Wednesday, March 9, 2011

இலக்கிய இமயம் சாரு குறித்து காப்பிய கவிஞர் வாலி

 

 

நான் படித்ததில்லை;

நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன்.
சமீபத்தில்தான் என் நெருங்கிய நண்பர் திரு.கிருஷ்ணகுமார் கொண்டுவந்து என் முன் கொட்டினார் "சாரு நிவேதிதா"வை!
என்னை ஈர்த்தது அவர் எழுத்து;

வசீகர நடை ஒருபுறமும்,உலகளாவிய நுண்மாண் நுழைபுலமும் அவர் எழுத்தில் விரவிக்கிடந்ததால் அல்ல.
தன்னை, வரிக்கு வரி ஒரு திறந்த புத்தகமாகப் போட்டு - 'வாசி வாசி' என்று வாசகனை வாசிக்கவைக்கும்...
அந்த மெய்மை!
-
கவிஞர் வாலி.

 

நன்றி : ஆனந்த விகடன்

4 comments:

  1. கவிஞர் வாலி எழுதிய மிக சிறந்த கவிதை!!!!
    சந்தோசமா இருக்கிறது.

    ReplyDelete
  2. yes nirmal..

    I am happy to read that

    ReplyDelete
  3. சாரு தனக்கு இப்படி ஒரு ரசிகன் இருப்பதற்கு பெருமைப் பட்டுக் கொள்ளலாம்

    ReplyDelete
  4. இலக்கிய இமயம் :: வாலி ஆனந்த விகடனில் என்னைப் பற்றி எழுதியிருந்ததைப் படித்த ஆனந்தத்தில் அதைப் பற்றி சொல்வதற்காக மனுஷ்ய புத்திரன் வீட்டுக்குச் சென்றேன். இது போன்ற ஒரு விஷயத்தை எடுத்த எடுப்பில் கேட்டால் அல்பம் என்று நினைத்துக் கொள்வார் இல்லையா? அதனால் பல்வேறு அரசியல் விஷயங்களை அலசி விட்டு கடைசியில் எதேச்சையாகக் கேட்பது போல் விகடன் பார்த்தீர்களா என்று கேட்டேன். பார்த்தேனே என்றார் அசுவாரசியமாக. அதற்கு மேல் எனக்கு எப்படி சுற்று வளைப்பது என்று தெரியாமல், வாலி என்னைப் பற்றி எழுதியிருக்கிறார்; படித்துப் பாருங்கள் என்றேன். உடனே ஆர்வமாக விகடனை எடுத்துப் படித்தார். படித்து விட்டு ஒன்றும் சொல்லாமல் பக்கத்தில் தூக்கிப் போட்டார்.
    போன இடத்தில் படுதோல்வியாகி விட்டதால் அவந்திகாவிடமாவது சொல்லலாம் என்று நினைத்தேன். அவள் ஆன்மீகம் தவிர வேறு எதுவுமே படிப்பதில்லை. என்றாலும் இது விதி விலக்காக இருக்கட்டுமே என்று சொன்னேன். படித்தாள். படித்து விட்டு “என்ன பெரிய இது… உன் பெயரை ரெண்டு தடவைதானே எழுதியிருக்கிறார்?” என்று வருத்தத்துடன் கேட்டாள். அவள் குரலில் உண்மையான வருத்தம் தெரிந்தது. நான் ” அவர் என்ன என் பெயரை ஸ்ரீ ராமஜெயம் மாதிரியா எழுத முடியும்?” என்று கேட்டேன். அப்படியும் அவளுக்குப் புரியவில்லை.

    இருப்பதே ஒன்றிரண்டு நண்பர்கள். மனைவியும் ஒரே மனைவி. அவர்களும் இப்படி இருக்கிறார்கள்… எவ்வளவு சோகமான சூழலில் வாழ்கிறேன் பாருங்கள்?
    March 7th, 2011

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா