தேர்தலை புறக்கணிப்பது என்ற வைகோவின் முடிவு தங்களுக்கு வேதனை அளிப்பதாகவும் அதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து அந்த கட்சியின் மா நில செயலாளர் ஜி ராமகிருஷ்ணன் அறிக்கை விடுத்துள்ளார்.
காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசும் , திமுக தலைமியிலான மா நில அரசும் கடைபிடித்து வரும் தவறான பொருளாதார கொள்கைகளினால் , விலைவாசி உயர்வு , மின் வெட்டு, விவாசாயத்தில் சரிவு உடபட பலபிரச்சினைகள் ஏற்பட்டு, மக்கள் சொல்ல முடியாத துயரத்துக்கு ஆளாகி உள்ளனர்.
இவர்களை எதிர்த்து நடைபெறும் போராட்டங்களில் மதிமுக வின் பங்களிப்பு முக்கியமானது.இந்த தேர்தலில் ஆளுங்கட்சியை வீழ்த்த வேண்டிய முக்கிய கடமை மக்கள் முன் இருக்கிறது. இதனால்தான் அதிமுக தலைமையில் மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் அணிவகுத்துள்ளன. திமுகவை வீழ்த்துவதில் , முக்கிய பங்கு ஆற்ற வேண்டிய மதிமுக , தேர்தலில் இருந்து விலகுவது வேதனை அளிக்கிறது. அவர் இந்த முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும்..
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இதே போல வேண்டுகோள் விடுத்துள்ளது..
அதன் மா நில செய்லாளர் தா பாண்டியனின் அறிக்கையில்..
வைகோ எடுத்துள்ள முடிவு வருத்தம் அளிக்கிறது. அதி மறுபரிசீலனை செய்ய வேண்டும்..அதிமுக தலைமையும் சுமூகமான தீர்வுக்கு வழி செய்ய வேண்டும். திமுகவை தோற்கடிக்க இது முக்கியமானது
என கூறியுள்ளார்.
மனித நேய மக்கள் கட்சியும் இதே போல வேண்டுகோள் விடுத்துள்ளது.
*********************************************
இந்த நிலையில், ஜெ எழுதிய கடிதம் குறித்து வைகோ கூறுகையில், ”நாங்கள் நடத்தப்பட்ட விதம் குறித்து நடு நிலையாளர்கலும், மக்களும், அ இ அ தி மு க தொண்டர்களும் வருத்தம் அடைந்துள்ளனர்.. இதை உணர்ந்ததால்தான் ஜெ இந்த கடிதம் எழுதியுள்ளார்.. மதிமுகவுக்கு 30 இடங்கள் ஒதுக்கப்பட்டதாகவும், நாங்கள் வேண்டும் என்றே கூட்டணியை உடைத்ததாகவும் சிலர் வதந்தியை பரப்பினர்.. ஆனால் எங்களுக்கு ஒதுக்கப்பட்டது 12 இடங்கள்தான் என ஜெயலலிதாவே ஒப்புக்கொண்டு விட்டார்.” என்றார் அவர்..
நீங்கள் வெளியூர் பயணம் செய்யப்போவதாக செய்திகள் வருகின்றனவே என நிருபர்கள் கேட்டனர்..
“ இல்லை.. நடந்த சம்பவங்களை விளக்குவதற்காக என் தாயாரை சந்திக்க இருக்கிறேன்.. அதற்க்காக சொந்த ஊர் செல்கிறேனே தவிர வேறு ஒன்றும் இல்லை “
இவ்வாறு வைகோ கூறினார்..
I appreciate the respect you are showing to Vaiko through your tweets and blog posting
ReplyDeleteகடைசியில் அம்மாவை ஆதரிக்க வாய்ஸ் வரும்!
ReplyDelete// நடந்த சம்பவங்களை விளக்குவதற்காக என் தாயாரை சந்திக்க இருக்கிறேன்.. ///
ReplyDeleteதமிழ் படத்துல வரும் அம்மா செண்டிமெண்டை விட இது ஓவரோ ஓவர்
"எனக்கு என் மரியாதை முக்கியமில்லை, என் இனத்தின் மரியாதை தான் முக்கியம், பகுத்தறிவு மற்ற எல்லா எழவையும் அப்பறம் பாத்துக் கொள்ளலாம்"
ReplyDeleteபெரியார்