Saturday, July 23, 2011

உலகை படைத்தது கடவுளா? அறிவியலா?- 1

மனிதனுக்கும் ஏனைய உயிரிகளுக்கும் இருக்கும் முக்கிய வித்தியாசம், நாம் ஏன் இங்கு இருக்கிறோம் என யோசிக்கும் தன்மைதான்..
உலகின் , பிரப்ஞசத்தின் வயதோடு ஒப்பிடும்போது , நாம் வாழும் ஆண்டுகள் துகளினும் சிறிது. இருந்தாலும் இந்த பிரபஞ்சத்தை புரிந்து கொள்ளும் முயற்சி தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

அறிவியலை பொருத்தவரை முன்பு இருந்த நிலை இன்று இல்லை.. ஆப்பிள் விழுந்ததை பார்த்து , புவி ஈர்ப்பு விசையை கண்டு பிடித்த நிலை இன்று கிடையாது... அன்றாட வாழ்வில் காணும் சம்பவங்களை வைத்து அறிவியல் உண்மைகளை காண முடியாத நிலை இன்று.. லாஜிக் , பகுத்தறிவு , நடை முறை உண்மை என யதார்த்த உண்மைகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் அறிவியல் சென்று கொண்டு இருக்கிறது..

ஓர் உதாரணம் பார்க்கலாம்..

ஆஸ்திரிய விஞ்ஞானிகள் ஒரு ஆய்வு நடத்தினர்..

கார்பன் மூலக்கூறுகளை இரண்டு குறுகலான பாதை வழியாக செலுத்தி அதன் விளைவுகள் என்ன என பார்ப்பது இந்த ஆய்வு..

இந்த ஆய்வை சற்று எளிமைப்படுத்தி பார்ப்போம்..

ஒரு சுவற்றில் இரு உடைப்புகள் இருப்பதாக கொள்வோம்....

இரண்டின் வழியாகவும், ஃபுட் பால்கள் தொடர்ச்சியாக  உதைக்கப்படுகின்றன..அதில் ஒரு உடைப்பு சற்று மூடப்பட்டு இருந்தால் என்ன ஆகும்? கரெக்ட்...

பிளவு இருக்கும் பகுதியில் மட்டும் அடுத்தடுத்து பந்துகள் பாய்ந்து செல்லும்...

சிறிது நேரம் கழித்து மூடப்பட்டு இருந்த பகுதியும் திறக்கப்பட்டால் என்ன ஆகும்?

இரண்டின் வழியாகவும் பந்துகள் பாய்ந்து செல்லும்...

இந்த அடிப்ப்டையில் அந்த ஆஸ்திரிய விஞ்ஞானிகள் கார்பம் மூலக்கூறுகளை வைத்து ஆய்ந்தனர். ஒரு பிளவில் மட்டும் அந்த மூலக்கூறுகள் அடுத்தடுத்து பாய்ந்து சென்றன.. அதன் அளவு பதிவு செய்யப்பட்டது.
பிறகு, இன்னொரு பிளவும் திறக்கப்பட்டு அதன் வழியாகவும் மூலக்கூறுகள் செலுத்தப்பட்டன..
ஆனால் அப்போது ஏற்பட்ட விளைவு, ஃபுட் பால் விளைவு போல இல்லை...
இரண்டாவது பிளவின் வழியாக செலுதப்பட்ட ஆரம்பித்த உடன், முதல் பிளவின் வழியாக செல்லும் மூலக்கூறுகளின் அளவில் மாறுதல் தென்பட்டது...

இதற்கான அறிவியல் விளக்க்த்தை பிறகு பார்க்கலாம்..  நடை முறை அறிவை வைத்து , அறிவியலை அணுக முடியாது ..அந்த காலம் முடிந்து விட்டது என்பதை மட்டும் இப்போதைக்கு புரிந்து கொண்டால் போதும்..

இதே போல பல வினோதங்கள் இருக்கின்றன.. தண்ணீரை கொதிக்க வைக்கிறோம்... அப்போது அதன் வெப்ப நிலையை சோதிது பார்த்தால் 100 டிகிரி செல்சியசாக இருக்கும்.. சோதித்து பார்க்காவிட்டாலும் 100 டிகிரி இருக்கும் . ஓ கே?
ஆனால் சில நுட்பமான ஆய்வுகளை செய்யும் போது, நாம் சோதிக்க ஆரம்பித்தால், அதுவே அந்த்ய பொருளின் தனமையை மாற்றி விடும். இந்த் காரணத்தால் , எலக்ட்ரானின் வேகத்தையும் , அதன் இருப்பையும் ஒரு சேர நம்மால் துல்லியமாக கணக்கிட முடியாது.

இது போல பல வினோதங்கள் இருப்பதால், பிரபஞ்சம் எப்படி தோன்றியது என்பதறு அறிவியல் தரும் விடை , சாதாரண அறிவியல் நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது..

அறிவியல் என்பது சிறப்பனதுதான்.,.. ஆனால் அது முழு உண்மை என சொல்ல முடியாது என்று அடுத்த குண்டை தூக்கி போடுகிறது நவீன அறிவியல்.. எப்படி?

மீன் தொட்டியில் மீன் வளர்க்கிறீர்கள்.. அவற்றுக்கு சிந்திக்கும் திறமை வந்து அறிவியலை உருவாக்கினால் எப்படி இருக்கும்... ? உலகம் என்பது கண்ணாடி தொட்டி .. அதில் தேவையான உணவு கிடைக்கும்... அந்த இடத்தை விட்டு போவது இயலாத ஒன்று எனப்து போல அவற்றின் கண்டு பிடிப்பு இருக்கும்..

கண்ணாடி தொட்டி என்ற மாடலில் , அவற்றின் கண்டு பிடிப்பின் உண்மைதான்.. அந்த உண்மையை கண்ணாடி தொட்டிக்குள் அவற்றால் நிரூபிக்க முடியும்... ஆனால் நம் பார்வையில், அந்த மீன்களின் கண்டுபிடிப்பு முழு உண்மை அல்ல..

அதே போல , நமது கண்டு பிடிப்புகளும் , முழு உண்மை என சொல்ல முடியாது. நமக்கு கிடைத்த மாடலில், நம் கண்டு பிடிப்புகளை நிரூபிக்க முடிந்தால், இந்த மாடலுக்கான உண்மை என்று மட்டுமே சொல்லிக்கொள்ள முடியும்..


இந்த அடிப்படையில், பிரபஞ்ச தோற்றத்தை ஆய்ந்து வருகிறார்கள்.. ஒன்றும் இல்லாத நிலையில் இருந்துதான், இந்த பிரபஞ்சம் தோன்றி இருக்க முடியும் என்ற முடிவுக்கு வந்து இருக்கிறார்கள். இதற்கு கடவுள் தேவை இல்லை.. அறிவியல் விதிகளே போதும் என்பது அவர்கள் கருத்து..

ஒரு வேளை கடவுள்தான் , பிரபஞ்சத்தை ஆரம்பித்து வைத்தார் என்று வைத்து கொண்டாலும், அதற்கு பின் நடப்பது அவர் கட்டுப்பாட்டில் இல்லை.,.. இயர்பியல் விதிகளின் படி அடுத்தடுத்து , நிகழ்ச்சிகள் நடக்கும்.. கடவுளுக்கு இதில் வேலை இல்லை என்கிறார்கள்..

அதாவது, சீட்டு கட்டில், பாலம் கட்டி விளையாடுகிறீர்கள்.. விளையாட்டாக முதல் சீட்டை தட்டி விட்டால், அடுத்தடுதுது எல்லா சீட்டுகளும் விழ ஆரம்பிக்கும்..  சைக்கிள் ஸ்டாண்டில் சைக்கிள்கள் விழுவது இப்படித்தான்..

  இது சரியா ?

தமிழ் எழுத்துக்கள் எல்லாவற்றியும் தனி தனி துண்டு சீட்டில் எழுதி , ஒரு பானையில் போட்டு விட்டு, குத்து மதிப்பாக சில எழுத்துக்களை எடுத்து, ஒரு நோட்டு புத்தகத்தில் ஒட்டி வைக்குமாறு ஒரு குழந்தையிடம் சொல்லி விட்டு சென்று விடுகிறோம் என வைத்து கொள்ளுங்கள்..

சிறிது நேரம் கழித்து வந்து பார்க்கிறோம்.. அப்படி ஒட்டப்பட்ட எழுத்துக்கள் , திருக்குறள் விளக்க கட்டுரையாக இருந்தால் எப்படி இருக்கும்? சும்மா மனம்போன போக்கில் ஒட்டப்பட்ட எழுத்துக்கள் , ஒரு ஒழுங்கான கட்டுரையாக அமைய சாத்தியம் இருக்கிறதா?

ஆனால் கிட்டத்தட்ட இது  போன்ற பார்வையைத்தான் அறிவியல் முன் வைக்கிறது.. கடவுள் என்று யாரும் இல்லை..  அணுக்கள், எலக்ட்ரான்கள் போன்ரவை இணைவதன் தற்செயல் விளைவே பிரபஞ்சம் என்கிறாரகள்..
இப்போது நாம் காணும் கலைகள், திறமைகள், அன்பின் உருவமாக வாழும் மனிதர்கள், மகான்கள் எல்லாம் வெறும் தற்செயல்தான் என்பது சிலரால் ஏற்க முடியாத ஒன்றாக இருக்கிறது.. கடவுள் என ஒருவர் , அல்லது இறையாற்றல் ஒன்று இருந்தால்தான் இது சாத்தியம் என்கிறார்கள் இவர்கள்..

வரிசையாக நிர்கும் சைக்கிள் உதாரணத்தையே எடுத்து கொள்வோம்...  ஒரு சைக்கிள் விழுந்ததும், அடுத்தடுத்து சைக்கிள் விழுந்தால் அது சாதாரன நிக்ழ்ச்சி... ஆனால் அப்ப்டி விழும் போது எழும் ஓசை, ஏ அர் ரகுமான் இசையை உருவாக்கினால் , அது ஓர் அற்புதம் அல்லவா,, பிரபஞ்சம் என்பது அப்படிப்பட்ட விளக்க முடியாத அற்புத என்கிறார்கள் சிலர்...

 இதைப்பற்றி விரிவாக அடுத்த பகுதியில் அலசலாம்... 

5 comments:

  1. http://www.youtube.com/watch?v=DfPeprQ7oGc An video explaining Double slit Experiment.

    So that mean All events are Just Chances / Probability.

    What we say Truth is Just widely accepted Ordered Pattern drawn out of a Grand Chaos.

    Interesting, Keep writing more boss

    ReplyDelete
  2. read richard dawkins and stephen hawking

    ReplyDelete
  3. நல்ல தொடக்கம்....

    ReplyDelete
  4. There you go....this is what we are expecting from you. Keep writing articles like this friend and please take care of the spelling mistakes. Don't waste your time to boost someone else image when the person himself is not worrying about his image. Be a spectator. You yourself have a style and pattern. Focus on that and bring out more articles. Good luck....

    ReplyDelete
  5. நீதான்July 24, 2011 at 9:36 PM

    மொதல்ல டார்வினை படி அப்புறம் இதை பத்தி எழுதலாம்!!

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா