Pages

Thursday, March 17, 2011

ஆளுங்கட்சி ஊடகங்களின் அதீத ஆர்வ கோளாறு எதிரொலி - அதிமுக அணியில் சுமூக உடன்பாடு

 

ஆளுங்கட்சி ஆதரவு ஊடகங்களின் ஆர்வ கோளாறால், மூன்றாம் அணி முயற்சி முடிவுக்கு வந்தது.. விடிய விடிய நடந்த நள்ளிரவு பேச்சுக்களில் சுமுக முடிவுக்கு வந்துள்ளதாக அதிமுக அணியினர் தெர்வித்துள்ளனர்..

பேச்சுக்கள் முடியாத நிலையில், வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டது கூட்டணி கட்சியினரிடையே அதிருப்தி ஏற்படுத்தியது.. எனவே அவர்கள் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பேச ஆரம்பித்தனர்..

தனி அணி அமையும் சூழ் நிலையும் உருவானது..

இந்த நிலையில் ஆளுங்கட்சி ஆதரவு ஊடகங்கள், மூன்றாவது அணி உருவாகி விட்டத்து போலவும், அந்த அணிதான் ஆட்சியை பிடிக்க போகிறது என்பது போலவும் செய்தியை பரப்ப ஆரம்பித்தனர்… குறிப்பாக சன் தொலைக்காட்சி இது போன்ற செய்திகளை முனைந்து பரப்பியது..

மூன்றாவது அணி அமைவதில் இவர்களுக்கு ஏன் இவ்வளவு அக்கறை என் யோசித்த அவர்கள், மூன்றாவது அணி என்பது திமுக வெற்றிக்கு வழி வகுப்பதை தவிர வேறு எதையும் சாதிக்காது என்பதை உணர ஆரம்பித்தனர்..

எனவே மூன்றாவது அணி பேச்சில் சுணக்கம் ஏற்பட்டது.

இதற்கிடையில், அதிமுகவும் பேச்சுக்கு வந்தது…

கடைசியில் சுமுக உடன்பாடு ஏற்பட்டது..

என்ன உடன்பாடு?

  • ம.தி.மு.க.,வுக்கு 13 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட்
  • புதிய தமிழகம் ஒட்டப்பிடாரம், வால்பாறை ஆகிய தொகுதிகள்
  • சரத்குமார் கேட்ட, தென்காசி, நான்குநேரி தொகுதிகள் அவருக்கு
  • இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும், அவர்கள் முன்பு  வெற்றி பெற்ற தொகுதிகள்
  • தே.மு.தி.க.,வுக்கு அவர்கள் கேட்ட அண்ணாநகர், விருகம்பாக்கம் தொகுதிகள்

இந்த உடன்பாட்டுக்கு அனைவரும் ஒத்து வந்ததால், மூன்றாவது அணி முயற்சி முடிவுக்கு வந்தது…

இன்று ஒப்பந்தம் கை எழுத்தாகும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன..

ஆதரவு ஊடகங்களின் அதீத ஆர்வ கோளாறு , மூன்றாவது அணிக்கு முடிவு கட்டியதால், கருணா நிதி அதிருப்தி அடைந்துள்ளாராம்…

2 comments:

  1. தலைப்பு ரொம்பப் பிடிச்சிருக்கு!

    ReplyDelete
  2. [im]http://www.cindybarry.com/smileys/hammock_beach2.gif[/im]

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]