Pages

Monday, May 9, 2011

ஒசாமாவுக்காக தொழுகை - என் கருத்து

1 அன்றொரு நாள் ஒரு நண்பனிடம் இருந்து தொலை பேசி அழைப்பு.

“ டேய்.. ச்தாம் ஹுசைனை கொன்னுட்டாங்கடா.... டி வில காட்டுறாங்க..என்னால் பார்க்க முடியல.... ”

கேட்ட எனக்கு அதிர்ச்சி...

எனக்கும் சதாம் ஹுசைனை பிடிக்கும்... அவர் மீது சிலருக்கு விமர்சனங்கள் இருக்கலாம்.. ஆனால் அவரை எனக்கு பிடிக்கும் என்பது என் தனிப்பட்ட விருப்பம்..  அன்று  முழுதும் மனதுக்கு கஷ்டமாக இருந்தது..

2 இன்னொரு நண்பன் இதே போல கால் செய்தான், அமெரிக்காவில் அல் குவெய்தா தாக்குதல் நடத்தியபோது...

அமெரிக்காவுக்கு செம நோஸ் கட் என குதூகலித்தான்... ஆனால் அவனுடன் என்னால் ஒத்து போக முடியவில்லை... அப்பாவிகளை கொல்வதை என்னால் ஏற்க முடியவில்லை.. ஆனால் அவனுக்கு அமெரிக்கா அடி வாங்கியதில் மகிழ்ச்சி....

3. இப்போது இருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மீது எனக்கு ஈர்ப்பு இல்லை.. ஆனால் இம்ரான்கான் தலைமியில், வாசிம் அக்ரம் , சலீம் மாலிக், வக்கார் யூனுஸ் போன்றவர்கள் இருந்த டீம் என்க்கு மிகவும் பிடிக்கும்...

***********************************************************

இதெல்லாம் எதற்கு சொல்கிறேன் என்றால் மனிதனின் விருப்பு வெறுப்புகள் எப்படியும் இருக்கலாம்...   இதை வெளிப்படுத்தும் உரிமை வேண்டும்...

இந்த உரிமை எல்லோருக்கும் இருக்கிறதா என்பது கேள்வி குறி..

 மேற்கண்ட 3 அம்சங்களில் எல்லோராலும் வெளிப்படையாக கருத்து சொல்ல முடியாது என்பதே உண்மை..

சமீபத்தில் , ஒசாமா பின் லேடன் மறைவை ஒட்டி இறுதி சடங்குகளை சிலர் சென்னையில்  நடத்தினர் சிலர்..எங்கோ இறந்தவருக்கு இங்கு நடத்தி என்ன பயன் என கேட்பதில் பயன் இல்லை... எம் ஜி ஆர் மறைவுக்கு பலர் இறுதி சடங்குகளை ஆங்காங்கு நடத்தவில்லயா?

அதுவல்ல பிரச்சினை..

மதம் என்பதை தாண்டி சிலரை சிலருக்கு பிடித்து இருக்கலாம்.. அதை அவரவரர்கள் நம்பிக்கையை ஒட்டி வெளிப்படுதவும் செய்யலாம்.இது இயல்பானது...

இது த்வறு என நினைத்தால் , அவர்களை விமர்சிக்கலாம்... ஆனால் அவர்கள் நம்பிக்கைகளை, அவர்கள் மதத்தை விமர்சிப்பது தவறு...

என்னை பொறுத்தவரை ஒசாமாவை ஏற்கவில்லை..

ஆனால் அவரை போற்றும் நண்பர்கள் பலரை பெற்று இருக்கிறேன்... அதை அவர்கள் பெருமையாக சொல்வதையும் ஏற்கிறேன்..

ஆனால் இஸ்லாமிய நண்ப்ரகள் இது போன்ற விஷ்யங்களில் பொதுவான கருத்துக்களை சொல்ல முடியாமல் இருப்பதை பார்த்து வருந்துகிறேன்

2 comments:

  1. ஃஃஃஃஃமனிதனின் விருப்பு வெறுப்புகள் எப்படியும் இருக்கலாம்... இதை வெளிப்படுத்தும் உரிமை வேண்டும்...ஃஃஃஃ

    இந்த இடம் ரொம்பவே நச்...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    என் மலர் விழியை கண்டிங்களா ?

    ReplyDelete
  2. //மதம் என்பதை தாண்டி சிலரை சிலருக்கு பிடித்து இருக்கலாம்.. அதை அவரவரர்கள் நம்பிக்கையை ஒட்டி வெளிப்படுதவும் செய்யலாம்.இது இயல்பானது..//
    ரைட்டு!

    பாத்து ரொம்ப நாளாச்சு பாஸ்! :-)

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]