சில பதிவர்களிடம் நான் நேயர் விருப்ப பதிவாக சில கட்டுரைகள் எழுத வேண்டுகோள் விடுத்து இருந்தேன்.
சிலருக்கு சுவையான சவால் விடுவதற்காகவும் , சிலரை பற்றி தெரிந்து கொள்வதற்காகவும் , சிலரிடம் இருந்து கற்று கொள்வதற்காகவும்தான் அந்த வேண்டுகோள்…
மிடில் கிளாஸ் மாதவி அவர்கள் சிறுகதை போட்டியில் எழுதியதில் இருந்தே கவனித்து வருகிறேன்.. அந்த போட்டியில் அதிகம் படிக்கப்பட்டது அவர் கதைதான். செம டாக்டிக்ஸாக இருக்கிறதே ..இதை செய்தது யார் .. எப்படி இந்த ஐடியா தோன்றியது என பல நாட்கள் யோசித்து வந்தேன்..
காலபோக்கில் அவரைப்பற்றி ஓரளவு தெரிந்து விட்டது… இப்போதுதான் கதை பற்றிய வரலாறும் தெரிந்தது.. சுவையான வரலாறு… அன்று செய்தது யுக்தி அல்ல.. காமடி என புரிந்து வாய் விட்டு சிரித்தேன்…
அவருக்கு மனப்பூர்வமான நன்றி… எழுத்தில் மென்மேலும் சாதிக்க வாழ்த்துக்கள்….
விஜய்காந்த் – அ தி மு க கூட்டணி , பலமா இல்லையா என்பதை பலர் தத்தம் ஆசை அடிப்படையில் அலசி வருகிறார்கள்… ஆதாரபூர்வமாக அலச முடியுமா என்ற சவாலை நல்ல நேரம் சதீஷ் முன் விடுத்தேன்..
அந்த கேள்வியை அருமையாக கையாண்டு , ஆதார பூர்வ தகவல்களுடன் பதில் அளித்து இருந்தார் அவர்… இப்படி எல்லாம் விரிவாக என்று எழுதபோகிறோம் என அவர் மேல் பொறாமை ஏற்பட்டது…
நண்பர் மணிவண்ணன் பதிவு எழுதாமல் பேட்டி அளித்தார்… அடடா.. இன்னும் சில கேள்விகளை கேட்டு இருக்கலாமே என எண்ண வைத்தார் அவர்.. அந்த அளவுக்கு சிறப்பான பதில்கள்.
அதை என் அலுவலகத்தில் சிலர் பார்த்தனர்.. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ஆர்டர்களை அட்டகாசமாக கையாளும் மார்க்கெட்டிங் புலிகள் அவர்கள்.. அவர்களே ரசிக்கும்படி இருந்தது இவரது மார்க்கெட்டிங் விளக்கம்…
ஐ லைக் யூ மணிவண்ணன்…
மற்ற பதில்களை அவ்வபோது விளக்குவேன்…
இது ஒருபுறம்..
இன்னும் சிலருக்கு கேள்வியை சரியாக , தெளிவாக கேட்காததால் அவர்கள் பதில் அளிக்க முடியாத நிலை ..
எனவே முதல் கட்டமாக , நண்பர் கோபியின் கேள்வியை விளக்குகிறேன்.
அவர் படித்ததில் ஓவர் ரேட்டட் புக், அண்டர் ரேட்டட் புக் பற்றி கேட்டு இருந்தேன்…
என்னை விட ஆயிரம் மடங்கு படிக்க கூடியவர் அவர்.. எனவே அவர் பதில் புதிய வாசல்களை எனக்கு திறக்கும் என்று நினைத்து கேட்டேன்..
ஆனால் கேள்வியில் தெளிவு இல்லை..
அது என்ன ஓவர் ரேட்டட் புக்..அண்டர் ரேட்டட் புக்..
உதாரணங்கள் மூலம் விளக்குகிறேன்..
என்னை பொறுத்தவரை ஓவர் ரேட்டட் புக் பல இருக்கின்றன..
அதில் முக்கியமான ஒன்று, அயன் ராண்ட் எழுதியுள்ள the fountain head என்ற நாவல்..
இதை ஏன் ஓவர் ரேட்டட் நாவல் என்கிறேன்?
இதை படிக்க ஆரம்பிக்கும் முன் நண்பர்கள் கருத்தை கேட்டேன்..
பலரும் பாராட்டினார்கள்… படிக்க ஆரம்பித்தால் , முடிக்காமல் வைக்க முடியாது என்றார்கள்.. வாழவை பற்றிய எண்ணத்தை மாற்றும் என்றார்கள்…
நானும் ஆர்வமாக படித்தேன்..
நல்ல எழுத்துதான்… சுவையான நடைதான்..
ஆனால் நாவல் என்ற வகையில் மாபெரும் தோல்வி..
ஒரு சாதாரண நாவலை பார்த்தால் கூட, அதில் எல்லா தரப்பையும் அலசி இருப்பார்கள்.. சிறந்த நாவலை பார்த்தால், ஒவ்வொரு பாத்திரமும் அதனதன் இயல்புபடி கச்சிதமாக அமைக்கப்பட்டு இருக்கும்..
ஆனால் இந்த நாவல் பிரச்சார நூல் பாணியில் , ஒரு கருத்தை சொல்லும் வகையில் இருக்கும்..
ஹீரோ நன்மையே உருவானவராக இருப்பார்… எதிர் தரப்பினர் திறமை அற்றவர்கள் அல்லது கெட்டது செயப்வர்கள். நேர்மை அற்றவர்கள் என்று இருப்பார்கள்..
ஒரு சித்தாந்தை நம்புவது , நம்பாமல் இருப்பது என்பது மட்டுமே ஒருவரை நல்லவராகவோ கெட்டவராகவோ ஆக்கும் என்ற பிரச்சார நூல்களின் இலக்கணப்படி எழுதப்பட்ட நாவல் இது..
கருத்து களஞ்சியமாக நாவல் இருக்கும்.. அது சுவையாக இருக்கும்… ஆனால் நாவலுக்கு என இருக்கும் விறுவிறுப்பு இருக்காது..
நம் ஆட்கள் கூட இதை விட சிறப்பான நாவல் எழுதுவார்கள்.. இது எப்படி சிறந்த நாவல் என்று பெயர் பெற்றது என தெரியவில்லை..
சரி அண்டர் ரேட்டட் நாவல் என்றால்?
சில நாவல்கள் சில காரணங்களுக்காக உரிய புகழ் பெற்று இருக்காது.. ஆனால் அது மிக சிறந்த நாவலாக இருக்கும்.
உதாரணமாக , அல்ட்டிமேட் ரைட்டரின் சிறந்த நாவல் எது என யாரிடமாவது கேளுங்கள்.
சீரோ டிகிரி என்பார்கள்..
எனவே பலரும் அதை மட்டும் படிப்பார்கள்.. ( அது தமிழ் மொழியின் தலை சிறந்த நாவல் என்பது வேறு விஷ்யம் ) .. அவர் வேறு எழுதி இருக்கிறார் என்பதே பலருக்கு தெரியாது.. தெரிந்தாலும் படிக்க ஆவல் இருக்காது..
ராச லீலா நாவல் படித்து முடித்த பின்புதான், அது தமிழில் மட்டும் அல்ல… உலகிலேயே தலை சிறந்த நாவல் என உணர்ந்தேன்… சீரோ டிகிரியின் ஒளியில், இதன் புகழ் மங்கி விட்டதே என வருந்தினேன்..
இதே போல பலருக்கும் தோன்றலாம்.. சில புத்தகங்கள் படிக்கும்போது , இந்த நாவலை போய் எல்லோரும் ஏன் பாராட்டினார்கள் என தோன்றலாம்.. இந்த நாவலுக்கு ஏன் உரிய முக்கியத்துவம் கிடைக்கவில்லை எனவும் தோன்றலாம்..
இதைத்தான் நான் அவரிடம் கேட்டேன்….
நல்ல விளக்கம் நண்பரே..அடுத்த வாரத்தில் நானும் போடுகிறேன்!
ReplyDeleteநண்பரே, நீங்கள் வேறு யாரையோ என்னுடன் குழப்பிக் கொண்டிருக்கிறீர்கள் என நினைக்கிறேன்!!!
ReplyDeleteஅயன் ராண்டின் இந்தப் புத்தகத்துக்கு உங்கள் மதிப்பீட்டுடன் நான் ஒத்துப் போகிறேன். அமரர் கல்கி எழுதிய புத்தகங்களிலேயே சரித்திர நாவல்கள் பேசப்பட்ட அளவு அவர் சமூக நாவல்கள் பேசப்படவில்லையல்லவா?
உங்கள் கலைச் சேவையைத் தொடருங்கள்!
"நண்பரே, நீங்கள் வேறு யாரையோ என்னுடன் குழப்பிக் கொண்டிருக்கிறீர்கள் என நினைக்கிறேன்!!!"
ReplyDeleteநான் குழப்பவில்லை மேடம்..
உங்கள் கதை ( மட்டும் ) சிறப்பு குறிப்போடு வெளியானது ... எனவே எல்லோரும் அட.. யார் இது ... கதை எழுதுவதில் இவ்வளவு ஆர்வமாக இருக்கும் அந்த இலக்கியவாதி யார் என அந்த கதையை ஸ்பெஷலாக கவனித்தார்கள்..
மற்றவர்கள் கவனித்தார்களோ , இல்லையோ,/// நான் ஆர்வமாக கவனித்தேன்... அதைத்தான் சொன்னேன்..
இதோ..உங்க கதைக்கு கிடைத்த ஸ்பெஷல் மரியாதை...
"67. சவாலே சமாளி - மிடில்க்ளாஸ் மாதவி
இவருக்கு வலைப்பூ கிடையாது. இவர் இந்தப் போட்டிக்காகத்தான் முதன்முதலில் எழுதுகிறார். இந்த முயற்சி தந்த உற்சாகத்தில் இதே பெயரில் வலைப்பூ துவங்கப் போவதாக எனக்கனுப்பிய மடலில் குறிப்பிட்டுள்ளார்.
இவரது அனுமதி கிடைத்ததும் இவர் கதையை என் வலையில் வெளியிடுகிறேன்."
எந்த குறிப்பும் இல்லாமல் சும்மா வெளிடப்பட்ட என் கதை மற்றும் கோபியின் கதை...
48. சிரிக்கும் பெண்ணை நம்பாதே - பார்வையாளன்
49. பரிசு பெற்ற கதைகளின் கதை - கோபி ராமமூர்த்தி
50. ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே - பார்வையாளன்
51. சிவாவும் பரந்தாமனும் வைரத்துக்குப் போட்டி போட்ட கதை - கோபி ராமமூர்த்தி
52. என் உயிர் நீயல்லவா - பார்வையாளன்
நன்றி
ReplyDelete