Thursday, March 17, 2011

வைகோ , மதிமுக என்ன செய்யலாம்? ஒரு நடுநிலை அலசல்

ஜாதி கட்சிகள், வன் முறை கட்சிகள், சந்தர்ப்ப வாத கட்சிகள் எல்லாம் புறக்கணிக்க முடியாத இடங்களில் இருப்பதும், விட்டு கொடுக்காமல் பேரம் பேசுவதும் அன்றாடம் காணும் காட்சிகள்தான்.


ஆனால் ஜென்டில்மேன் அரசியல்வாதி என்ற பெயர் எடுத்த வைகோ, இலக்கியம்- அரசியல் -பொருளாதாரம் என எதிலும் சுவையாக பேச கூடிய வைகோ, இன்றும் கூட நாத்திகவாதம், ( நாத்திகம் என்பதும் ஒருவகை நம்பிக்கைதான்.. அதை கடந்து வந்தால்தான் உண்மையை காண முடியும் என்பதே உண்மை என்றாலும், நாத்திகாவதி என தன்னை சொல்லி கொள்ளும் ஒருவர் , அந்த கொள்கைக்கு உண்மையாக இருக்க வேண்டும்... அந்த வகையில் வைகோ உண்மையானவர்... ) திராவிட கொள்கைகளில் உறுதியாக இருக்கும் வைக்கோவுக்கு, அவரது பிளஸ் பாயிண்டுகளே மைனஸ் ஆகிவிட்டன...



அவரை புறக்கணிப்பது தமிழ் நாட்டின் இரு பெரும் கட்சிகளுக்கும் எளிதாகி விட்டது...



சரி..



இந்த தேர்த்தலை பொறுத்தவரை, அவரது யுக்தி எப்படி இருக்க வேண்டும்.. எது அவருக்கு நல்லது...



கட்சி சார்பற்று, ஒரு வியுகம் என்ற வகையில் அலசலாம்..



1 என்ன வந்தாலும் சரி.. அ தி மு க கூட்டணி

சிங்கிள் டிஜிட்டில் அ தி மு க அணியில் போட்டியிட்டால் , போட்டியிடும் அனைத்து இடங்களிலும் வெள்ளலாம்தான்.. ஆனால் அதற்கு பின் அவர் கட்சிக்கு மரியாதை இருக்காது... சிங்கள் டிஜிட் கட்சியாக மாறி விடும்..

சில சீட்டுகளில் உறுதியான வெற்றி என்பது இதில் அனுகூலம்



2 கார்த்திக், பி ஜே பி போன்றவர்களுடன் மூன்றாவது அணி



இப்படி அணி அமைந்தால், வை கோவின் பேச்சு ஆற்றல் அந்த அணிக்கு பயன்படும்.. ஆனால் அந்த அணியால் வைகோவிற்கு பெரிய பயன் இருக்காது... அவரது வாக்கு வங்கி என்ன என்பது தெரியாது..எனவே வருங்கால தேர்தல்களிலும் , இவரை இப்படித்தான் நடத்துவார்கள்



பல இடங்களில் ஒட்டு பிளவு ஏற்படுத்தி, வெற்றி வாய்ப்புகளை மாற்றலாம் என்பதும தேர்தல் முடியும் வரை பரபரப்பை ஏற்படுத்தலாம் என்பதும் இதில் அனுகூலம்.



3 தி மு க ஆதரவு நிலை



தி மு க அணியில் இனி சேருவது நடக்காது... பேசாமல் மறைமுக உடன்பாடு செய்து கொண்டு, அதன் அடிப்படையில் , வேட்பாளர்களை சில இடங்களில் நிறுத்தலாம்.. போட்டி கடுமையாக உள்ள இடங்களில், அ தி மு க வின் வெற்றியை தட்டி பறிக்க இது உதவும்... இதனால் பல அனுக்கூலங்கள் உண்டு என்றாலும், மரியாதை இருக்காது



4 தேர்தல் புறக்கணிப்பு



தேர்தலையே புறக்கணித்து விட்டு, சில தொகுதிகளில் மட்டும், கொள்கை அடிப்படியில் பிரச்சாரம் செய்வது ஒரு நல்ல யுக்திதான்.. உதாரணமாக, காங்கிரஸ் நிற்கும் இடங்ககளில் மட்டும், அந்த கட்சிக்கு எதிராக பிரச்சாரம் செய்து , காங்கிரசின் தோல்வியை உறுதி செய்ய முயலலாம்.. கொள்கை அடிப்படையில் செயல்பட்ட மரியாதை கிடைக்கும் என்றாலும் அரசியல் ஆதாயம் இருக்காது... கட்சியினர் ஒப்பு கொள்ள மாட்டார்கள்..



5 அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டி..



பேசாமல் சென்ற தேர்தலில் விஜயகாந்த் செய்தது போல தனித்து போட்டியிடலாம்... இதனால் அனைத்து தொகுதிகளிலும் பரவலான அறிமுகம் கிடைக்கும்... சில இடங்களில் வெற்றியும் பெற கூடும்... மாற்று கட்சி என்ற பெயரை மீண்டும் பெறவும், தன வாக்கு வங்கியை நிரூபிக்கவும் , ஒரு வாய்ப்பு கிடைக்கும்...



எனவே இந்த ஆப்ஷனே , அந்த கட்சிக்கு நல்ல ஆப்ஷனாக தோன்றுகிறது...

3 comments:

  1. காலம் அவரை காமடி பீஸ் ஆக்கி விட்டது....

    ReplyDelete
  2. பல முறை தனித்து போட்டியிட்ட விஜயகாந்த் ஒண்ணுமில்லம போக கூடாதுன்னு கூட்டணி வெச்சார். தனியித்து போட்டியிட்டு 2-4 % வாக்கு வாங்கினா என்ன செய்யுரது...
    அப்புரம் 2 தொகுதி குடுப்போம்பங்க....

    கார்த்திக் மாதிரி ஆகிவிடும்...

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா