Pages

Tuesday, May 24, 2011

ஏன் ? ஏன் ? ஏன் ?

செய்தி தாள்களை , பத்திரிக்கைகளை படிக்கும் போது , சில சம்பவங்களை பார்க்கும்போது ஏன் இப்படி என கேட்க வைக்கின்றன சில செய்திகள்..




1 முன்பெல்லாம் பத்திரிகைளில் கவிஞர் கனிமொழி என குறிப்பிட்டுவார்கள்..இப்போது கருணாநிதியின் மகள் என்றோ திமுக எம் பி என்றோ குறிப்பிடுகிறார்கள்... ஏன்?



2 ஊழல்தான், திமுகவின் தோல்விக்கு காரணம் என பலரும் எழுதுகிறார்கள்... இலங்கை பிரச்சினையையும் ஒரு காரணம் என யாரும் எழுதுவதில்லையே ? ஏன் ?



3 சினிமாவில் ஒரு கட்சியையோ, இயக்கத்தையோ நேரடியாக திட்டுவது போல காட்சி இருக்காது.. ஆனால் கோ படத்தில் நக்சல் இயக்கத்தை நேரடியாக பெயர் சொல்லி திட்ட அனுமதித்து இருக்கிறார்களே ? ஏன் ?



4 முன்பு கலைஞர் கைது செய்யப்பட்டபோது ஏற்பட்ட பரபரப்பு , இப்போது கனி மொழி கைது செய்யப்பட்ட போது ஏற்படவில்லையே ?ஏன் ?



5 சர்வதேச அளவில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ள ஸ்டீபன் ஹாவ்கிங் புத்தகத்தில் கடவுள் குறித்த கருத்துக்கள், மத நூல்களுக்கு ஆதரவாகத்தான் இருக்கின்றன ( நேரடியாக பார்த்தல் அவர் கடவுள் இல்லை என சொல்வது போல தோன்றினாலும் ) .. ஆன்மீக பதிவர்கள் இது குறித்து எதுவும் இன்னும் கருத்து சொல்லவில்லையே? ஏன் ?

7 comments:

  1. நியாமான கேள்விகள்தான்... காலமாற்றம்தான் அவ்றின் பதிலாக இருக்குமோ என்னமோ?

    ReplyDelete
  2. கம்யூனிசம் என்பது நீங்கள் நினைப்பது போல கட்சியோ இயக்கமோ அல்ல... அது ஒரு உணர்வு... சினிமாக்களில் ஷங்கர், கே.வி,ஆனந்த் போன்ற சில கமர்ஷியல் கம்முனாட்டிகள் அதை கேவலப்படுத்துவது கண்டிக்கத்தக்கது...

    ReplyDelete
  3. ஜனநாயக நாடாக நாம் இருந்தாலும் நமது சிந்தனைக்கு அதிகமாக ஜனநாயக உணர்வு கிடையாது நமது சிந்தனையில் நேற்று எடுத்த முடிவில் இன்று எந்த மாற்றமும் செய்ய தயாரில்லை அப்படி முடிவு மாற்றம் செய்பவன் பெயர் இங்கு குழப்பவாதி அல்லது சிந்தனை தெளிவு அற்றவன்.
    பொதுவாக எல்லோரும் என்ன செய்கிறார்களோ அல்லது சிந்திக்கிறார்களோ அதுவே நமது சிந்தனையாய் இருக்கிறது. இதற்க்கு நாம் எப்போது வெற்றியின் பக்கம் இருக்கவேண்டும் என்கிற சிந்தனைதான் காரணம் என்று நினைக்கிறேன். ஒருவேளை இது மணிதனின் குணமாக கூட இருக்கலாம்.

    உதாரணம் இந்த தருணத்தில் நாம் எல்லோரும் கனிமொழி ஒழிக என்றுதான் சொல்ல வேண்டும் ஏன் என்றால் அதுதான் பெருமான்மையான கருத்து என்று நமக்கு சொல்லபடுகிறது. இந்த தருணத்தில் நீங்கள் கனிமொழியை பற்றி ஒரு பதிவு போடுங்கள் பார்போம் உங்களை எல்லோரும் தேச துரோகி என்பார்கள். அல்லது stephen Hawkins கடவுளை பற்றி ஒரு பதிவு போடுங்கள் உங்களை கடவுள் மறுப்பாளர் மத்தியில் சேர்ப்பார்கள் ஏன் என்றால் கடவுள் பற்றி கூற stephen Hawkins தேவை இல்லை என்பது பெருமான்மையான கருத்து.

    இந்த பெருமான்மையான கருத்து நிகழ்காலத்தில் உண்மையாய் தெரியும் சில நேரங்களில் உண்மையாக கூட இருக்கலாம்.
    அந்த உண்மை பொய் என நிருபிக்க படவில்லை என்றால் அது ஒரு நம்பிக்கை என ஆகும், அந்த நம்பிக்கை தகர்க்கப்படவில்லை என்றால் மூடநம்பிக்கை என ஆகும். இந்த பெருமான்மையான கருத்தை தகர்க்க முற்படும் எந்த எழுத்தையும் சிந்தனையும் நான் ரசிக்கிறேன் நேசிக்கிறேன். இந்த தகர்த்தல் முயற்சிதான் உண்மையை வெளி கொண்டுவரும் என்பது எனது கருத்து.

    We are programmed not to Transgressive as transgressive in all aspects is considered Sin.

    ReplyDelete
  4. ஏன்? ஏன்? ஏன்? பதில்கள் வரும் .....ஆனால் வராது..... :-))))))

    ReplyDelete
  5. பதில்களை தெரிந்து கொண்டே கேட்கிற மாதிரி இருக்கே!!

    ReplyDelete
  6. 1. கவிஞர் கனி - கலைஞர் டி.வி.... கருணாநிதி மகள் - ஜெயா.டி.வி.

    2. சீமான் முதல்வர் ஆகிவிட்டால்..அந்த பயம்தான்.

    3. தயாரிப்பாளர் பெரிய ஆளுங்'கோ'.

    4. என்ன சார் இப்படி சொல்லிடீங்க. ஆங்கில செய்தி சேனல்ல பரோட்டா வாங்கி குடுத்துட்டு புரணி கேக்கறாங்க.....

    5. ஆன்மீக பதிவர்கள் கடவுள் உண்டென்று உணர்ந்ததால் அது குறித்து பேச அவசியம் இல்லை. நாத்திகவாதிகள்....ஐயோ பாவம்!!

    ReplyDelete
  7. ஏன்?ஏன்?ஏன்? ஒரு கின்னத்தை ஏந்துகிறேன்.பல எண்ணத்தில் நீந்துகிறேன்.

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]