நேர்மை..துணிவு.. உண்மை ..தெளிவு.. மனித நேயம் என்பதை படித்து இருக்கிறோம். படிக்கும்போது இதெல்லாம் நல்ல் குணங்கள் என்று நினைத்துக்கொள்வோம்.. ஆனால் இவற்றை நேரில் பார்க்கும் வாய்ப்பு பெரும்பாலும் இருக்காது..
நேரில் பார்த்தால் அது தரும் உணர்வு வார்த்தையில் வடிக்க இயலாது...
அப்படி ஓர் உணர்வு சமீபத்தில் கிடைத்தது...
தமிழ் நாட்டை பொறுத்தவரை அறிவு ஜீவிகள் என பெயர் வாங்க சில எளிய ஃபார்முலாக்கள் இருக்கின்றன..
நேரில் பார்த்தால் அது தரும் உணர்வு வார்த்தையில் வடிக்க இயலாது...
அப்படி ஓர் உணர்வு சமீபத்தில் கிடைத்தது...
தமிழ் நாட்டை பொறுத்தவரை அறிவு ஜீவிகள் என பெயர் வாங்க சில எளிய ஃபார்முலாக்கள் இருக்கின்றன..
- பார்க்கும் எல்லோரையும் வசை பாட வேண்டும்
- கடவுள் இல்லை என நம்புகிறேன் என சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்
- பிறர் மனதை புண் படுத்துபவர்களை ஹீரோ வொர்ஷிப் செய்ய வேண்டும்
இந்த ஃபார்முலாக்கள் பதிவர்கள் உட்பட அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்...
சாரு நிவேதிதாவை கவனித்து வருபவர்களுக்கு தெரியும்... அவர் கடவுளை நம்புகிறார் அல்லது இல்லை என நம்புகிறார் என சொல்லவே முடியாது... கடவுள் குறித்த தன் அனுபவத்தை மட்டுமே அவ்வப்போது பகிர்ந்து வந்து இருக்கிறார்..
கடவுள் இருக்கிறார் அல்லது இல்லை என்பது குறித்து முன் முடிவு வேண்டாம்... திறந்த மனதுடன் தேடி விடையை காண் என்பதே இவர் அணுகு முறை...
சமீபத்திய கட்டுரை ஒன்றில் அவர் எழுதி இருக்கிறார்..
“ 14 வயதில் ஒரு சிறுவனால் கடவுள் இல்லை என்ற முடிவுக்கு வர முடிகிறது... கடவுள் இருந்தாலும் இருக்கலாம் என்ற இன்னொரு பக்கத்தை காட்ட இந்த கல்வி தவறி விட்டது .
நானும் இந்த கேள்வியை கேட்டு இருக்கிறேன்.. மனிதர்களிடம் அல்ல.. கடவுளிடம்.. “ இருக்கிறாயா இல்லையா..இருந்தால் காட்சி கொடு “ என ஜம்மு வஷ்ணவோ தேவியில் இருந்து ஃபிரான்ஸ் லூர்து மாதா கோவில் வரை போய் கேட்டேன்.. கடவுள் நம்பிக்கையை என்னுள் விதைத்தவர் பிஸ்மில்லா கான் என சொல்ல வேண்டும் “: என்று தொடர்கிறது கட்டுரை...
இதை பார்த்தாலே தெரியும்.. சாருவுக்கு என எந்த மதமும் கிடையாது....
ஆனால் கடவுள் இருந்தாலும் இருக்கலாம் என கூற ஒரு தைரியம் வேண்டும்...
இப்படி சொல்வதால் இழப்புகள் ஏற்படும்... அறிவு ஜீவிகள் எதிர்ப்பார்கள் என தெரிந்தும் இப்படி கூறுகிறார் சாரு...
அடுத்து வசை பாடுதல்...
தமிழ் நாட்டில் அறிவு ஜீவி என பெயர் எடுக்க ஷார்ட் கட், அனைவரையும் வசை பாடுதல்தான்... ஆனால் தவறு செய்பவர்களை திட்டும் சாரு, தனக்கு நல்லவர்கள் என தோன்றினால் அவர்களை பாராட்டவும் தயங்கியதில்லை...
இதில், இலக்கிய உலகில் அ தி மு க இல்லாத நிலையில், அந்த கட்சியை பாராட்டுவது ஹை ரிஸ்க்... அப்படி இருந்தும் , ஜெயலலிதாவை பாராட்டினார் சாரு...
அடுத்ததுதான் முக்கியம்...
ஓவியர் ஹூசைன்..
பலருக்கு அவர் சர்ச்சைகள் மூலம்தான் அறிமுகம் ஆனார்... அவரை ஆதரிப்ப்துதான் அறிவு ஜீவுகளின் அடையாளம் ஆகி விட்டது.. இந்த நிலையில் தனி நபராக எதிர் கருத்து கூறினார் சாரு..
இதையெல்லாம் பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது...
யார் என்ன நினைப்பார்கள் என்றெல்லாம் கவலைப்படாமல் தன் கருதை கூற வேண்டும் என்றால் எந்த அளவுக்கு தார்மீக தைரியம் வேண்டும்... அது சாருவிடம் இருக்கிறது...
ஆனால் இதை எல்லாம் மீறி அவரிடம் இருக்கும் மனித நேயம் , இதுவரை தமிழ் நாடு பார்த்து இராத ஒன்று...
சாருவின் நூல் ஒன்று புதிதாக வந்த புதிதில், அந்த பிரதிகள் சிலவற்றை மொத்தமாக வாங்கி , சலுகை விலையில் , வலைப்பூ நண்பர்களுக்கு கொடுக்க விரும்பினேன்... ஆனால் அந்த பதிப்பகத்தினர் போதிய ஆதரவு தராததால் அந்த முயற்சியை கை விட்டேன்..
ஆனால் இதை யாரிடம் சொல்லி என்ன ஆக போகிறது என்று யாரிடமும் சொல்லவில்லை..
இது போன்ற அனுபவம் பெற்றவர்கள் ஏராளம்.. குறிப்பாக வெளி நாடு வாழ் வாசக்ரகளுக்கு இந்த அனுபவம் கண்டிப்பாக இருக்கும்..ஆனால் அவர்கள் முறையிடுவதில்லை... முறையிட்டாலும் ஓர் எழுத்தாளர் எதுவும் செய்ய முடியாது என்பது தமிழ்னாட்டு யதார்த்தம்..
இது போன்ற அனுபவம் பெற்றவர்கள் ஏராளம்.. குறிப்பாக வெளி நாடு வாழ் வாசக்ரகளுக்கு இந்த அனுபவம் கண்டிப்பாக இருக்கும்..ஆனால் அவர்கள் முறையிடுவதில்லை... முறையிட்டாலும் ஓர் எழுத்தாளர் எதுவும் செய்ய முடியாது என்பது தமிழ்னாட்டு யதார்த்தம்..
ஆனால் சில வாசகர்கள், சாருவிடம் தாங்கள் பாதிக்கப்பட்டபோது தைரியமாக முறையிட்டார்கள்..
எந்த ஓர் எழுத்தாளராக இருந்தாலும், இதில் தலையிடாமல் இருக்கவே விரும்புவார்கள்.. பதிப்பகத்தை பகைத்து கொள்ள விரும்ப மாட்டார்கள்..
ஆனால் தன் வாசகர்கள் உணர்ச்சிக்கு மதிப்பளித்து , பதிப்பகத்தை பகைத்து கொண்ட ஒரே எழுத்தாள்ர் சாருதான்..
அந்த அளவுக்கு , தன் வாசகர்கள் மேல் அவர் அன்பு வைத்து இருக்கிறார் என தெரிந்து நெகிழ்ந்து போனேன்...
இப்படி ஒருவர் இருந்தாரா என எதிர்காலம் ஆச்சர்யப்படும் அளவுக்கு வாழும் ஒருவர் வாழும் காலத்தில் நானும் வாழ்வதில் பெருமைப்படுகிறேன்...
டியர் , சாரு ஹுசைன் பற்றியோ அந்த ஓவியம் பற்றியோ கருத்துக்கள் சொல்லவில்லை. ஹிந்து கடவுள்களை பற்றி ஓவியம் வரைந்து விட்டு 95 வயது வாழ முடிகிறது என்றுதான் எழுதி உள்ளார்.இதைதான் ஒத்துகொள்ள முடியவில்லை.ஏன் சல்மான் ருஷ்டியோ,தஸ்லீமா நசரீனோ வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் .சல்மான் ருஷ்டி 25 வருடமாக மிரட்டலில் தான் வாழ்கிறார் .
ReplyDeleteஎன்னுடைய பின்னூட்டஙக்ள் வெளியாகும் என உத்தரவாதம் தரமுடிமானால் கருத்துச் சொல்ல விரும்புகிறேன்.
ReplyDeletesaaruvai ellorum thuvaiththu kaayappodukiraarkal.aanaal neengal.......????
ReplyDeleteசரவண குமார் , தாராளமாக உங்கள் கருத்தை சொல்லுங்கள் .
ReplyDeleteஅப்போ சாருவிடம் எந்த தவறும் இல்லை என்று சொல்லுகிறீர்களா?
ReplyDeleteசதீஷ் . நம்மிடம் இருக்கும் சில குறைகள் அவரிடமும் இருக்க கூடும் . ஆனால் அவரிடம் இருக்கும் உயர் குணங்கள் யாரிடமும் இல்லைசதீஷ் . நம்மிடம் இருக்கும் சில குறைகள் அவரிடமும் இருக்க கூடும் . ஆனால் அவரிடம் இருக்கும் உயர் குணங்கள் யாரிடமும் இல்லை
ReplyDelete// தன் அனுபவத்தை மட்டுமே அவ்வப்போது பகிர்ந்து வந்தி இருக்கிறார்.. //
ReplyDelete// ஆனால் தன் வாசகர்கள் உணர்ச்சிக்கு மதிப்பளித்து , பதிப்பகத்தை பகைத்து கொண்ட ஒரே எழுத்தாள்ர் சாருதான்.//
எழுத்து சத்தியத்தை பேசும்போது அந்த எழுத்திற்கு ஒரு உன்னதம் வந்து விடுகிறது.
Mrinzo aka Nirmalcb
பொதுவா அறிவு ஜீவி என்ன செயவாங்கலோ அதையே தலைகீழா செஞ்சா அதி புத்திசாலி னு சாருவுக்கு நினைப்பு
ReplyDeleteஎழுத்தாளர்களுடன் வாசகர்கள் சரிக்கு சரி விவாதிக்கும் அருமையான மாற்றம் ஏற்படுத்திக் கொடுத்த இணையமே அது எதிர்மறையான விஷயத்திற்கும் இட்டுச் செல்கிறது. எழுத்தாளர்களுடன் அவர்கள் எழுத்து பற்றிய விவாதங்கள் நடப்பதை விட அவர்கள் பிரச்சனைகளுக்கு ஆதரவு கொடி பிடிப்பது மட்டுமே வேலையாகி விட்டது. இக்கட்டான நிலையில் ஆதரவு கொடுப்பது தவறில்லை. ஆனால் ஒரு எல்லைக்கு மேல் போய்விடும்போது வருத்தமாக இருக்கிறது. புத்தகம் வாசிக்கும் வழக்கம் இருப்பவர்கள் உணர்ச்சிகளுக்கு பெரும்பாலும் அடிமையாகி விடுவது கூட காரணமாக இருக்கலாம். சாருவின் எழுத்து உங்களை காந்தம் போல் கவர்ந்து விட்டால், கண்ணை மூடிக்கொண்டு அவரை ஆதரிப்பதைத்தான் செய்ய முடியும். இது எல்லா எழுத்தாளர்களுக்கும், ஏன் நடிகர்களுக்கு, அரசியல்வாதிகளுக்கும் கூட பொருந்தும். மற்றபடி அவர் எழுத்தைக் கொண்டாடுவதை விட அவரை கடவுள் நிலைக்கு உயர்த்தி விடுவது மட்டுமே நடந்து கொண்டு வருகிறது.
ReplyDeleteஅனானி நண்பரே . நான் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கவில்லை . அவரது எழுத்துக்காகவும் , குண நலனுக்காகவும் போற்றுகிறோம்
ReplyDelete//இப்படி ஒருவர் இருந்தாரா என எதிர்காலம் ஆச்சர்யப்படும் அளவுக்கு வாழும் ஒருவர் வாழும் காலத்தில் நானும் வாழ்வதில் பெருமைப்படுகிறேன்...//
ReplyDeleteதன் பேத்தி வயது பெண்ணிடம் "உனக்கு கீழ wet ஆகுதா" எனக் கேட்கும் ஒரு பொறுக்கி உங்களுக்கு இப்படி தெரிகிறார். நீங்கள் எந்தப் பள்ளியில் படித்தீர்கள் தோழரே?
அப்படி ஒரு எழுத்தாளரைப் போற்றுவது தவறே இல்லை. ஆனால் அது தனிமனித வழிபாடாக மாறிவிடும் அளவுக்கு இருக்கக் கூடாது என்பதே என் கருத்து. மற்றபடி விமர்சனங்களுக்குக் கடுமையாக எதிர்வினை ஆற்றுவதும் சாருவிடம் இருந்தும் அவர் வாசகர்களிடம் இருந்தும் எதிர்பாராததே...அவர் இணையதளத்தில் எத்தனை பேரை எவ்வளவு கடுமையாக விமர்சனம் செய்து வந்துள்ளார் என்பது தொடர்ந்து வாசிப்பவர்களுக்குத் தெரிந்ததே. அவரவர்க்கான நியாயம் அவரவரிடம் உண்டு. விமர்சனங்கள் மனதை பாதிக்கும் அளவு மென்மையானவராக இருக்கும் பட்சத்தில் தானும் அடுத்தவரை விமர்சிக்கும்போது மென்மையாக யோசித்திருக்க வேண்டும். அற்புதமாக எழுதும் எழுத்தாளன், கனிவாக இருப்பவன் செய்வது எதுவுமே தவறில்லை என ஆதரிப்பதைத்தான் கண்மூடித்தனமாக எனக் கூறினேன்.
ReplyDeleteDear Annoni, உங்கள் வாதத்தில் ஒரு சிறு மாற்றம் தேவை எனபது எனது கருத்து. எழுத்தாளன் என்பவன் கடவுளுக்கு சமம் அல்லதான், அவன் வாழும் காலத்தை தாண்டி வாழ்கிறவன், நாம் வரும் காலத்தில் தூக்கி எரியபோகிற விசையத்தை இன்று கூப்பையில் போட்டு கொள்ளுதுபவன். அவன் தவறு செய்தால் அதற்கான தண்டனை அந்த காலத்திற்கு ஏற்ப வழங்கப்படும், அது அல்ல பிரிச்சனை, யார் அந்த தண்டனையை வழங்குவது என்பதுதான். யார் வேண்டு என்றாலும் சேற்றை வாரி இறைக்க முடியாது. ஆனால் நமது ஊரில் அப்படி இல்லை, ஒரு இளிச்சவாயன் கிடைத்தால் போட்டு அடிக்கிறதும் அதுவே ஒரு பலசாலி என்றால் அவனிடம் அடிமையாய் நடப்பதும் ஒரு குணம் என்று ஆகி போனது, இந்த குணம் ஒரு நிலப்ரபுதுவாத குணமே. கம்யூனிஸ்ட் சிந்தாந்தம் பேசும் கம்ரதேஸ் கூட இந்த சேற்றை வாரி இறைக்கும் பனி செய்வது போற்றத்தக்கது !!!!
ReplyDeleteயாரும் கண்ணை முடிகொண்டு ஆதரிக்கவில்லை, இதை சொல்ல நீங்கள் யார், அதுற்கான உரிமையை யார் கொடுத்தது என்றுதான் எதிர் விவாதம் வைக்க பட்டது. என்னை பொறுத்தவரை அவரது ரசிகர்கள் அவரை ஒரு குழந்தை போலத்தான் போற்றுகிறார்கள். unfortunately குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று கூறப்படுகிறது.
நீங்கள் சொல்வதை போல யாரும் அடிமை அகிபோவது இல்லை ஏன் என்றால் அந்த மாதிரி ஒரு சிஸ்டம் அவரு கிட்ட இல்லை என்றுதான் சொலுவேன். நமது தத்துவார்ந்த முறை எனபது குரு சிஷ்யன் என்ற மரமுதான், ஆனால் அவர் இணையத்திலும் சரி அவரது எழுத்திலும் சரி அந்த குரு / சிஷ்யன் விசியத்தை தகர்க்கிறார், ஒரு நண்பன் அல்லது தோழர் போல நடத்துகிறார், இதுதான் தோழமைதனம், பல கம்முநிச்டுகளுக்கு எதற்கு நாம் தோழர் என்று நம்மை அழைக்கிறோம் என்று தெரியவில்லை, அது குரு - சிஷ்யன் , ஆண்டான் - அடிமை போன்றவையைகளை தகர்க்கத்தான், அவர்கள் தோழர் என்று சொல்லுவதோடு சரி, இங்கு இவர் சொல்லாமல் எது தோழமை என்று காட்டுகிறார் குரு சிஷ்யன் மரபை உடைகிறார். அவர் அட்வைஸ் செய்து படித்தது இல்லை.
அப்புறம் ஒரு முக்கியமான ஒன்று அவரை எதற்கு எல்லோரும் சேற்றை வாரி இறைகிரார்கள் என்று தெரியவில்லை அவர் என்ன நமது வரி பணத்தில் உல்லாசமாக இருக்கிறாரா, முப்பது வயதில் கோடிகள் சிலவு செய்து படம் எடுகிறாரா, உங்கள் விட்டுக்கு அருகில் ஒலி பெருக்கி வைத்து உங்கள் தூக்கத்தை கெடுக்கிறாரா, உடல் உறவு காட்சியை மிஞ்சும் அளவுக்கு பாடல் காட்சி எடுத்து உங்களை அதை டிவில் பார்க்க தூண்டுகிறாரா, இறப்பு சான்றிதல் வாங்கும்போது லஞ்சம் கேட்கிறாரா, மீட்டருக்கு மேல காசு கேக்கிறாரா, இப்படி பல பல . அவர் எப்படி வாழனும் என்று வாழ விரும்புகிறாரோ அப்படி வாழ்ந்துவிட்டு போகட்டும், அந்த முறை தவறு என்றால் அதையும் அவரே தெரிந்து கொள்ளட்டும்.
மொத்தத்துல தலைகீழா நடக்கனும் அதுதான் பிடிக்கும், அதுதான் புரட்சி, அதுதான் தைரியம்னு சொல்லவர்றீங்க..........
ReplyDeleteஓ இதத்தான் பின் நவீனத்துவம்னு சொல்றாங்களா......
***அனானி நண்பரே . நான் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கவில்லை . அவரது எழுத்துக்காகவும் , குண நலனுக்காகவும் போற்றுகிறோம்*****
ReplyDeleteகிறுக்குத்தனத்தை உயர்ந்த குணம் குண நலம்னு புரிஞ்சுகிட்டா ஒன்னும் சொல்றதுக்கில்லை
தம்பி டீ இன்னும் வரல
ReplyDeleteபின் நவீனத்துவம் தவிர்க்க முடியாத ஒன்று. சமுகம் அதை நோக்கி செல்லும், நிலபிரபுத்துவத்தை உடைக்க முயலும் தோழர்கள் எனோ மாற்றத்தை ஏற்க மறுக்கிறார்கள்.
ReplyDeleteசர்ச்சைகளினூடே வாழ்வதே ஒரு விளம்பரம் தானே.
ReplyDelete"தன் பேத்தி வயது பெண்ணிடம் ... "
ReplyDeleteபெண்கள் மீது பெரு மருயாதை கொண்டவ்ர் சாரு.. ஆபாச கேள்வி கேட்ட ஒரு வாசகரை, திட்டி அனுப்பியவர் அவர்...
இலக்கிய தாகத்துடன் , அறிவு தேடலுடன் அவரை நாடி வருபவர்கள் ஏராளம்.. அவர்கள் யாரிடமும் அவர் இப்படி பேசியதில்லை...
மகாநதி ,ஓம் ஷாந்தி ஓம் போன்ற சாருவின் விமர்சனங்களை படிக்கும் வாய்ப்பு எனக்கு இல்லை.அதை இங்கே வெளியிடலாமே?(குரிதிப்புனல் போல)
ReplyDelete"மகாநதி ,ஓம் ஷாந்தி ஓம் போன்ற சாருவின் விமர்சனங்களை படிக்கும் வாய்ப்பு எனக்கு இல்லை.அதை இங்கே வெளியிடலாமே?(குரிதிப்புனல் போல)"
ReplyDeleteகண்டிப்பாக அவை வெளியிடப்படும்... கொஞ்சம் காத்திருங்கள்
”டியர் , சாரு ஹுசைன் பற்றியோ அந்த ஓவியம் பற்றியோ கருத்துக்கள் சொல்லவில்லை. ”
ReplyDeleteஅந்த கட்டுரையை உழுமையாக தாங்கள் படிக்கவில்லை என எண்ணுகிறேன் , நண்பரே.. விரைவில் வெளியிடுகிறேன்..
அதில் அவர் இன்னொரு சிறப்பான ஓவியரை அறிமுகம் செய்திருக்கிறார் என்பதை அறிந்து நீங்கள் மகிழ்வீர்கள்..
மதம் என்ற வலையத்தில் அவரை சிலர் சிக்க வைக்க பார்க்கிறார்கள் .. அது தவ்று
மனதளவில் அவர் ஓர் இஸ்லாமியர்...பிறப்பால் ஹிந்து.. ஆனால் மாதா கோயில் , மாதா தரிசனம் என்று எழுதியதையும் படித்து இருக்கிறோம்...
”சர்ச்சைகளினூடே வாழ்வதே ஒரு விளம்பரம் தானே”
ReplyDeleteநெருங்கிய நண்பர்களே னமக்கு தொல்லை கொடுத்து அதனால் விள்ம்பரம் கிடைக்கிரது என்றால் அதனால் மகிழவா முடியும் ?
தரமான கல்வி , தரமான வாசிப்பு ,தரமான சிந்தனை ,தரமான பேச்சு
ReplyDeleteஇவைகளில் ஏற்பட்ட குறைபாடே இன்றைய இளைஞர்களை இப்படியெல்லாம்
சிந்திக்கவும் எழுதவும் வழி செய்திருக்கிறது.அதன் விளைவு
மூத்திரத்தைப் பற்றியும் மலத்தைப்பற்றியும் ஓயாது சிந்திப்பவர்கள் எழுதிய குப்பைகள்
குன்றுகளில் அமர வழி ஏற்பட்டுவிடுகிறது நல்ல காற்று வீசும்வரை.
பாண்டியன்ஜி
”தரமான கல்வி , தரமான வாசிப்பு ,தரமான சிந்தனை ,தரமான பேச்சு
ReplyDeleteஇவைகளில் ஏற்பட்ட குறைபாடே .. “
சாரு மீது சேறு இறைததவ்ர்கள் பய்ன்படுத்திய வார்த்தைகளையும், சாரு வாசகர்கள் நடந்து கொண்ட விதத்தையும் பார்த்தால் , தரமான வாசிப்பு, தவறான சிந்தனை என்றால் என்ன என்பது புரிந்து விடுமே...
@பாண்டியன்ஜி
ReplyDeleteசார்.. உங்கள் நல்லெண்ணம் புரிகிறது..
கடவுளும் நானும் என்ற நூலை படித்து இருக்கிறீர்களா?
சாருவின் மீது ஆதாரத்துடன் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுக்கு அவர் இதுவரை மழுப்பலாகவே பதில் சொல்லியிருக்கிறார். இவருக்காக வக்காலத்து வாங்குபவர்கள் இதை ஏன் தெளிவுபடுத்தவில்லை. சாருவை கடவுள் ரேஞ்சுக்கு கொண்டு போவது இலக்கியயுகத்தின் அவமானம். அவர் வீட்டு நாய்களுடன் அவர் கொஞ்சுவதை எல்லாரும் பார்க்கணுமாம்? என்ன ஒரு மனப்பாங்கு. ஒரு இலக்கியவாதியின் சமூகத்தின் மேலிருக்கும் ஆளுமை என்பதை சாரு தப்பாக புரிந்துவிட்டார் போல.
ReplyDeleteyubbbaa thirunthave mateengalada, thapu senchanu kooda othuka matengarenngalada, thappa illanu solluva nee, i think you are not born with/from woman, suyambuva?
ReplyDelete@ அனானி நண்பர்களே , சில "இலக்கியவாதிகளின் " சதி வேலைகளை நம்பி , பெண்களை இழிவு படுத்தும் வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள் .
ReplyDeleteஅன்பார்ந்த பார்வையாளன் தாங்கட்கு ,
ReplyDeleteதாங்கள் ஆவலோடு அறிமுகப்படுத்திய கடவுளும் நானும் புத்தகத்தை படிக்க முயற்சிக்கிறேன்.சாரு நல்ல எழுத்தாளராக இருக்கலாம்.அவருடைய ஆக்கங்கள் எதனையும் வாசித்து சமீபத்திய சர்ச்சைக்குள் நான் நுழையவில்லை.அவருடைய பல் வேறு உரைகளையும் அவ்வப்போது வெளியிடும் முன்னுக்கு
பின் முரணான கருத்துக்களையும் எழுத்துக்களில் கலக்கப்படும் தேவையற்ற கழிவுகளையும் கருத்தில் கொண்டே என் கருத்துக்களை வெளிப்படுத்தினேன்.இவையெல்லாம் படைப்புகளில் தேவையற்று சொருகும்போது மொழிக்கு தீரா அவமானமே மிஞ்சுமென்று கருதுகிறேன்.அண்ணா ,கல்கி ,ஜெயகாந்தன் ,நாபா போன்றோரின் நூல்கள் கையில் காணப்படும் போது அடைகிற கவுரவம் சாருவின் எழுத்துக்களில் ஏற்பட வேண்டுமென்பதே எனது எண்ணம்.
உங்கள் வலைப்பூவின் பெயரைக்கூட உங்கள் துணிவுக்கேற்ப மாற்றி அமைத்துக்கொள்ளலாம் என்பது என் அபிப்ராயம்.பிச்சைக்காரன் எதையும் தேடுவதில்லை.உலகில் வெரும் பார்வையாளனாக இருப்பது மனித வாழ்வுக்கு எந்த பொருளுமில்லை. நீங்கள் கூட இங்கே பார்வையாளனாக இருக்கவில்லை என்பதை நினைவூட்டுகிறேன்.என் வலைப்பூ வேர்களில் இதனையே நினைவூட்டி வருகிறேன்.
பாண்டியன்ஜி
தரம் தாழ்ந்த சொற்களோடு நுழையும் பின்னோட்டங்களுக்கு அருள் கூர்ந்து இடமளிக்காதீர்கள்.!
ReplyDeleteபாண்டியன்ஜி
பாண்டியன்ஜி சார் . எதிர் கருத்தை கூட , நீங்கள் இவ்வளவு பண்புடன் வெளிப்படுத்துகிறீர்கள் என்றால் அதற்கு காரணம் உங்கள் வாசிப்பு . சாரு எழுத்தை முழுதும் படித்து இருந்தால் அவரது சமூக அக்கறை , பெண்கள் மீது கொண்ட மரியாதை போன்றவற்றை உணர இயலும் . அது மனிதனை பண்படுத்தும் . எந்த வாசிப்பும் இல்லாதவர்கள்தான் வெறும் ஆபாச சிந்தனைகளால் மனதை நிரப்பி இருக்கிறார்கள் . நான் உங்கள் எழுத்து உட்பட அனைத்தையும் வாசிப்பவன் . சாரு எழுத்தை சுவாசிப்பவன்
ReplyDeleteபாண்டியன் ஜி சார் . எதிர் கருத்தை சொல்வதில் , உங்களை போன்றவர்களுக்கும் , வாசிப்பு பழக்கம் இல்லாதவர்களுக்கும் இருக்கும் வேறுபாட்டை உணர்த்தவே அனைத்து வகை பின்னூட்டங்களும் இடம் பெறுகின்றன . அருள் கூர்ந்து மன்னிக்கவும்
ReplyDeleteதப்பென தனக்கு படும் போது பொங்கி எழுந்து விளாசித் தள்ளும் அறமும் நேர்மையும் அடுத்தவன் வரையில்தான்,அது ஒருபோதும் தனக்கில்லை என்பதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்களானால்....ஸ்ரீமான் சாரு நிவேதிதா அவர்களைப் போல அற்புதமான மனிதரை தமிழ்நாடு மட்டுமல்ல கேரளாவிலும் கூட யாரும் கண்டெடுக்க முடியாதுதான்.
ReplyDelete"நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி வஞ்சனை செய்வாரடி கிளியே, வாய்ச்சொல்லில் வீரரடி"....பாரதியின் இந்த வரிகளைப் படிக்கும் இந்த தருணத்தில் உங்கள் நேர்மையாளரைப் பற்றி கொஞ்சம் யோசித்துப் பாருஙக்ள்.
ReplyDeleteஎத்தனை பொறுத்தமான வரிகள்.
எத்தனை பதிவுகள் போட்ட மாத்திரத்தில் எடுக்கப் பட்டிருக்கின்றன.எத்தனை வெத்துச் சவடால் பதிவுகள் காணாமல் போயிருக்கின்றன.கடவுளைக் கண்டேன் பதிவுகளை யாருடைய நேர்மையும், துணிவும் அழித்தது.
ReplyDeleteஸ்ரீமான் சாருநிவேதிதாவின் துணிவு என்று எதைச் சொல்கிறீர்கள் என தெரியவில்லை.இதை விட மோசமான ஒரு அவதூறை நீங்கள் அவருக்கு தரமுடியாது.
கடைசியாக ஒன்றைச் சொல்லி இங்கிருந்து நீங்க விரும்புகிறேன். உங்களுடைய எழுத்துநடை ஸ்ரீமான் சாருநிவேதிதா அவர்களே எழுதியதைப் போல இருக்கிறது.
ReplyDeleteஇதை நீங்கள் பாராட்டாகவும் எடுத்துக் கொள்ளலாம் அல்லது பகடியாகவும் எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில் உங்களின் அதீதமான சிந்தனைப் போக்கு அத்தகையதாய் இருக்கிறது.
@ கடவுளாக போற்றப்பட்டவர் என்றாலும் , நண்பராக ஆதரிக்கப்பட்டவர் என்றாலும் தவறு செய்தால் சுட்டிக்காட்ட மனோதைரியம் வேண்டும் . அது சாருவிடம் மட்டுமே இருக்கிறது .@ கடவுளாக போற்றப்பட்டவர் என்றாலும் , நண்பராக ஆதரிக்கப்பட்டவர் என்றாலும் தவறு செய்தால் சுட்டிக்காட்ட மனோதைரியம் வேண்டும் . அது சாருவிடம் மட்டுமே இருக்கிறது .
ReplyDelete"மகாநதி ,ஓம் ஷாந்தி ஓம் போன்ற சாருவின் விமர்சனங்களை படிக்கும் வாய்ப்பு எனக்கு இல்லை.அதை இங்கே வெளியிடலாமே?(குரிதிப்புனல் போல)"
ReplyDeleteகண்டிப்பாக அவை வெளியிடப்படும்... கொஞ்சம் காத்திருங்கள்//
.
.
.
அனானிகளுக்கும் பதில் சொன்னமைக்கு நன்றி.அந்த படங்கள் போல அச்சில் மற்றும் இணையத்தில் இப்போது கிடைக்காத விமர்சனங்கள் அனைத்தையும் வெளியிடுங்கள்.நன்றி.
நண்பரே,
ReplyDeleteசாரு நிவேதிதாவின் படைப்புக்களில் சுமார் 70 சதவிகிதத்தையும், அவருடைய வலைப் பதிவுகளை கடந்த சுமார் ஐந்து வருடங்களாக படித்தும் வருபவன் என்ற முறையில் சொல்கிறேன்: சாரு நிவேதிதா ஒரு கெட்டிக்காரத்தனமான எழுத்தாளர்; குறிப்பிடத்தக்க ஒரு படைப்பாளி என்று கூட சொல்லலாம். ஆனால், நேர்மையான ஒரு எழுத்தாளரில்லை.
நேர்மையான ஒரு எழுத்தாளராக இருந்திருந்தால் நித்யானந்தா குறித்த தனது பதிவுகளை அழித்திருக்க மாட்டார்; மிஷ்கினுடைய நந்தலாலாவை முதலில் உயர்த்திப் பிடித்திருக்க மாட்டார்; குஷ்பு, கனிமொழி, தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகிய கழகக் கண்மணிகளை "ஊரின் அழகான பெண்; அறிவான பெண்"ணென்றெல்லாம் விளித்து, அவர்கள் தன் புத்தக வெளியீட்டு வருகிறார்களென்று விளம்பரப்படுத்தி விட்டு, ஏழு மாதங்கள் கழித்து அவர்களை அழைத்தது மனுஷ்யபுத்திரன் என்று துக்ளக்கில் எழுதியிருக்க மாட்டார்.
இன்னொரு விஷயத்தையும் சொல்ல விரும்புகிறேன். கலை, இலக்கியம் தவிர்த்து சாரு நிவேதிதாவிற்கு எந்தத் துறையிலும் அறிவு கிடையாது. இவர் அரசியல், சமூகம் குறித்து பேசுவதெல்லாம் சுத்த அபத்தமாக இருக்கிறது. துக்ளக் வாசகர்கள் இவரது எழுத்தை எப்படிக் கொண்டாடுகிறார்கள் என்பதற்கு ஒரு சாம்பிள் கீழே:
"14 வயதில் ஒருவன் கடவுள் இல்லை என்று சொல்வது தவறில்லை. அவன் தன் எண்ணத்தை மாற்றிக் கொள்ள நேரமும் தருணங்களும் உள்ளன.
50 வயதில் ஒருவன் நித்யானந்தாவைப் பற்றி "கடவுளைக் கண்டேன்" என்று பல பதிவுகள் போட்டது ... அதுவும் தவறில்லைதான். அவர் கடவுளைப் பற்றி எவ்வளவு அறிந்திருக்கிறார் என்று அறிந்து கொள்ள அது உதவியது. உள்ளூர் கோவிலிருந்து, வெளிநாட்டுக் கோவில்கள் வரை சென்று கடவுளைத் தேடியவர் ஒரு லோக்கல் டுபாக்கூரில் அவரைக் கண்டறிந்தார் என்பதை நினைத்து, நினைத்து நமக்கும் ஒரு காமெடி ரிலீஃப் கிடைக்கிறதில்லையா?
ஆனால், அந்த ஆளே கடவுளறிவு பற்றி தொடர்ந்து போதனை நடத்துகிறார் என்றால் நம்மை மண்ணாந்தைகளாகத்தானே நினைக்கிறார் என்று கோபம் வருகிறது.
சீரியசான விஷயத்திற்கு வரலாம். பள்ளிக் கல்வி மூலமாக கடவுளின் இருப்பை சொல்லிக் கொடுத்து விடலாம் என்று நினைப்பது போன்ற அறியாமை வேறுண்டா? வாழ்வையும், இறைவனையும் அனுபவங்களின் மூலமாகவே அறிய முடியும். பள்ளிக்கூடப் படிப்பின் மூலமாக அல்ல. பள்ளிக் கூடப் படிப்பின் மூலமாக முக்கியமாக அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை பள்ளிக்கூடங்கள் அளித்து விட்டால் அதுவே பெரிய விஷயம்.
இந்த சிந்தனைத் திலகம் சாரு நிவேதிதாவை எழுத வைத்து துக்ளக் தரமிழந்து கொண்டு வருகிறது."
இதையெல்லாம் படித்து விட்டு சாரு நிவேதிதா தமிழ்ச் சமூகம் எழுத்தாளர்களை மதிப்பதில்லையென்று சொல்வார். தமிழ்ச் சமூகம் எழுத்தாளர்களை அவரவர் தகுதிக்கேற்ப மதித்துக் கொண்டுதான் இருக்கிறது. சாரு நிவேதிதாவும் தனது தகுதிக்கேற்ற மதிப்பைத்தான் பெற்றுக் கொண்டிருக்கிறார்.
நண்பரே, சில கருத்துகள்
ReplyDeleteஅ) மிக சிறிய விசயங்களுக்கு பல பதிவுகள் போடும் உங்கள் அபிமான எழுத்தாளர், மிகப்பெரிய பாலியல் குற்றச்சாட்டுக்கு இதுவரை நேரடியாக பதில் சொல்லாதது ஏன்?
ஆ) பார்க்கும் எல்லோரையும் வசை பாட வேண்டும் என்ற உங்கள் கூற்று உண்மையானால், அதற்கு மிக சிறந்த உதாரணம் அந்த எழுத்தாளர்தான். மிஷ்கின், நித்தி ஆகியோரை முதலில் போற்றி பின் தூற்றி எழுதியவை அரசியல்வாதிகளின் பேச்சுகளை மிஞ்சியவை.
இ) உங்களுக்கு பிடித்த எழுத்தாளரை கடவுளாக கொண்டாட உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால் அவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய புகார்களுக்கு அவர் மட்டுமே பதில் அளிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட நபர் மறுப்பு எதுவும் வெளியிடாத நிலையில், இது போன்ற பரப்புரைகள், தலைவனுக்காக தீ குளிக்கும் தொண்டனை நினைவு படுத்துகிறது.
ஈ) நித்தி வீடியோ வெளியான பின், அஷிரமத்தில் பல முறை அற்ற செயல்கள் நடந்ததாக தொடர் எழுதிய அந்த எழுத்தாளர், வீடியோ வெளியாகும் வரை அந்த சாமியாரை பற்றி பெருமையாக எழுதியது நேர்மை பிறழ்ந்த செயல்தானே?
எழுத்தை போற்றுங்கள். எழுத்தாளனை போற்றுங்கள். தனிப்பட்ட வாழ்கைக்கு வக்காலத்து வாங்க வேண்டாம். தவறுகளை நியாய படுத்த வேண்டாம்.
சாமான்யன்
பாண்டியன்ஜி, மு.சரவணக்குமார் , ஏவிஎஸ் you are wasting your time.
ReplyDeleteYour comment will be visible after approval.
ReplyDelete:-)
”மிகப்பெரிய பாலியல் குற்றச்சாட்டுக்கு இதுவரை நேரடியாக பதில் சொல்லாதது ஏன்”
ReplyDeleteஅதை குற்றச்சாட்டு என்றே சொல்ல இயலாது... அது புறம் இருக்க, இதற்கு பின் இருக்கும் “இலக்கியவாதிகள் “ செய்தது பெருங்குற்றம்.. அந்த பின்னணி தெரியும் போது உங்களுக்கு விடை கிடைக்கும்
”மிஷ்கின், நித்தி ஆகியோரை முதலில் போற்றி பின் தூற்றி எழுதியவை அரசியல்வாதிகளின் பேச்சுகளை மிஞ்சியவை.”
த்வறு செய்தவர்களை கண்டிக்கும் பண்பு அரசியல்வாதிகளுக்கு இருக்கிறதா? நீங்கள் இந்தியாவில்தான் இருக்கிறீர்களா?
”ஆனால் அவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய புகார்களுக்கு அவர் மட்டுமே பதில் அளிக்க வேண்டும்.”
சிலர் இதை பொதுவில் விமர்சிப்பதால்தான், பத்ல் அளிக்க வேண்டி இருக்கிறது
”வீடியோ வெளியாகும் வரை அந்த சாமியாரை பற்றி பெருமையாக எழுதியது நேர்மை பிறழ்ந்த செயல்தானே?”
நல்லவர் என நினைக்கும்போது பாராட்டினார்.. கெட்டவர் என தெரிந்ததும் திட்டினார் ..இதில் நேர்மை குறைவு எங்கே இருக்கிறது
” பள்ளிக் கல்வி மூலமாக கடவுளின் இருப்பை சொல்லிக் கொடுத்து விடலாம் என்று நினைப்பது போன்ற அறியாமை வேறுண்டா “
ReplyDeleteஅவர் அப்படி சொல்லவில்லை.. விரிவாக பிறகு எழுதுகிறேன்
நண்பரே,
ReplyDeleteசொந்த வலைத் தளமானால் வைரஸ் கடித்து விட்டது என்று கதை விட்டு பதிவுகளைத் தூக்கி விடலாம். ஆனால், துக்ளக் தளத்தில் அப்படிச் செய்ய முடியாதே. எனவே, சிந்தனைத் திலகம் எழுதியதை அப்படியே தருகிறேன்:
“என் குடும்ப நண்பர் ஒருவர் சொன்ன தகவல் இது: அவருடைய புதல்வன் சென்னையில் உள்ள பிரபலமான பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறான். இந்தக் காலத்துப் பிள்ளைகளைப் போலவே அதிபுத்திசாலி. கராத்தே, டென்னிஸ், இசை என்று பல துறைகளில் ஆர்வம். ஆனால், இந்த வயதிலேயே அவன் பேசும் நாஸ்திகம் என் நண்பருக்கு வருத்தமாக இருந்தது. பிரபஞ்சம் பற்றிய விஞ்ஞான விளக்கங்களைச் சொல்லி, ‘எங்கே உன் கடவுள்?’ என்று கேட்கிறானாம்.
பிரிட்டிஷ்காரர்களால் வகுக்கப்பட்ட இந்த விஞ்ஞான, பகுத்தறிவுக் கல்வி நம் குழந்தைகளின் உண்மையான மேம்பாட்டுக்கு வழி வகுப்பதாகத் தெரியவில்லை. அன்பு, மனிதநேயம், கருணை போன்ற மேன்மையான குணங்களுக்குப் பதிலாக, பணம் சம்பாதிப்பதே வாழ்க்கை என்பதாக இருக்கிறது இன்றையக் கல்வி. அந்தப் பையன் கடவுள் விஷயத்தில் ஒரு தீர்மானமான முடிவுக்கு வந்து விட்டான். அந்தத் தீர்மானம்தான் எனக்குக் கவலையைத் தருகிறது. 14 வயதில் ஒரு சிறுவனால் கடவுள் இல்லை என்ற முடிவுக்கு வர முடிகிறது. ஆனால், கடவுள் இருந்தாலும் இருக்கலாம் என்ற இன்னொரு பக்கத்தைக் காட்ட இந்த கல்வி தவறி விட்டது.”
இதைப் படித்த பிறகும் “அவர் அப்படி சொல்லவில்லை” என்று விரிவாக சப்பைக் கட்டு கட்டிட விளைவீர்களாயின் எனக்கு தனிமடல் அனுப்புங்கள். வாசிக்கிறேன். தமிழில் காமெடி எழுதுபவர்கள் குறைந்து கொண்டே வருகிறார்கள். எனவே, அபூர்வமாக அப்படி வரும் எழுத்துக்களை வாசிக்க ஆசையாக இருக்கிறேன்.
நண்பரே,
ReplyDeleteஎனது கடுமையான பின்னூட்டங்களை அனுமதிப்பதற்கு நன்றி. கீழ்க்கண்டது அநேகமாக இந்தத் தலைப்பில் எனது கடைசியான பின்னூட்டமாக இருக்கும்.
மற்றவர்களின் தவறுகளைக் கண்டிக்கும் குணம் இந்தியாவில் அரசியல்வாதிகள் உட்பட எல்லோருக்கும் இருக்கிறது. தங்கள் தவறுகளுக்காக வருந்தும் நேர்மையாளர்கள்தான் இங்கு அரிதாக இருக்கிறார்கள். சாரு நிவேதிதா தான் செய்த எந்தத் தவறுக்கும் இதுவரை பொறுப்பேற்கவுமில்லை; வருந்தவுமில்லை. இவர் எழுதிய “கடவுளைக் கண்டேன்” படித்து விட்டு நித்தியானந்தாவிடம் ஏமாந்தவர்களிடம் “நான் அறிவில்லாமல் எழுதி உன்னையும் ஏமாற வைத்து விட்டேன், வருத்தமாக இருக்கிறது, என்னை மன்னித்து விடு” என்ற தொனி அவரது எந்தப் பதிவிலாவது இருக்கிறதா? இருக்காது, முழுப் பழியும் நித்யானந்தா மேல்தான்.
இவர் எந்தவித சமரசமும் செய்து கொள்ளாமல் திரைப்பட விமர்சனங்கள் எழுதிக் கொண்டிருந்தார் என்று நினைத்துக் கொண்டிருந்தோம். “நந்தலாலா”வை வானளவு புகழ்ந்து தள்ளினார். அதில் வரும் வசனங்களையெல்லாம் சிலாகித்தார். மிஷ்கின் இவரது புத்தக வெளியீட்டு விழாவில் இவரை அவமானப்படுத்தியவுடன் அந்தக் கட்டுரையைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்; அது புத்தகமாகப் பதிப்பிக்கப்பட மாட்டாது என்றார். கலைப் படைப்புக்களை சமரசமில்லாமல் விமர்சிக்கும் ஒருவர், கலைப் படைப்பை உருவாக்கிய நபர் நண்பனாக இருந்தாலும், பகைவனாக இருந்தாலும் ஒரே விதமாகத்தான் விமர்சிப்பார்; தான் எழுதிய விமர்சனத்திற்கு வாழ்நாள் முழுவதும் பொறுப்பேற்பார் என்றுதானே எதிர்பார்ப்போம். சாரு நிவேதிதாவிடம் எதிர்பார்க்கலாமா?
இப்போது கழகக் கண்மணிகள் இவரது புத்தக விழாவிற்கு அழைக்கப்பட்ட விஷயத்தில் முழுப் பழியையும் மனுஷ்யபுத்திரன் மேல் தூக்கிப் போட்டு விட்டார். எதிர்பார்த்தது போலவே அவரது தளத்திலிருந்த “ஊரின் அழகான பெண், அறிவான பெண்” பதிவையெல்லாம் வைரசோ, பாக்டீரியாவோ தின்று விட்டது. “இப்படி ஒருவர் இருந்தாரா என எதிர்காலம் ஆச்சர்யப்படும் அளவுக்கு வாழும் ஒருவர் வாழும் காலத்தில் நானும் வாழ்வதில் பெருமைப்படுகிறேன்” என்கிறீர்கள். நேர்மையோ, நாணயமோ இல்லாத சாரு நிவேதிதாவைப் புகழ ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மகாத்மா காந்தியைப் பற்றி எழுதிய வரிகளை நீங்கள் உபயோகித்திருப்பது மிகுந்த ஆபாசமாக இருக்கிறது என்று நினைக்கிறேன் நான்.
//நேர்மையோ, நாணயமோ இல்லாத சாரு நிவேதிதாவைப் புகழ ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மகாத்மா காந்தியைப் பற்றி எழுதிய வரிகளை நீங்கள் உபயோகித்திருப்பது மிகுந்த ஆபாசமாக இருக்கிறது என்று நினைக்கிறேன் நான்.//
ReplyDeleteYes
எதிர்கருத்துகளையும் பண்புடன் எடுத்து வைப்பதற்கு சிறந்த வாசிப்புப் பழக்கம் இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறீர்கள். சாரு தனது வலை தளத்தில் எத்தனையோ எதிர்கருத்துகளை
ReplyDeleteமிகவும் தரம் தாழ்ந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி எழுதி உள்ளார்.... அது தவறில்லையா?