நடிகன் என்றால் தப்பானவன், பயங்கரவாதி என பிரச்சாரம் செய்கிறார்கள். அபப்டி பார்த்தால் எம் ஜி ஆர் தவறானவரா என தே மு திக தலைவர் விஜய்காந்த லாஜிக்கலாக பிரச்சாரம் செய்தார்.
தன் கட்சி வேட்பாளரை அடித்து விட்டதாக ஒரு தொலைக்காட்சி சானல் செய்தி ஒளிபரப்பி வருகிறது..
இதற்கு பதில் அளிக்கும் வகையில் விஜயகாந்த் பேசிய விபரம்...
தர்மபுரியில் நான் பேசியபோது , மைக் கீழே விழுந்து விட்டது. அதை எடுத்து தர என் கட்சிகாரர் மேலே எழ முயன்றார்... நீ இரு,,, நானே எடுத்து கொள்கிறேன் என அவர் தலையில் கை வைத்து அமர செய்தேன்..
அந்த காட்சியை அடிக்கடி ரிவைண்ட் செய்து , வேகப்படுத்தி போடுவதால், நான் அவரை பலமுறை அடிப்பது போல காட்சி அளிக்கிறது..
என் கட்சிக்காரனை, தொனடனை வழினடத்தும் உரிமை எனக்கு உண்டு.. அதை கேட்க தி மு க வுக்கு என்ன தகுதி இருக்கிறது? வேட்பாளராக இருந்தாலும், உயர் பதவியில் இருந்தாலும், கட்சி தலைவர் என்ற முரையில் என் கடமையை நான் செய்வேன்..
ஆனால் பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி உள்ள தி மு க , இது போன்ற சிறுபிள்ளைத்தனமான குற்றச்சாட்டுக்களை என் மீது வைக்கிறது....
அவர்கள் அளவுக்கு தரம் தாழ்ந்து போகாமல் , நம் கடமையை நாம் செய்து, வெற்றி பெற வேண்டும்....
இவ்வாறு அவர் பேசினார்
நான் நினைச்சேன், வேட்பாளர் தான் அடிச்சு ஆசீர்வாதம் செய்யச் சொன்னார், அதனால் தான் அடித்தேன்னு சொல்லுவார்னு!
ReplyDeleteThanks for the info...
ReplyDeleteஆஹா..நாம திரும்ப வந்துட்டோம்ல!!!! சிறிய ஒரு இடைவெளியின் பின்.
ReplyDelete