Thursday, May 26, 2011

காங்கிரசுக்கு பாடம் புகட்டியதற்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் !!

 

தேர்தலில் திமுக தோற்றதை பலரும் பேசுகிறார்கள்.. இதில் ஒரு விஷயம் பத்திரிக்கைகளால் இருட்டடிப்பு செய்யப்பட்டு வருகிறது.. வீழ்ந்தது தி முக அல்ல… இதை விட பெரிய தோல்விகளை எல்லாம் அது சந்த்தித்து இருக்கிறது…

ஆனால் பல வருடங்களாக தோல்வியையே காணாத காங்கிரஸ் முதல் முறையாக வீழ்ந்து இருக்கிறது…

1980 – காங்கிரஸ் , திமுக கூட்டணி பாராளுமன்ற தேர்தலில் அபார வெற்றி… எம் ஜி ஆரின் அ இ அ தி மு க இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி

1984 – காங்கிரஸ்- அ இ அ தி மு க அபார வெற்றி

1991- காங்கிரஸ்- அ தி  மு க வெற்றி

1996 – தமா கா – தி மு க வெற்றி

2001 – த மா கா – அ இ அ தி மு க வெற்றி

2006 – காங்கிரஸ் – திமுக வெற்றி

காங்கிரஸுடன் சேரும் கட்சிதான் வெற்றி பெறும் என்ற நிலையே இங்கு நிலவியது..

எனவேதான் என்ன நடந்தாலும் சரி, காங்கிரஸை கோபித்து கொள்ள கூடாது என கலைஞர் (தப்பு) கணக்கு போட்டு, இலங்கை பிரச்சினையில் சொதப்பினார்…

இவ்வளவு வலுவாக இருந்த காங்கிரசுக்கு மேல் மக்களுக்கு இருந்த கோபத்தை எதிர் வாக்குகளாக மாற்ற தமிழ் உணர்வாளர்கள், தலைவர்கள், பதிவர்கள், ட்விட்டர்கள் என பலரும் படாத பாடு பட்டனர்…

இதில் எதுவும் வீன் போகவில்லை என்பது, வாக்களிக்க பல புதியவ்ரகள் வந்ததில் இருந்தே புரிந்தது…

இதில் நாம் தமிழர் இயக்கம், காங்கிரசை மட்டும் குறி வைத்து பிரச்சாரம் செய்தது … நடு நிலை வாக்க்காளர்களை கவர இது உதவியது….

 

 

இந்த நிலையில் தமிழக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்திய சீமானுக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும், மலேசியா பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

********************************************************************************************************

"கடந்த மே 13 தேதி வெளியான தமிழக தேர்தல் முடிவுகளானது, உலகத் தமிழர்கள் மத்தியில் பெரும் ஆனந்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மை. அதற்கு காரணம், பல்லாயிரக்கணக்கான தமிழர்களை இலங்கை இனவெறி அரசு, ஈழத்தில் காவுக்கொள்ள துணைப்போன காங்கிரஸ் கட்சி, தமிழக தேர்தலில் வாங்கிய பலத்த அடிதான். தமிழனை அழிக்க துணைப்போன காங்கிரஸ் கட்சி, இப்பொழுது தமிழ்நாட்டில் அழிந்து போகும் நிலை வந்துள்ளது.
தமிழக தேர்தல் களத்தில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட 63 தொகுதிகளில், 58 தொகுதிகளில் தோல்வியை கண்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு எதிரான வாக்குகள் இரண்டாக பிரிந்ததால்தான், அந்த 5 தொகுதிகளில் கூட காங்கிரஸ் வென்றுள்ளது. தமிழக மண்ணில், காங்கிரஸ் கட்சி அடைந்துள்ள இந்த மிகப்பெரும் சரிவுக்கு காரணம், அக்கட்சியின் தமிழர் விரோத நடவடிக்கைகளே.
காங்கிரஸ் கட்சியின் தமிழர் விரோத போக்கை மக்களிடம் கொண்டு சேர்த்து, அக்கட்சியின் உண்மையான முகத்திரையை தமிழக மக்கள் முன் கிழித்ததில் நாம் தமிழர் அமைப்புக்கும், உங்களுக்கும் உள்ள பங்கை யாரும் மறுக்கவும் முடியாது, மறைக்கவும் முடியாது.
காங்கிரஸ் கட்சி மட்டுமல்லாமல், அக்கட்சியின் தமிழர் விரோத போக்கிற்கு உடந்தையாக இருந்த திமுகவும் நடந்து முடிந்த தேர்தலில் பலத்த அடி வாங்கியுள்ளது. தமிழக அரசியல் களத்தில் நடந்த மிகப்பெரும் அமைதிப் புரட்சிக்கு காரணம் 2- ஜி காற்றலை ஊழல் விவகாரம் தான் என்பது போன்ற ஒரு தோற்றத்தை முன்வைத்து, தமிழீழ விவகாரமும், நாம் தமிழர் இயக்கம் மற்றும் தங்களின் அரசியல் பிரச்சாரங்கள் ஆகியவை எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது போன்ற தோற்றத்தை உருவாக்க சிலர் முயலலாம்.
இருப்பினும், தமிழக தேர்தலில் வாக்களித்த ஒவ்வொரு தமிழருக்கும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழர் அனைவருக்கும் தெரியும் தமிழகத்தில் நடந்த முடிந்துள்ள அமைதிப்புரட்சியில் தங்களின் பங்கும், நாம் தமிழர் இயக்கத்தின் பங்கும் என்னவென்பது.
தமிழக அரசியலில் புதியதொரு அத்தியாயத்தை உருவாக்கயிருக்கும் இத்தேர்தலுக்கு பிறகு, தமிழீழ விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கைகளை உலகதமிழர்கள் மிக உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். இலங்கையில் நடந்தது இன அழிப்பு போர் என்றும், அவ்வின அழிப்பை போரை முன்னெடுத்த மகிந்த இராஜபக்சே, கோத்தபய இராஜபக்சே மற்றும் இராணுவ உயரதிகாரிகள் போர் குற்றவாளிகள் என்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றபட வேண்டும் என்பதே உலகத் தமிழர்களின் ஒருமித்த கருத்தாகும்.
அத்தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு, தாங்களும் நாம் தமிழர் இயக்கமும் அழுத்தம் கொடுப்பீர்கள் என்று நம்புகின்றேன். எதிர்காலத்தில் தமிழகத்திற்கு வருவதற்கு எனக்கு சந்தர்ப்பம் கிடைக்குமானால், உங்களையும் நாம் தமிழர் இயக்க நிர்வாகிகளையும் கண்டிப்பாக வந்து சந்திக்கின்றேன்.
எனது அன்பிற்கும் மரியாதைக்குமுரிய தம்பி செந்தமிழன் சீமான் அவர்களே, உங்கள் தமிழின சேவை என்றென்றும் தொடர எனது உள்ளம் நிறைந்த வாழ்துகள்,

3 comments:

  1. //ஆனால் பல வருடங்களாக தோல்வியையே காணாத காங்கிரஸ் முதல் முறையாக வீழ்ந்து இருக்கிறது… // உண்மை!

    ReplyDelete
  2. தமிழக தேர்தலில் வாக்களித்த ஒவ்வொரு தமிழருக்கும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழர் அனைவருக்கும் தெரியும் தமிழகத்தில் நடந்த முடிந்துள்ள அமைதிப்புரட்சியில் தங்களின் பங்கும், நாம் தமிழர் இயக்கத்தின் பங்கும் என்னவென்பது.

    உண்மைதான்.. காங்கிரசுக்கு எம் மக்கள் கொடுத்த பதில் சரியானதுதான். பிற மானிலங்கள்போல தமிழ்நாட்டையும் தம் பூரண கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர காங்கிரஸ் திரைமறையிவில் பல திட்டங்களை தீட்டிவந்தது. இந்த நிலையில் மக்களின் தீர்ப்பு உச்சந்தலையில் இறக்கிய கடைப்பாரையாக இருக்கின்றது காங்கிரசுக்கு.
    என்றாலும் 05 கிடைத்ததே எனக்கு கவலையாகத்தான் உள்ளது.

    ReplyDelete
  3. இக்கரைக்கு அக்கரை பச்சை தானுங்கோ

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா