Pages

Monday, June 27, 2011

வெற்றிகரமாக அவதூறு செய்வது எப்படி?- சக்சஸ் டிப்ஸ்

 நம் மக்களுக்கு நன்மை செய்ய தெரியாது என்றுதான் நினைத்து வந்தோம்... ஒரு தீய விஷயத்தை கூட செய்ய தெரியவில்லையே என தெரிய வந்த போது அதிர்ச்சியாக இருந்தது...

ஓர் எழுத்தாளர் பெண்மையை மதிக்கவில்லை என அவதூறு செய்ய புறப்பட்டனர் சிலர்..  கடைசியில் பார்த்தால், இது சம்பந்தமாக அவர்கள் எழுத்தில் பெண்களை எவ்வளவு இழிவு செய்ய வேண்டுமோ அவ்வளவு செய்து விட்டார்கள்... தேவை இல்லாமல் எழுத்தாளருக்கு விளம்பரம் கொடுத்ததுதான் அவர்கள் கண்ட பலன்...

இனி மேல் இது போன்ற வேலைகளில் இறங்க நினைப்பவர்கள், சிறப்பான் முறையில் செயல்பட சில டிப்ஸ்....


  • யாரை அவதூறு செய்ய நினைக்கிறீர்களோ அவர்களைப்பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்... நாத்திகம் பேசும் ஒருவர் கோயிலுக்கு சென்றால் அதை  கண்டு பிடித்து எழுத பாருங்கள்... ஆன்மீகம் பேசும் ஒருவர் , கோயிலுக்கு செல்வதை பெரிய கண்டு பிடிப்பு மாதிரி எழுதாதீர்கள்.
  • அவதூறு செய்வது பாதிப்பு ஏற்படுத்த வேண்டும். விளம்பரம் கொடுப்பதாக அமைய கூடாது என்பதை நினைவில் வையுங்கள்
  • வேறு யாரையாவது தூண்டி விட்டு, இதை செய்ய வையுங்கள்.. நீங்களே இதில் இறங்கி பெயரை கெடுத்து கொள்ளாதீர்கள்
  • ஒரே துறையில் இருப்பவர்களுடன் இந்த விளையாட்டு விளையாடாதீர்கள்.. 
  • வேறு வேறு டெக்னிக்கை கையாளுங்கள்... நான் அவருக்கு ஒரு கதை சொன்னேன், அதை காப்பி அடித்து விட்டார்.. ...  காசு வாங்கி கொண்டு விமர்சனம் எழுதுகிறார் என்றெல்லாம் புதிது புதிதாக யோசியுங்கள்
  • இதை முழு நேர வேலையாக செய்யுங்கள்... ஒரு இயக்கத்தில் இருந்து கொண்டு இதை பகுதி நேர வேலையாக செய்தால், உங்களால் உங்கள் இயக்கத்தின் பெயர் கெடும்..அவதூறும் முழுமையாக இருக்காது..
  • இது போன்ற வேலைகளில் இறங்கும் முன் மனசாட்சியை முழுதாக கழட்டி வைத்து விடுங்கள்... இல்லை என்றால் பாதியில் சிரமம் 
வாழ்த்துக்கள் 

Saturday, June 25, 2011

அவர் என்னிடம் ஆபாசமாக பேசினார்- உரையாடல் தொகுப்பு

இது ஒரு கற்பனை உரையாடல்...  

" பெண்கள் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வர துவங்கி இருக்கிறார்கள். அவர்கள் திறமைகள் வெளிவர ஆரம்பித்து இருக்கின்றன. இந்த நிலையில் இப்படி சில நிக்ழ்ச்சிகள் நடப்பது அவர்களை மீண்டும் கூண்டுக்குள் அடைத்து விடுமோ என அஞ்சுகிறேன் “

  “ ஏன் சகோதரி ? என்ன நடந்தது ? “

  “  ஓர் இளம்பெண்ணாகிய என்னிடம்  எழுத்தாளர் ஒருவர் தவறாக நடந்து கொண்டு என்னை  மன உளைச்சலுக்கு ஆளாக்கி விட்டார் . ஆபாசமாக பேசி தர குறைவாக நடந்து கொண்டு விட்டார் “

 “  என்ன சொல்றீங்க ? இது உண்மை என்றால் பெரிய குற்றமாயிற்றே. பெண் என்று அல்ல.. ஆணாக இருந்தாலும் கூட அவருக்கு விருப்பம் இல்லாத வகையில் அவருடன் பேசுவது குற்றம். 


முன் பின் தெரியாத பெண் மேல் பேருந்தில் அத்து மீறுவது, தன்னுடன் இணக்கமாக நடந்து கொண்டால்தான் வேலை/ மதிப்பெண் என்றெல்லாம் மிரட்டுவது என பல வகைகளில் குற்றங்கள் நடக்கின்றன. இதை எல்லாம் தடுப்பது நம் கடமை ... சொல்லுங்க... என்ன நடந்தது..  ? “


“ எழுத்தாளர் என்ற முறையில் அவருடன் பேச ஆரம்பித்தேன் “

“ ஓஹோ... அவர் புத்தகங்கள் எல்லாம் படித்து இருக்கிறீர்களா? “

 “  படித்தது இல்லை.. இருந்தாலும் சும்மா பேச ஆரம்பித்தேன் ..

" அதாவது அவர் எழுத்தால் கவரப்பட்டு அவருடன் பேசவில்லை.. சரி சொல்லுங்கள்

ஆரம்பத்தில் நார்மலாக பேசிய அவர் கொஞ்சம் கொஞ்சமாக உரிமை எடுத்து கொண்டு பேச ஆரபித்தார் .. அவர் என் அப்பா வயது உடையவர்... ஆனாலும் உரிமை எடுத்து கொண்டு அவர் பெயர் சொல்லி அழைத்து பேச ஆரம்பித்தேன்... என்ன ஓர் அதிர்ச்சி!!!.. அவரும் உரிமை எடுத்து கொண்டு பேச ஆரம்பித்து விட்டார் “

“ இதை சரி , தவறு என நான் சொல்ல முடியாது..  நீங்கள்தான் முடிவு எடுத்து இருக்க வேண்டும்..  அவர் பேசியது பிடித்து இருந்தால், தொடர்ந்து இருக்க வேண்டும்.. இல்லை என்றால் அவரை இக்னோர் செய்து இருக்க வேண்டும்.. நீங்கள் என்ன செய்தீர்கள் ? “

“ அவர் நல்லவர் என நம்பி புகைப்படம் அனுப்பினேன்... நான் அழகாக இருப்பதாக அவர் சொல்லி விட்டார்..எனக்கு வருத்தமாக இருந்தது ? “

“ அட கடவுளே... உங்களை திருட்டு தனமாக புகைப்படம் எடுத்து இருந்தால் பெரிய குற்றமாயிற்றே... அதை கமெண்ட் வேறு அடித்தால் பெரிய தவறுதான்.. ஆனால் நீங்களே படம் அனுப்பினேன் என்கிறீர்கள் .. சரி,.. அப்புறம் .. ‘’


“ அவர் கொஞ்சம் கொஞ்சமாக எல்லை மீறி சாட் செய்ய  ஆரம்பித்தார்..  அவர் எவ்வளவு தூரம் போவார் என பார்ப்பதற்காக  நானும் சாட் செய்தேன் “

“ இப்போது புரிகிறது... அவர் தன்னை புனிதமான மனிதர் என சொல்லி கொள்பவர்.. அதை தவறு என நிரூபிப்பதற்காக இப்படி பேசுவது போல நடித்தீர்கள்.. ரைட் ? “

 “ இல்லை...அவர் தன்னை புனிதமானவர் என சொல்லி கொள்பவர் இல்லை “

"பிறகு ஏன் அவருடன் இப்படி பேசினீர்கள் ? “

யாராவது அவருடன் கிளுகிளுப்பாக பேசினால், அவரும் கிளுகிளுப்பாக பேசுவார் என உலகுக்கு நிரூபிக்கும் கடமை நமக்கு இருக்கிறது என ஒருவர் போதனை செய்தார்.. எனவேதான் இந்த ஆப்பரேஷனை திட்டமிட்டோம்

இது ஒரு கடமை. இதற்கு ஓர் ஆப்பரேஷனா? என்னிடம் கேட்டு இருந்தால் நானே சொல்லித் தொலைத்து இருப்பேனே...  

சற்று ஓவராக போகிறோம் என எனக்கே தோன்றி விட்டது ..

“ சரி..அத்துடன் நிறுத்துவதுதானே..இதில்  என்ன பிரச்சினை ? ..“:

“ பொது இடங்களில் தவறாக  னடந்து கொள்ளும் ஆணை உடனடியாக எதிர்க்க முடியாது... சற்று தாமதமாகத்தான் பதிலடி கொடுக்க முடியும்... அதற்காக பாதிக்கப்பட்ட பெண்ணை குற்றம் சாட்டுவதா? “

“ இந்த உதாரணத்தில் அந்த ஆண் செய்தது அயோக்கியத்தனம்... ஆனால் தன் இல்லத்தில் தன் விருப்படி இருக்கும் ஆணுடன் வலுக்கட்டாயமாக பேசி விட்டு, அவன் திரும்ப பேசினால் , தவறு என்பது வேறு விஷ்யம்... ”

“ அப்ப நான் என்னதான் செய்வது? “

உண்மையிலேயே பாவப்பட்ட பெண்கள் பலர் இருக்கிறார்கள்.. அவர்களுக்காக போராட வேண்டிய நிலையில், இது போன்ற விளம்பர குற்றச்சாட்டுக்கள், உண்மையான போராட்டத்தை வலுவிழக்க செய்து விடும்... 
நீங்கள் எல்லாம் ஒன்றும் செய்யாமல் இருந்தாலே போதும்.. பெண்கள் நிலை கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறும்...


இது போன்ற போக்குகளை பார்த்தால் , உரையாடலின் ஆரம்ப வரிகள் உண்மையாகி விடுமோ என பயமாக இருக்கிறது ‘ 


"  நான் உங்கள் சகோதரியாக இருந்தாலும் இப்படித்தான் பேசுவீர்களா? “

“ உங்களை சகோதரி என எண்ணுவதால்தான் உங்கள் மீது கொண்ட அன்பால் இப்படி பேசுகிறேன்... ஆனால் உங்களை அன்னியர் என நினைக்கும் சிலர் உங்களை தூண்டி விட்டு தம்மை பெண்ணின காவலர் என நிரூபிக்க முயலக்கூடும்...அவர்களுக்கு விளம்பரம்.உங்களுக்கு மன உளைச்சல் ”


“    நான் யாரைத்தான் நம்புவது ? “


” தாம் பெண் என்பதற்காக அல்ல... தமது எழுத்துக்களுக்காக, கற்பனைத்திறனுக்காக, நகைச்சுவை உணர்ச்சிக்காக, சமூக அக்கறைக்காக ரசிக்கப்படும் பெண் பதிவர்கள் பலர் இருக்கிறார்கள்.. அவர்களிடம் விவாதியுங்கள்...  ஆண், பெண் என்பதை மறந்து , பொது வெளியில் இயங்குவது குறித்து  அவர்கள் சொல்லி தருவார்கள்... 


இதே எழுத்தாளருடன் இலக்கிய விவாதம் செய்யும் அளவுக்கு படிக்க , தன்னம்பிக்கை பெற அவர்கள் உதவுவார்கள்... 


ஊரில் இருக்கும் பகுத்தறிவுவாதிகள், இடதுசாரிகள் என பலரையும்  இந்த காமெடியில் இறக்கி விட்ட நீங்கள் இதை உங்கள் வெற்றியாக நினைத்தால் நான் சொல்வது உங்களுக்கு தேவை அற்றது.. அல்லது உண்மையில் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தால், ஒரு சகோதரனாக என் வேண்டுகோளை மதித்து , பதிவுலகில் இருக்கும் என் அன்னைமார்களை , சகோதரிகளை , தோழிகளை தொடர்பு கொண்டு விவாதியுங்கள்... 

Saturday, June 18, 2011

அவன் – இவன் விமர்சனங்கள் மீது ஒரு விமர்சனம்

 

ஒரு படம் வரும்போது நடிகர்களின் அடிப்படையில்தான் அந்த படத்துக்கு எதிர்பார்ப்பு இருக்கும். ஓர் இயக்குனர் படத்துக்கு அந்த அளவு எதிர்பார்ப்பு இருக்கிறது என்றால் அது பாலா படத்துக்கு மட்டும்தான் ( மணிரதனம் படத்துக்கு ஊடகங்கள் செயற்கையாக ஏற்படுத்தும் பரபரப்பு வேறு விஷ்யம் )

இந்த நிலையில் அவன்- இவன் வெளியாகி இருக்கிறது.. பதிவர்களும் படம் பார்த்து விட்டு தம் கருத்துக்களை எழுதி வருகிறார்கள். பல தரப்பட்ட கருத்துக்கள் வெளி வருவது ஆரோக்கியமானது…

தனக்கு பிடித்து இருக்கிறது – பிடிக்கவில்லை என்ற கருத்து கட்டுரைகள் ஒரு புறம்.  நல்ல படம் என்றால் அது கமல் படம் போல இருக்க வேண்டும் என்ற பிரச்சார கட்டுரைகள் ஒரு புறம் என்று அனைத்துமே சுவையாக இருக்கின்றன..

ஆனால் படத்தை நன்கு உள்வாங்கி ஒரு விமர்சன கட்டுரையாக , இன்ஃபர்மாட்டிவாக எழுதி இருப்பவர்கள் யார் என்று தேடினால் எனக்கு கிடைத்தவை இரண்டு..  (இன்னும் சில இருக்க கூடும், படித்த பின் பகிர்ந்து கொள்கிறேன் )

இப்போதைக்கு நான் ரசித்த விமர்சனங்கள் இரண்டுதான்.. மற்றவர்களையும் ரசித்தேன்.. ஆனால் அவை விமர்சனம் என்ற பிரிவில் வராது….

1 ஜாக்கியின் சூப்பர் பார்வை

சினிமாவை சுவாசித்து வாழும் ஜாக்கி சேகரின் விமர்சனம் மிகவும் ரசிக்கும்படி இருந்தது… நான் ரசித்த வரிகள்

பாலாவின் முந்தைய படங்களை பார்த்தவர்கள் இந்த படத்தில் என்ன புதுமை என்று கேட்க வாய்ப்பு இருக்கின்றதுMy Photo

விளிம்பு நிலைமனிதர்களின் கதையை சொல்ல லட்சக்கணக்கான கதைகள் இருக்கின்றன... அதை பாலா செய்து வருகின்றார்

 

கிளிஷே... என்பது ஒரு காட்சியை திரும்ப திரும்ப எடுப்பது என்று சொன்னாலும் அதே கிராமம், அதே மனிதர்கள்,என்று திரும்ப திரும்ப கிளிஷேவாக எடுக்கின்றார் என்று சொன்னால் அப்புறம் எப்படித்தான் படம் எடுப்பது??

சோத்துக்கையால் சாப்பிடுகின்றோம் . இதையும் கொஞ்சநாளில் கிளிஷே என்று சொல்லிவிடுவார்கள் போல...

ஆர்தர் வில்சன் கேமரா... பல இடங்களில் முக்கியமாக லோ ஆங்கில் காட்சிகளில் அசத்து கின்றது

 

2 உண்மை தமிழனின் உன்னத பார்வை

சினிமா மட்டும் அல்ல… அரசியல் , புத்தகம், வாழ்க்கை , மனிதர்கள் என அனைத்தையுமே கூர்ந்து கவனிப்பவர் இவர்…

இவர் எழுதியதை படித்தபின்புதான், படத்தை எப்படி பார்க்க வேண்டும் என்பதே நமக்கு புரிகிறது… நான் ரசித்த வரிகள்..

My Photo

தமிழ்ச் சினிமா காட்ட மறுத்த, மறுக்கும் சமூகத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் மனிதர்களை படம் பிடித்துக் காட்டுவதே பாலாவின் தனித்துவம்..! அந்த வகையில் இதுவும் ஒரு தனித்துவமான படம்தான்..!

 

இப்படத்தில் கதை என்பதே இல்லை என்பதுதான் இப்படத்தின் சிறப்பு..! சில சம்பவங்களின் தொகுப்புதான் இத்திரைப்படம்..!

 

விஷாலுக்கு நிச்சயமாக இதுதான் முதல் திரைப்படம். அவர் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்

 

படத்தின் பல குறியீடூகளுக்கு விஷால்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்.

 

காட்டாற்றின் கீழே அவ்வளவு பெரிய மரத்தில் அம்மணமாகத் தொங்கும் ஜமீனின் உடலைப் பார்த்து மயங்கி விழுவது ஆண் மகன் ஆர்யாவாகவும், கதறலுடன் அந்த மரத்தின் மீதேறி ஜமீனின் உடலை நீரில் விழுக வைத்து பின்னர் தண்ணீரிலிருந்து தூக்குவது ஸ்திரீ பார்ட் விஷாலாகவும் திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பது  குறியீடாக இல்லாமல் வேறென்ன..?

 

பெண்ணாக உணரப்பட்டவன்தான், தனது விசுவாசத்தைக் காட்டும்விதமாக பகைவனைப் பழி தீர்க்கிறான்.. உச்சபட்ச குறியீடு இதுதான்..!

நிச்சயம் இந்தப் படத்திற்காக அவரை உச்சத்தில் வைத்துக் கொண்டாடலாம்..!

 

கதை இப்படித்தான் என்றெல்லாம் சொல்லப்படாமல் அவர்களின் சமீபத்திய நடவடிக்கைகளையே திரைக்கதையாக்கி அதையே இடைவேளை வரையிலும் கொண்டு சென்றிருப்பதுதான் ஆச்சரியம்..! ஆனாலும் இடைவேளைக்குப் பின்பு கதைக்குள் நம்மையும் இழுத்துக் கொண்டு ஜீவித்திருக்கிறார் பாலா..

பாலாவின் பெர்பெக்ஷன் என்பதே அவருடைய இயக்குதல் மற்றும் படைப்புத் திறனிலும் மேலோங்கியிருக்கும். இதிலும் அவ்வாறே

 

படத்தில் எந்தக் காட்சியாலாவது இயக்கம், நடிப்பு சொதப்பல் என்று சொல்லவே முடியாத அளவுக்கு பாலாவின் மிகத் திறமையான இயக்குதல் தொடர்ந்திருக்கிறது..!

பாலாவின் முந்தைய படங்களைப் போல இப்படமும் அவருடைய சிறந்த இயக்கத்திற்காகவும், பங்களித்த கலைஞர்களின் உயர்ந்த நடிப்பிற்காகவும் நிச்சயமாகப் பேசப்படும்..!

 

3 வித்யாசாகரின் வித்தியாசமான பார்வை

”பொதுவாக, நடிகர்கள் முகப்பூச்சு தடவியோ அல்லது முகபாவம் சற்று மாற்றியோ நடிப்பதென்பது இயல்பு, ஆனால் படம் முழுக்க தன் முகத்தையும் பிறப்பின் குணத்தையும் மாற்றி, இயக்குனர் எண்ணிய ஒரு கதாப்ப்பாத்திரத்தை தன் திறமையின் உச்சம்வரை பயன்படுத்தி, தன்னை வெற்றியென்னும் ஒரு வார்தைக்காய் வருத்தி திரைக் காவியத்தின் பதிவில்; தனக்கான ஒரு தனி இடத்தை பதிவு செய்துக் கொண்டார் விசால்.”

 

இவரின் படத்தில் மட்டுமே, நடிக்கும் அத்தனைப் பேரும் சிறந்த நடிகர்களாக கருதப்படும் அளவிற்கு ஒவ்வொருவரின் உழைப்பையும் வாங்கி அவர்களின் முகத்தில் தனித்துவ நடிப்பெனப் பூசிவிடுகிறார். இப்படத்திலும் அத்தகைய உழைப்புத் ஒவ்வொரின் நகர்விலும் தெரிகிறது.

 

நிச்சயம் இந்த “அவன் இவன்” திரைப்படத்தின் வெற்றியில் இசையின் பங்கும் நடித்தவர்களின் பங்கினைப் போல் இன்றியமையாத ஒன்று.

உனக்குத் தான் முந்தைய படத்தில் தனியிடம் தந்தேன் இல்லையா இதில் நான் சொல்வதை மட்டும் செய்யென்று சொல்லிவிட்டிருப்பார் போல் இயக்குனர் பாலா நடிகர் ஆர்யாவை. என்றாலும், தன் திறனில் குறையில்லா ஆர்யா விட்டேத்தியாய் திரியும் சில காட்சிகளிலும் சரி, காதலின் ஈர்ப்பில் மதிமயங்கும் இடமும் சரி, கோபமுறும் குடித்து ஆடும், கண்கலங்கி அழும் அண்ணனின் அழையை பார்க்க இயலாமல் கண்நீர்வடிக்கும் காட்சியிலும் சரி; தன்னை முழுமையாய் படத்தில் ஈடுபடுத்தி தானும் ஒரு நிகரற்ற நல்ல கலைஞன் என்பதை மெய்ப்பித்திருக்கிறார்.

 

விருது தரும் மையம் இவ்வருடம் இப்படத்தைப் பார்த்துவிட்டு யாருக்கு விருதைத் தருவது என்று குழம்பிப் போனாலும் போகலாம். இல்லை ஒருவேளை அத்தனையையும் சேர்த்து விஷாலுக்கே கொடுத்தாலும் கொடுக்கலாம். ஒருவேளை விஷாலுக்கும் இயக்குனருக்கும் இவ்வருட விருது மறுக்கப் படுமெனில் அதை அத்தனை பெரிய விருதாக அல்லது அத்தனைப் பெரிய விடயமாக நாம் கருத வேண்டியதேயில்லை. காரணம், உழைப்பிற்கு கிடைத்திடாத மதிப்பு; மதிப்பேயில்லை!!

Saturday, June 11, 2011

சலுகை விலையில் சாரு நூல்கள்

அல்ட்டிமேட்  ரைட்டர் சாருவின்  புத்தகங்கள் வாங்க அரிய வாய்ப்பு..

சிறப்பு சலுகையில் , நாளை  உயிர்மை அலுவலகத்தில் புத்தகங்கள் வாங்கலாம்..

வெளியூர் வாசகர்கள் ஆன்லைனில் வாங்கலாம்...


நூல்களின் விலையும் அவற்றின் சலுகை விலையும் கொடுக்கபட்டுள்ளன.
1. ராஸ லீலா: ரூ 400.00           சலுகை விலை: ரூ 300.00
2. ஸீரோ டிகிரி : ரூ 150 .00      சலுகை விலை: ரூ 112.50
3.  ஊரின் மிக  அழகான பெண் : ரூ   130.00   சலுகை விலை: ரூ.  97.50
4  ஷேக்ஸ்பியரின்   மின்னஞ்சல் முகவரி: ரூ:60.00  சலுகை விலை: ரூ 45.00
5.   காமரூபக் கதைகள்: ரூ  290.00      சலுகை விலை:  ரூ 217.50
6. மதுமிதா சொன்ன பாம்புக்கதைகள்: ரூ  190.00        சலுகை விலை:ரூ 142.50
7.  எக்ஸிஸ்டென்ஷியலிசமும்
பேன்ஸி பனியனும்:   ரூ 60.00     சலுகை விலை:45.00
8.  தேகம்: ரூ. 90.00        சலுகை விலை: 67.50
மொத்த விலை-1370.00
தள்ளுபடி விலை-1027.50
( வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தபால் செலவுடன் கூடிய புத்தக விலையை அறியhttp://www.uyirmmai.com/Publications/ViewCombo.aspx?bid=10004 என்ற சுட்டிக்கு செல்லுங்கள். தனித் தனி நூல்களாக வாங்க விரும்புகிறவர்களுக்காக மூன்று நாட்களுக்கு மட்டும் இணையத்தில் சலுகை விலை குறிக்கப்பட்டுள்ளது
13.6.2011 திங்கள் கிழமை காலை 11 மணியிலிருந்து மாலை 6 மணி வரை நூல்களை உயிர்மை அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
முன் பதிவு திட்டம் படு தோல்வி அடைந்ததால் மேலும் சில சலுகைகள் அறிவிக்கப்படுகின்றன.
1. நேரில் வர முடியாதவர்கள் ஆன் லைன் மூலமாக வாங்கலாம். கீழ்கண்ட சுட்டி வழியே கடன் அட்டை மூலம் பணம் செலுத்தி ஆர்டர் செய்யலாம். 11. 6.2011 முதல் 13.6.2011 வரையிலான ஆர்டர்கள் மட்டுமே இந்தத் திட்டத்தின் கீழ் ஏற்கப்படும்.
2. ICICI  வங்கிக் கணக்கு மூலம் பணம் செலுத்தி பெறலாம். அப்படி செலுத்துபவர்கள்  புத்தக விலையுடன் தமிழ் நாட்டில் வசிப்பவராக இருந்தால் ஒவ்வொரு புத்தகத்திற்கும் ரூ. 10ம் பிற மாநிலங்களில் வசிப்பவர்கள் ரூ 15 ம் சேர்த்துக்கொள்ளவேண்டும். கீழே அளிக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கிற்கு பணம் செலுத்திவிட்டு அதுகுறித்த விபரங்களையும் வாங்க விரும்பும் புத்தகங்களையும் sales@uyirmmai.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவியுங்கள். நூல்கள் பதிவுத் தபால் அல்லது கூரியர் மூலமாக அனுப்பப்படும்.
ICICI கணக்கு எண்
Account Name: UYIRMMAI PATHIPPAGAM
Account No: 000105018931
Bank Name: ICICI
Bank Address: No.1 Cenotaph Road, Chennai-18
3. இந்தியாவில் வசிப்பவர்கள் DD, cheque மூலமாக uyirmmai pathipagam என்ற பெயருக்குபணம் அனுப்பியும் பெறலாம்.
அனைத்து தொடர்புகளுக்கும் :
Uyirmmai
11/29 Subramaniyan street
Abiramapuram
Chenna-600018.
Tamil nadu
India
Tele/fax: 91-44-24993448

Wednesday, June 8, 2011

கலைஞர் டீவியை நடத்துவது பேய் பிசாசா? சாரு நிவேதிதா கலக்கல் காமெடி


அல்ட்டிமேட் ரைட்டர் சாரு நிவேதிதாவின் எழுத்துக்களுக்கு சில பொது தன்மைகள் உண்டு.. சமரசமற்ற பார்வை, புதிய விஷயங்கள் அறிமுகம் , சரளமான நடை , மொழி ஆளுமை போன்றவை அவரது எல்லா எழுத்துக்களிலும் இருக்கும் . இதைத்தவிர , சொல்லும் விஷ்யத்தை பொறுத்து கடுமை, ஆக்ரோஷம் , காதல் போன்றவை இருக்கும்.
இன்று காலை நான் படித்த அவ்ரது கட்டுரையில் ,  செமத்தியான நகைச்சுவை விருந்து படைத்து இருந்தார் .. பொது இடத்திலேயே சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தேன்…
அதைத்தவிர ச்மூக அக்கறை , சக எழுத்தாளர்களை பற்றி குறிப்பிடுதல் போன்றவையும் அருமையாக இருந்தது..
இது இண்டர்னெட்டில் வந்தது அல்ல . துக்ளக் இதழில் வந்தது .
அந்த கட்டுரையில் சில பகுதிகள் , உங்கள் பார்வைக்கு…

  • ஆணாதிக்கத்தைப்பற்றி கனி மொழி ஆக்ரோஷமாக எழுதி இருக்கிறார். இப்போது “ நான் ஒரு பெண் “ என சொல்லி ஜாமீன் கேட்கிறார்.
  • தந்தையின் பகுத்தறிவு ஆர்ய மாயையை திட்டிக்கொண்டே மஞ்சள் துண்டு அணிந்து கொள்ளும். அதேபோல மகள் கனிமொழிக்கு அகப்பட்டது பெண் ஈயம் – ஸாரி பெண்ணியம்
  • கை எழுத்து போட்டதை தவிர நான் வேறு எதுவும் செய்யவில்லை என்கிறார் கனிமொழி. சரத்குமாரோ த்னக்கும் எதுவும் தெரியாது என்கிறார். தயாளு அம்மாளுக்கோ ஆங்கிலம் தெரியாது. இந்த மூன்று பேரும்தான் கலைஞர் டீவியின் பங்குதாரர்கள். இவர்கள் மூவருக்குமே எதுவும் தெரியாது என்றால் கலைஞர் டீவியை ஏதாவது பேய் பிசாசு நடத்துகிறதா? பகுத்தறிவின்படி பார்த்தால் கடவுள் இல்லை என்றால் பேய் பிசாசும் இல்லை என்று ஆகிறதே ? அப்ப்டியென்றால் கலைஞர் டீவியை யார்தான் நடத்துகிறார்கள்?
  • என் நண்பர் ஒருவர் பஸ்ஸுக்காக காத்து இருந்தபோது எதிர் திசையில் வந்த பைக் மோதி காலில் எலும்பு முறிவு. பைக்கிள் மூன்று பேர். மூவரும் போதை. “ ழாழி பிழதழ் “ என்றாராம் வண்டியை ஓட்டி வந்தவர் ( ஸாரி பிரதர் என்று மொழி பெயர்த்துக்கொள்ளவும் )

இந்த கட்டுரையில் ஜெயமோகன் , மனுஷ் பற்றியெல்லாம்  குறிப்பிட்டு இருக்கிறார். சாரு புண்ணியத்தில் , அரசியல் பத்திரிக்கையில் இலக்கியவாதிகள் பெயரெல்லாம் இடம் பெறுவது மகிழ்ச்சி.

Sunday, June 5, 2011

ஜல்சா குருவா? சாதனை குருவா? – (1,2 மற்றும் இறுதி பகுதி )

1


” அன்புள்ள பதிவர் தமிழ் வெறியனுக்கு ,
நான் உங்கள் எழுத்துக்கு அடிமை. ஒரு நல்ல எழுத்து , ஆயிரம் நல்ல மனிதர்களுக்கு சமம் என என் சத்குரு சொல்வதை நிரூபித்து வருகிறீர்கள்… ஒரு முறை என சத் குருவை நீங்கள் சந்திக்க வேண்டும் என்பது என் விருப்பம். அவர் ஆசி கிடைத்தால் இன்னும் சிறப்பாக நீங்கள் எழுத முடியும். உங்கள் வாழ்வில் நம்ப முடியாத மாற்றங்கள் ஏற்படும். நீங்கள் நினைத்தது நிறைவேறும். அவர் நடத்தும் முதல் கட்ட தேர்விலெயே பலர் தோல்வி அடைந்து வெளியேறி விடுவார்கள்… ஒரு வயது பெண்ணுடன் , ஒரு மணி நேரம் தனியாக இருக்கும் சோதனை முதல் கட்ட தேர்வாக நடக்கும். அதில் தேர்ச்சி அடைய உங்களை போல திட சித்தம் கொண்டவர்களால்தான் முடியும் என்பதாலேயே உங்களை அழைக்கிறேன்.
அன்புடன்,
துடியலூர் மெய்யப்பன்…


கடித்ததை படித்ததும் எனக்கு சிரிப்பு வந்தது. முக்தி அடைய வகுப்புகள் , முற்பிறவி வினைகளை நீக்க வழிமுறைகள் என்றெல்லாம் இந்த சாமியார்கள் பற்றி பல கடிதங்கள் பிரபல எழுத்தாளர்களுக்கு வருவதுண்டு. அதை அவர்கள் கேலி புன்னகையுடன் புறக்கணிப்பார்கள்.. ஆனால் என்னால் அப்படி புறக்கணிக்க முடியவில்லை..
பதினெட்டு வயது இளைஞன் நான். எனவே எனக்கு முக்தி குறித்தோ , பாவ பதிவிகளை நீக்குவது குறித்தோ அக்கறை இல்லை… பெரிய கிரிக்கெட் வீரர் ஆக வேண்டும். எழுத்தாளன் ஆக வேண்டும் எனப்து மட்டுமே என் இலக்கு. ஆனால் இதை எல்லாம் அந்த சாமியார் சாதித்து தருவார் என நான் நம்பவில்லை.. அந்த “ முதல் கட்ட “ சோதனைதான் என்னை சுண்டி இழுத்தது…  ஒரு வயசுப் பொண்ணோட தனியா இருக்கணுமா? ம்ம்ம்ம்ம்…..
கிளம்ப முடிவு செய்தேன்…
************************************************************************
காட்டை அழித்து பிரமானடமாக உருவாக்கப்பட்டு இருந்தது ஆசிரமம் . மரம் நடுவதை பிரச்சாரம் செய்யும் சாமியார் , இப்படி காட்டை அழித்து இருக்கிறாரே என தோன்றினாலும் , வந்த வேலைதான் முக்கியம் என சொல்லிக்கொண்டேன்.. ஆசிரம பெண் என்னை வரவேற்றாள்..
”  சத்குரு வாழ்க… சார் , இங்கே தியான பயிற்சி, வாழ்வியல் பயிற்சி என பலதும் உண்டு .. ஞானம் அடையும் சர்டிஃபிகேஷன் கோர்ஸ் கூட இருக்கு,, யூ ஆர் என்லைட்டண்ட் பெர்சன் அப்படீனு நாங்க தற சர்ட்டிஃபிகேட் உலக அளவில் மட்டும் அல்ல . பிரபஞ்ச அளவில் மதிப்பு மிக்கது… உங்களுக்கு என்ன வேணும் ? “
“  எனக்கு அதெல்லாம் வேண்டாம் மேடம்.. நான் பெரிய கிரிக்கெட் வீரரா மாறி உலக அளவில் புகழ் பெறணும் . இதற்கு சத்குரு உதவுவாரா? “
“ கடவுளால் முடியாதது கூட சத்குருவால் முடியும். சத்குருவால் முடியாதது யாராலும் முடியாது . கண்டிப்பா அவர் உதவுவார்.. முதலில் உங்களுக்கு சோதனை வைப்போம். அதில் தேறினால் சத் குருவை நீங்க சந்திக்கலாம் “
எனக்கு ஆவல் அதிகரித்தது…
” பக்கத்து ரூம்ல இருங்க… ஒரு வயசுப்பொன்னை அங்கே அனுப்புவோம்.. ஒரு  மணி நேரம் கழிச்சு உங்க நடத்தையை வைத்து , நீங்க உள்ளெயா , வெளியேயானு முடிவு எடுக்கப்படும்.. “
என்னை ரூமில் உட்கார வைத்து விட்டு சென்றாள்..
டென்ஷனாக அமர்ந்து இருந்தேன்..
நேரம் மெதுவாக ஊர்வது போல இருந்தது…
கதவு மெதுவாக திறக்கப்பட்டது..
என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை..
உலக அழகை எல்லாம் ஒன்று சேர்த்து உருவாக்கப்பட்டது போல இருந்த ஒரு பெண் உள்ளே நுழைந்தாள்.. திராட்சை நிற கண்கள், ஆரஞ்சு சுளை போல உதடுகள், சதைப்பற்றுள்ள வாளிப்பான நிற மாம்பழங்கள் போன்ற இரண்டு ……… கன்னங்கள்… …
” சத்குரு ஜெய்ஹோ….. வாழ்க..வணக்கம் … ஹி ஹி… “ வழிந்தேன்.
“ வணக்கம் “ அவள் மென்மையாக புன்னகைத்தாள்..
‘ இவளுடன் ஒரு மணி நெரம் என்ன ..ஒரு வாழ் நாள் முழுதும் இருக்கலாமே… சரி , அவள் கையில் என்ன குழந்தை? “
“ குழந்தையை விட்டு விடலாமே.. அதுதான் வசதி .” ஹி ஹி த்தேன்..

” குழந்தையை விடத்தானே நான் வந்து இருக்கிறேன்.. இந்த ஒரு வயது பெண் குழந்தையை அழாமல் எப்படி வைத்து கொண்டு இருக்க போகிறீர்கள் எனப்துதான் சோதனை “ என்றவள் குழந்தையை விட்டு விட்டு வெளியேறினாள்..
அதிர்ந்தேன்..
”ஒரு வயசு”  பெண் என்பது இதுதானா?
கடுப்பாக இருந்தாலும் , வேறு வழியில்லை..
அந்த குழந்தை திடீர் என அழ ஆரம்பிக்க , விதியை நொந்த படி தாலாட்டு பாட ஆரம்பித்தேன்.
****************************************************
” பொறுமைதான் வெற்றிக்கு முதல் படி ..  பிரச்சினையை கண்டு ஓடி விடாமல், அந்த குழந்தையை ஒரு மணி நேரம் பொறுமையாக பார்த்து கொண்டீர்கள்… எனவே சத்குருவை சந்திக்கலாம்”
சத்குருவிடம் அழைத்து செல்லப்பட்டேன்.. உலகை துறந்த சாமியாரின் அறை சகல வச்திகளுடன் அபாரமாக இருந்தது.. நாமும் உலகை துறந்து விடலாமா என்ற ஆசையும் ஏற்பட்டது…

” சாமியார் கண்டிப்பானவர்.. பாத்திரம் அறிந்து பிச்சை போடுபவர்.. கவனமாக பேசுங்கள் “ எச்சரிக்கை என் காதில் ஒலித்தது…

நான் வந்த நேரம், மூன்று நடிகைகள் அவர் முன் அமர்ந்து இருந்தனர்… பயிற்சி வகுப்பு போல..
முதல் நடிகை பேசினாள்..
“ சாமி… படித்து டாக்டர் ஆக வேண்டும் என்பதுதான் என் லட்சியம்.. ஆனால் பணத்துக்காக இதில் தள்ளிட்டாங்க… உடல் ரீதியா பல சமரசங்கள் செய்ய வேண்டியாதா போச்சு… ஆரம்பத்தில் கஷ்டமா இருந்தலும், இப்ப இது எனக்கு பிடிச்சு இருக்கு “
சாமியார் முகம் சிவந்த்தது..
“ பாவத்தை விரும்பி செய்றீயா? இவளை நான் ஏசி ரூம்ல தங்க வைங்க” உத்தரவிட்டார்…
அடுத்த நடிகை..
“ சாமி..ஆரம்பத்துல பல அட்ஜஸ்ட்மெண்ட் செஞ்சேன். அது தப்புனு உணர்ந்துட்டேன்… சினிமா சான்ஸ் இல்லைனாலும் பரவா இல்லை… இனி தப்பு பண்ண மாட்டேன்..
சாமியார் முகம் கனிந்தது “ இவளை ஏஸி ரூம்ல த்ங்க வைங்க..”
மூவரில் அழகாக இருந்த அடுத்தவள் பேசினாள்
“ சாமி.. கலை சேவைக்காகத்தான் நடிக்க வந்தேன்… இது வரை “ தப்பு’ செஞ்சதே இல்லை.. அழகு, திறமையை மட்டும் நம்பியே திரை உலகில் இருக்கிறேன் “
அனைவரும் அசந்தனர்,,
“ இவளை எங்க தங்க வைக்கணும் “ உதவியாளர்கள் பரபரத்தனர்..
“ நீங்க ஒண்ணும் தங்க வைக்க வேணாம்..இவளை நானே என் பெட் ரூம்ல த்ங்க வச்சுக்க்ரேன் “
கேட்ட நான் அதிர்ந்தேன்…சரியான பிராடு சாமியார் போல இருக்கே…
“ சாமி..எனக்கு கொஞ்ச அவசர வேலை இருக்கு  . அடுத்த வாரம் சந்திக்றேன்”
அவசரமாக கிளம்பினேன்..
**************************************************************
ஒரு பிராடிடம் இருந்து தப்பினோம் என நிம்மதியாக வீடு வந்த நான் டீ வியை ஆன செய்தேன்..
ஆச்சரியம்… சிறுவயது தோழன் ராமசாமி டீவியில் பாடிகொண்டு இருந்தான்… சூப்பர் சிங்கர் ஃபைனல்…
ஆர்வமாக கவனித்தேன்,,,
வெற்றி அவனுக்கே….
“ இந்த வெற்றிக்கு காரணம் என் சத்குருதான் குப்பையாக இருந்த என் வாழ்க்கை கோபுரமாக ஆனதற்கு காரணம் அவர் ஆசிதான் “
அவன் பேசியதை பார்த்து திகைத்தேன்..
அவர் உண்மையிலேயே சக்தி மிக்கவரா? நான் தான் தப்பு கணக்கு போட்டு விட்டேனா?


****************************************************************
2

அடுத்த சேனலை மாற்றினேன், என் ரோல் மாடல் , இந்திய கிரிக்கெட் அணி வீரர் சச்சிதானந்தம் பேசிக்கொண்டு இருந்தார்.
” கடவுள் பிரபஞ்சத்தை படைத்தார் என்கிறார்கள்… அப்படி படைக்கும் போது அவர் எங்கு இருந்தார் ? யாரும் சொல்ல முடியாது… சரி, பிரபஞ்சத்தை படைத்த கடவுளை யார் படைத்தது?
சுருக்கமாக சொன்னால் கடவுள் என்பது கற்பனையான விஷ்யம்… சாமியார்கள் நம்பாமல் உழைப்பை நம்பினால் வெற்றி நிச்சயம் “
அவர் பேச்சு என்னை ஈர்த்தது…
ஆனாலும் சாமியாரை நம்பலாமா வேண்டாமா என முடிவுக்கு வர முடியவில்லை..
காலிங் பெல் அடித்தது….
பேச்சுலராக இருந்தாலும், மேன்ஷனில் தங்காமல் தனி வீடு பிடித்து தங்கி இருந்தேன்,,, இந்த நேரத்தில் யார் ?
ஒரு வேளை கேர்ள் ஃபிரண்ட் ஷாலினியா?
கத்வை திறந்தேன்..
“ சார்.. நீங்க? .. ?
வந்தவன் ஹிந்தி பட ஹீரோ மாதிரி பளிச் என பொறாமைப்பட வைத்தாலும் , தமிழ் பட ஹீரோ மாதிரி பேசினான்.
“ டேய்.. நான் தாண்டா கிராமத்து நண்பம் பரமசிவம்.,… ஒரு மாடலிங் பிராஜக்ட் விஷ்யமாக வந்தேன்..உன்னையும் பார்க்கலாம்னு வந்தேன் “
திகைத்து போனேன்,.,
ஊரில் ஒல்லி குச்சியாக இருந்த பரமசிவம் ஹீரோ போல ஆகி, மாடலிங் வேறு செய்கிறானா?
ஒரு மணி நேர பேச்சில் என் பொறாமை இன்னும் அதிகரித்தது..
இந்த வயதிலேயே , லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறான்…
“ மச்சான்.. எல்லாத்துக்கும் காரணம் சத்குருதான்… அவர் யாருடன் படுத்தால் உனக்கு என்ன? உனக்கு நல்லது நடக்குதா இல்லையா? அதை மட்டும் பாரு..
அவர் யாரையும் ரேப் செஞ்சாரா? இல்லையே?
விரலை பார்க்காதே..விரல் எதை சுட்டி காட்டுதுனு பாரு… அவரை நம்புனா நீயும் பெரிய ஆள் ஆகலாம்… அப்புறம் உன் இஷ்டம் “
அவன் கிளம்பியபோது உறுதி செய்து விட்டேன்.
“ நடப்பது நடக்கட்டும்… சத்குருவை முயற்சித்து பார்க்கலாம் “
**********************************************************************************************************
இந்த முறை சோதனை எல்லாம் இல்லை.. நேரடியாக அவரை பார்க்க முடிந்தது…
புன் சிரிப்புடன் வரவேற்றார்..
“ நீ வருவாய் என எனக்கு தெரியும்.. உனக்கு நல்ல நேரம் வந்து விட்டது… அடுத்த ஆண்டு நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்திய அணியில் நீ இருப்பாய்..எழுதி வைத்து கொள்”
உறுதியாக சொன்னார்..
என்னால் நம்ப முடியாவில்லை.. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை….
அவரிடமே கேட்டு விட்டேன்..
“ சாமி… இது எல்லாம் எப்படி சாத்தியம் ஆகுது”
சிரித்தார்..
“ வெற்றி = நம்பிக்கை+ வழிகாட்டுதல்+அறிவியல் …..   அறிவியல் சார்ந்த ஆன்மீகம்தான் என் பாணி….  நம்பிக்கை இல்லாத அறிவியல் இயந்திரத்தனமானது….  அறிவியல் இல்லாத வெற்று நம்பிக்கை முட்டாள்தனமானது..
உன் வாழ்க்கை பாடம் ஏற்கனவே துவங்கி விட்டது.. வா..இன்னும் விளக்குகிறேன்”
இன்னொரு அறைக்கு அழைத்து சென்றார்.
இனம் தெரியாத பயத்துடன் பின் தொடர்ந்தேன்


**************************************************************

3

”தமிழக வீரர் தமிழ் வெறியன்  இந்திய அணியில் இடம் பிடித்தார்,,, முதல் போட்டியிலேயே சதம் “

“ எல்லா புகழும் சத் குருவுக்கே , அடக்கத்துடன் பேட்டி “


” தமிழக கிரிக்கெட் வீரர் காதல் திருமணம்.. காதலி ஷாலினியை மணந்தார்.. கிரிக்கெட் அணி கேப்டன் சச்சிதானந்தம், சத்குரு நேரில் வாழ்த்து “

” சத்குரு ஆசி எங்களுக்கே..அடுத்த மாதம் நடக்கும் உலக கோப்பையை இந்தியாவே வெல்லும் - த்மிழ் வெறியன் பேட்டி “

  மிக குறிகிய காலத்தில் நான் அடைந்த வெற்றிகளும், புக்ழும் எனக்கே ஆச்சரியமாக இருந்தன. எனவே மற்றவர்கள் ஆச்சர்யம் அடைவது இயல்பானதுதான்.. ஆனால் எல்லா புகழும் சத்குருவுக்கே என நான் அடக்கத்துடன் சொல்வதுதான் அவர்களை வியப்பின் உச்சிக்கே அழைத்து சென்றது..

என் அடக்கத்துக்கு காரணம் நன்றி உணர்வு மட்டுமா? வெற்றி கிடைத்தும் எனக்கு ஏன் அமிதி இல்லை... என் நினைவுகள் பின்னோக்கி சென்றன..

சாமியார் தீட்சை அறைக்கு, அறிமுகம் கொடுக்கும் அறைக்கு  என்னை அழைத்து சென்றார்.. ” முதல் நாள் நீ என்னை பார்க்கிறாய்.. நான் நெடுங்காலமாக உன்னை பார்க்கிறேன்.. உனக்கு இன்னும் குழப்பம்.. சரியான இடத்துக்கு வந்து இருக்கிறோமா என சந்தேகிக்கிறாய்.. இந்த ஆல்பத்தை பார்”

ஆல்பத்தை புரட்டினேன்.... பிரபல தொழில் அதிபர்கள்,    நடிகர்கள்,  பிரமுகர்கள்


” இவர்கள் அனைவரும் உன்னைப்போல வந்தவர்கள்தான்.. கல்லாக இருந்த அவர்களை சிற்பமாக ஆக்கியது நான்.. உன்னையும் ஒரு பிரபல கிரிக்கெட் வீரன் ஆக்குவேன்.. இதற்கு கட்டணம் உன் நம்பிக்கை மட்டுமே...காணிக்கை என்பது நீ சாதித்த பின் தந்தால் போதும்... பெரும் பணமாக தரலாம் , அல்லது என்னைப்பற்றி பலரிடன் எடுத்து சொல்லும் விளம்பர ஏஜண்டாக செயலப்பட்டால் பணம் தர தேவை இல்லை... “

அவர் பேசுவதை புரியாமல் பார்த்தேன்.. டென்ஷனில் அவர் முன்பே சிகரட் பத்த வைத்தேன்... “ சாரி சாமி... இது இல்லாமல் என்னால் இருக்க முடியாது “

சத்குரு புன்னகைத்தார்... “ இந்த பழக்கத்தை இன்னும் பத்து நிமிடத்தில் மாற்றி காட்டுகிறேன். அப்போதுதான் என் செயல் முறைகள் மீது உனக்கு நம்பிக்கை வரும் “

பதிலுக்கு நான் சிரித்தேன்.. “ பலரின் கண்டிப்புக்கும், என் கேர்ள் பிரண்ட் ஷாலினி அறிவுரைக்கும் மாறாத நான் , இப்போது எப்படி மாறுவேன் ?”

அவர் தீர்க்கமாக என்னை பார்த்தார்...

” அதுதான் என் செயல் முறை .. இப்போது பார் “வீடியோவை ஓட விட்டார்

********************************************************

சத்குரு வழியில் சாதனை பயணம் - வீடியோ ஷோ 

.. ஆசிரமத்தில் செய்யப்பட்ட ஒரு சோதனை .. ஆய்வு கூடம் போல இருந்தது...  பல்வேறு உபகரணங்கள் இருந்தன...

இயல்பு -  உயிரை கொன்று வாழ்தல் 

பசியில் வாடியிருந்த ஒரு பூனை கொண்டு வரப்பட்டது... ஏதாவது உணவு கிடைக்குமா என அதன் கண்கள் அலைபாய்ந்தன...

ஓர் எலி பத்தடி முன் வைக்கப்பட்டது... பூனை ஒரே பாய்ச்சலாக பாய்ந்து எலியை கவ்வியது...

அன்பு வழி 

பூனையை செல்லமாக தடவி கொடுத்த சீடர்கள் , ஊன் மறுத்தல் திருக்குறள் படித்தனர்... கொல்ல கூடாது என அறிவுரைத்தனர் .

அதன் பின் மீண்டும் எலி... மீண்டும் அதே பாய்ச்சல்

ஆன்மீக வழி 


அசைவம் சாப்பிட்டால் முக்தி கிடைக்காது.கடவுள் தண்டிப்பார்.. அடுத்த பிறவியில் எலியாக பிறப்பாய்.. என்பது போன்ற அறிவுரைகள் தரப்பட்டன். மீண்டும் எலி- மீண்டும் பூனை பாய்ந்தது..


சத்குருவின் சாதனை வழி 


பூனை அதன் இடத்தில் விடப்பட்டது.. பத்தடி தூரத்தில் எலி வைக்கப்பட்டது... பூனை உற்சாகமாக எலியை நோக்கி ஓடியது... ஒன்பது அடி சென்ற நிலையில், தூக்கி எறியப்பட்டது பூனை... சுவரில் மோதி கீழே விழுந்தது....  வீடியோ கேமிரா  பூனை ஓடிய பாதையை காட்டியது.. அது சிமெண்ட் தரை அல்ல... இரும்பால் செய்யப்பட்ட தரைப்பகுதி... ஒயர் இணைப்புகள் இருந்தன... அது எலியை பிடிக்க இருந்த கடைசி நொடியில்,  குறைவான அளவு மின்சாரம் பாய்ச்சப்பட்டு இருக்கிறது...


மீண்டும் பூனை வழக்கமான இடத்தில். எலி வைக்கப்பட்டது..பூனை சற்று தயங்கியது.. ஆனால் பசி,, மெதுவாக நடந்தது எலியை நோக்கி... ஒன்பது அடியில் பயந்து நின்றது... ஒன்றும் ஆகவில்லை... எலியை பிடிக்கும் கடைசி கணத்தில் மின்சார இணைப்பு கொடுக்கப்பட, தூக்கி எறியப்பட்டது..

அதற்கு என்ன நடந்தது என்பது புரியவில்லை.. ஆனால் எலி அரிகில் சென்றால் ஆபத்து என்பது மட்டும் புரிந்துவிட்டது...

மீண்டும் அதே இடத்தில் பூனை... எலி கொண்டு வந்து வைக்கப்படதும், பூனை நடுங்க தொடங்கியது... எதிர்திசையில் பாய நினைத்தது.. ஆனால் ஓட முடியவில்லை..பசி மற்றும் காயம்..

எலியை ஏக்கத்துடன் பார்த்தது ... ஆனால் அதை நோக்கி செல்ல முயற்சிக்கவே இல்லை... ஒரு சீடன் எலிக்கு சற்று தள்ளி தயிர் சாதம் வைத்தான்.. பூனை மெதுவாக நடந்து சென்று, எலியை புறக்கணித்து விட்டு தயிர் சாதம் சாப்பிட ஆரம்பித்தது,,,.

கடவுளால் முடியாதது , சத்குருவால் முடியும் 


***********************************************************


இவர் சாமியாரா சைக்கோவா .. பயந்து போய் பார்த்தேன்..இந்த வீடியோ மூலம் என்ன சொல்ல விரும்புகிறார்...

அவரை கலவரத்துடன் பார்த்தேன்...

” நோ டென்ஷன்... சிகரட் எடுத்துக்கோ “ கொடுத்தார்... கையில் வாங்கி பற்ற வைத்தேன்..

சுவரில் மாட்டி இருந்த டீ வீ  ஆன் ஆகியது...

வாட் இஸ் திஸ்... திரையில் ஒரு பேருந்து நிலையம். ஷாலினி பஸ்சுக்காக நின்று கொண்டு இருந்தாள்...


சடாரென எழுந்த்தேன்... இந்த சாமியார் ஒரு கிரிமினல்...

அவர் புன்னகைத்தார்,,, ”அந்த சிகரட்டை பற்ற வை...”

பற்றவைத்தேன்...  திடீரென கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ ஒன்று சாலியில் நின்று கொண்டு இருந்தவர்கள் மீது பாய்ந்தது....

பயத்தில் சிகரட்டை த்வற விட்டேன்.. ஆட்டோ ஷாலினிக்கு சில அடிகள் முன் பிரேக் அடித்து நின்றது...

இந்த சாமியாரை விட கூடாது... செல் போனை எடுத்தேன்..

சாமியார் சிரித்தார்,,, “ யாருக்கு போன் போடணும்... உன் காசை வீணடிக்காதே.. ஆசிரம போனிலேயெ பேசு... யார் நம்பர் வேனுமோ கேளு... நானே தறேன்.. எல்லோரும் என் சீடர்கள்தான் “:

ஒன்றும் செய்வதற்கில்லை...

”இன்னொரு சிகரட் வேணுமா” குறும்பாக கேட்டார்..

சிகரட்டை எடுத்தால் என்ன நடக்கும் என்பது எனக்கு புரிந்து இருந்தது ..

அவர் பேச ஆரம்பித்தார்..

“ இங்கு வரும் சீடர்கள் அனைவரையும் 24 மணி  நேரமும் நாங்கள் கண்காணிப்போம்... நான் சொல்வதை மீறுபாவர்கள் உடனடியாக தண்டிக்கப்படுவார்கள்.. ஆனால் நேரடியாக அல்ல... உதாரணமாக, நீ தவறு செய்தால், தண்டிக்கப்படுவது ஷாலினி... பீ கேர் ஃபுல்...  இதை வெளியே சொல்ல நினைத்தாலும் உடனடி தண்டனை உண்டு....

இந்த முறையை கொடூரமாக தோன்றினாலும், பயன் பெற்றவர்கள் அனேகம்.... நீயும் பயன் பெறுவாய்...

சிகரட் பிடிக்க கூடாது...   எங்கள் கிரிக்கெட் பயிற்சியாளர் கொடுக்கும் கடும் பயிற்சிகள் செய்ய வேண்டும்... இது போல பல நிபந்தனைகள் உண்டு... மீறினால் தண்டனை உண்டு

******************************************************
மாட்டிகொண்டாகி விட்டது.. வேறு வழியில்லை... ஆனாலும் நல்லதுக்காத்தானே இப்படி செய்கிறார் என மனதை தேற்றி கொண்டேன்... என் ஆட்டத்திறன் மேம்பட தொடங்கியது..

“ என்னடா.. என் கூட பேசக்கூட நேரம் இல்லையா”
சிணுங்கிய ஷாலினியை பார்க்க பார்க்க காதலும், பயமும் தோன்றின... தேவையில்லாமல் சாமியாரிடம் சென்று இவளை ஆபத்தில் வைத்து இருக்கிறேனே..

ஆனால் என் வளர்ச்சி அவளுக்கு பிடித்து இருந்தது...

என் திறன் , பயிற்சி இத்துடன் சாமியாரின் செல்வாக்கும் சேர்ந்ததால் அணியில் இடம் கிடைத்தது..


ஷாலினி மேல் இருந்த அக்கறை, அவளுக்கு எதுவும் ஆகி விடக்கூடாது என்ற துடிப்பு என்னை உயர்த்தியது...

******************************************************

 நம்ப முடியாத அதிர்ஷ்டம்தான்.. நெடுனாள் கனவுதான்.. ஆனால் பெரிய மகிழ்ச்சியெல்லாம் இல்லை.. ஷாலினியுடன் நடந்த திருமணமும், கேபட்ன் சச்சிதானந்தின் அன்பும்தான் எனக்கு கிடைத்த ஆறுதல்..

சாமியாரை சந்திக்க்கும் முன்பு கேப்டன் சச்சிதானந்தை பார்த்து இருந்தால் என் வாழ்க்கை வேறுவிதமாக இருக்கும்.. வாழ்வை தெளிவாக புரிந்து கொண்டவர் சச்சிதானந்தம்...

” தவறு செய்தால் கடவுள் தண்டிப்பாராம்.. ஏன் இந்த வேலை.. தவறு செய்யாத மனிதர்களை உருவாக்கும் ஆற்றல் அவருக்கு இல்லையா?

கோயிலுக்க்கு பாதுகாப்பு அளிப்பது மனிதன்...  கோயிலையே பாதுகாக்க முடியாத கடவுள் மனிதனை எப்படி பாதுகாப்பான்...”

என்றெல்லாம் கடவுளை சாடுவார் அவர்....

” இன்ஸூரன்ஸுக்கு ஏஜண்ட் இருக்கலாம்..  இறைவனுக்கு இருக்கலாமா என சாமியார்களையும் சாடுவார்...

அவர் கருத்தை நான் ஏற்றாலும் ஒப்பந்தப்படி சத்குருவை புகழ்ந்து கொண்டு இருந்தேன்...

என் திருமணத்துக்கு மனைவியுடன் வந்து வாழ்த்தினார் சச்சிதானந்தம் .. அவர் மனைவி ஓட்ட்ப்பந்தய வீராங்கனையாக இருந்து ஓய்வு பெற்றவர்...

********************************


உலக கோப்பை... ஃபைனல் வரை வந்து விட்டோம்....

நாளை ஃபைனல்...

டென்ஷனான இரவு... போன் அடித்தது...

சாமியார்...

“  நாளை நடக்கும் போட்டியில் அதிக ரன் எடுப்பது நீயாக இருக்கவேண்டும்... ஒரு ரன் குறைவாக இருந்தாலும், ஷாலினியின் கால் கட்டை விரல்கள் இரண்டும் துண்டிக்கப்படும் “ 


*************************************
வழக்கத்தை விட அதிக டென்ஷனாக களம் இறக்கினேன்..

எதிர் அணி முதல் பேட்டிங்...

அதிக பட்ச தனி நபர் ஸ்கோர் 80... மொத்த ரன் 280 ..

நான் 81 எடுத்தாக வேண்டும் என்ற நோக்கத்திலும், அணி வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் சச்சிதானந்தமும் ஓப்பனர்களாக இறங்கினோம்...

மிக கவனமாக ஆடினேன்..

ஐம்ப்து ரன்னில் ஒரு கேட்ச்சில் இருந்து தப்பினேன்... உயிர் வந்தது போல இருந்தது... ஒரு வழியாக எண்பது ரன் எடுத்தேன்.. ஆனால் இன்னொரு சோதனை.. எதிர் முனையில் சச்சிதானந்தமும் அவுட் ஆகாமல் இருந்தார்... வாழ்வில் நினைக்க கூடாத நினைப்பு வந்தது... இவர் சீக்கிரம் அவுட் ஆக வேண்டும் ..

துரோக நினைப்புதான்.. ஆனால் வேறு வழி இல்லை...

ஆனால் அவர் அவுட் ஆகவில்லை... வெற்றிக்கு இன்னும் இரண்டு ரன்கள் மட்டுமே தேவை.. இருவரும் சம  ரன்களில் இருந்தோம்... 160 , 160... மொத்தம் 279 ஃபார் நோ லாஸ்...

48வது ஓவரின் கடைசி பந்து... இதில் அவர் அவுட் ஆனாலோ, ரன் எடுக்காமல் இருந்தாலோதான் அடுத்த ஓவரில் எனக்கு வாய்ப்பு கிடைக்கும்...

டென்ஷன்...

பந்து வீசப்பட்டது... ஸிக்ஸ் தூக்கினார் அவர்...
போச்சு ... எல்லாம் போச்சு..

ஆனால் அது சிக்ஸ் போகவில்லை.. எல்லைக்கோட்டில் கேட்ச் ஆனது..

“ சத்குரு வாழ்க “ கசப்புடன் நினைத்து கொண்டேன்...

அடுத்த ஓவர் .. முதல் பந்திலேயே ஃபோர் அடித்தேன்... அணி வெற்றி..அதிக பட்ச ரன் நான்..

கோப்பை... கொண்டாட்டம்... மேன் ஆப் த மேட்ச்..  சத்குரு பெருமை குறித்த பேட்டி எல்லாம் முடிந்தது...

அடுத்த நாள் கேப்டன் சச்சிதானந்தம் தன் இல்லத்தில் விருந்து கொடுத்தார்...

நான் அங்கு செல்வது அதுவே முதல் முறை...

அழகான வீடு... ஓவியங்கள் கண்களை கவர்ந்தன... தற்செயலாக அவர் தனி அறையை பார்த்த நான் அதிர்ந்தேன்..

சத்குருவின் பிரமாண்டமான போட்டோ...

’ அட ..இவரும் சீடரா... “ என்னால் நம்பவே முடியவில்லை.. காணிக்கையை பணமாக கொடுத்து விட்டு, நாத்திக வேடம் போடுகிறாரா...

”வாழ்த்துக்கள்  ” சச்சிதானந்தத்தின் மனைவியின் குரல் என்னை திரும்பி பார்க்க வைத்தது...

கை குலுக்கினாள்.. முகத்தில் மகிழ்ச்சி இல்லை..

பயத்துடனும், எதிர்பார்ப்புடனும், அவளுக்கு தெரியாமல் அவள் கால்களை கவனித்தேன்..

அவள் கால் கட்டை விரல்கள் வெட்டப்பட்டு இருந்தன,., 


( இது ஒரு கற்பனை கதை )





Wednesday, June 1, 2011

ஜல்சா குருவா? சாதனை குருவா? – 2

part1 ஜல்சா குருவா? சாதனை குருவா?


அடுத்த சேனலை மாற்றினேன், என் ரோல் மாடல் , இந்திய கிரிக்கெட் அணி வீரர் சச்சிதானந்தம் பேசிக்கொண்டு இருந்தார்.
” கடவுள் பிரபஞ்சத்தை படைத்தார் என்கிறார்கள்… அப்படி படைக்கும் போது அவர் எங்கு இருந்தார் ? யாரும் சொல்ல முடியாது… சரி, பிரபஞ்சத்தை படைத்த கடவுளை யார் படைத்தது?
சுருக்கமாக சொன்னால் கடவுள் என்பது கற்பனையான விஷ்யம்… சாமியார்கள் நம்பாமல் உழைப்பை நம்பினால் வெற்றி நிச்சயம் “
அவர் பேச்சு என்னை ஈர்த்தது…
ஆனாலும் சாமியாரை நம்பலாமா வேண்டாமா என முடிவுக்கு வர முடியவில்லை..
காலிங் பெல் அடித்தது….
பேச்சுலராக இருந்தாலும், மேன்ஷனில் தங்காமல் தனி வீடு பிடித்து தங்கி இருந்தேன்,,, இந்த நேரத்தில் யார் ?
ஒரு வேளை கேர்ள் ஃபிரண்ட் ஷாலினியா?
கத்வை திறந்தேன்..
“ சார்.. நீங்க? .. ?
வந்தவன் ஹிந்தி பட ஹீரோ மாதிரி பளிச் என பொறாமைப்பட வைத்தாலும் , தமிழ் பட ஹீரோ மாதிரி பேசினான்.
“ டேய்.. நான் தாண்டா கிராமத்து நண்பம் பரமசிவம்.,… ஒரு மாடலிங் பிராஜக்ட் விஷ்யமாக வந்தேன்..உன்னையும் பார்க்கலாம்னு வந்தேன் “
திகைத்து போனேன்,.,
ஊரில் ஒல்லி குச்சியாக இருந்த பரமசிவம் ஹீரோ போல ஆகி, மாடலிங் வேறு செய்கிறானா?
ஒரு மணி நேர பேச்சில் என் பொறாமை இன்னும் அதிகரித்தது..
இந்த வயதிலேயே , லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறான்…
“ மச்சான்.. எல்லாத்துக்கும் காரணம் சத்குருதான்… அவர் யாருடன் படுத்தால் உனக்கு என்ன? உனக்கு நல்லது நடக்குதா இல்லையா? அதை மட்டும் பாரு..
அவர் யாரையும் ரேப் செஞ்சாரா? இல்லையே?
விரலை பார்க்காதே..விரல் எதை சுட்டி காட்டுதுனு பாரு… அவரை நம்புனா நீயும் பெரிய ஆள் ஆகலாம்… அப்புறம் உன் இஷ்டம் “
அவன் கிளம்பியபோது உறுதி செய்து விட்டேன்.
“ நடப்பது நடக்கட்டும்… சத்குருவை முயற்சித்து பார்க்கலாம் “
**********************************************************************************************************
இந்த முறை சோதனை எல்லாம் இல்லை.. நேரடியாக அவரை பார்க்க முடிந்தது…
புன் சிரிப்புடன் வரவேற்றார்..
“ நீ வருவாய் என எனக்கு தெரியும்.. உனக்கு நல்ல நேரம் வந்து விட்டது… அடுத்த ஆண்டு நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்திய அணியில் நீ இருப்பாய்..எழுதி வைத்து கொள்”
உறுதியாக சொன்னார்..
என்னால் நம்ப முடியாவில்லை.. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை….
அவரிடமே கேட்டு விட்டேன்..
“ சாமி… இது எல்லாம் எப்படி சாத்தியம் ஆகுது”
சிரித்தார்..
“ வெற்றி = நம்பிக்கை+ வழிகாட்டுதல்+அறிவியல் …..   அறிவியல் சார்ந்த ஆன்மீகம்தான் என் பாணி….  நம்பிக்கை இல்லாத அறிவியல் இயந்திரத்தனமானது….  அறிவியல் இல்லாத வெற்று நம்பிக்கை முட்டாள்தனமானது..
உன் வாழ்க்கை பாடம் ஏற்கனவே துவங்கி விட்டது.. வா..இன்னும் விளக்குகிறேன்”
இன்னொரு அறைக்கு அழைத்து சென்றார்.
இனம் தெரியாத பயத்துடன் பின் தொடர்ந்தேன்
( தொடரும் )

ஜல்சா குருவா? சாதனை குருவா?


” அன்புள்ள பதிவர் தமிழ் வெறியனுக்கு ,
நான் உங்கள் எழுத்துக்கு அடிமை. ஒரு நல்ல எழுத்து , ஆயிரம் நல்ல மனிதர்களுக்கு சமம் என என் சத்குரு சொல்வதை நிரூபித்து வருகிறீர்கள்… ஒரு முறை என சத் குருவை நீங்கள் சந்திக்க வேண்டும் என்பது என் விருப்பம். அவர் ஆசி கிடைத்தால் இன்னும் சிறப்பாக நீங்கள் எழுத முடியும். உங்கள் வாழ்வில் நம்ப முடியாத மாற்றங்கள் ஏற்படும். நீங்கள் நினைத்தது நிறைவேறும். அவர் நடத்தும் முதல் கட்ட தேர்விலெயே பலர் தோல்வி அடைந்து வெளியேறி விடுவார்கள்… ஒரு வயது பெண்ணுடன் , ஒரு மணி நேரம் தனியாக இருக்கும் சோதனை முதல் கட்ட தேர்வாக நடக்கும். அதில் தேர்ச்சி அடைய உங்களை போல திட சித்தம் கொண்டவர்களால்தான் முடியும் என்பதாலேயே உங்களை அழைக்கிறேன்.
அன்புடன்,
துடியலூர் மெய்யப்பன்…