வழக்கமாக தேர்தலில் வாய்ஸ் கொடுக்கும் ரஜினி, இந்த தேர்தலை பொறுத்தவரை எதுவும் பேசவில்லை..
இந்த நிலையில் தேர்தல் நடக்கும் நாளான இன்று அவர் தன் மவுனத்தை கலைத்தார்.
நிருபர்களிடன் பேசிய அவர் இந்த தேர்தலில் ஊழல்தான் முக்கிய பிரச்சினையாக இருக்கும் என்றார். அடித்த்ட்டு மக்கள் , விவசாயிகள் ஆகியோர் இந்த தேர்தலில் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்றார்.
உங்கள் ஓட்டு யாருக்கு , எந்த கட்சி வெல்லும் போன்ற கேள்விகளுக்கு அவர் நேரடியாக பதில் அளிக்கவில்லை.
எந்த கட்சி வெல்லும் என சொல்ல விரும்பவில்லை.. இந்த தேர்தல் தமிழ் நாட்டுக்கு மிக முக்கிய தேர்தல் என்பதை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
ஊழலுக்கு எதிராக இயக்கம் எதுவும் ஆரம்பிக்கும் உத்தேசம் இல்லை.. அதைத்தான் அண்ணா ஹசாரே செய்கிறாரே? அதை ஆதரிக்கிறேன். அவர் உண்ணாவிரதம் இருந்த போது சந்திக்க நினைத்தேன். முடியாமல் போய் விட்ட்து என்றார்.
தமிழ் நாடு முழுதும் விறுவிறுப்பாக வாக்கு பதிவு நடந்து வருகிறது... ஏதோ ஓர் அலை வீசுவது தெளிவாக தெரிகிறது..
ஆளும் கட்சி ஆதரவு அலையா ? எதிர்ப்பு அலையா என தெரியவில்லை..
இது ஆளும் கட்சிக்கு எதிரான அலை என சீமான் தெரிவித்தார்.
மக்கள் குடும்பம் குடும்பமாக வாக்களித்து வருகின்றனர். கண்டிப்பாக ஆட்சி மாற்றம் நிகழும் என்றார் அவர்.
நடிகர் சூர்யா பேசுகையில், ஊழல்தான் இந்த தேர்தலில் முக்கிய பிரச்சினை..அந்த அடிப்படையில் வாக்களித்தேன் என்றார்
Super Cool!
ReplyDeleteரஜினி பக்கா பிஜேபி; திமுக சார்பாளர்.
ReplyDeleteRajini, once again proved, he is mental
ReplyDelete