தமிழ் நாட்டு அரசியல் வரலாற்றில் ஆளுங்கட்சி , எதிர் கட்சி என்பதை தாண்டி மூன்றாவது கட்சியும் குறிப்பிட இடம் பெற்று வந்து இருக்கிறது.
இந்த மூன்றாவது இடம் என்பது முக்கியமானது.. ஆனால் வெகு சில கட்சிகளே இதை உணர்ந்து செயலாற்றி பயன் பெற்றுள்ளன... நாட்டுக்கும் சேவை செய்துள்ளன.. சில கட்சிகள் அந்த வாய்ப்பை வீணடித்துள்ளன...
சற்று சுருக்கமான வரலாற்று பார்வை..
1 . அசத்திய அறிஞர் அண்ணா
சுதந்திரம் வாங்கி கொடுத்த கட்சி என்ற பெயரில் வலுவான ஆளுங்கட்சியாக இருந்தது காங்கிரஸ்.. அப்போது இரண்டாவது இடத்தில் இருந்த கட்சிகளால் காங்கிரசுக்கு சவாலாக இருக்க முடியாத நிலையில், மூன்றாவது இடத்தில் திமுக தான் , சவாலாக இருந்தது... காலப்போக்கில் ஆட்சியை பிடித்தது...
தமிழ் வளர்ச்சி, சமூக நீதி போன்ற நன்மைகளுக்கும் காரணமாக இருந்தது...
2 எதிர் நீச்சலில் வென்ற எம் ஜி ஆர்..
அதன் பின் திமுக ஆளுங்கட்சியாகவும், காங்கிரஸ் எதிர்கட்சியாகவும் இருந்தன.. இவை இரண்டையும் மீறி மூன்றாவது அணியாக புறப்பட்ட எம் ஜி ஆர், மூன்றாம் இடத்தில் ஒரு போதும் இருக்கவில்லை.. ஆரம்பத்திலேயே முதல் இடத்தை பிடித்தார்.. காங்கிரஸ் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது..
3. சொதப்பிய காங்கிரஸ்
மூன்றாவது கட்சி என்ற பொறுப்பு மிகுந்த வேலையை காங்கிரஸ் சரியாக செய்யவில்லை என்றே சொல்ல வேண்டும்... அதிமுக , திமுக என மாறி மாறி கூட்டு வைத்தல், தற்காலிக பலன்களை மட்டுமே பார்த்தல் போன்ற தவறான நடவடிக்கைகளால், மூன்றாவது இடத்தை சிறிது சிறிதாக , தே மு திகவிடம் இழந்தது
4 வெற்றி பாதையில் விஜய்காந்த்
திமுக , அதிமுக வுக்கு அடுத்த மூன்றாவது இடத்துக்கு பாஜக , கம்யூனிஸ்ட் , என எத்தனையோ கட்சிகள் முயன்று பார்த்தாலும் , அந்த இடத்தை பிடித்தவர் விஜய்காந்த்தான்.
2006 தேர்தலில், பல இடங்களில் வெற்றி தோல்வியை மாற்றி அமைத்தார் அவர்.. அதன் பின் திமுக ஆட்சிக்கு வந்தாலும், மூன்றாவது கட்சி என்ற இடத்தை செம்மையாக பூர்த்தி செய்து, படிப்படியாக இரண்டாம் இடத்தை பிடித்து இருக்கிறார் இவர்..
இந்த தேர்தலில் கிடைத்த இடங்களை வைத்து மட்டும் அல்ல... அவரது ஓட்டு வங்கியை வைத்தும் சொல்லலாம்... தனித்து நின்றால் திமுகவை விட அதிக ஓட்டுக்களை பெறக்கூடிய நிலையில் இருக்கிறார்... வலுவான கூட்டணி அமைந்தால், அதிமுகவை மிஞ்சும் வாய்ப்பும் இருக்கிறது...
5 என்ன செய்ய போகிறது திமுக ..
இன்றைய நிலயில், அதிமுக மற்றும் தேமுதிக வுக்கு அடுத்த நிலையில், மூன்றாவது நிலையில் இருக்கும் திமுக, என்ன செய்ய போகிறது என்பதே கேள்வி..
மூன்றாம் இடம் என்பது ஆபத்தான் இடம்.. காங்கிரஸ் போல நடந்து கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக மூன்றாம் இடத்தியும் இழக்க போகிறதா அல்லது அண்ணா காலத்தில் இருந்தது போல போர் குணத்துடன் , நேர்மையுடன் நடந்து கொள்ளப்போகிறதா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்...

No comments:
Post a Comment
NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]