Pages

Wednesday, June 1, 2011

ஜல்சா குருவா? சாதனை குருவா? – 2

part1 ஜல்சா குருவா? சாதனை குருவா?


அடுத்த சேனலை மாற்றினேன், என் ரோல் மாடல் , இந்திய கிரிக்கெட் அணி வீரர் சச்சிதானந்தம் பேசிக்கொண்டு இருந்தார்.
” கடவுள் பிரபஞ்சத்தை படைத்தார் என்கிறார்கள்… அப்படி படைக்கும் போது அவர் எங்கு இருந்தார் ? யாரும் சொல்ல முடியாது… சரி, பிரபஞ்சத்தை படைத்த கடவுளை யார் படைத்தது?
சுருக்கமாக சொன்னால் கடவுள் என்பது கற்பனையான விஷ்யம்… சாமியார்கள் நம்பாமல் உழைப்பை நம்பினால் வெற்றி நிச்சயம் “
அவர் பேச்சு என்னை ஈர்த்தது…
ஆனாலும் சாமியாரை நம்பலாமா வேண்டாமா என முடிவுக்கு வர முடியவில்லை..
காலிங் பெல் அடித்தது….
பேச்சுலராக இருந்தாலும், மேன்ஷனில் தங்காமல் தனி வீடு பிடித்து தங்கி இருந்தேன்,,, இந்த நேரத்தில் யார் ?
ஒரு வேளை கேர்ள் ஃபிரண்ட் ஷாலினியா?
கத்வை திறந்தேன்..
“ சார்.. நீங்க? .. ?
வந்தவன் ஹிந்தி பட ஹீரோ மாதிரி பளிச் என பொறாமைப்பட வைத்தாலும் , தமிழ் பட ஹீரோ மாதிரி பேசினான்.
“ டேய்.. நான் தாண்டா கிராமத்து நண்பம் பரமசிவம்.,… ஒரு மாடலிங் பிராஜக்ட் விஷ்யமாக வந்தேன்..உன்னையும் பார்க்கலாம்னு வந்தேன் “
திகைத்து போனேன்,.,
ஊரில் ஒல்லி குச்சியாக இருந்த பரமசிவம் ஹீரோ போல ஆகி, மாடலிங் வேறு செய்கிறானா?
ஒரு மணி நேர பேச்சில் என் பொறாமை இன்னும் அதிகரித்தது..
இந்த வயதிலேயே , லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறான்…
“ மச்சான்.. எல்லாத்துக்கும் காரணம் சத்குருதான்… அவர் யாருடன் படுத்தால் உனக்கு என்ன? உனக்கு நல்லது நடக்குதா இல்லையா? அதை மட்டும் பாரு..
அவர் யாரையும் ரேப் செஞ்சாரா? இல்லையே?
விரலை பார்க்காதே..விரல் எதை சுட்டி காட்டுதுனு பாரு… அவரை நம்புனா நீயும் பெரிய ஆள் ஆகலாம்… அப்புறம் உன் இஷ்டம் “
அவன் கிளம்பியபோது உறுதி செய்து விட்டேன்.
“ நடப்பது நடக்கட்டும்… சத்குருவை முயற்சித்து பார்க்கலாம் “
**********************************************************************************************************
இந்த முறை சோதனை எல்லாம் இல்லை.. நேரடியாக அவரை பார்க்க முடிந்தது…
புன் சிரிப்புடன் வரவேற்றார்..
“ நீ வருவாய் என எனக்கு தெரியும்.. உனக்கு நல்ல நேரம் வந்து விட்டது… அடுத்த ஆண்டு நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்திய அணியில் நீ இருப்பாய்..எழுதி வைத்து கொள்”
உறுதியாக சொன்னார்..
என்னால் நம்ப முடியாவில்லை.. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை….
அவரிடமே கேட்டு விட்டேன்..
“ சாமி… இது எல்லாம் எப்படி சாத்தியம் ஆகுது”
சிரித்தார்..
“ வெற்றி = நம்பிக்கை+ வழிகாட்டுதல்+அறிவியல் …..   அறிவியல் சார்ந்த ஆன்மீகம்தான் என் பாணி….  நம்பிக்கை இல்லாத அறிவியல் இயந்திரத்தனமானது….  அறிவியல் இல்லாத வெற்று நம்பிக்கை முட்டாள்தனமானது..
உன் வாழ்க்கை பாடம் ஏற்கனவே துவங்கி விட்டது.. வா..இன்னும் விளக்குகிறேன்”
இன்னொரு அறைக்கு அழைத்து சென்றார்.
இனம் தெரியாத பயத்துடன் பின் தொடர்ந்தேன்
( தொடரும் )

3 comments:

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]