Monday, June 27, 2011

வெற்றிகரமாக அவதூறு செய்வது எப்படி?- சக்சஸ் டிப்ஸ்

 நம் மக்களுக்கு நன்மை செய்ய தெரியாது என்றுதான் நினைத்து வந்தோம்... ஒரு தீய விஷயத்தை கூட செய்ய தெரியவில்லையே என தெரிய வந்த போது அதிர்ச்சியாக இருந்தது...

ஓர் எழுத்தாளர் பெண்மையை மதிக்கவில்லை என அவதூறு செய்ய புறப்பட்டனர் சிலர்..  கடைசியில் பார்த்தால், இது சம்பந்தமாக அவர்கள் எழுத்தில் பெண்களை எவ்வளவு இழிவு செய்ய வேண்டுமோ அவ்வளவு செய்து விட்டார்கள்... தேவை இல்லாமல் எழுத்தாளருக்கு விளம்பரம் கொடுத்ததுதான் அவர்கள் கண்ட பலன்...

இனி மேல் இது போன்ற வேலைகளில் இறங்க நினைப்பவர்கள், சிறப்பான் முறையில் செயல்பட சில டிப்ஸ்....


  • யாரை அவதூறு செய்ய நினைக்கிறீர்களோ அவர்களைப்பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்... நாத்திகம் பேசும் ஒருவர் கோயிலுக்கு சென்றால் அதை  கண்டு பிடித்து எழுத பாருங்கள்... ஆன்மீகம் பேசும் ஒருவர் , கோயிலுக்கு செல்வதை பெரிய கண்டு பிடிப்பு மாதிரி எழுதாதீர்கள்.
  • அவதூறு செய்வது பாதிப்பு ஏற்படுத்த வேண்டும். விளம்பரம் கொடுப்பதாக அமைய கூடாது என்பதை நினைவில் வையுங்கள்
  • வேறு யாரையாவது தூண்டி விட்டு, இதை செய்ய வையுங்கள்.. நீங்களே இதில் இறங்கி பெயரை கெடுத்து கொள்ளாதீர்கள்
  • ஒரே துறையில் இருப்பவர்களுடன் இந்த விளையாட்டு விளையாடாதீர்கள்.. 
  • வேறு வேறு டெக்னிக்கை கையாளுங்கள்... நான் அவருக்கு ஒரு கதை சொன்னேன், அதை காப்பி அடித்து விட்டார்.. ...  காசு வாங்கி கொண்டு விமர்சனம் எழுதுகிறார் என்றெல்லாம் புதிது புதிதாக யோசியுங்கள்
  • இதை முழு நேர வேலையாக செய்யுங்கள்... ஒரு இயக்கத்தில் இருந்து கொண்டு இதை பகுதி நேர வேலையாக செய்தால், உங்களால் உங்கள் இயக்கத்தின் பெயர் கெடும்..அவதூறும் முழுமையாக இருக்காது..
  • இது போன்ற வேலைகளில் இறங்கும் முன் மனசாட்சியை முழுதாக கழட்டி வைத்து விடுங்கள்... இல்லை என்றால் பாதியில் சிரமம் 
வாழ்த்துக்கள் 

5 comments:

  1. ஒரு தாதாவ ரோட்டு கூடி வந்து வடிவேல் ஒரு காமெடில சானில அடி வாங்க வச்ச மாதிரி ... சாருவ ரோட்டுல இழுத்து உட்டு வேடிக்க பாக்க ஆச படுறீங்க ...... வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. இதுக்கெல்லாமா டிப்ஸ் தருவாங்க????
    எனி உள்குத்து???


    //அவதூறு செய்வது பாதிப்பு ஏற்படுத்த வேண்டும். விளம்பரம் கொடுப்பதாக அமைய கூடாது என்பதை நினைவில் வையுங்கள்//

    கரெக்டா சொன்னீங்க..

    ReplyDelete
  3. சாரு இத்தனை ஆதாரங்களுடன் பிடிபட்டாலும் ஒரு சிலர் கூச்சநாச்சமே இல்லாமல் அவருக்கு இமேஜ் பில்டப் வேலை செய்கிறார்கள். இவர்கள் பொறுக்கி சாருவே நினைத்திராத கருத்துக்களையெல்லாம் சோறு தண்ணி இல்லாமல் கண்டு பிடித்து எழுதுகிறார்கள். அதில் ஒன்று இது சாருவின் படுக்கையறை சம்பந்தப்பட்ட விசயமாம். அதில் யாரும் எட்டிப் பார்க்க கூடாதாம். நல்லது, இந்த சலுகையை நாம் சாருவுக்கு மட்டும்தான் வழங்க வேண்டுமா? கருவறையை காம பூஜை அறையாக்கிய தேவநாதன், காமகோடி மடத்தில் பக்தைகளை நுகர்ந்த காஞ்சி ஜெயேந்திரன், ரஞ்சிதாவுடன் ஆட்டம் போட்ட நித்தியானந்தன் எல்லா பொறுக்கிகளுக்கும் அது அவர்களது படுக்கையறை சம்பந்தப்பட்டதுதானே, பின் ஏன் அவர்களை திட்டுகிறீர்கள்?

    ReplyDelete
  4. சென்னையில் அடையாரில் நடந்த நிகழ்வு இது. தனது வேலை முடிந்து இரவில் 9 மணிக்கு விடுதிக்கு நடந்து போகிறாள் அந்த ஏழைப் பெண். வழியில் இருட்டான பகுதியைக் கடக்கும் பொது, அவளைப் பின் தொடர்ந்து வந்த இருவரில் ஒருவன் அவளது கைகளை பிடித்துக் கொள்ள, மற்றவன் அவளது private parts -il கைவைத்து பாலியல் வன்முறை செய்தான். அவள் கத்தித் திமிறியவுடன் அவளை விடுவித்து விட்டு சிரித்த வாறே ஹாயாக நடக்க ஆரம்பித்து விட்டனர். கதறலுடன் விடுதியை அடைந்தாள் அந்தப் பெண். எப்போதும் எதையோ பறிகொடுத்தது போலத்தான் அந்தப்பெண் தோன்றுவாள். இது போல பல சம்பவங்கள் கேள்விப்படுகிறோம்.

    இப்படி வீதிக்கு வீதி பெண்ணுக்கெதிரான வன்முறை நடக்கிறது என்றால் மெத்தப் படித்தவர்கள் புழங்குகிற இணையத்திலும் அதே நிலைமை.

    சாநியின் வக்கிரத்துக்கு அந்தப் பெண் பலியாவதை மனைவி பிள்ளைகளை நேசிக்கிற அடிப்படை மனிதநேயம் கொண்ட யாரும் பொறுத்துக் கொள்ளக் கூடாது. அந்தப் பெண்ணுக்கு நமது வாழ்த்துக்களையும் ஊக்குவிப்பையும் அளிக்க வேண்டும். சாநியையும் அவனது குப்பிகளையும் அடையாளம் காண்கிற சந்தர்ப்பம் இது. இணையத்திலோ பதிவர் சந்திப்புகளிலோ சட்டையைப் பிடித்து கேள்வி கேட்க வேண்டும்.

    மெழுகுத்திரி ஏந்துபவர்கள் யோசிப்பார்களா? இசைப்பிரியாவுக்கு நடந்ததை எதிர்க்கும் நமக்கு இணையத்தில் மகளிருக்கு நேருவதை தடுக்கும் சமரசமில்லாத போர்க்குணம் உண்டா?

    ReplyDelete
  5. நண்பரொருவர் அளித்த “எக்சிஸ்டன்சியலிசமும் பேன்சி பனியனும்” என்ற நூலையும், சில கோணல் பக்கங்களையும் படித்தபொழுது சிந்திக்கவும், திறம்பட எழுதவும் தெரிந்த நவீன தமிழ் எழுத்தாளர் என்று ஆரம்பத்தில் நினைத்த எனக்கு கடந்த இரண்டு மூன்றாண்டுகளாக அவரது இணையத்தைப் படித்தபொழுதே புரிந்துவிட்டது. இவர் எந்த அடிப்படைக் கொள்கையுமில்லாதவரென்று. ஆனாலும் கோமாளி என்றுதான் நினைத்திருந்தேன். நித்தியானந்தா விதயத்தில் அவர் விஜய் தொலைக்காட்சியில் வந்து உளறிக் கொட்டியபொழுது பணத்துக்காகவும், மதுவுக்காகவும் எனன வேண்டுமானாலும் உளறுவாரென்று உணர்ந்தேன். இப்பொழுது புரிகிறது, சாரு ஒரு சுத்தப் பொறுக்கி என்று. இவரையும், இவரது நூல்களையும் காரி உமிழ்ந்து கடந்து செல்லாவிட்டால் இளம் வாசகர்களை தவறான பாதைக்கு இட்டுச் செல்லக்கூடியவர்.

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா