Thursday, July 28, 2011

பெண்கள், அவதூறு , துரோகி , மது- சாரு FAQ ( அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் )

சாரு குறித்தும், வாசகர் சந்திப்பு கொண்டாட்டங்கள் குறித்தும் , சில அவதூறுகள் , அவர் எழுத்துக்கள் குறித்தும் பலர் தெரிந்து கொள்ள விரும்புகின்றனர்..

ஒரு விஷயம் புரிகிறது.. சாரு எழுத ஆரம்பித்த காலத்தில் இருந்த வாசகர்களை விட இன்றைய இளம் தலைமுறையினர்தாம் சாரு மேல் ஆர்வமாக இருக்கின்றனர்.. அவர்கள் மனதில் இருக்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பது என் கடமை....
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளை பார்க்கலாம்

***********************************************************

1 எழுத்தை ரசிப்பதோடு மட்டும் அல்லாமல் எழுத்தாளனை பற்றி ஏன் எழுதுகிறீர்கள்?

               வேறு எந்த எழுத்தாளனும் சந்திக்காத அவதூறுகளை அவர் சந்திக்கிறார். இந்த நிலையில் அவை உள் நோக்கம் கொண்டவை என்று நிரூபிக்கும் கட்டாயத்துக்கு நாங்கள் தள்ளப்படுகிறோம். மற்றபடி, அவர் எழுதிய நாவல்கள் பற்றி பேசத்தான் என்னை போன்றவர்களுக்கு விருப்பம்..

இன்னொன்று.. சிறப்பான எழுத்தாளன் , சிறந்த மனிதனாகவும் இருப்பது அபூர்வம்.. ஒரு கவிஞனின் கவிதையை வாசித்து , நேசித்து வந்தவன் நான்... இன்னும் நேசிக்கிறேன்.. ஆனால் அந்த கவிஞன் செய்த திரை மறைவு வேலைகளை அறிந்த போது அதிர்ச்சியில் நிலை குலைந்தேன்..

இந்த நிலையில், சிறந்த எழுத்தாளரான சாரு, சிறந்த மனிதனாகவும் இருப்பதை பார்க்கும்போது, இந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியவில்லை.. அவரைப்பற்றி எழுதியது போது என்று நினைத்தாலும், நிறுத்த முடியவில்லை

2 ஒரு நிகழ்ச்சியில், ஒரு பெண் சாருவிடம் பேப்பர் இல்லாமல் கை எழுத்து கேட்டதை பற்றி எழுதி இருந்தீர்கள். அவர் அப்படி பட்ட பெண்களை மட்டும்தான் விரும்புகிறாரா?

   சில பெண்கள் அவரை எந்த அளவுக்கு நேசிக்கிறார்கள் என்பதை சுட்டி காட்டவே அதை சொன்னேன்.. அவருக்கு பல தரப்பட்ட வாசகர்கள் இருக்கின்றனர்.. அவரை தன் தந்தை போல நேசிக்கும் பெண்களும் உண்டு... ஒரு சகோதரனாக நேசிக்கும் பெண்களும் உண்டு..   இலக்கியவாதியாக , ஆசிரியராக , தோழனாக நினைக்கும் பெண்களும் உண்டு..

அவருடன் எப்படி பேசுகிறார்களோ அதற்கேற்ப அவர் ரியாக்ட் செய்வார்..

அவரது ஒரு புத்தகம் தன்னை தற்கொலையில் இருந்து காத்ததாக சொல்லி, ஒரு பெண் அவர் புகைப்படத்தை , புனித சின்னமாக போற்றி , பாதுகாத்து வைத்து இருப்பதை நான் ஒரு முறை பார்த்தேன்... ஆனால் இதை எழுதினால் , அதீதமாக இருப்பதாக தோன்றும்.. எனவேதான் , இது போன்றவற்றை எழுதுவதில்லை... ஒவ்வொருவரும் ஒரு விதம்..

3 சமீப காலமாக அவர் மீது எழுப்பப்பட்டு வரும் குற்றச்சாட்டுகள் குறித்து ?

    குறித்து வைத்து கொள்ளுங்கள்.. இன்னும் ஓர் ஆண்டுக்குள் ஒரு பதிப்பகம் சார்பில், ஓர் ஆன்மீக வாதியின் வாழ்க்கை வரலாறு வெளி வர இருக்கிறது... அந்த நிலையில், உங்களுக்கே இந்த குற்றச்சாட்டுகளின் நோக்கம் புரிந்து விடும்...



4 தன் கருத்துக்களை ஏன் அடிக்கடி மாற்றிக்கொள்கிறார்?

     போன வருடம் இளமையாக காட்டினாய்..

இப்போது ஏன் என்னை முதுமையாக காட்டுகிறாய் என ஒரு கண்ணாடியிடம் கோபித்து கொள்ள இயலுமா.? என்ன இருக்கிறதோ 
அதை அது காட்டுகிறது...  நேற்று காட்டியதையே இன்றும் காட்டு என்று சொன்னால் எப்படி?
ஓர் அரசியல்வாதி ஒரு கொள்கையை முன் வைத்து விட்டால் , சாகும் வரை அதை மட்டும்தான் பேசுவான்..
மாற்றி பேசினால் அவன் தோல்வியாக கருதப்படும்,. காலப்போக்கில் அந்த கொள்கைகளை அவன் நம்பாமல் கூட போகலாம்.. ஆனால் விடாப்பிடியாக அதை  சொல்லித்தான் ஆக வேண்டும்..
அனால் ஓர் எழுத்தாளன, அன்றன்றைய நிலையி நேர்மையாக பிரதி பலிக்க வேண்டுமே தவிர, நேற்று சொன்னதையையே இன்றும் சி டி பிளேயர் போல ஒலி பரப்ப கூடாது...
நாளைக்கே, அந்தபதிப்பக துரோகி மனம் திருந்தினால், அவரை பாராட்டும் முதல் நபர் சாருவாகத்தான் இருப்பார்..
இன்று திட்டியதற்காக, நாளையும் திட்ட மாட்டார்...

குடிப்பதைத்தானே அவர் சமூகத்துக்கு சொல்லி தருகிறார்?
    அவர் குடிப்பதை மட்டும்தான் வெளியே சொல்கிறார்... அதைத்தவிர ஆயிரம் விஷயங்களை அவர் செய்கிறார்,,, கடுமையாக உழைக்கிறார்... ஏராளமாக  படிக்கிறார்...  ...  குடிப்பது என்பதெல்லாம் சும்மா ஜாலிக்காக , ஒரு கொண்டாட்ட மன நிலையில் செய்வது...  நெடுங்காலம் குடிப்பதை நிறுத்தி இருந்த அவர், நண்பர்களின் அன்புக்காக இந்த சந்திப்பில்தான் மது அருந்தினார்...  தானும் ஜாலியாக இருந்து மற்றவர்களையும் ஜாலியாக வைத்து இருந்தார்..  அதே நேரத்தில், மாணவர்களும் , இதுவரை குடிக்கதவர்களும் தம்முடன் சேர்ந்து குடிக்க வேண்டாம்  என அறிவுறுத்தினார்...

அவரிடம் கற்று கொள்ள ஆயிரம் விஷயங்கள் இருக்கின்றன... நம் மனம் எதற்கு ஆசைப்படுகிறதோ அது மட்டுமே நம் கண்ணுக்கு படும்
அந்த வாசகர் சந்திப்பை ஒரு பார்வையளானாக கவனித்தால், எப்படி ஒரு சிறந்த, கிரியேட்டிவான, ஆற்றல் மிகுந்த ஒரு வாசகர் கூட்டத்தை  அவர் உருவாக்கி வைத்து இருக்கிறார் என்பது புரியும்.


அவர் ஏன் வாசகர்களிடம் கடுமையாக நடந்து கொள்கிறார்?
ஒவ்வொரு மனிதனிடமும், ஒரு தந்தை- ஒரு இளைஞன்- ஒரு குழந்தை உண்டு.. பொதுவாக ஒரு எழுத்தாளன் தன வாசக்ரகளுடன் உரையாடும்போது, அந்த எழுத்தாளனுக்கு உள்ளே இருக்கும் தந்தை, வாசகனிடம் இருக்கும் குழ்னதையுடம் உரையாடும்..  அதாவது அந்த எழுத்தாளன், அந்த வாசகனை ஒரு குழந்தை போல நினைத்து பேசுவான்...
ஆனால் சாருவுடன் உரையாடும்போது, கேள்வி கேட்கும் போது, அவருள் இருக்கும் இளைஞன் , வாசகனிடம் இருக்கும் இளைஞனிடம் உரையாடுவது போல இருக்கும்.. அதாவது தனக்கு இணையாவனாக நினைத்து வாசகனிடம் பேசுவார்... எனவேதான் கடுமையாக இருப்பதை போல தோன்றுகிறது...
மற்றபடி அவரைப்போல அன்பு மிகுந்தவர் , யாரும் இல்லை..
ஒரு சின்ன உதாரணம் இந்த வாசகர் சந்திப்பில், ஒரு தீர்மானம் முன் வைக்கப்பட்டது..அது நல்ல தீர்மானம்தான்... ஆனால் சாரு திடீரென எழுந்து அதை கடுமையாக எதிர்த்தார்...அதற்கு அவர் சொன்ன காரணம், அந்த தீர்மானம், அங்கு  வந்து இருந்த ஒரு கல்லூரி மாணவனுக்கு ஏற்புடையதாக இருக்காது என்பதுதான்... அவர் எதிர்ப்பை பார்த்து எனக்கு ஆச்சர்யமாக இருந்தது...   தன் குழைந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும் நிலையில், தாய் பறவை அவற்றை பாது காக்க வீரம் காட்டுமே... அது என் நினைவுக்கு வந்தது...
கொஞ்சம் கூட ஈகோ இல்லாமல் பழகியது, மிமிக்ரி செய்து, நடித்து காட்டி , அந்த நிகழ்வு முழுதும் கொண்டாட்ட மன நிலையில் வைத்து இருந்தது, என எத்தனையோ இருந்தாலும், முதல் முறை பார்த்த அந்த சகோதரன் மேல் அவர் காட்டிய அன்பு, நெருக்கம், என்றும் மறக்க முடியாதது..

Monday, July 25, 2011

இளம்பெண்ணும்& துரோகியும்- சாரு சந்திப்பில் நான் கவனித்தவை

   சாரு நிவேதிவாவை ஒருவர் வெறுக்கலாம், தூற்றலாம், போற்றலாம், நேசிக்கலாம்.. ஆனால் அவரை புறக்கணிக்க முடியாது.. ஒரு புறம் பார்த்தால் , தம் தாய் தந்தையர் , மனைவியை விட அவரை நேசிக்கும் வாசகர்கள் ...
இன்னொரு புறம் பார்த்தால் , அவர் மீது பழி சுமத்துவதையே முழு வேலையாக செய்யும் இலக்கிய வாதிகள்... இப்படி இரு எக்ஸ்ட்ரீம்களுக்கிடையே வாழ்பவர்  அவர்..

ங்கே எனது நேரடி அனுபவங்கள் இரண்டை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்..

1 ஒரு புத்தக வெளியீட்டு விழா. சினிமா விழா போல பயங்கர கூட்டம்.. அவரிடம் கை எழுத்து வாங்க பலர் ஆர்வமாக போட்டி போட்டு கொண்டு இருந்தனர்,,, அவரது புத்தகத்தில் கை எழுத்து போட்டு தந்து கொண்டு இருந்தார். கூட்டம் சற்று தணிந்த நிலையில், ஓர் அழகு சிலை அவரிடம் சென்று கை எழுத்து கேட்டாள்..  அவள் கையில் பேப்பரோ, புத்தகமோ இல்லை... மறந்து விட்டு விட்டார் போல.. சாருவிடம் நன்றாக திட்டு வாங்க போகிறார் என பயத்துடன் கவனித்தேன்.. ஆனால் சாரு சற்று அமைதியாக , புத்தகமோ , நோட்டோ எடுத்து வாருங்கள் ...கை எழுத்து போடுகிறேன் என்றார்..
அதற்கு அந்த பெண் , எனக்கு புத்தகத்தில் கை எழுத்து வேண்டாம், என்று சொன்னார்.. வேறு எங்கு கை எழுத்து வேண்டும் என்றும் சொன்னார்... பார்த்து கொண்டிருந்த எனக்கு , சாரு மீது கடும் பொறாமை ஏற்பட்டது...  அந்த பெண் எங்கு கை எழுத்து கேட்டார் என இப்போது சொல்ல விரும்பவில்லை... இன்னொரு சந்தர்ப்பத்தில் சொல்கிறேன்..  ( இதை நான் பார்த்து கொண்டு இருந்தேன் என்பது சாருவுக்கு தெரியாது )

2 . அதே புத்தகம் தொடர்பாக இன்னொரு சம்பவத்தை சொல்ல வேண்டும்.. சாரு எழுதிய புத்தகங்களில் மட்டும் அல்ல,,,  தமிழில் எழுதப்பட்ட புத்தகங்களில் சிறந்த புத்தகம் அந்த புத்தகம் என்பது சிலர் கருத்து...அப்படி நினைக்கும் சில நண்பர்கள் என்னை அணுகி, குறிப்பிட்ட அளவு புத்தகங்களை மொத்தமாக வாங்கி , சலுகை விலையில் உங்கள் வலைப்பூ நண்பர்களுக்கு அளியுங்கள்...  நாங்கள் ஸ்பான்சர் செய்கிறோம்....   நீங்கள் ஆர்கனைஸ் செய்யுங்கள் என்றனர்..  உற்சாகமடைந்த நான் சம்பந்தப்பட்ட பதிப்பகத்தை தொடர்பு கொண்டு அவர்கள் சார்பில் சில உதவிகள் கேட்டேன்..அவர்கள் அரசாங்க அலுவலக பாணியில் மேம்போக்காக பதில் அளித்தனர்..  சரி, அவர்கள் உதவி செய்ய மாட்டர்கள் என உணர்ந்து புத்தகங்களை மொத்தமாக வாங்கி நாமே ஆர்கனைஸ் செய்யலாம் என முடிவு செய்தேன்...

அவர்களை தொடர்பு கொண்டு , குறிப்பிட்ட அளவு புத்தகங்கள் கேட்டபோது, பைண்டிங் செய்யவில்லை.. மை காயவில்லை , பின் அடிக்கவில்லை என்பது போல சில காரணங்கள் சொல்லி ஸ்டாக் இல்லை என்று சொல்லி விட்டனர்... அதற்குள் அந்த நண்பர்களும் என் தொட்ர்பு எல்லைக்கு வெளியே சென்று விட்டதால், அந்த முயற்சி அந்த அளவில் தோல்வியில் முடிந்தது...

தனக்கு லாபம் தரும் ஒரு விஷ்யத்தை அந்த பதிப்பகம் ஏன் ஊக்குவிக்கவில்லை என்பது எனக்கு அப்போது புரியவில்லை.. பிறகு நடந்த சம்பவங்கள் மூலம், தனக்கு லாபம் வராவிட்டாலும் பரவாயில்லை ..சாரு நஷ்டம் அடைய வேண்டும் என்பதுதான் அந்த பதிப்பகத்தின் நோக்கம் என புரிந்தது... மக்களை போல்வர் கயவர் என்ற திருக்குறளுக்கு அர்த்தம் புரிந்தது... துரோகிகள் முகத்தில் துரோகிகள் என எழுதி இருக்காது... அவர்களும் நண்பர்கள் போலவே காட்சி அளிப்பார்கள் என்பதை தெரிந்து கொண்டேன்..

இந்த அளவுக்கு வன்மம் ஏன் என்பதும் புரியவில்லை.. முதல் சம்பவத்த்தில், அந்த பெண் ஏன் அந்த அளவுக்கு சாரு மீது ஈடுபாடு கொண்டிருக்கிறார் என்பதும் புரியவில்லை...

ஆனால் இந்த இரு தரப்புக்க்கும் மத்தியில்தான் சாரு  இயங்கி வருகிறார் என்பது மட்டும் புரிந்தது...


ந்த நிலையில் சாருவுடன் நேரடியாக உரையாட வாய்ப்பாக ஒரு  நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது... பொது நிகழ்ச்சியாக இல்லாமல் , குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டு நடந்த நிகழ்ச்சி அது..  ஜிப்பா, ஜோல்னா பையுடன் சிலரை சந்திக்கப்போகிறோம் என்ற எதிர்பார்ப்பில் வந்து இருந்த புதியவர்கள் , இனப அதிர்ச்சியில் திகைத்தனர்..  இலக்கிய கூட்டம் போன்று அல்லாது, நண்பர்கள் சந்திப்பு போல இருந்த்து...



சில கேள்விகள் கேட்க வேண்டும் என்று தேகம், ராசலீலா , காமரூப கதைகள் என படித்து, நோட்ஸ் எடுத்து , பக்கா ஹோம் வொர்க்குடன் நான் சென்று இருந்தேன். ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கும்போது அதை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது என் கருத்து..

ஆனால்  நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்து இருந்தவர்களை சும்மா கவனித்து கொண்டு இருந்தாலே போதும். பல விஷ்யங்களை கற்று கொள்ளலாம் என என் பேச்சை தவிர்த்து விட்டு, பார்வையாளனான அனைவரையும் கவனித்தேன்...

பல துறையில் பணி புரிபவர்கள்.. அவரவர் துறையில் கில்லாடிகள், .. இலக்கியத்தில் இந்த அளவுக்கு ஆர்வமாக இருப்பது , நாம் தமிழ் நாட்டில்தான் இருக்கிறோமா என்ற ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

இந்த நிகழ்ச்சிக்காக ஒரு நண்பர் பெங்களூரில் இருந்து வந்தார்.. அடுத்த நாள் பெங்களூரில் அவசர வேலை என்ப்தால் , 15 நிமிடத்தில் கிளம்பி விட்டார்...

அந்த 15 நிமிடத்துக்காக, பெங்களூரில் இருந்து சென்னை வந்து இருந்தார்.. கிரேட்...

இன்னொரு இளைஞர் , முதல் முறையாக சாருவை பார்க்க வந்து இருந்தார்... ஓர் எழுத்தாளரை நாம் சந்திக்கப்போகிறோம் என்பதையே அவரால் நம்ப முடியவில்லை.. ஒரு வித பரவசத்துடன் காத்து இருந்தார்...

ஆனால் சாருவை சந்த்தித்து பேச ஆரம்பித்ததும், ஒரு தந்தையின் வாஞ்சையுடன் , அக்கறையுடன் அவர்  நடந்து கொள்வதை பார்த்து நெகிழ்ந்து விட்டார்...

அறிவு பூர்வமான விஷ்யத்தை கேட்டு கொண்டு இருப்பதே பெரிய போதை..இதில் மது தரும் போதை தேவை இல்லை என்ப்தால் , நான் மதுவை தொடவில்லை..( சிக்கன், மட்டன், ஐஸ் கிரீம், பிரியாணி என புகுந்து விளையாடியது வேறு விஷயம் )
 சிலர் போதைக்கு , போதை ஏற்றினால்தான் நல்லது என்ற அடிப்படையில், மது வரவழைத்து இருந்தனர்...

மது அருந்துபவர்கள் மது அருந்தாதவர்களை வேற்று கிரக வாசிகள் போல பார்ப்பது இயல்பு..ஆனால் குடிகாரர் என சிலரால் கருதப்படும் சாரு ” இங்கு மாணவர்கள் யாரும் இருந்தால், தயவு செய்து மது அருந்த வேண்டாம்.. அதற்கு என காலம் வரும்போது அருந்துங்கள்..இப்போது வேண்டாம் “ என்றார்...

சமூகத்தின் மீது, தனி மனிதன் மீது பேரன்பும், அக்கறையும் கொண்ட அவரை சிலர் தவறாக புரிந்து கொண்டிருப்பதை  நினைத்துக்கொண்டேன்..

மது அருந்துவது பெரும் பாவம் என்பவர்கள் ஒரு புறம்... மது அருந்தாதவர்கள் வாழ தகுதியவற்றவர்கள் என நினைப்பவர்கள் ஒரு புறம்..இவர்களுக்கு மத்தியில், இதை சரியான முறையில் அணுகும் சாரு ஒரு ஞானியைப்போல ( விமர்சகர் ஞானி அல்ல ) என் கண்ணுக்கு தெரிந்தார் ..

இந்த சந்திப்பில் சாரு பகிர்ந்து கொண்ட விஷ்யங்களை வைத்து , குறைந்தது 10 கட்டுரைகள் எழுதலாம்..
அரசியல், ஆன்மீகம், இலக்கியம் , இசை, சினிமா , உணவு, ஆரோக்கியம் என effortless ஆக அவர் பேசிய்தற்கு ஈடு கொடுத்து , வாசகர்களும் பேசியதை பார்த்தால், ஓர் ஆரோக்கியமான தலைமுறையை அவர் உருவாக்கி வைத்து இருப்பது புரிந்தது...
சில துரோகிகளின் கவிதை உட்பட அனைத்தையும் வாசிக்க கூடியவர்கள் இவர்கள் ....

சாரு பேசும்போது, டீ காப்பிக்கு பதிலாக , அவர் அருந்தும் ஓர் பானத்தை பற்றி அவர் சொன்ன ரகசியத்தை நைசாக நோட் செய்து கொண்டு விட்டேன்... அதை நானும் பின்பற்ற இருக்கிறேன்.. அதைப்பற்றி அவரே சொன்னால்தான் நன்றாக இருக்கும் என்பதால், அந்த ரகசிய பானத்தை பற்றிய தகவலை இப்போதைக்கு பகிர்ந்து கொள்ள முடியாது...

அதேபோல தெய்வ திருமகள் திரைப்படத்தை இன்னொரு படத்துடன் ஒப்பிட்டு பேசியதையும் மிகவும் ரசித்தேன்... ஆனால் இதையும் , அவர் எழுதினால்தான் நன்றாக இருப்பதால், என் கைகள் கட்டப்பட்டு விட்டன...

அவர் சொன்ன சிகரட் கதை, தன்னையே  பொறாமைப்பட வைத்த தமிழ் எழுத்தாளர் என அவர் பகிர்ந்து கொண்ட சுவையான பலவற்றை  அடுத்த பதிவுகளில் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்..

இப்போதைக்கு அவரது ஆன்மீக பார்வையை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்.. சாருவை ஆன்மீகவாதி என்று சொன்னால் , சாருவின் தீவிர வாசகர்கள் சிலரே கூட என்னை இளக்காரமாக பார்ப்பார்கள்.. ஆனால் உண்மையான ஆன்மீகம் என்பது வெளி வேஷம் சார்ந்தது இல்லை... மனம் சம்பந்தப்பட்டது...  சாருவுக்கு மதம் எதுவும் இல்லை .. ஆனால் அவர் ஆன்மீக வாதி என்பது என் கருத்து..

இமயமலைப்பகுதிகளில் அவ்வளவு உய்ரத்தில் வாகனம் செலுத்தும் டிரைவர்கள் , தம் திறமையை மட்டும் நம்புவதில்லை... தன் முன் வைக்கப்பட்டு இருக்கும் சிறிய கடவுள் படத்தின் மீது வைத்து இருக்கும் ஆழ்ந்த  நம்பிக்கைதான் வாகனம் பத்திரமாக செல்ல உதவுகிறது என்று அவர் சொன்னது சிந்திக்க வைத்தது...

சாருவை நீண்ட நாட்களாக கவனித்து வருபவர்களுக்கு தெரியும்.. அவர் மனதளவில் இஸ்லாமியராக வாழ்பவர்..  இந்த சந்திப்பில், குர் ஆன் ஓதுவதன் சிறப்பை அவர் விளக்கியது அற்புதமாக இருந்தது..

 நேரில் இனிமையாக பழக கூடிய சாரு, சில சமயம் வாசகர்களுக்கு எதிராக கடுமையாக எதிர் வினை ஆற்றுவது ஏன் என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில், அவர் மேன்மையை உணர்த்துவதாக இருந்தது...

“ என்னிடம் ஒருவர் கேள்வி கேட்டால், அவரை எனக்கு இணையானவராக மதிப்பது என் வழக்கம்...  சிறியவராயிற்றே , என மென்மையாக, போலியாக  பதில் சொல்ல விரும்புவதில்லை...  நேர்மையாக பதில் சொல்வது சில சமயம் கடுமையாக இருப்பது போல தோன்றுகிறது..” என்றார்..

ஒரு சான்றோனை சந்தித்த மகிழ்ச்சியடனும்,   நேரம் போதவில்லையே என்ற் வருத்தத்துடனும் சந்திப்பு முடிந்தது....

There was not a single dull moment...

 நல்லோரை காண்பதும் நன்றே.. நல்லோர் சொல் கேட்டலும் நன்றே 

Saturday, July 23, 2011

உலகை படைத்தது கடவுளா? அறிவியலா?- 1

மனிதனுக்கும் ஏனைய உயிரிகளுக்கும் இருக்கும் முக்கிய வித்தியாசம், நாம் ஏன் இங்கு இருக்கிறோம் என யோசிக்கும் தன்மைதான்..
உலகின் , பிரப்ஞசத்தின் வயதோடு ஒப்பிடும்போது , நாம் வாழும் ஆண்டுகள் துகளினும் சிறிது. இருந்தாலும் இந்த பிரபஞ்சத்தை புரிந்து கொள்ளும் முயற்சி தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

அறிவியலை பொருத்தவரை முன்பு இருந்த நிலை இன்று இல்லை.. ஆப்பிள் விழுந்ததை பார்த்து , புவி ஈர்ப்பு விசையை கண்டு பிடித்த நிலை இன்று கிடையாது... அன்றாட வாழ்வில் காணும் சம்பவங்களை வைத்து அறிவியல் உண்மைகளை காண முடியாத நிலை இன்று.. லாஜிக் , பகுத்தறிவு , நடை முறை உண்மை என யதார்த்த உண்மைகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் அறிவியல் சென்று கொண்டு இருக்கிறது..

ஓர் உதாரணம் பார்க்கலாம்..

ஆஸ்திரிய விஞ்ஞானிகள் ஒரு ஆய்வு நடத்தினர்..

கார்பன் மூலக்கூறுகளை இரண்டு குறுகலான பாதை வழியாக செலுத்தி அதன் விளைவுகள் என்ன என பார்ப்பது இந்த ஆய்வு..

இந்த ஆய்வை சற்று எளிமைப்படுத்தி பார்ப்போம்..

ஒரு சுவற்றில் இரு உடைப்புகள் இருப்பதாக கொள்வோம்....

இரண்டின் வழியாகவும், ஃபுட் பால்கள் தொடர்ச்சியாக  உதைக்கப்படுகின்றன..அதில் ஒரு உடைப்பு சற்று மூடப்பட்டு இருந்தால் என்ன ஆகும்? கரெக்ட்...

பிளவு இருக்கும் பகுதியில் மட்டும் அடுத்தடுத்து பந்துகள் பாய்ந்து செல்லும்...

சிறிது நேரம் கழித்து மூடப்பட்டு இருந்த பகுதியும் திறக்கப்பட்டால் என்ன ஆகும்?

இரண்டின் வழியாகவும் பந்துகள் பாய்ந்து செல்லும்...

இந்த அடிப்ப்டையில் அந்த ஆஸ்திரிய விஞ்ஞானிகள் கார்பம் மூலக்கூறுகளை வைத்து ஆய்ந்தனர். ஒரு பிளவில் மட்டும் அந்த மூலக்கூறுகள் அடுத்தடுத்து பாய்ந்து சென்றன.. அதன் அளவு பதிவு செய்யப்பட்டது.
பிறகு, இன்னொரு பிளவும் திறக்கப்பட்டு அதன் வழியாகவும் மூலக்கூறுகள் செலுத்தப்பட்டன..
ஆனால் அப்போது ஏற்பட்ட விளைவு, ஃபுட் பால் விளைவு போல இல்லை...
இரண்டாவது பிளவின் வழியாக செலுதப்பட்ட ஆரம்பித்த உடன், முதல் பிளவின் வழியாக செல்லும் மூலக்கூறுகளின் அளவில் மாறுதல் தென்பட்டது...

இதற்கான அறிவியல் விளக்க்த்தை பிறகு பார்க்கலாம்..  நடை முறை அறிவை வைத்து , அறிவியலை அணுக முடியாது ..அந்த காலம் முடிந்து விட்டது என்பதை மட்டும் இப்போதைக்கு புரிந்து கொண்டால் போதும்..

இதே போல பல வினோதங்கள் இருக்கின்றன.. தண்ணீரை கொதிக்க வைக்கிறோம்... அப்போது அதன் வெப்ப நிலையை சோதிது பார்த்தால் 100 டிகிரி செல்சியசாக இருக்கும்.. சோதித்து பார்க்காவிட்டாலும் 100 டிகிரி இருக்கும் . ஓ கே?
ஆனால் சில நுட்பமான ஆய்வுகளை செய்யும் போது, நாம் சோதிக்க ஆரம்பித்தால், அதுவே அந்த்ய பொருளின் தனமையை மாற்றி விடும். இந்த் காரணத்தால் , எலக்ட்ரானின் வேகத்தையும் , அதன் இருப்பையும் ஒரு சேர நம்மால் துல்லியமாக கணக்கிட முடியாது.

இது போல பல வினோதங்கள் இருப்பதால், பிரபஞ்சம் எப்படி தோன்றியது என்பதறு அறிவியல் தரும் விடை , சாதாரண அறிவியல் நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது..

அறிவியல் என்பது சிறப்பனதுதான்.,.. ஆனால் அது முழு உண்மை என சொல்ல முடியாது என்று அடுத்த குண்டை தூக்கி போடுகிறது நவீன அறிவியல்.. எப்படி?

மீன் தொட்டியில் மீன் வளர்க்கிறீர்கள்.. அவற்றுக்கு சிந்திக்கும் திறமை வந்து அறிவியலை உருவாக்கினால் எப்படி இருக்கும்... ? உலகம் என்பது கண்ணாடி தொட்டி .. அதில் தேவையான உணவு கிடைக்கும்... அந்த இடத்தை விட்டு போவது இயலாத ஒன்று எனப்து போல அவற்றின் கண்டு பிடிப்பு இருக்கும்..

கண்ணாடி தொட்டி என்ற மாடலில் , அவற்றின் கண்டு பிடிப்பின் உண்மைதான்.. அந்த உண்மையை கண்ணாடி தொட்டிக்குள் அவற்றால் நிரூபிக்க முடியும்... ஆனால் நம் பார்வையில், அந்த மீன்களின் கண்டுபிடிப்பு முழு உண்மை அல்ல..

அதே போல , நமது கண்டு பிடிப்புகளும் , முழு உண்மை என சொல்ல முடியாது. நமக்கு கிடைத்த மாடலில், நம் கண்டு பிடிப்புகளை நிரூபிக்க முடிந்தால், இந்த மாடலுக்கான உண்மை என்று மட்டுமே சொல்லிக்கொள்ள முடியும்..


இந்த அடிப்படையில், பிரபஞ்ச தோற்றத்தை ஆய்ந்து வருகிறார்கள்.. ஒன்றும் இல்லாத நிலையில் இருந்துதான், இந்த பிரபஞ்சம் தோன்றி இருக்க முடியும் என்ற முடிவுக்கு வந்து இருக்கிறார்கள். இதற்கு கடவுள் தேவை இல்லை.. அறிவியல் விதிகளே போதும் என்பது அவர்கள் கருத்து..

ஒரு வேளை கடவுள்தான் , பிரபஞ்சத்தை ஆரம்பித்து வைத்தார் என்று வைத்து கொண்டாலும், அதற்கு பின் நடப்பது அவர் கட்டுப்பாட்டில் இல்லை.,.. இயர்பியல் விதிகளின் படி அடுத்தடுத்து , நிகழ்ச்சிகள் நடக்கும்.. கடவுளுக்கு இதில் வேலை இல்லை என்கிறார்கள்..

அதாவது, சீட்டு கட்டில், பாலம் கட்டி விளையாடுகிறீர்கள்.. விளையாட்டாக முதல் சீட்டை தட்டி விட்டால், அடுத்தடுதுது எல்லா சீட்டுகளும் விழ ஆரம்பிக்கும்..  சைக்கிள் ஸ்டாண்டில் சைக்கிள்கள் விழுவது இப்படித்தான்..

  இது சரியா ?

தமிழ் எழுத்துக்கள் எல்லாவற்றியும் தனி தனி துண்டு சீட்டில் எழுதி , ஒரு பானையில் போட்டு விட்டு, குத்து மதிப்பாக சில எழுத்துக்களை எடுத்து, ஒரு நோட்டு புத்தகத்தில் ஒட்டி வைக்குமாறு ஒரு குழந்தையிடம் சொல்லி விட்டு சென்று விடுகிறோம் என வைத்து கொள்ளுங்கள்..

சிறிது நேரம் கழித்து வந்து பார்க்கிறோம்.. அப்படி ஒட்டப்பட்ட எழுத்துக்கள் , திருக்குறள் விளக்க கட்டுரையாக இருந்தால் எப்படி இருக்கும்? சும்மா மனம்போன போக்கில் ஒட்டப்பட்ட எழுத்துக்கள் , ஒரு ஒழுங்கான கட்டுரையாக அமைய சாத்தியம் இருக்கிறதா?

ஆனால் கிட்டத்தட்ட இது  போன்ற பார்வையைத்தான் அறிவியல் முன் வைக்கிறது.. கடவுள் என்று யாரும் இல்லை..  அணுக்கள், எலக்ட்ரான்கள் போன்ரவை இணைவதன் தற்செயல் விளைவே பிரபஞ்சம் என்கிறாரகள்..
இப்போது நாம் காணும் கலைகள், திறமைகள், அன்பின் உருவமாக வாழும் மனிதர்கள், மகான்கள் எல்லாம் வெறும் தற்செயல்தான் என்பது சிலரால் ஏற்க முடியாத ஒன்றாக இருக்கிறது.. கடவுள் என ஒருவர் , அல்லது இறையாற்றல் ஒன்று இருந்தால்தான் இது சாத்தியம் என்கிறார்கள் இவர்கள்..

வரிசையாக நிர்கும் சைக்கிள் உதாரணத்தையே எடுத்து கொள்வோம்...  ஒரு சைக்கிள் விழுந்ததும், அடுத்தடுத்து சைக்கிள் விழுந்தால் அது சாதாரன நிக்ழ்ச்சி... ஆனால் அப்ப்டி விழும் போது எழும் ஓசை, ஏ அர் ரகுமான் இசையை உருவாக்கினால் , அது ஓர் அற்புதம் அல்லவா,, பிரபஞ்சம் என்பது அப்படிப்பட்ட விளக்க முடியாத அற்புத என்கிறார்கள் சிலர்...

 இதைப்பற்றி விரிவாக அடுத்த பகுதியில் அலசலாம்... 

Sunday, July 17, 2011

இலக்கியவாதி ஆகிறார் நித்யானந்தர்- சாருவுக்கு எதிராக வினோத கூட்டணி

ஒரு வழியாக பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது..

கடந்த சில நாட்களாக மாபெரும் சதித்திட்டத்துடன் எழுத்தாளர் சாருவுக்கு எதிராக சிலர் வேலை செய்து வந்தனர்.. இதற்கு தலைமை ஏற்று ஓர் அறிவு ஜீவி செயல்பட்டு வந்தார்.. 


இந்த நிலையில் சாமியார் நித்யானந்தர் , சாருவின் சில கதைகளை படித்து விட்டு , அதில் வரும் சம்பவங்களை தொகுத்து , அவதூறு பிரச்சாரம் ஒன்றை ஆரம்பிக்க முயன்று இருக்கிறார். நித்யானந்தாவுக்கு எதிராக செயல்பட்டு வரும் பெரிய சக்திகளை விட்டு , ஓர் எழுத்தாளர் மேல் பாய்வது ஏன் என்பதே சந்தேகத்துக்கு உரிய ஒன்று..
ஆனால் ஓர் அறிவு ஜீவி , சம்மன் இல்லாமல் ஆஜர் ஆவது போல இதில் ஆஜராகி தன் துவேஷத்தை காட்டி இருக்கிறார்..

நித்யானந்த வெளியிட்ட அவதூறு உண்மையா பொய்யா என்பதை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டாமல், அவர் சொல்வது உண்மை போலவும், சாமியார் ஒருவர் இது போன்ற உண்மைகளை வெளியே சொல்லக்கூடாது என்பது போலவும் எழுதி இருக்கிறார்...

படிப்பும் , திறமையும் இருந்தால் மட்டும் போதாது.. நல்ல உள்ளமும் வேண்டும் ..

ஒரே ஒரு வேண்டுகோள்... இனி மேல் அவதூறு கிளப்ப நினைப்பவர்களுக்கு , சாருவின் எழுத்துக்களில் இருந்தே ஐடியா எடுத்து கொடுக்காமல் , புதிதாக எழுதி கொடுக்கவும்...

********************************

படித்தவன் சூதும், வாதும் செய்தால் போவான் போவான் .ஐயோ வென போவான் - பாரதியார் 





Friday, July 15, 2011

சலுகை விலையில் சாரு புத்தக திட்டம் -அப்டேட்

சாரு புத்தக திட்டத்துக்கு ஆதரவளிக்கும் அனைவருக்கும் நன்றி. இவ்வளவு வரவேற்பை நான் எதிர்பார்க்கவில்லை . நல்ல புத்தகத்துக்காக ஏங்கும் நல்ல உள்ளங்கள் ஏராளம் இருக்கின்றன என்பதை அறியும் போது மிகுந்த மன நிறைவு ஏற்படுகிறது . முதல் பேட்சில் பணம் செலுத்தியவர்களுக்கு புத்தகம் அனுப்பும் பணி இன்று நிறைவுற்றது. இது முடியாமல் புதிய ஆர்டர் வாங்க கூடாது என நினைத்ததால் பலருக்கு அக்கவுண்ட் எண் தரவில்லை . இப்போது தரப்படுகிறது . புத்தகம் வாங்க விரும்புவர்கள் பணம் செலுத்தி விட்டு தகவல் தெரிவிக்கவும் . செக் செய்து விட்டு முதல் வேலையாக அக்னாலட்ஜ் மெயில் அனுப்பபடும் . சில நிமிடங்களில் புத்தகம் அனுப்பபடும்
இந்த திட்டத்தில் வழங்கப்படும் புத்தகங்கள் அனைவரையும் ஈர்க்க கூடியவை என்பதால் , பல தரப்பினரும் ஆர்வத்துடன் தொடர்பு கொள்வது மகிழ்ச்சி . ஆனால் அனைவருக்கும் ஒரே நேரத்தில் அனுப்ப நினைத்தால் தாமதம் நேரலாம் என்பதால்தான் , இதை தவிர்க்கும் பொருட்டு முதல் கட்டமாக சிலருக்கு மட்டும் வழங்கப்பட்டது . மற்றவர்கள் தவறாக நினைக்கவேண்டாம் . வரும் வாரத்தில் உங்களுக்கு அனுப்பப்படும் . மெயில் அனுப்பி அக்கவுண்ட் எண் பெற்று கொள்ளுங்கள் .

Tuesday, July 12, 2011

சாரு நிவேதிதாவின் புத்தகம் இலவசமாக - அதிரடி சலுகை திட்டம்

சலுகை விலையில் சாரு நிவேதிதா புத்தக திட்டத்திற்கு கிடைத்து இருக்கும் வரவேற்ப்பிற்கு நன்றி.

இந்த சலுகை மேலும் விஸ்தரிப்பதில் பெருமை படுகிறோம்..

ஜே ஜே சில குறிப்புகள் நாவலின் பெரிய ரசிகன் நான்.. வித்தியாசமாக இருக்கிறதே என வியக்க வைத்த நாவல். இந்த நிலையில், சாரு அந்த நாவலை விமர்சித்து வெளிட்ட நூல் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

ஒரு நாவலை என்னை போன்ற பாமரன் அணுகுவதற்கும், சாரு போன்ற மேதைகள் அணுகுவதற்கும் இருக்கும் வித்தியாசம் புரிந்தது.. எண்ணற்ற தகவல்கள், ஆணித்தரமான வாதங்கள் என வியக்க வைத்து இருப்பார்.. அந்த நூல் இப்போது அச்சில் இல்லை.. இலக்கிய ஆர்வலர்கள் அனைவரிடமும் இருக்க வேண்டிய அந்த பொக்கிஷம் , இப்போது இலவசமாக...

ஆம், சாருவின் நேனோ சிறுகதை தொகுப்பு மற்றும் கோணல் பக்கங்கள் - 3 இரண்டையும் சேர்த்து வாங்குபவர்களுக்கு இந்த பொக்கிஷம் இலவசம்...
நேனோ புத்தக விலை ரூ 100 .. இதையும் சலுகை விலையில் பெறலாம்...  70 ரூ மட்டுமே... ( தபால் செலவு உட்பட )

ஆக உங்கள் முன் மூன்று ஆப்ஷன்கள்...

1 கோணல் பக்கங்கள் - 3

          ஒரிஜினல் விலை - ரூ 200   சலுகை விலை - 130

2 நேனோ சிறுகதை தொகுப்பு
      ஒரி ஜினல் விலை    - ரூ 100  சலுகை விலை - 70   

3 ஒட்டு மொத்த பேக்கேஜ் - ரூ 200         ஜேஜே சில குறிப்புகள் விமர்சன நூல் இலவசம்



எப்படி வாங்குவது...


1 எனக்கு மெயில் அனுப்புங்கள்.. axis bank அக்கவுன்ட் எண் வாங்கி கொள்ளுங்கள்.. அதில் பணம் செலுத்தி விட்டு தகவலும் முகவரியும் அனுப்புங்கள்... புத்தகம் வீடு வந்து சேரும்

2 சென்னையில் இருப்பவர்கள், நேரில் வந்து பெற்று கொள்ளுங்கள்..


3 விபிபியிலும் வாங்கலாம் ..ஆனால் கிடைக்க சற்று தாமதம் ஆ கும்
4 . வெளி நாட்டு வாசகர்கள், பணம் செலுத்தி ரிசர்வ செய்து கொள்ளுங்கள். சென்னை வரும்போது நேரில் பெறுங்கள்..அல்லது உங்கள் இந்திய முகவரிக்கு அனுப்பி வைக்கறோம்...

Sunday, July 10, 2011

உலகை உலுக்கிய புத்தகம் _ இப்போது தமிழில்உலகை உலுக்கிய புத்தகம் _ இப்போது தமிழில்

நன்றி மறப்பது நன்றன்று என வள்ளுவர் சொன்னார் . ஆனால் சொந்த வாழ்க்கை , பொது வாழ்க்கை , சமூகம் என எங்குமே இதை , நன்றியை, பார்க்க முடிவதில்லை .
இந்தியாவில் ஜனநாயகம் இனி இல்லை என்ற நிலை எமர்ஜென்ஸி காலத்தில் உருவானது. அப்போது அரசுடன் போரிட்டு , ஜனநாயகத்தை மீட்டவர் ஜெயபிரகாஷ் நாராயணன் . இன்று எத்தனைபேருக்கு அவரை தெரியும் ?
ஈழ போரின் உன்னத வீரன் உமா மகேஸ்வரனை எத்தனை பேர் நினைவு வைத்திருக்கிறார்கள் ?
அதே போல , உலகை பாசிச சக்திகளிடம் இருந்து காப்பாற்ற வித்திட்ட ரஷ்ய புரட்சியை எத்தனை பேர் அறிவார்கள் ?

கொடுங்கோலன் ஜார் மன்னனை வென்று புரட்சியாளர்கள் ஆட்சியை கைப்பற்றினர் என்ற அளவுக்கு சிலருக்கு தெரிந்து இருக்கும்.. ஆனால் அன்று அவர்களுக்கு ஜார் மன்னர்களை தவிர பல்வேறு  எதிர்ப்புக்ள் இருந்தன.. அவற்றை மீறித்தான் அங்கு கம்யூனிச ஆட்சி வந்தது என்பது பரவலாக அறியப்படாத ஒன்று..

வரலாற்றின் அந்த முக்கியமான கணத்தை படம் பிடிக்கும் புத்தகம்தான் உலகை உலுக்கிய பத்து நாட்கள்... இதை எழுதியவர் ஒரு ரஷ்யர் அல்லர்... ஜான் ரீடு என்ற அமெரிக்கர்... அமெரிக்கராக இருந்தாலும் ரஷ்யாவை நேசித்தவர் . அவரை கவுரவிக்கும் பொருட்டு, அவர் மறைந்ததும் , செஞ்சதுக்கத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.( கிரெம்ளின் சுவர் அருகே )

 ரஷ்யாவில் மன்னர் ஆட்சி நடந்தபோது விவசாயிகளும் , தொழிலாளிகளும் எந்த உரிமைகளும் இல்லாத ஓர் உடமைப்பொருட்களாகத்தான் கருதப்பட்டு வந்தனர். மன்னர்களில் நல்லவர்களும் இருந்தனர். கெட்டர்வர்களும் இருந்தனர்.  ஆனால் எளிய மக்களை பற்றி கவலைப்பட அவர்களுக்கு நேரம் இல்லை.. விழிப்புணர்வும் இல்லை. இதை எதிர்த்து அவ்வப்போது கிளர்ச்சிகள் நடந்தாலும், தெளிவான திட்டங்கள் இல்லாமை , வலுவான தலைமை இல்லாமை போன்ற காரணங்களால் எதிர்ப்பு வலுவாக இல்லை..

இந்த நிலையில்தான் , மார்க்சீய தத்துவத்தில் ஈடுபாடும் , என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவும் கொண்ட லெனின் , டிராட்ஸ்கி போன்றோர்களின் தலைமையில் புரட்சி வடிவம் பெற்றது..

மன்னர் ஆட்சியை பற்றி சொல்ல வேண்டும் என்றால் பல நேரங்களில் மன்னர்களை பொம்மையாக வைத்து விட்டு, வேறு ப்லரின் மறைமுக ஆட்சி நடந்த்தது. குறிப்பாக கடைசி மன்னர்  நல்லவராக இருந்தாலும் , அவர் கட்டுப்பாட்டில் எதுவும் இல்லை. அவர் அனுமதி இல்லாமலேயே , ரத்த ஞாயிறு என்ற கொடூரம் நிகழ்ந்தது. மேலும் முதலாம் உலகப்போரில் பல இன்னல்களை ரஷ்யா சந்த்தித்து வந்தது.

ரஸ்புட்டின் என்ற சாமியார் பற்றியும் கொஞ்சம் சொல்ல வேண்டும். அரச குடும்பத்தில் சிலருக்கு , தீர்க்க முடியாத நோய்களை தீர்த்து வைத்து , அரசருடன் நெருக்கமானார் அவர் .அந்த நெருக்கம் அதிகாரிகள் சிலருக்கு பிடிக்கவில்லை . கொல்ல முயற்சித்தனர் . முடியவில்லை . என்னை அரச குடும்பம் கொன்றால் , அந்த குடும்பம் கூண்டோடு அழியும் என சொன்னார் ரஸ்புட்டின் . கடைசியில் விஷம் வைத்து , துப்பாக்கியால் சுட்டு , ஆற்றில் வீசி கொன்றனர் . அவரது பிணம் மீட்க பட்டு எரியூட்டப்பட்டது . அப்போது அந்த பிணம் எழுந்து உட்கார்ந்தது என்பார்கள் .
அவர் சொன்னது போலவே விரைவில் அரச குடும்பம் அழிக்கப்பட்டு மாற்று அரசாங்கம் ஏற்பட்டது . இந்த இடைக்கால அரசிடம் இருந்து போல்ஷேவிக்குகள் ஆட்சியை கைப்பற்றியதுதான் புகழ் பெற்ற அக்டோபர் புரட்சி . இந்த புரட்சியின் முக்கிய கணங்களை கண் முன் நிறுத்துகிறது புத்தகம் . டிராஸ்கியின் மேதமையை ஜான் ரீடு குறிப்பிடுகிறார் . அதை மறைக்காமல் வெளியிட்டு இருக்கும் அலைகள் பதிப்பகம் பாராட்டுக்குரியது. சில நாடுகளில் அவற்றை சென்சார் செய்து விட்டனர் . தமிழாக்கம் மிக அருமை
புரட்சி என்பது ஒட்டு மொத்தமாக ஏற்பட வேண்டும் . தனியொரு நாட்டில் புரட்சி நடந்தால் அது வெகுநாள் நீடிக்காது என்ற டிராட்ஸ்கியின் கருத்து அன்று கிண்டல் செய்யப்பட்டது. சோவியத் யூனியன் வீழ்ந்த நிலையில் அது சிந்திக்க வைக்கிறது
வெர்டிக்ட் . படிக்க வேண்டிய புத்தகம்

உலகை உலுக்கிய பத்து நாட்கள் அலைகள் வெளியீட்டகம்

Friday, July 8, 2011

சலுகை விலையில் சாரு புத்தகம்

வெட்கமும் , மவுனமும் ஈமானின் இரு கிளைகளாகும். பழித்துரைத்தல், ஒழுக்கங்கெட்ட முரட்டுத்தனமான பேச்சுக்கள் இரண்டும் நயவஞ்சகத்தின் இரு கிளைகளாகும்  - திர்மிதி 

*****************************************************

வெளிநாடுகளில் , ஒரு தலைவரின் புகழை கெடுக்க , ஏதாவது பாலியல் ஸ்காண்டலில் சிக்க வைக்க பார்ப்பார்கள் .

அந்த பாணியில் சாருவை களங்கப்படுத்த முயன்ற துரோகிகள் சிலர் , இன்று களங்கப்பட்டு நிற்கின்றனர்.

இப்படிப்பட்ட நச்சு மயமான இலக்கிய சூழலில் வாசிப்பு மட்டுமே ரிலீஃப் ஆக அமைய முடியும் . ஆனால் நல்ல புத்தகங்கள் கிடைப்பதில் சிக்கல்கள் இருப்பதால் , படிக்க விரும்புவர்கள் ஏமாற்றம் அடைகின்றனர் . இதை மாற்ற ஒவ்வொருவரும் முயல வேண்டும் .
இந்த முயற்சியில் நம் பங்காக , ஒரு சிறந்த புத்தகத்தை குறைந்த விலையில் வழங்க முடிவு செய்துள்ளோம் . வானுக்கு கீழுள்ள அனைத்து விஷயங்களையும் அலசும் புத்தகம் கோணல் பக்கங்கள் . இதன் மூன்றாம் பாகம் சலுகை விலையில் . ஒரிஜினல் விலை 200 ரூபாய் . சலுகை விலை 130 மட்டுமே . வாங்க விரும்புவர்கள் மெயில் அனுப்புங்கள் . சென்னையில் இருப்பவர்கள் நேரிலேயே புத்தகம் வாங்கிக் கொள்ளலாம் . வெளியூர் நண்பர்களும் இந்த சலுகையை பயன்படுத்திக்கொள்ளலாம் . தபால் செலவு இலவசம் . வெளிநாட்டு நண்பர்களுக்கு இந்த சலுகை பயன்படும் என தோன்றவில்லை. அவர்களுக்கு வேறொரு சலுகை பிறகு அறிவிக்கப்படும்

Sunday, July 3, 2011

ஞானிகள் நாய்களை விரும்புவது ஏன்? - சாரு நிவேதிதா

ஞாயிறு விடுமுறையை தொலைக்காட்சியில் செலவிட நான் என்றும் விரும்பியதில்லை . எனவே தொலைக்காட்சிக்கும் எனக்கும் சம்பந்தம் இருக்காது.. ஆயினும் சாரு நிகழ்ச்சிக்காக ஆவலாக காத்து இருந்தேன்…

Friday, July 1, 2011

சாரு- வாழும் வரலாறு

 நேர்மை..துணிவு..   உண்மை ..தெளிவு.. மனித நேயம் என்பதை படித்து இருக்கிறோம். படிக்கும்போது இதெல்லாம்  நல்ல் குணங்கள் என்று நினைத்துக்கொள்வோம்.. ஆனால் இவற்றை நேரில் பார்க்கும் வாய்ப்பு பெரும்பாலும் இருக்காது..

நேரில் பார்த்தால் அது தரும் உணர்வு வார்த்தையில் வடிக்க இயலாது...

அப்படி ஓர் உணர்வு சமீபத்தில் கிடைத்தது...

தமிழ் நாட்டை பொறுத்தவரை அறிவு ஜீவிகள் என பெயர் வாங்க சில எளிய ஃபார்முலாக்கள் இருக்கின்றன..


  • பார்க்கும் எல்லோரையும் வசை பாட வேண்டும்
  • கடவுள் இல்லை என நம்புகிறேன் என சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்
  • பிறர் மனதை புண் படுத்துபவர்களை ஹீரோ வொர்ஷிப் செய்ய வேண்டும்

இந்த ஃபார்முலாக்கள் பதிவர்கள் உட்பட அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்...

சாரு நிவேதிதாவை கவனித்து வருபவர்களுக்கு தெரியும்... அவர் கடவுளை நம்புகிறார் அல்லது இல்லை என நம்புகிறார் என சொல்லவே முடியாது... கடவுள் குறித்த தன் அனுபவத்தை மட்டுமே அவ்வப்போது பகிர்ந்து வந்து இருக்கிறார்..

    கடவுள் இருக்கிறார் அல்லது இல்லை என்பது குறித்து முன் முடிவு வேண்டாம்... திறந்த மனதுடன் தேடி விடையை காண் என்பதே இவர் அணுகு முறை...

சமீபத்திய கட்டுரை ஒன்றில் அவர் எழுதி இருக்கிறார்..

“ 14 வயதில் ஒரு சிறுவனால் கடவுள் இல்லை என்ற முடிவுக்கு வர முடிகிறது... கடவுள் இருந்தாலும் இருக்கலாம் என்ற இன்னொரு பக்கத்தை காட்ட இந்த கல்வி தவறி விட்டது .

நானும் இந்த கேள்வியை கேட்டு இருக்கிறேன்.. மனிதர்களிடம் அல்ல.. கடவுளிடம்.. “ இருக்கிறாயா இல்லையா..இருந்தால் காட்சி கொடு “ என ஜம்மு வஷ்ணவோ தேவியில் இருந்து ஃபிரான்ஸ் லூர்து மாதா கோவில் வரை போய் கேட்டேன்.. கடவுள் நம்பிக்கையை என்னுள் விதைத்தவர் பிஸ்மில்லா கான் என சொல்ல வேண்டும் “: என்று தொடர்கிறது கட்டுரை...

இதை பார்த்தாலே தெரியும்.. சாருவுக்கு என எந்த மதமும் கிடையாது.... 

ஆனால் கடவுள் இருந்தாலும் இருக்கலாம்  என கூற ஒரு தைரியம் வேண்டும்... 

இப்படி சொல்வதால் இழப்புகள் ஏற்படும்... அறிவு ஜீவிகள் எதிர்ப்பார்கள் என தெரிந்தும் இப்படி கூறுகிறார் சாரு...

அடுத்து வசை பாடுதல்...

தமிழ் நாட்டில் அறிவு ஜீவி என பெயர் எடுக்க ஷார்ட் கட், அனைவரையும் வசை பாடுதல்தான்... ஆனால் தவறு செய்பவர்களை திட்டும் சாரு, தனக்கு நல்லவர்கள் என தோன்றினால் அவர்களை பாராட்டவும் தயங்கியதில்லை...

இதில், இலக்கிய உலகில் அ தி மு க இல்லாத நிலையில், அந்த கட்சியை பாராட்டுவது ஹை ரிஸ்க்... அப்படி இருந்தும் , ஜெயலலிதாவை பாராட்டினார் சாரு...

அடுத்ததுதான் முக்கியம்...

ஓவியர் ஹூசைன்..

பலருக்கு அவர் சர்ச்சைகள் மூலம்தான் அறிமுகம் ஆனார்... அவரை ஆதரிப்ப்துதான் அறிவு ஜீவுகளின் அடையாளம் ஆகி விட்டது.. இந்த நிலையில் தனி நபராக எதிர் கருத்து கூறினார் சாரு..

இதையெல்லாம் பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது...

யார் என்ன நினைப்பார்கள் என்றெல்லாம் கவலைப்படாமல் தன் கருதை கூற வேண்டும் என்றால் எந்த அளவுக்கு தார்மீக தைரியம் வேண்டும்... அது சாருவிடம் இருக்கிறது...

ஆனால் இதை எல்லாம் மீறி அவரிடம் இருக்கும் மனித நேயம் , இதுவரை தமிழ் நாடு பார்த்து இராத ஒன்று...

சாருவின் நூல் ஒன்று புதிதாக  வந்த புதிதில், அந்த பிரதிகள் சிலவற்றை மொத்தமாக வாங்கி , சலுகை விலையில் , வலைப்பூ நண்பர்களுக்கு கொடுக்க விரும்பினேன்... ஆனால் அந்த பதிப்பகத்தினர் போதிய ஆதரவு தராததால் அந்த முயற்சியை கை விட்டேன்..

ஆனால் இதை யாரிடம் சொல்லி என்ன ஆக போகிறது என்று யாரிடமும் சொல்லவில்லை..
இது போன்ற அனுபவம் பெற்றவர்கள் ஏராளம்.. குறிப்பாக வெளி நாடு வாழ் வாசக்ரகளுக்கு இந்த அனுபவம் கண்டிப்பாக இருக்கும்..ஆனால் அவர்கள் முறையிடுவதில்லை... முறையிட்டாலும் ஓர் எழுத்தாளர் எதுவும் செய்ய முடியாது என்பது தமிழ்னாட்டு யதார்த்தம்..

ஆனால் சில வாசகர்கள், சாருவிடம் தாங்கள் பாதிக்கப்பட்டபோது தைரியமாக முறையிட்டார்கள்..
எந்த ஓர் எழுத்தாளராக இருந்தாலும், இதில் தலையிடாமல் இருக்கவே விரும்புவார்கள்.. பதிப்பகத்தை பகைத்து கொள்ள விரும்ப மாட்டார்கள்.. 

ஆனால் தன் வாசகர்கள் உணர்ச்சிக்கு மதிப்பளித்து , பதிப்பகத்தை பகைத்து கொண்ட ஒரே எழுத்தாள்ர் சாருதான்..
அந்த அளவுக்கு , தன் வாசகர்கள் மேல் அவர் அன்பு வைத்து இருக்கிறார் என தெரிந்து நெகிழ்ந்து போனேன்...

இப்படி ஒருவர் இருந்தாரா என எதிர்காலம் ஆச்சர்யப்படும் அளவுக்கு வாழும் ஒருவர் வாழும் காலத்தில் நானும் வாழ்வதில் பெருமைப்படுகிறேன்... 




Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா