “  பற்றி சொல்லும்போது ஐன்ஸ்டைன் “ கடவுள் பிரபஞ்சத்துடன் சூதாட மாட்டார் “ என்றார். விஞ்ஞானத்தில் சில ஏன்களுக்கு பதில் வேண்டுமானால் கடவுள் தத்துவத்தில் சரணடைய வேண்டும். உதாரணம் ஒளியின் வேகத்தை மிஞ்சவே முடியாது என்பது தெரிகிறது. ஏன் என தெரியவில்லை.

 

***********************************************************************************************************

நகுலன் கவிதைகள் சில…

1 நினைவு ஊர்ந்து செல்கிறது

பார்க்க பயமாக இருக்கிறது

பார்க்காமலும் இருக்க முடியவில்லை

 

2 அவர் பல உண்மைகளை சொல்கிறார்

ஓர் உண்மையை சொல்லாமல் இருப்பதற்கு

 

 

நில்

  போ

வா

 

வா

போ

நில்

 

போ

வா

நில்

 

நில் போ வா ?

 

4 என்னை பார்க்க வந்தவர்

தன்னை பார்

என சொல்லி சென்றார்

3 comments:

  1. நல்லதொரு பதிவு !

    ReplyDelete
  2. அனைத்துக் கவிதைகளும் அருமை. ஆனால் இந்த நில் வா போ
    கவிதையைப் புரிந்து கொள்ள முடியாத‌ அளவுக்குக்குத்தான் எனது
    கவிதை ஞானம் இருக்கிறது.

    ReplyDelete
  3. ஐன்ஸ்டீனின் பதில் ஓக்கே. எனினும், வீடு கட்டிய தந்தையை
    மதிக்கிறேன் ஆனால் அவரின் சட்ட திட்டங்களுக்கு உடன் பட
    என் மனம் இடம் கொடுக்க‌வில்லை என்பது போல் இருக்கிறது :))

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா