வெளி நாடுகளில் "அகதி" என்ற அந்தஸ்துக்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு இலங்கை நாட்டின் பாஸ்போர்ட் வழங்கப்படாது என அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இது உடனடியாக அமுலுக்கு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் நடந்த யுத்தம் காரணமாக இல்ங்கையில் இருந்து வந்த பலருக்கு அமெரிக்கா , இங்கிலாந்து போன்ற நாடுகளில் அடைக்கலம் வழங்கப்பட்டது.
அகதி என்ற அந்தஸ்து அங்கு வழங்கப்பட்டது.
இது போன்றவர்கள் இங்கிலாந்தில் நிரந்தரமாக வசிக்க முடியும். ஒரு வருடம் கழித்து இங்கிலாந்து பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க முடியும்.
மீண்டும் இலங்கைக்கு செல்ல விரும்பினால் லண்டனில் இருக்கும் இலங்கை தூதரகம் மூலம் இலங்கை பாஸ்போர்ட் வாங்கி வந்தனர்..
இந்த நிலையில் இங்கிலாந்தில் அகதி அந்தஸ்துக்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு இலங்கை நாட்டின் பாஸ்போர்ட் வழங்கப்படாது என இல்ங்கை அறிவித்துள்ளது.
இத்னால் பலர் நாடற்ற நிலைக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது..
No comments:
Post a Comment
NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]