அல்ட்டிமேட் ரைட்டரின் சீரோ டிகிரி ராசலீலா , எழுத்து சித்தரின் உடையார் , ஜெயமோகனின் கொற்றவை , விஷ்ணுபுரம் போன்ற நாவல்களை படித்து , என் மகிழ்ச்சியை பதிவுகள் மூலம் பகிர்ந்து கொண்டு வருவது உங்களுக்கு தெரியும்..
இதை பலர் வரவேற்றாலும், சிலர் மாற்று கருத்து சொல்லவும் தயங்கவில்லை..
இவ்வளவு பெரிய நாவல்களை ஒரு பதிவில் அடக்கி விட்டீர்களே ..இது நியாயமா என பலர் கேட்டார்கள்..
நியாயம் இல்லைதான்…
அது போன்ற முக்கிய நூல்களை பற்றி ஒரு பதிவில் சொல்ல முடியாது… தொடர்ச்சியாக சில பதிவுகள் எழுதிதான் சொல்ல முடியும்..
ஆகவே ஒரு முடிவு எடுத்துள்ளேன்..
இனி ஒவ்வொரு வாரமும் , ஒரு குறிப்பிட்ட புத்தகம் அல்லது குறிப்பிட்ட எழுத்தாளர் பற்றி தொடர் பதிவுகள் எழுத முடிவு செய்துள்ளேன்..
எந்த புத்தகம் குறித்தும், அந்த எழுத்தாளர் என்னை எப்படி பாதித்தார் என்பது குறித்தும் , விரிவான விமர்சனம் இடம் பெறும்.
அந்த எழுத்தாளரின் சிறப்பு பேட்டியும் இடம் பெறும்..
அந்த வகையில், வரும் வாரம் நம் அலசலுக்கு உள்ளாக போகிறவர் , பரபரப்பு எழுத்தாளர், ஃபேஸ் புக் ஹீரோ , எதிர் நீச்சல் இலக்கியவாதி விஜய் மகேந்திரன் ..
******************************************************
இவர் பெயரை முன்பே கேள்வி பட்டு இருந்தாலும், அவர் மேல் எனக்கு ஆர்வம் ஏற்ப்பட்டது புத்தக கண்காட்சியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்தான்…
அப்படி அங்கு என்ன நடந்தது? சொல்கிறேன்..
புத்தக் கண்காட்சி நடந்த போது, அவ்வப்போது விசிட் செய்து வந்தேன்.
ஒரு நாள் சென்று இருந்தபோது, பதிவர்களோ நண்பர்களோ அங்கு இல்லாததால் தனியாக சுற்றி கொண்டு இருந்தேன். ஒரு ஸ்டாலில் ஒரு புத்தகம் எடுத்து பார்த்து கொண்டு இருந்தேன்.
திடீரென அங்கு இருந்த அனைவரும், புத்தகம் பார்ப்பதை விட்டு விட்டு, யாரையோ பார்க்க ஆரம்பித்தனர்,, நானும் என் பார்வையை திருப்பினேன்.
பார்த்து என்னையே மறந்தேன்..
ஒட்டு மொத்த அழகும் உருவெடுத்த்து செய்தது போல ஒரு பெண் அவர் தோழியுடன் வந்து கொண்டு இருந்தார்.. அவர் ஆடை அழகுக்கு அழகு சேர்ப்பது போல இருந்தது…
அவர்களை பார்த்தால் தமிழ் புத்தகங்கள் படிப்பவர்கள் போல தெரியவில்லையே..இங்கு ஏன் வருகிறார்கள் என நினைத்து கொண்டிருந்த போதே என் அருகில் வந்து விட்டார்கள்..
என்னவோ கேட்டார்கள்.. பரவசத்தில் என்ன கேட்டார்கள் என்று புரியவில்லை..
உயிர்மை ஸ்டால் எங்கு இருக்கிறது என கேட்டார்கள் போல… வேறு சிலர் அவர்களுக்கு வழி சொல்லவே அவர்கள் கிளம்ப்பினார்கள்.
அவர்கள் போய் விட்டார்களே என்று வருத்தம் ஏற்பட்டாலும், அங்கு எதற்காக போகிறார்கள் என தெரிந்து கொள்ளும் ஆர்வமும் ஏற்பட்டது… எனவே நானும் அவர்களை பின் தொடர்ந்தேன்..
உயிர்மை ஸ்டாலுக்கு சென்ற அவர்கள், வேறு எந்த புத்தகதையும் சட்டை செய்யவில்லை..
ஏதோ ஒரு புத்தகத்தை மட்டுமே தேடினார்கள்…
அவர்கள் எதை தேடுகிறார்கள் என நானும் ஆவலாக கவனித்தேன்..
அவர்கள் கடைசியில் ஒரு குறிப்பிட்ட புத்தகத்தை தேடி எடுத்தார்கள்.. அதை புரட்டி புரட்டி பார்த்து விட்டு, கடைசியில் அதற்கு பில் போட சொன்னார்கள்.
அதை வாங்கி விட்டு கிளம்பியும் விட்டார்கள்.
அந்த ஒரு புத்தகத்துக்காக இவ்வளவு தூரம் வந்து அவர்கள் வந்தது எனக்கு பயங்கர ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது..
அந்த புத்தகம்தான், விஜய மகேந்திரனின் நகரத்திற்கு வெளியே என்ற சிறுகதை தொகுப்பு…
அழகிகள் வாங்கி விட்டார்கள் என்ற ஒரே காரணத்துக்காக நானும் வாங்கினேன்..
அதை படித்த பின் எனக்கு என்ன தோன்றியது, அந்த புத்தகம் இலக்கிய உலகத்தில் ஏற்படுத்திய தாக்கம், சம கால இலக்கியவாதிகளின் எதிர் வினை போன்றவற்றை தொடர் பதிவுகளில் பார்க்க இருக்கிறோம்…
vendaam aluthuruvaen...
ReplyDelete[im]http://www.medindia.net/afp/images/Obese-Kids-More-Prone-to-Bullying@@Health-China-obesity-youth-children-42860.jpg[/im]
ஏங்க அவரை போட்டு இந்த ஓட்டு ஓட்டுறீங்க...
ReplyDeleteவிஜய மகேந்திரன் - தமிழ் இலக்கியத்தின் சாம் அண்டர்சன்
ReplyDeleteஏங்க அவரை போட்டு இந்த ஓட்டு ஓட்டுறீங்க...
ReplyDeleteஉண்மையைத்தான் சொல்கிறேன்..
பெயர் இல்லாமல் வந்து ஜெயமொகன் கருத்து சொல்வதில் இருந்தே இது நிருபனம் ஆகிறது
விஜய மகேந்திரன் - தமிழ் இலக்கியத்தின் சாம் அண்டர்சன்”
ReplyDeleteஅது உங்கள் கருத்து..
சிலர் சாம் ஆண்டர்சனை , அமெரிக்காவின் விஜய் மஹேந்திரன் என்கிறார்கள்...
எது உண்மையோ... நான் அறியேன்
LOLZZZZZZZZZZZZZZZZZZZZZZZZ
ReplyDeleteஎன்ன கொடுமை சார் இது
ReplyDeleteஇவ்வளோ ஒட்டு ஒட்டினவங்க.... இந்த புத்தகத்திற்கு விம ஜெயந்தன் விருது வாங்கியதை பேசினாங்களா என்றும் பார்க்க வேண்டும்.
ReplyDelete:-)