நம் அனைவரின் மதிப்புக்கும் உரியவர் கேபிள் சங்கர் ..
அவர் எழுத்து நமக்கு பிடித்த விஷயம்…
அது மட்டும் அல்ல,
அவரிடம் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் அனேகம்…
அது மட்டும் அல்ல…
தன்க்கு தெரிந்த விஷயத்தை நமக்கு புரியும்படி சொல்ல கூடியவர் அவர்.. பதிவில் மட்டும் அல்ல… நேரில் பேசும்போதும் அன்புடன் விளக்கங்கள் தரக்கூடியவர் அவர்..
எனவே அவர் நேர்மை மீதோ, சினிமா அறிவு மீதோ, தன்னடக்கம் மீதோ நம் யாருக்கும் எந்த சந்தேகமும் துளியும் இல்லை..
ஆனாலும் இவர் ஏன் கமல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மட்டும் தவறான விஷயங்களை தருகிறார் என்பது அனைவருக்கும் புரியாத புதிர்,
ஆனால் அவர் மீது வைத்து இருக்கும் அன்பு காரணமாக யாரும் அதை வெளிப்படையாக சொல்வதில்லை…
எங்களை போன்ற சிலர் சுட்டிக்காட்டுவதும், அவர் எழுத்தில் பிழை இருக்க கூடாது என்ற அன்பினால்தான்.
அந்த புரியாத புதிருக்கு அவரே விளக்கம் அளித்து , குழப்பத்தை தீர்த்து வைத்துள்ளார்.
அதை பார்க்கும்முன், எதையும் தெளிவாக பேசும் அவர் , ஒரு விஷயத்தில் எப்படி குழப்புகிறார் ? நீங்களே பாருங்கள்…
அவர் முதலில் எழுதியது….
தமிழ் சினிமா தொலைக்காட்சியின் பின்னே அமிழ்ந்து போயிருக்கக் கூடிய அபாயத்தை காப்பாற்றிய பெருமையில் நிச்சயம் கமலுக்கு பெயர் உண்டு
அதாவது புதிய தொழில் நுட்பத்தை கமல் அறிமுகப்படுத்தினார்… அதனால்தான் தமிழ் சினிமா இன்று உயிரோடு இருக்கிறது என எழுதினார்..
இந்த வாதம் தவறு … கமல் இல்லாவிட்டால் வேறு யாராவது இதை கொண்டு வந்து இருப்பார்கள்… அட.தமிழ் படம் இல்லாவிட்டாலும் ஆங்கில படங்களை திரையிடவதற்காகவாவது இந்த தொழில் நுட்பத்தை திரை அரங்குகள் கொண்டு வந்து இருக்கும்… அப்படி நிக்ழந்தும் இருக்கின்றன என ஆதாரத்துடன் சுட்டி காட்டப்பட்டது…
எனவே சற்று கருத்தை மாற்றிக்கொண்டார் அவர்…
அடுத்த சில நாட்களில் எழுதியது இது..
தமிழின் முத்ல் டால்பி டிஜிட்டல் படத்தை எடுக்க முனைந்தவர்களில் கமல் , அபிராமி ராமநாதன், தேவி, மற்றும் ஏவிஎம் இராஜேஸ்வரி திரையரங்கு உரிமையாளர்களுக்கு பங்கிருக்கிறது
இப்போது கமல் மட்டும் இந்த பெருமைக்கு காரணம் இல்லை… வேறு சிலரும் காரணம் என ”பெருந்தனமையை” காட்டினார்…ஆனால் அதில் பெருமை எதுவும் இல்லை என ஒப்புக்கொள்ளவில்லை…
கடைசியில் சற்று இறங்கி வந்து இப்படி எழுதினார்..
தமிழின் முதல் டால்பி டிஜிட்டல் படம் கமலின் “குருதிப்புனல்” தான் .
அதாவது தமிழின் முதல் டால்பி படம் எனப்து மட்டுமே குருதி புனலின் சிறப்பு.. அதனால்தான் தமிழ் சினிமாவே உயிர் வாழ்கிறது என்று சொன்னதெல்லாம் சும்மா, என சொல்லாமல் சொல்லி விட்டார்.நன்றி..
இதில் டால்பி, டி டி எஸ் என விவாதத்தை திசை திருப்பவும் பார்த்தார்..
உதாரணமாக, ஒருவன் தினமும் ஒரு ஓல்ட் மான்ங் அடித்து விட்டு ரகளை செய்கிறான் என குற்றம் சாட்டுகிறோம் என வைத்து கொள்ளுங்கள்..
அவன் ரகளை செய்வதில்லை… உங்கள் குற்றச்சாட்டு தவறு என சொன்னால் அர்த்தம் இருக்கிறது…
உங்கள் குற்றச்சாட்டு தவறு.. அவன் ஓல்ட் மாங்க் அடிப்பதில்லை… விஎஸ்ஓபி தான் அடிப்பான் என சொல்வது சரியான வாதமா?
கமல் டால்பி எடுத்தாரா , டி டி எஸ் எடுத்தாரா என்பதா கேள்வி?
என்ன எடுத்து இருந்தாலும், அந்த படம் குப்பை.. அதன் மூலம் புதிய டிரண்ட் ஏற்படவில்லை… மாறாக பலரை பயம் கொள்ள செய்தது என்பதுதானே ஆதார பூர்வ கேள்வி.. இதற்கு பதில் சொல்லாமால் ஏன் குழப்புகிறார் என பலரும் யோசித்தனர்.
இதற்கு இன்னொரு நண்பரின் தளத்தில் பதில் சொல்லி இருக்கிறார் கேபிள்..
ஒரு ஆங்கில படம் குறித்து தவறான தகவல் கொடுத்தது ஏன் என்பது கேள்வி… அதற்கு என்ன பதில் அளித்தார்? பாருங்கள்..
*****************************************************************************************
கேள்வி :
கீழே இருந்த இன்னொரு பதிவை படித்தேன்.
World Invasion: Battle Los Angeles. ங்கொய்யால.. வந்துருச்சு.. ஓடு..
ஒரு டிஸாஸ்டர் படம் ஹிட்டானது. அடுத்து ஒலகம் அழிப்போவுது பூமாதேவி உக்கிரமாயிட்டான்னு 2010னு ஒரு படம் சக்கைப் போடு போட்டது. உடனே அதைப் போல ஒரு நாலு படம் எடுக்க ஆரம்பிச்சதுல வந்திருக்கிற படம் தான் இன்வேஷன்: பேட்டில் ஆப் லாஸ் ஏஞ்செல்ஸ்.2012 னு ஒரு டிஸாஸ்டர் படம் வந்தது. 2010 னு ஒரு படம் எப்ப வந்தது.. ? இதுக்கு பேரு என்ன தகவல் பிழை இல்லையோ ?
பதில்
கேபிள் சங்கர் says:
3:58 பிற்பகல் இல் மார்ச்18, 2011
.. படம் பார்த்துட்டு நொந்துபோயி எழுதினேன்.
***************************************************
அதாவது வரவே இல்லாத ஒரு படம் வந்து விட்டதாக எழுதியதற்கு காரணம் இன்னொரு படத்தின் மீது இருக்கும் கோபம்.
உணர்ச்சி வசப்பட்டு எழுதுவதால்தான் தவறாக எழுதி விட்டேன் என்கிறார்.
இதே போலத்தான் கமல் மீது இருக்கும் பாசத்தால் உணர்ச்சி வசப்பட்டு தவறான தகவல் தந்து இருப்பார் என்றே நாம் நம்புகிறோம்…
அந்த இன்னொரு நண்பர் கூறி இருக்கும் காரணம் ஏற்புடையதல்ல
"தாஸ்" படத்தில், "டேய்... நீ இன்னும் இங்க இருக்கியான்னு" சொல்லிட்டு கழிவறை சுத்தம் செய்யும் பெண் வடிவேலை துவைத்தெடுக்கும் காமெடி நினைவுக்கு வருகிறது...
ReplyDeleteஎன்ன ஆச்சு? ரொம்ப ஆள் எழுதாம இருக்கீங்க.. மீண்டும் எழுதுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்
ReplyDeleteஎன்ன இது நீங்களும் பின்னிரவில் விழித்துக் கொண்டிருக்கிறீர்கள்... ஒருவேளை அதிகாலை ஆயிடுச்சோ...
ReplyDeleteஓரிரு வாரங்களில் மீண்டும் எழுத ஆரம்பிப்பேன்...
ReplyDelete"ஓரிரு வாரங்களில் மீண்டும் எழுத ஆரம்பிப்பேன்."
ReplyDeleteவாவ்.. நல்ல செய்தி
வருக வருக... சுவையான செய்திகளை தருக தருக...
என்ன இது நீங்களும் பின்னிரவில் விழித்துக் கொண்டிருக்கிறீர்கள்”
ReplyDeleteஉன்னைப்போல் ஒருவன்’
:)
நீங்க முதலில் சொந்தமா சிந்திந்து எழுதுங்க ... கேபிள் சங்கரை குறை சொல்லியே பதிவு போடதிர்கள்..
ReplyDelete// Suthershan said...
ReplyDeleteநீங்க முதலில் சொந்தமா சிந்திந்து எழுதுங்க ... கேபிள் சங்கரை குறை சொல்லியே பதிவு போடதிர்கள்//
அவர் என்னா வச்சிகிட்டு வஞ்சனையா பண்றாரு
தேர்தல் அறிக்கை 2011 கதாநாயகி (கதாநாயகன்)
ReplyDeletehttp://aagaayamanithan.blogspot.com/2011/03/2011.html
தேரோடும் சென்னையிலே
ReplyDeleteதேனொழுகும் சென்னையிலே
ஆரடித்தாரோ?
ஆரடித்தாரோ?
அட பன்னாடையே.. நிச்சயமாய் அவர் எங்கேயும் கமலைப்பற்றி தவறான தகவல்களை கொடுக்கவில்லை. இன்றளவில் தமிழ் சினிமா உள்ளவரை த்மிழ் சினிமா உலகிற்கு டால்பியை கொண்டு வந்தவர்களில் கமல் ஒரு முன்னோடி என்பதில் சந்தேகமேயில்லை.
ReplyDeleteகுற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை. தகவல் பிழை சகஜம்.( கேபிள் சங்கர் டிஸ்க்ளெய்மர் எதும் போடலியா?)
ReplyDeleteகமல் மேட்டர் : அவிகவிக பார்வைய பொருத்து இன்டர் ப்ரிட்டேஷன் மாறும். இதுக்கெல்லாமா இந்த பரேடு.
சாரி கொஞ்சம் ஓவர்
வலுவில்லாத குற்றச்சாட்டு, இதே இடுகையை திரும்ப படித்துப்பார்த்தால் புரியும்.
ReplyDeleteஏன் கேபிள் மீது தனிப்பட்ட முறையில் ஏதேனும்....கோபமா:((
ஏன் கேபிள் மீது தனிப்பட்ட முறையில் ஏதேனும்....கோபமா:((
ReplyDelete************************
சூரியன் மேல் சுண்டெலிக்கு என்ன கோபம்?
அவர் தவறாக எழுதி மற்றவர்கள் கேலி செய்து விட கூடாதே என்ற அக்கறையை தவிர வேறு இல்லை
Mr.பார்வையாளன்..
ReplyDeleteமுதல்ல நீங்க பார்வையாளனா இல்ல கேபிள் சங்கர் பி.ஏ.வா??? இப்படி அவர் எங்கபோனாலும் பின்னாடியே போவீங்க போலயிருக்கே.. இல்ல அந்த இன்னொரு பதிவு எழுதியது நீங்களே தானா இல்ல உங்க நண்பர் தானா???
கண்ணுக்கு கூலிங்கிலாஸ் போட்டுகிட்டு எதைப் பார்த்தாலும் கறுப்பாதான் தெரியும்.. கழட்டிட்டு பாருங்க..
மூச்சிக்கு மூணு முறை கேபிள் அண்ணன் நல்லவரு வல்லவருன்னு தேவையில்லாம சொல்லும்போதே தெரியுது அவரு மேல உங்களுக்கிருக்கும் அன்பு.. போன முறை சொன்னதே தான்.. பொறாமை உங்களை அழிச்சிடும்..
உங்களுக்கு எழுத வேறு மேட்டரே கிடைப்பதில்லையா??? ஏன் அவரையே தொறத்திட்டு இருக்கீங்க???
உங்களுக்கு எழுத வேறு மேட்டரே கிடைப்பதில்லையா??? ஏன் அவரையே தொறத்திட்டு இருக்கீங்க???"
ReplyDeleteஅவரைபோன்ற , பிரபலமாக இருப்பவர்கள், ஒரு தவறான தகவலை சொல்லும்போது, அது மக்கள் மனதில் உண்மை என பதிந்து விடுகிறது..
எனவேதான் இதை ஆணவத்தோடு அல்ல, அன்புடன்
சுட்டி காட்ட வேண்டி இருக்கிறது...
”
பொறாமை உங்களை அழிச்சிடும்”
நான் கேபிள் அண்ணன் எழுத்துக்கு ரசிகன்.. அதில் எனக்கு பெருமை.. பொறாமை அல்ல.
>>>பார்வையாளன் said...
ReplyDeleteஎன்ன இது நீங்களும் பின்னிரவில் விழித்துக் கொண்டிருக்கிறீர்கள்”
உன்னைப்போல் ஒருவன்’
ஹா ஹா செமயான பின்னூட்டம்
//2012 னு ஒரு டிஸாஸ்டர் படம் வந்தது. 2010 னு ஒரு படம் எப்ப வந்தது.. ? இதுக்கு பேரு என்ன தகவல் பிழை இல்லையோ ? //
ReplyDeleteஅண்ணாச்சி 2010 படம் பார்த்ததா நியாபகம்...ஜப்பான் படம்னு நெனக்கிறேன்..