தொலைக் காட்சிகளிலும், பதிவுலகிலும் கடந்த சில நாட்களாக ஆக்ரமித்து இருப்பது பாபா பற்றிய செய்திகள்தான்..
அலுப்பூட்டும் வகையில் நிறைய வருவதால், பலர் இவற்றை படிப்பதில்லை...
எனவே எல்லாவற்றையும் தொகுத்து இந்த பதிவு...
அலுப்பூட்டும் வகையில் நிறைய வருவதால், பலர் இவற்றை படிப்பதில்லை...
எனவே எல்லாவற்றையும் தொகுத்து இந்த பதிவு...
- சித்து வேலை பேர்வழி மரணம்
- கடவுள் மரணமடைந்தார்,,, பக்தர்கள் குழப்பம்
- 96 வயது வரை வாழ்வேன் என அவர் சொன்னது பொய்யாகி விட்டது.
- அவர் நல்லது செய்து இருக்கிறார் என்பது முக்கியம் இல்லை... அவர் சித்து வேலை செய்து மக்களை ஏமாற்றி விட்டார் ..
- அவரிடம் சென்றவ்ர்கள் அனைவரும், தைரியம் இல்லாதவர்கள்.. தன்னம்பிக்கை அற்றவர்கள்
- இந்தியாவில் தலைவர்கள் எல்லோருமே நல்லதுதான் செய்கிறார்கள்..எனவே இவர் மட்டும் நல்லது செய்தார் என சொல்வது தவறு...
இது போனறவை ஒரு புறம்
- அவர் சித்து வேலை செய்கிறார் என்பதற்காக அவரிடம் செல்லவில்லை... அது எங்களுக்கு பொருட்டே அல்ல
- உடல் அழிய கூடியதுதான்,, எனவே அவர் உடல் என்றாவது அழியும் என்பது தெரிந்துதான் இருந்தது... எனவே இந்த சம்பவம் நம்பிக்கையில் மாற்றம் ஏற்படுத்தவில்லை...
- நாம் ஆங்கில முறைப்படி ஆண்டுகளைக் கணக்கிட்டு, சாய் பாபாவுக்கு தற்போது வயது 86 என்று கூறுகிறோம். ஆனால் ஹிந்து முறைப்படி சந்திரனை அடிப்படையாக கொண்டே ஆண்டு நிர்ணயிக்கப்படுகிறது. அதாவது ஆங்கில முறைப்படி ஒரு மாதம் என்பது 30 அல்லது 31 நாட்கள். ஆனால் ஹிந்து முறைப்படி பூமியை சந்திரன் ஒருமுறை சுற்றி வரும் காலம்தான் ஒரு மாதம் என கணக்கிடப்படுகிறது. சந்திரன் ஒருமுறை பூமியைச் சுற்றி வர 27.3 நாட்கள்தான் ஆகிறது. அந்த அடிப்படையில் கணக்கிட்டால் சாய் பாபாவுக்கு தற்போது வயது 94 ஆகிறது. மேலும் ஹிந்து வழக்கப்படி அவர் பிறந்த ஆண்டே முதல் வயதாக கருதப்படுவதால் சாய் பாபாவுக்கு 95 ஆகிறது. எனவே சாய் பாபா தமது ஆயுள் குறித்து தெரிவித்த வாக்கு பொய்க்கவில்லை...
இந்த இரு தரப்பு கருத்துக்கள்தான் மீண்டும் மீண்டும் எழுதப்படுகின்றன..
பொது நன்மை கருதி வெளியிடுவோர் : பிச்சைக்காரன் டாட் பிளாக்ஸ்பாட் டாட் காம்
அவர் சித்து வேலை செய்தாரோ இல்லியோ நல்ல பல காரியங்கள் பொது மக்களுக்கு பயன் தரும் வகையில்
ReplyDeleteசெய்திருப்பதாக பத்திரிகைகல் மூலம் தெரிந்து கொள்ள
முடிந்தது. ஒரு நல்ல மனிதராகவே போனவரைப்பற்றி
நினைவில் கொள்ளலாமே.
Balanced view.
ReplyDeleteபணத்தினை நல்ல காரியங்களுக்காக அதிகம் செலவு செய்து இருக்கிறார். அரசியல்வாதிகள் போல் தன் குடும்பத்திற்கு மட்டும் செலவு செய்யாமல் இருந்ததே அதிசியம் தானே.
ReplyDeleteஎங்கே போயிட்டீங்க பாஸ், ரொம்ப நாளா கண்ணிலேயே காணோம்
ReplyDelete