” அன்புள்ள பதிவர் தமிழ் வெறியனுக்கு ,
நான் உங்கள் எழுத்துக்கு அடிமை. ஒரு நல்ல எழுத்து , ஆயிரம் நல்ல மனிதர்களுக்கு சமம் என என் சத்குரு சொல்வதை நிரூபித்து வருகிறீர்கள்… ஒரு முறை என சத் குருவை நீங்கள் சந்திக்க வேண்டும் என்பது என் விருப்பம். அவர் ஆசி கிடைத்தால் இன்னும் சிறப்பாக நீங்கள் எழுத முடியும். உங்கள் வாழ்வில் நம்ப முடியாத மாற்றங்கள் ஏற்படும். நீங்கள் நினைத்தது நிறைவேறும். அவர் நடத்தும் முதல் கட்ட தேர்விலெயே பலர் தோல்வி அடைந்து வெளியேறி விடுவார்கள்… ஒரு வயது பெண்ணுடன் , ஒரு மணி நேரம் தனியாக இருக்கும் சோதனை முதல் கட்ட தேர்வாக நடக்கும். அதில் தேர்ச்சி அடைய உங்களை போல திட சித்தம் கொண்டவர்களால்தான் முடியும் என்பதாலேயே உங்களை அழைக்கிறேன்.
அன்புடன்,
துடியலூர் மெய்யப்பன்…
கடித்ததை படித்ததும் எனக்கு சிரிப்பு வந்தது. முக்தி அடைய வகுப்புகள் , முற்பிறவி வினைகளை நீக்க வழிமுறைகள் என்றெல்லாம் இந்த சாமியார்கள் பற்றி பல கடிதங்கள் பிரபல எழுத்தாளர்களுக்கு வருவதுண்டு. அதை அவர்கள் கேலி புன்னகையுடன் புறக்கணிப்பார்கள்.. ஆனால் என்னால் அப்படி புறக்கணிக்க முடியவில்லை..
பதினெட்டு வயது இளைஞன் நான். எனவே எனக்கு முக்தி குறித்தோ , பாவ பதிவிகளை நீக்குவது குறித்தோ அக்கறை இல்லை… பெரிய கிரிக்கெட் வீரர் ஆக வேண்டும். எழுத்தாளன் ஆக வேண்டும் எனப்து மட்டுமே என் இலக்கு. ஆனால் இதை எல்லாம் அந்த சாமியார் சாதித்து தருவார் என நான் நம்பவில்லை.. அந்த “ முதல் கட்ட “ சோதனைதான் என்னை சுண்டி இழுத்தது… ஒரு வயசுப் பொண்ணோட தனியா இருக்கணுமா? ம்ம்ம்ம்ம்…..
கிளம்ப முடிவு செய்தேன்…
************************************************************************
காட்டை அழித்து பிரமானடமாக உருவாக்கப்பட்டு இருந்தது ஆசிரமம் . மரம் நடுவதை பிரச்சாரம் செய்யும் சாமியார் , இப்படி காட்டை அழித்து இருக்கிறாரே என தோன்றினாலும் , வந்த வேலைதான் முக்கியம் என சொல்லிக்கொண்டேன்.. ஆசிரம பெண் என்னை வரவேற்றாள்..
” சத்குரு வாழ்க… சார் , இங்கே தியான பயிற்சி, வாழ்வியல் பயிற்சி என பலதும் உண்டு .. ஞானம் அடையும் சர்டிஃபிகேஷன் கோர்ஸ் கூட இருக்கு,, யூ ஆர் என்லைட்டண்ட் பெர்சன் அப்படீனு நாங்க தற சர்ட்டிஃபிகேட் உலக அளவில் மட்டும் அல்ல . பிரபஞ்ச அளவில் மதிப்பு மிக்கது… உங்களுக்கு என்ன வேணும் ? “
“ எனக்கு அதெல்லாம் வேண்டாம் மேடம்.. நான் பெரிய கிரிக்கெட் வீரரா மாறி உலக அளவில் புகழ் பெறணும் . இதற்கு சத்குரு உதவுவாரா? “
“ கடவுளால் முடியாதது கூட சத்குருவால் முடியும். சத்குருவால் முடியாதது யாராலும் முடியாது . கண்டிப்பா அவர் உதவுவார்.. முதலில் உங்களுக்கு சோதனை வைப்போம். அதில் தேறினால் சத் குருவை நீங்க சந்திக்கலாம் “
எனக்கு ஆவல் அதிகரித்தது…
” பக்கத்து ரூம்ல இருங்க… ஒரு வயசுப்பொன்னை அங்கே அனுப்புவோம்.. ஒரு மணி நேரம் கழிச்சு உங்க நடத்தையை வைத்து , நீங்க உள்ளெயா , வெளியேயானு முடிவு எடுக்கப்படும்.. “
என்னை ரூமில் உட்கார வைத்து விட்டு சென்றாள்..
டென்ஷனாக அமர்ந்து இருந்தேன்..
நேரம் மெதுவாக ஊர்வது போல இருந்தது…
கதவு மெதுவாக திறக்கப்பட்டது..
என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை..
உலக அழகை எல்லாம் ஒன்று சேர்த்து உருவாக்கப்பட்டது போல இருந்த ஒரு பெண் உள்ளே நுழைந்தாள்.. திராட்சை நிற கண்கள், ஆரஞ்சு சுளை போல உதடுகள், சதைப்பற்றுள்ள வாளிப்பான நிற மாம்பழங்கள் போன்ற இரண்டு ……… கன்னங்கள்… …
” சத்குரு ஜெய்ஹோ….. வாழ்க..வணக்கம் … ஹி ஹி… “ வழிந்தேன்.
“ வணக்கம் “ அவள் மென்மையாக புன்னகைத்தாள்..
‘ இவளுடன் ஒரு மணி நெரம் என்ன ..ஒரு வாழ் நாள் முழுதும் இருக்கலாமே… சரி , அவள் கையில் என்ன குழந்தை? “
“ குழந்தையை விட்டு விடலாமே.. அதுதான் வசதி .” ஹி ஹி த்தேன்..
” குழந்தையை விடத்தானே நான் வந்து இருக்கிறேன்.. இந்த ஒரு வயது பெண் குழந்தையை அழாமல் எப்படி வைத்து கொண்டு இருக்க போகிறீர்கள் எனப்துதான் சோதனை “ என்றவள் குழந்தையை விட்டு விட்டு வெளியேறினாள்..
அதிர்ந்தேன்..
”ஒரு வயசு” பெண் என்பது இதுதானா?
கடுப்பாக இருந்தாலும் , வேறு வழியில்லை..
அந்த குழந்தை திடீர் என அழ ஆரம்பிக்க , விதியை நொந்த படி தாலாட்டு பாட ஆரம்பித்தேன்.
****************************************************
” பொறுமைதான் வெற்றிக்கு முதல் படி .. பிரச்சினையை கண்டு ஓடி விடாமல், அந்த குழந்தையை ஒரு மணி நேரம் பொறுமையாக பார்த்து கொண்டீர்கள்… எனவே சத்குருவை சந்திக்கலாம்”
சத்குருவிடம் அழைத்து செல்லப்பட்டேன்.. உலகை துறந்த சாமியாரின் அறை சகல வச்திகளுடன் அபாரமாக இருந்தது.. நாமும் உலகை துறந்து விடலாமா என்ற ஆசையும் ஏற்பட்டது…
” சாமியார் கண்டிப்பானவர்.. பாத்திரம் அறிந்து பிச்சை போடுபவர்.. கவனமாக பேசுங்கள் “ எச்சரிக்கை என் காதில் ஒலித்தது…
நான் வந்த நேரம், மூன்று நடிகைகள் அவர் முன் அமர்ந்து இருந்தனர்… பயிற்சி வகுப்பு போல..
முதல் நடிகை பேசினாள்..
“ சாமி… படித்து டாக்டர் ஆக வேண்டும் என்பதுதான் என் லட்சியம்.. ஆனால் பணத்துக்காக இதில் தள்ளிட்டாங்க… உடல் ரீதியா பல சமரசங்கள் செய்ய வேண்டியாதா போச்சு… ஆரம்பத்தில் கஷ்டமா இருந்தலும், இப்ப இது எனக்கு பிடிச்சு இருக்கு “
சாமியார் முகம் சிவந்த்தது..
“ பாவத்தை விரும்பி செய்றீயா? இவளை நான் ஏசி ரூம்ல தங்க வைங்க” உத்தரவிட்டார்…
அடுத்த நடிகை..
“ சாமி..ஆரம்பத்துல பல அட்ஜஸ்ட்மெண்ட் செஞ்சேன். அது தப்புனு உணர்ந்துட்டேன்… சினிமா சான்ஸ் இல்லைனாலும் பரவா இல்லை… இனி தப்பு பண்ண மாட்டேன்..
சாமியார் முகம் கனிந்தது “ இவளை ஏஸி ரூம்ல த்ங்க வைங்க..”
மூவரில் அழகாக இருந்த அடுத்தவள் பேசினாள்
“ சாமி.. கலை சேவைக்காகத்தான் நடிக்க வந்தேன்… இது வரை “ தப்பு’ செஞ்சதே இல்லை.. அழகு, திறமையை மட்டும் நம்பியே திரை உலகில் இருக்கிறேன் “
அனைவரும் அசந்தனர்,,
“ இவளை எங்க தங்க வைக்கணும் “ உதவியாளர்கள் பரபரத்தனர்..
“ நீங்க ஒண்ணும் தங்க வைக்க வேணாம்..இவளை நானே என் பெட் ரூம்ல த்ங்க வச்சுக்க்ரேன் “
கேட்ட நான் அதிர்ந்தேன்…சரியான பிராடு சாமியார் போல இருக்கே…
“ சாமி..எனக்கு கொஞ்ச அவசர வேலை இருக்கு . அடுத்த வாரம் சந்திக்றேன்”
அவசரமாக கிளம்பினேன்..
**************************************************************
ஒரு பிராடிடம் இருந்து தப்பினோம் என நிம்மதியாக வீடு வந்த நான் டீ வியை ஆன செய்தேன்..
ஆச்சரியம்… சிறுவயது தோழன் ராமசாமி டீவியில் பாடிகொண்டு இருந்தான்… சூப்பர் சிங்கர் ஃபைனல்…
ஆர்வமாக கவனித்தேன்,,,
வெற்றி அவனுக்கே….
“ இந்த வெற்றிக்கு காரணம் என் சத்குருதான் குப்பையாக இருந்த என் வாழ்க்கை கோபுரமாக ஆனதற்கு காரணம் அவர் ஆசிதான் “
அவன் பேசியதை பார்த்து திகைத்தேன்..
அவர் உண்மையிலேயே சக்தி மிக்கவரா? நான் தான் தப்பு கணக்கு போட்டு விட்டேனா?
( தொடரும் )
ஜல்சா குருவா? சாதனை குருவா? – 2
No comments:
Post a Comment
NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]