Sunday, May 1, 2011

நர்சிம் – என் கருத்து

 

தமிழர்களுக்கே உரிய மனோபாவம் ஒன்று இருக்கிறது. ஒருவரை ஏன் பாராட்டுகிறோம் என்று புரியாமலேயே பாராட்டுவது , ஏன் திட்டுகிறோம் என புரியாமலேயே திட்டுவது..

உதாரணமாக யாராவது ஒரு சாமியாரை எல்லோரும் புகழ்வார்கள்.. அந்த சாமியார் யாராவது ஒருவரை புண்படுத்தி விட்டார் அல்லது ஏமாற்றி விட்டார் என்றால் சம்பந்தப்பட்டவர் திட்டினால் அது நியாயம். ஆனால் , அவரால் நன்மை அடைந்தவர்கள் கூட அவரை திட்ட ஆரம்பித்து விடுவார்கள்..

எனக்கு தெரிந்து, ஒரு சாமியார் பெயரால் , அவர் சொல்லி கொடுத்த வழிமுறைகள் படி, இயற்கை வைத்திய சாலை ஒன்று நடத்தி வந்தனர் சிலர்.. அதனால் பலர் பயன் பெற்றும் வந்தனர்.. ஒரு நாள் அந்த சாமியார் சர்ச்சையில் சிக்கினார்.. அவ்வளவுதான்… அந்த வைத்திய சாலையில் இருந்த சாமியார் படம் அகற்ற பட்டது..

இவர்களுக்கும் அந்த சாமியார் சர்ச்சையில் மாட்டிய விவாகரத்துக்கும் சம்பந்தம் இல்லை… அவரால் இவர்கள் பலன் தான் அடைந்தனர்.. ஆனாலும் அவரை கை கழுவி விட்டனர் அவர்கள்…

எல்லா துறையிலும் இது போல பார்க்க முடியும்.. நம் கருத்துகள் பிறர் பார்வையிலேயே அமைகின்றன..

 

இந்த பின்னணியில் நண்பர் நர்சிம் அவர்களை பற்றி சொல்ல விரும்புகிறேன்..

அவர் நல்லவர்… கவி உணர்வு படைத்தவர் , தமிழ் ஆர்வம் மிக்கவர் என்பது பலருக்கு தெரியும்..

ஒரு கவிதையில் சந்தேகம் கேட்டதற்காக , தன் வேலைகளுக்கு இடையில் நேரம் ஒதுக்கி, எனக்கு கால் செய்து பல நிமிடங்கள் விளக்கம் அளித்தவர் அவர் என்பது பலருக்கு தெரியாது… அந்த விளக்கத்தில் தமிழ் அருவியாக கொட்டியது.. அதில் பல கேள்விகளை பிறகு கேட்டேன்.. அத்தனைக்கும் விளக்கம் அளித்தவர் அவர்..

அவர் தமிழால் கவரப்பட்டவர்கள் பலர்…

இதை தவிர அவரது நல்ல மனம் , உதவும் குணம் போன்றவற்றையும் அறிந்தவர்கள் பலர்..

இந்த நிலையில், அவரது சில நண்பர்கள் , நட்பின் உரிமையால், நட்பு சார்ந்த கோப தாபங்களால் , அவரை கண்டித்து எழுத வேண்டிய நிலை.. அது நண்பர்கள் என்ற முரையில் அவர்கள் உரிமை…

ஆனால் இதை வைத்து அவரை ஒட்டு மொத்தமாக தவறாக நினைத்து விமர்சிக்கின்றனர் , இந்த விவாகரத்தில் சம்பந்தப்படாத , சிலர்..  இது முற்றிலும் தவறு..

ஒரு மனிதன் என்ற முறையில் நர்சிம் மீது எந்த தவறும் இல்லை… மாறாக  நேர்மையுடன் நடந்து கொண்டுள்ளார்… யாரையும் ஏமாற்றவில்லை.. பலருக்கு நன்மைதான் ஏற்பட்டு இருக்கிறது..

ஆனால் நண்பர்கள் என்ற முரையில் சிலருக்கு இருக்கும் எதிர்பார்ப்புகளை அவர் நிறைவேற்ற தவறி இருக்க கூடும்… ஒரு பொது மனிதன் என்ற நிலையில், தன்னை பற்றிய முழு விபரத்தையும் அப்படியே சொல்ல வேண்டிய அவசியம் இல்லை…  ஆனால் நண்பன் என்ற முரையில் சிலர் இதை எதிர்பார்ப்பார்கள்.. இது அவர்கள் பேசி தீர்த்து கொள்ள வேண்டியது..

இதை வைத்து ஒட்டு மொத்தமாக அவர் மீது சேறை வாரி இறைப்பது ஏற்க தக்கதல்ல…

அக்கறையோடு சிலர் வைக்கும் விமர்சனங்கள் நல்லதுதான்.. அது வேறு விஷயம்..

என்னை பொருத்தவரை, நண்பர் நர்சிம் அவர்களுக்கு என தார்மீக ஆதரவை தெரிவித்து கொள்கிறேன் 

5 comments:

  1. நர்சிம்மிடம் ஏமாந்த ஒரு சோணகிரிMay 2, 2011 at 12:08 AM

    // ஒரு மனிதன் என்ற முறையில் நர்சிம் மீது எந்த தவறும் இல்லை… மாறாக நேர்மையுடன் நடந்து கொண்டுள்ளார்… யாரையும் ஏமாற்றவில்லை.. பலருக்கு நன்மைதான் ஏற்பட்டு இருக்கிறது.. //

    ஆமாமா.... ஒருத்தரோட உயிர் காக்க வாங்குன பணத்தை ரொடேஷன்ல விட்டு சம்பாதிக்கிறது எவ்வளவு பெரிய நேர்மை, அதை நம்மால செய்ய முடியுமா ? பல பேர் கிட்ட பொய் சொல்லி ஐ மீன் பிஸினஸுக்காக பிஸினஸ் தந்திரம் செஞ்சு பல லட்சங்கள் வாங்கி அதில் சிலருக்கு இன்னமும் குடுக்காம இருக்கிறது இன்னமும் பெரிய இராஜ தந்திரமே தவிர எது என்ன நேர்மைத் தவறிய செயலா ? உயிர் காக்கன்னு வசூல் செஞ்ச பணத்துல பல மடங்கு ஆட்டையப் போட்டு ஐ மீன் பிஸினஸ்ல போட்டு சில அமவுண்ட்டு கொடுக்காம உடனடியா பக்கத்தில இருக்கவங்க கேட்டா காப்பி பேஸ்ட் எர்ரர் இப்ப தரேன்னு சொல்லி, அதிக காசு அனுப்பின ஒருத்தர் கேட்டா " ட்ரான்ஷாக்ஷன் ஐடி இருந்தா சொல்லுங்க. மத்தபடி என் கிட்ட உங்க காசு இல்லை " ( நேரடியா குடுத்த காசுக்கு எங்க ட்ரான்சாக்ஷன் ஐடி தருவாங்க... இதாம் பாஸ் ஸூப்பர் இராஜ தந்திரம் ) அப்படிங்கற இராஜ தந்திரம் இருக்கே... பட்டாஸ். ஆகவே என்னை பொருத்தவரை, நண்பர் நர்சிம் அவர்களுக்கு என தார்மீக ஆதரவை தெரிவித்து கொள்கிறேன் நானும்

    ReplyDelete
  2. //விவாகரத்துக்கும்/ - விவகாரத்துக்கும்?

    ReplyDelete
  3. தலவரே இந்த டிவி சீரியல் நடிகைகளை வச்சி தொழில் பண்றானே தண்டோரா அவனும்ல உத்தம வேசம் போடுதான்

    சரக்குக்கு அடிக்கிறதுக்காகவே ட்ராவல் பண்ணிவந்த கூட்டம் மொத்தமா நர்சிமை கும்மிடுச்சு

    வுடுங்க இனிமே வேற ஒருத்தன் கெடைக்கிற வரைக்கும் நர்சிம் கதைதான் ஓடும்

    ReplyDelete
  4. அப்புறம் ஏன் உன் குரு சாரு திட்டி எழுதி இருக்கார்? பார்க்கலையா? நார்மலா ஜால்ரா போடுவியே? இப்போ என்னாச்சு?

    ReplyDelete
  5. அவர் நல்லவர்… கவி உணர்வு படைத்தவர் , தமிழ் ஆர்வம் மிக்கவர் என்பது பலருக்கு தெரியும்..
    ;-)

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா