ஒரு படம் வரும்போது நடிகர்களின் அடிப்படையில்தான் அந்த படத்துக்கு எதிர்பார்ப்பு இருக்கும். ஓர் இயக்குனர் படத்துக்கு அந்த அளவு எதிர்பார்ப்பு இருக்கிறது என்றால் அது பாலா படத்துக்கு மட்டும்தான் ( மணிரதனம் படத்துக்கு ஊடகங்கள் செயற்கையாக ஏற்படுத்தும் பரபரப்பு வேறு விஷ்யம் )
இந்த நிலையில் அவன்- இவன் வெளியாகி இருக்கிறது.. பதிவர்களும் படம் பார்த்து விட்டு தம் கருத்துக்களை எழுதி வருகிறார்கள். பல தரப்பட்ட கருத்துக்கள் வெளி வருவது ஆரோக்கியமானது…
தனக்கு பிடித்து இருக்கிறது – பிடிக்கவில்லை என்ற கருத்து கட்டுரைகள் ஒரு புறம். நல்ல படம் என்றால் அது கமல் படம் போல இருக்க வேண்டும் என்ற பிரச்சார கட்டுரைகள் ஒரு புறம் என்று அனைத்துமே சுவையாக இருக்கின்றன..
ஆனால் படத்தை நன்கு உள்வாங்கி ஒரு விமர்சன கட்டுரையாக , இன்ஃபர்மாட்டிவாக எழுதி இருப்பவர்கள் யார் என்று தேடினால் எனக்கு கிடைத்தவை இரண்டு.. (இன்னும் சில இருக்க கூடும், படித்த பின் பகிர்ந்து கொள்கிறேன் )
இப்போதைக்கு நான் ரசித்த விமர்சனங்கள் இரண்டுதான்.. மற்றவர்களையும் ரசித்தேன்.. ஆனால் அவை விமர்சனம் என்ற பிரிவில் வராது….
1 ஜாக்கியின் சூப்பர் பார்வை
சினிமாவை சுவாசித்து வாழும் ஜாக்கி சேகரின் விமர்சனம் மிகவும் ரசிக்கும்படி இருந்தது… நான் ரசித்த வரிகள்
பாலாவின் முந்தைய படங்களை பார்த்தவர்கள் இந்த படத்தில் என்ன புதுமை என்று கேட்க வாய்ப்பு இருக்கின்றது
விளிம்பு நிலைமனிதர்களின் கதையை சொல்ல லட்சக்கணக்கான கதைகள் இருக்கின்றன... அதை பாலா செய்து வருகின்றார்
கிளிஷே... என்பது ஒரு காட்சியை திரும்ப திரும்ப எடுப்பது என்று சொன்னாலும் அதே கிராமம், அதே மனிதர்கள்,என்று திரும்ப திரும்ப கிளிஷேவாக எடுக்கின்றார் என்று சொன்னால் அப்புறம் எப்படித்தான் படம் எடுப்பது??
சோத்துக்கையால் சாப்பிடுகின்றோம் . இதையும் கொஞ்சநாளில் கிளிஷே என்று சொல்லிவிடுவார்கள் போல...
ஆர்தர் வில்சன் கேமரா... பல இடங்களில் முக்கியமாக லோ ஆங்கில் காட்சிகளில் அசத்து கின்றது
2 உண்மை தமிழனின் உன்னத பார்வை
சினிமா மட்டும் அல்ல… அரசியல் , புத்தகம், வாழ்க்கை , மனிதர்கள் என அனைத்தையுமே கூர்ந்து கவனிப்பவர் இவர்…
இவர் எழுதியதை படித்தபின்புதான், படத்தை எப்படி பார்க்க வேண்டும் என்பதே நமக்கு புரிகிறது… நான் ரசித்த வரிகள்..
தமிழ்ச் சினிமா காட்ட மறுத்த, மறுக்கும் சமூகத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் மனிதர்களை படம் பிடித்துக் காட்டுவதே பாலாவின் தனித்துவம்..! அந்த வகையில் இதுவும் ஒரு தனித்துவமான படம்தான்..!
இப்படத்தில் கதை என்பதே இல்லை என்பதுதான் இப்படத்தின் சிறப்பு..! சில சம்பவங்களின் தொகுப்புதான் இத்திரைப்படம்..!
விஷாலுக்கு நிச்சயமாக இதுதான் முதல் திரைப்படம். அவர் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்
படத்தின் பல குறியீடூகளுக்கு விஷால்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்.
காட்டாற்றின் கீழே அவ்வளவு பெரிய மரத்தில் அம்மணமாகத் தொங்கும் ஜமீனின் உடலைப் பார்த்து மயங்கி விழுவது ஆண் மகன் ஆர்யாவாகவும், கதறலுடன் அந்த மரத்தின் மீதேறி ஜமீனின் உடலை நீரில் விழுக வைத்து பின்னர் தண்ணீரிலிருந்து தூக்குவது ஸ்திரீ பார்ட் விஷாலாகவும் திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பது குறியீடாக இல்லாமல் வேறென்ன..?
பெண்ணாக உணரப்பட்டவன்தான், தனது விசுவாசத்தைக் காட்டும்விதமாக பகைவனைப் பழி தீர்க்கிறான்.. உச்சபட்ச குறியீடு இதுதான்..!
நிச்சயம் இந்தப் படத்திற்காக அவரை உச்சத்தில் வைத்துக் கொண்டாடலாம்..!
கதை இப்படித்தான் என்றெல்லாம் சொல்லப்படாமல் அவர்களின் சமீபத்திய நடவடிக்கைகளையே திரைக்கதையாக்கி அதையே இடைவேளை வரையிலும் கொண்டு சென்றிருப்பதுதான் ஆச்சரியம்..! ஆனாலும் இடைவேளைக்குப் பின்பு கதைக்குள் நம்மையும் இழுத்துக் கொண்டு ஜீவித்திருக்கிறார் பாலா..
பாலாவின் பெர்பெக்ஷன் என்பதே அவருடைய இயக்குதல் மற்றும் படைப்புத் திறனிலும் மேலோங்கியிருக்கும். இதிலும் அவ்வாறே
படத்தில் எந்தக் காட்சியாலாவது இயக்கம், நடிப்பு சொதப்பல் என்று சொல்லவே முடியாத அளவுக்கு பாலாவின் மிகத் திறமையான இயக்குதல் தொடர்ந்திருக்கிறது..!
பாலாவின் முந்தைய படங்களைப் போல இப்படமும் அவருடைய சிறந்த இயக்கத்திற்காகவும், பங்களித்த கலைஞர்களின் உயர்ந்த நடிப்பிற்காகவும் நிச்சயமாகப் பேசப்படும்..!
3 வித்யாசாகரின் வித்தியாசமான பார்வை
”பொதுவாக, நடிகர்கள் முகப்பூச்சு தடவியோ அல்லது முகபாவம் சற்று மாற்றியோ நடிப்பதென்பது இயல்பு, ஆனால் படம் முழுக்க தன் முகத்தையும் பிறப்பின் குணத்தையும் மாற்றி, இயக்குனர் எண்ணிய ஒரு கதாப்ப்பாத்திரத்தை தன் திறமையின் உச்சம்வரை பயன்படுத்தி, தன்னை வெற்றியென்னும் ஒரு வார்தைக்காய் வருத்தி திரைக் காவியத்தின் பதிவில்; தனக்கான ஒரு தனி இடத்தை பதிவு செய்துக் கொண்டார் விசால்.”
இவரின் படத்தில் மட்டுமே, நடிக்கும் அத்தனைப் பேரும் சிறந்த நடிகர்களாக கருதப்படும் அளவிற்கு ஒவ்வொருவரின் உழைப்பையும் வாங்கி அவர்களின் முகத்தில் தனித்துவ நடிப்பெனப் பூசிவிடுகிறார். இப்படத்திலும் அத்தகைய உழைப்புத் ஒவ்வொரின் நகர்விலும் தெரிகிறது.
நிச்சயம் இந்த “அவன் இவன்” திரைப்படத்தின் வெற்றியில் இசையின் பங்கும் நடித்தவர்களின் பங்கினைப் போல் இன்றியமையாத ஒன்று.
உனக்குத் தான் முந்தைய படத்தில் தனியிடம் தந்தேன் இல்லையா இதில் நான் சொல்வதை மட்டும் செய்யென்று சொல்லிவிட்டிருப்பார் போல் இயக்குனர் பாலா நடிகர் ஆர்யாவை. என்றாலும், தன் திறனில் குறையில்லா ஆர்யா விட்டேத்தியாய் திரியும் சில காட்சிகளிலும் சரி, காதலின் ஈர்ப்பில் மதிமயங்கும் இடமும் சரி, கோபமுறும் குடித்து ஆடும், கண்கலங்கி அழும் அண்ணனின் அழையை பார்க்க இயலாமல் கண்நீர்வடிக்கும் காட்சியிலும் சரி; தன்னை முழுமையாய் படத்தில் ஈடுபடுத்தி தானும் ஒரு நிகரற்ற நல்ல கலைஞன் என்பதை மெய்ப்பித்திருக்கிறார்.
விருது தரும் மையம் இவ்வருடம் இப்படத்தைப் பார்த்துவிட்டு யாருக்கு விருதைத் தருவது என்று குழம்பிப் போனாலும் போகலாம். இல்லை ஒருவேளை அத்தனையையும் சேர்த்து விஷாலுக்கே கொடுத்தாலும் கொடுக்கலாம். ஒருவேளை விஷாலுக்கும் இயக்குனருக்கும் இவ்வருட விருது மறுக்கப் படுமெனில் அதை அத்தனை பெரிய விருதாக அல்லது அத்தனைப் பெரிய விடயமாக நாம் கருத வேண்டியதேயில்லை. காரணம், உழைப்பிற்கு கிடைத்திடாத மதிப்பு; மதிப்பேயில்லை!!
( மணிரதனம் படத்துக்கு ஊடகங்கள் செயற்கையாக ஏற்படுத்தும் பரபரப்பு வேறு விஷ்யம் ) //
ReplyDeleteபொங்கல் ல கடிபட்டு திடீர் சுவை கொடுக்கும் முந்திரி போல , இது போன்ற விஷயங்கள் தான் உங்கள் எழுத்துக்களில் சுவை கூட்டும்
( மணிரதனம் படத்துக்கு ஊடகங்கள் செயற்கையாக ஏற்படுத்தும் பரபரப்பு வேறு விஷ்யம் ) //
ReplyDeleteபொங்கல் ல கடிபட்டு திடீர் சுவை கொடுக்கும் முந்திரி போல , இது போன்ற விஷயங்கள் தான் உங்கள் எழுத்துக்களில் சுவை கூட்டும்
//இவரின் படத்தில் மட்டுமே, நடிக்கும் அத்தனைப் பேரும் சிறந்த நடிகர்களாக கருதப்படும் அளவிற்கு ஒவ்வொருவரின் உழைப்பையும் வாங்கி அவர்களின் முகத்தில் தனித்துவ நடிப்பெனப் பூசிவிடுகிறார். இப்படத்திலும் அத்தகைய உழைப்புத் ஒவ்வொரின் நகர்விலும் தெரிகிறது.//nice
ReplyDelete