ஞாயிற்று கிழமையை குதூகலமாக , ஓய்வாக செலவிட்டு கொண்டு இருப்பீர்கள்.. விடுமுறை தின சிறப்பு பதிவாக, நித்யானந்தாவின் பேட்டி , இதோ உங்கள் பார்வைக்கு…. தொலைக்காட்சியில் வந்த இந்த பேட்டியை பலர் பார்த்து இருக்க மாட்டீர்கள்… படித்து பாருங்கள்
உங்கள் மீது சில பெண்கள் பாலியல் புகார் கூறி இருக்கிறார்களே?
அப்படி சொல்லுமாறு மிரட்டப்படுகிறார்கள்… உண்மையில் என்னிடம் இருக்கும் பெண்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறார்கள்.. இங்கு இருக்கும் யாரையும் விசாரித்து பாருங்கள்.. பாதுகாப்பு இல்லை என்றால் இவ்வளவு அவதூறுகளுக்கு பிறகு இங்கு திரும்பி வருவார்களா?
உங்களுக்கு ஆண்மை இல்லை என போலீஸில் சொன்னீர்களாமே?
ஆண் , பெண் என்பதற்கு அப்பாற்பட்டவன் நான் என போலீசில் சொன்னேன்.. மனதை அடக்க கற்றவன் நான்…உடலும் என் கட்டுப்பாட்டில் இருக்கிறது… இப்படி சொன்னதை சிலர் திரித்து செய்தியாக்கி இருக்கின்றனர்
லெனின் உங்கள் மேல் குற்றம் சாட்டுகிறாரே… என்னதான் பிரச்சினை?
அவர் என்னிடம் பிரம்மசாரியாக சேர்ந்தார்… ஒழுக்க குறைவு காரணமாக கண்டிக்கப்பட்டார்..இதனால் வருத்தம் அடைந்த அவர் இப்படி செய்கிறார்..
உங்கள் மேல் சுமத்தப்பட்டுள்ள அன்னிய செலவாணி மோசடி குறித்து?
அன்னிய செலவாணி மோசடி செய்ய நான் அரசியல்வாதி அல்ல… பல அரசியல்வாதிகள் இங்கு கொள்ளை அடித்து வெளி நாட்டில் சேர்க்கின்றனர்.. நானோ வெளி நாட்டில் இருந்து இங்கு முறைப்படி பணம் வர செய்கிறேன்..
எல்லாம் முறைப்படி நடப்பதற்கான ஆதாரங்களை அதிகாரிகள் பார்த்து விட்டனர்..
ஆன்மீகம் என்பது பணம் சேர்க்கும் வழியாக மாறிவிட்டதே?
என் உழைப்பையும், திறமையையும் அரசியலிலோ , தொழிற் துறையிலோ செலுத்தி இருந்தால் , கோடிக்கணக்கில் சம்பாதித்து இருக்க முடியும்… என் எட்டு ஆண்டு பொது வாழ்க்கையில் நான் ஆற்றிய ஆன்மிக சொற்பொழிவை , அரசியல் துறையில் செய்து இருந்தால் , தலைவனாகி பலரை போல கொள்ளை அடித்து இருக்க முடியும்.. நான் அதை விரும்பவில்லை..
என்னிடம் வரும் பலர், நல்ல வேலைகளை தூக்கி எறிந்து விட்டு வந்துள்ளனர்.. பணம் என்பது எங்களுக்கு முக்கியமல்ல..
எங்கள் சேவையில் 90% இலவசம்தான்… 10% சேவைகளுக்குதான் பணம் வாங்குகிறோம்.. இந்த 10% காசை வைத்து அந்த 90% செலவை சந்திக்கிறோம்…
அப்படி என்றால் அரசியல் தலைவர்கள் எல்லாம் கொள்ளை அடிப்பவர்களா?
எல்லா அரசியல்வாதிகளும் கொள்ளை அடிக்கிறார்கள் என சொல்ல விரும்பவில்லை..அதே சமயம், எந்த அரசியல்வாதியும் கொள்ளை அடிக்கவில்லை என்றும் சொல்ல விரும்பவில்லை
சாதாரண நிலையில் வாழ்வை தொடங்கிய நீங்கள் இவ்வளவு பெரிய அமைப்பை எப்படி உருவாக்க் முடிந்தது?
ஒரு பூ மலர்ந்தால் வண்டு தேடி வரும்.. பூவுக்கு மார்க்கெட்டிங் டிபார்ட்மெண்ட் வேண்டியதில்லை..அதே போல என் சேவையால் கவரப்பட்டு பலர் என்னிடம் சேர்ந்தார்கள்.. சேர்ந்து சேவைகள் செய்து வருகிறோம்.. ஒருவரிடம் நூறு ரூபாய் பெற்றால், அதில் எங்கள் உழைப்பை கலந்து, இரு நூறு ரூபாய் மதிப்புக்கான சேவையை திரும்ப வழங்குகிறோம்.
இளைஞர்களை மிரட்டி சேர்க்கிறீர்களாமே?
மிரட்டி எத்தனை நாள் வைத்து இருக்க முடியும். எனக்கு காம்பவுண்ட் சுவரே இல்லை.. யார் வேண்டுமானாலும் வரலாம் .செல்லலாம்.. குடும்பத்தினர் அனுமதியோடு மட்டுமே ஆசிரமவாசி ஆக முடியும்.. இங்கு இருக்கும் யார் பெயரை வேண்டுமாலும் சொல்லுங்கள்… ஒப்புதல் கடிதம் எடுத்து காட்டுகிறோம்.. அல்லது நீங்களே வேண்டுமானாலும் யாரையும் விசாரித்து பாருங்கள்
இருந்தாலும், உங்களுக்கு ஏற்பட்டுள்ள மக்கள் எதிர்ப்பை எப்படி சமாளிக்க போகிறீர்கள்?
எனக்கு எந்த எதிர்ப்பும் இல்லை.. பகுத்தறிவு என்ற போர்வையில் சிலர் செய்யும் அவதூறை மக்கள் நம்பவில்லை.. என் நிக்ழ்ச்சிகளுக்கு ஏராளமானோர் வருகின்றனர்… சில தொலைக்காட்சிகள் வேண்டுமென்றே அவதூறான செய்திகள் பரப்புகின்றன.. ஆனால் மக்கள் தங்கள் பகுத்தறிவை நம்ப ஆரம்பித்து விட்டனர்,,, அவர்களை தொலைக்காட்சிகள் ஏமாற்ற முடியாது…
என்னா தில் பாருங்க!
ReplyDelete//ஆனால் மக்கள் தங்கள் பகுத்தறிவை நம்ப ஆரம்பித்து விட்டனர்,,, அவர்களை தொலைக்காட்சிகள் ஏமாற்ற முடியாது… // இந்த நல்ல காலம் எப்போ வரும்??
ReplyDelete