Wednesday, April 13, 2011

இடங்களுக்கு இஸ்லாம் கொடுக்கும் முக்கியத்துவம் - முகமது இஸ்மாயில்


    
உலகில் பல மதங்கள் உண்டு..  ஒவ்வொன்றுக்கும் ஒரு இயல்பு உண்டு. அதில் கட்டுப்பாட்டுக்கும் , சமரசம் செய்து கொள்ளாத தன்மைக்கும், அறிவு சார்ந்த தேடலுக்கும் பெயர் பெற்றது இஸ்லாம் மதம் என்பது என் கருத்து ( அடுத்த பதிவில் நான் ஏன் அப்படி நினைக்கிறேன் என எழுத இருக்கிறேன் )
  
   புனித நூல்கள் என்பது அனைவருக்கும் பொதுவானவையே.. அதில் இருக்கும் ஞான கருத்துக்களை கற்பது அனைவரின் பிறப்புரிமை..

     அந்த வகையில், நான் புனித குர் ஆன் நூலை ஆர்வமாக படிப்பவன் நான். மதம் என்பதை தாண்டி ஒரு தன்னம்பிக்கை நூலாக, நிர்வாக நூலாக , கவிதை புத்தகாமாக அது திகழ்வதை கண்டு பிரமிப்பாக இருக்கிறது..

    ஆனால் இஸ்லாம் என்ன சொல்கிறது என சரிவர புரிந்து கொள்ளாமல் , தன்னை இஸ்லாமியன் என காட்டி கொள்ள குறுக்கு வழியை மேற்கொண்டுள்ளனர் , சிலர் எகிப்து நாட்டில். 
      தர்க்காக்களை இடித்தல் , அல்லாஹ் வழியில் நடந்து அடக்கம் ஆனவர்களை மரியாதை இல்லாமல் பேசுதல் போன்றவை இஸ்லாமிற்கு எதிரானது என புரியாமல் , அப்படிப்பட்ட காரியங்களை செய்து வருகின்றனர்.

    இப்படி செய்வதை இஸ்லாம் ஏற்கவில்லை என நான் படித்ததை வைத்து எழுதி இருந்தேன்.. 

ஆனால் என்னை விட அதிகம் படித்த சகோதரர் முகமது இஸ்மாயில் இன்னும் சிறப்பாக பின்னூட்டத்தில் எழுதியுள்ளார்.

 அவரது கருத்து இதோ, உங்கள் பார்வைக்கு,

*********************************************
       
கண்ணியப்படுத்துதல் வேறு. கடவுளாக நினைப்பது 
வேறு 
- முகமது இஸ்மாயில் 


டங்களுக்கு இஸ்லாத்தில் நிறைய முக்கியத்துவம் உண்டு.
உதாரணமாக ஹஜ் கடமையானது இப்ராஹீம் நபியவர்களின் குடும்பத்தாரை நினைத்து செய்ய கூடிய கடமையாகும்.
இப்ராஹீம் நபியவர்களது குடும்பம் எந்த இடத்தில் தியாகத்தை செய்ததோ அதே இடத்திற்கே போய் நினைவு கூர சொல்வதிலிருந்தே இடத்திற்கான முக்கியத்துவம் விளங்கி விடுகிறது.
குரான் ஷரீஃப்ல ஒரு வசனம் வரும், ”அந்த இடத்திலேயே (ஹுனாலிக என்ற அரபி வார்த்தை) ஜகரிய்யா தம் இறைவனிடம் பிரார்த்தனை செய்வதாகக் கூறினார் (At the very place Zakariyya prayed to his Lord) “இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய்..”
மேலே கண்ட வசனமானது குரான் ஷரீஃப் – ஸீரத்துல்ஆல இம்ரான் (இம்ரானின் சந்ததிகள்) – வசனம் 38ல் இடம் பெற்ற வசனமாகும்.
அதாவது ஜகரிய்யா நபியவர்கள் அன்னை மர்யம் (அலை) (மதர் மேரி) அவர்களின் மிஹ்ராபுக்கு (இடத்திற்கு) வந்த போதெல்லாம் அங்கே உணவு இருப்பதை கண்டார்கள்.
’இங்கே தான் யாருமே வருவதில்லையே, உங்களுக்கு உணவு எப்படி கிடைத்தது? என்று கேட்டதற்கு மர்யம் (அலை) அவர்கள் ‘இது எனக்கு அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது’ என்பதாக சொல்கிறார்கள்.
அந்த இடத்தை புனிதமான இடமாக உணர்ந்ததனால் தானோ என்னவோ ஜகரிய்யா நபி அந்த இடத்திலேயே பிரார்த்தனை செய்கிறார்கள்.
அன்னை மர்யம் (அலை) ஒரு நபியே அல்ல, ஆனால் அவர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு உரிய மரியாதை கிடைத்தது.
அதே போல் குரான் ஷரீஃபில் பிறிதொரு இடத்தில்,
(இதையும் எண்ணிப் பாருங்கள்; “கஃபா என்னும்) வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் இன்னும் பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்; இப்ராஹீம் நின்ற இடத்தை – மகாமு இப்ராஹீமை – தொழும் இடமாக நீங்கள் ஆக்கிக் கொள்ளுங்கள்” (என்றும் நாம் சொன்னோம்) இன்னும் “என் வீட்டைச் சுற்றி வருபவர்கள், தங்கியிருப்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் ஆகியோருக்காகத் தூய்மையாக அதனை வைத்திருக்க வேண்டும்” என்று இப்ராஹீமிடமிருந்தும், இஸ்மாயீலிடமிருந்தும் நாம் உறுதி மொழி வாங்கினோம்.
குரான் ஷரீஃப் 2:125
இப்ராஹீ நபியவர்கள் நின்ற இடத்தையே முக்கியமானதாக குறிப்பிட்டு இங்கே சொல்லப்படுகிறது.
இறைவனுக்கு தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்களின் அடக்கஸ்தலமும் இந்த அர்த்தத்திலேயே கண்ணியப்படுத்தப் படுகிறது.
ஆனால், ஒரு குழப்பத்தார் மன்னிக்கவும் கூட்டத்தார், அடக்கமாகியிருப்பவர்களை அல்லாஹ்வாக கருதப்படுகின்றனர் என்று அவர்களாகவே முடிவு செய்து கொண்டு இது போன்ற இடிசேவையில் இறங்குகின்றனர்.
மிர்ஜா குலாம் காதியானி என்பவர் தன்னை நபியென்று கூறிக் கொண்டு சில குழப்பங்களை ஏற்படுத்தினார்.
ஆனால், ஹஜ்ரத் முஹம்மது (ஸல்) அவர்களை இறுதி நபியாக ஏற்றுக் கொண்ட தர்காவுக்கு ஜியாரத்திற்கு செல்பவர்கள் இவரை ஏற்றுக் கொள்வதில்லை.
மிர்ஜா என்பவரை நபியாகவே ஏற்றுக் கொள்ளாதவர்கள், இறைவனின் மெய்யடியார்களை இறைவனாக ஏற்றுக் கொண்டார்கள் என்று இவர்கள் சொல்வது வெளிப்படையான முரண் என்பதும் இவர்களாகவே இட்டுக் கட்டுவது என்பதும் தவிர வேறில்லை.

A.Mohamed Ismail

3 comments:

  1. நன்றிகள்.. அதிகம் படித்தவர் என்பதெல்லாம் இல்லை.. அதிகம் படிக்காதவர் என்பதே சரி..

    ReplyDelete
  2. அருமையான பதிவு, சகோதரர் இஸ்மாயீலின்
    சிந்தனை தூண்டக்கூடிய பதில். பார்வையாளனின்
    ராஜ பார்வைக்கும் ராஜ பாட்டைக்கும் ஒரு ஜே :)

    ReplyDelete
  3. தர்காவை இடிப்பது அதை கண்ணியப்படுத்தும் மக்கள் மீதான ஒரு symbolic Act என்று சொல்லலாமா?

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா