Sunday, March 27, 2011

மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட ஒரு குறள்...


எத்தனை முறை படித்தாலும் இனிமையாக இருப்பது திருகுறள்.

மொழி அழகுக்காகவும், கருத்துக்களுக்காவும் படித்து கொண்டே இருக்கலாம்..

இதில் ஒரு சிக்கல் என்னவென்றால் சிலர் தெரிந்தும் தெரியாமலும் தவறான விளக்கங்கள் அளித்து விடுவார்கள்..
பிரச்சார நோக்கில் செய்வதும் உண்டு , தெரியாமல் செய்வதும் உண்டு..

இதில் ஒரு குறளுக்கு மட்டும் , ஆளாளுக்கு ஒரு விளக்கம் அளித்து, மிக அதிக அளவில் குழப்பிய பெருமை உண்டு..

என்ன குறள்?


அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.

சிவிகை என்றால் பல்லக்கு...  ஒருவன் சுமக்கிறான் . ஒருவன் அதில் செல்கிறான்..
சரி..

இதில் குழப்பம் வர வாய்ப்பே இல்லையே? என்ன குழப்பம்?

பலர் பலவிதமாக குழப்பினாலும்,. ஆதாரமாக இரு தரப்பு விளக்கங்கள்தாம் இருக்கின்றன...

என்ன அது ?

ஒரு சாரார் கொடுக்கும் விளக்கம்..

அறத்தின் பலன்   என்ன என நீயாக எதுவும் சொல்ல வேண்டாம்.. பல்லக்கை பார்.. ஒருவன் சுமக்கிறான... ஒருவன் அதில் செல்கிறான்.. இதை கூர்ந்து கவனித்தாலே போதும்.. அவர்களுக்கிடையே ஏன் இந்த வேறு பாடு வந்தது என்று பார்த்தால் போதும் ..

ஒருவன் உழைத்து பணக்காரன் ஆகிறான் .. ஒருவன் ஊதாரியாக இருப்பதால் ஏழையாகிறான் என்பது வேறு விஷயம்..
ஆனால் எந்த காரணமும் இன்றி சிலர் கஷ்டபடுகிரார்கள்.. எந்த தகுதியும் இன்றி சிலர் உயர்ந்த இடத்தில் இருக்கிறார்கள்..
ஏன் இப்படி?

பல்லக்கில் செல்பவன் ஏன் சுமப்பவனாக இல்லை? சுமப்பவன் ஏன் அதில் செல்பவனாக இல்லை?

இதுதான் அறத்தின் பலன்...

முன் பிறவியில் செய்த நற்செயல்கள் , தீய செயல்கள் தான் இந்த பிறவியில் நாம் அனுபவிக்கும் நன்மை தீமைகளுக்கு காரணம்.
எனவே இனியாவது நல்ல செயல்கள் செய்ய வேண்டும்...அறத்தை போற்ற வேண்டும்..

இது ஒரு சாரார் விளக்கம்..

இன்னொரு சாரார் கொடுக்கும் விளக்கம்..

முற்பிறவி, பாவம் , புண்ணியம் எல்லாம் இல்லை...

இந்த குறள் என்ன சொல்கிறது?

பல்லக்கை தூக்குபவனையும், அதில் உட்கார்ந்த்து இருப்பவனையும் பார்த்து விட்டு, இதுதான் அறத்தின் பலன் என சொல்ல வேண்டாம். உடகார்ந்து செல்பவன் புண்ணியம் செய்பவன்... சுமப்பவன் பாவம் செய்தவன் என்று நினைத்து கொள்ள வேண்டாம்..

இது ஓர் விளக்கம்...

இதில் எது சரியானது?


அறம் என்றால் என்ன , அதன் முக்கியத்துவம் என்ன என்று அறன் வலியுறுத்தல் அதிகாரத்தில் சொல்லும் வள்ளுவர் , அறத்தின் பலன் என்ன என்பதற்கு ஒரு உதாரணம் தருவாரே தவிர, எது அறம் இல்லை என்பதற்கா கேஸ் ஸ்டடி தருவார்?
எனவே முதல் பார்வையிலேயே இரண்டாம் விளக்கம் அடிபட்டு போகிறது..


அப்படி என்றால் முதல் விளக்கம் சரியானதா?

ஊழ் அதிகாரத்தில் இந்த குறள் இடம் பெற்று இருந்தால் அந்த விளக்கம் சரி எனலாம்... இந்த அத்தியாயத்தில் அது பொருந்தவில்லையே !!

கவனித்து படித்தால் தெரியும்..

விளக்கம் எல்லாம் இல்லாமல் நேரடியான அர்த்தம் மட்டும் பார்த்து விட்டு, அந்த அதிகாரத்தின் மற்ற குறள்களை பார்த்தால் தெளிவு பிறக்கும்..

நேரடியான அர்த்தம் என்ன?

பல்லக்கை தூக்குபவன், சுமப்பவன் - இவர்களிடம் சென்று அறத்தின் பலன் இது என்று சொல்ல வேண்டாம் என்பதே நேரடி அர்த்தம்..

இப்படி சொல்வதன் மூலம் நமக்கு என்ன சொல்கிறார் வள்ளுவர்...

கவனியுங்கள்

இதுதான்  அறத்தின் பலன் என்றோ , இது அறத்தின் பலன் இல்லை என்றோ சொல்லவில்லை...

அவர்களிடம் சொல்ல வேண்டாம் என்கிறார்...

சரி...

இதில் இருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்ன?

(தொடரும் )

5 comments:

  1. கலக்கலான பதிவு..தொடருங்கள்!

    ReplyDelete
  2. இப்போவே கண்ண கட்டுதே! ஹி,ஹி,ஹி,ஹி....

    ReplyDelete
  3. இந்த controversy அலசல் நல்லாயிருக்கு!! :-))

    ReplyDelete
  4. 'முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்' போன்ற எல்லாமே
    கேள்விக்கு உரியதுதான். சிலருக்கு முயற்சி எதுவுமே இல்லாமல்
    கிடைக்கின்றதே என்ற யோசனை வரும். எனது கருத்து
    எதுவென்றால் இவ்வுலகம் இறைவனின் நாடகம் என்று எடுத்துக்
    கொண்டால் நாமெல்லோரும் அதன் கேரக்டர்கள். எனக்கு ஏன்
    இந்தக் கேரக்டர் கொடுத்தாய் என்று டைரக்டரிம்தான் கேட்க வேண்டும்.

    ReplyDelete
  5. எனது பின்னூட்டத்தை மீண்டும் படித்த போது 'கேரக்டர் விதியென்று
    இருந்து விட முடியாது, அதை முயற்சி செய்து மாற்றிக் கொள்ளலாம்'
    என்ற சிந்தனை இப்போது தோன்றுகிறது. அப்ப 'முயற்சி உடையவர்
    இகழ்ச்சி அடையார்' என்பது சரிதான் போல :)))

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா