Pages

Friday, August 12, 2011

நல்லோரைப் பற்றி பேசுதல் நன்று- பதிவர் சிவகுமார்

 அந்த காலத்தில் கிரேக்க  நாட்டில், ஒரு பிரமாண்டமான , அழகிய , காலகாலமாக பெயர் சொல்லும் கட்டடம் ஒன்று கட்ட முடிவெடுத்து கட்டினார்கள்.
மாபெரும் பொருட்செலவு... மனித உழைப்பு... பலரின் தியாகம்...

ஆனால் , காலம் காலமாக நின்று பெயர் சொல்ல போகிறதே... அதன் பொருட்டு, இந்த விலையை கொடுக்க தய்ராக இருந்தார்கள்..

அடுத்த நாள் திறப்பு விழா...

உழைத்த களைப்பு தீர , அனைவரும் உறங்கினர்...

ஃபிரெஷாக குளித்தி விட்டு, திறப்பு விழாவுக்கு சென்ற அவர்களுக்கு அதிர்ச்சி காத்து இருந்தது..
ஆம்.. அவர்களது கனவு மாளிகை தரை மட்டம் ஆக்கப்ப்ட்டு இருந்தது,,

நாடே சேர்ந்து கட்டிய கட்டடம்..எனவே இதற்கு ஆபத்து வரும் என யாரும் எண்ணிப்பார்க்கவில்லை... எனவே பாதுகாப்பு போடப்படவில்லை..
யார் இடித்தது? ஏன் இடித்தார்கள்?

துப்பறியும் நிபுணர்களுக்கு வேலை வைக்காமல் , குற்றவாளி சரண் அடைந்தான்..

“ நான் தான் இடித்தேன் .. எனக்கு மரண தண்டனை விதிப்பீர்கள் என தெரியும்..பரவாயில்லை... என் பெயர் சரிதிரத்தில் இடம் பெற்று விட்டது. அது போதும் “ என்றான்..

யார் யார் அந்த கட்ட்டம் கட்ட உழைத்தார்கள் என்பது மறந்து விடும்..இடித்தவன் பெயர் நின்று விடும் என்பது அவன் கணக்கு....

மனித மனம் என்றும் இப்படித்தான் செயல்படுகிறது/// நமக்கு கெட்டது செய்பவர்களை திட்டும் நான், நல்லது செய்பவர்களை பாராட்டுவதில்லை
( மேற்கண்ட சம்பவத்தில், குற்றவாளியின் பெயரை வேண்டும் என்றே மறைத்து இருக்கிறேன் )

ஒரு துரோகியை பற்றி சில நாட்களாக எழுதி வரும் நான், ஒரு நல்லவரைப்ப்ற்றி எழுதாமல் போய் விட்டேனே என்ற வேதனையில், இதை எழுதுகிறேன்..

பதிவர் மெட்ராஸ் பவன் சிவகுமார் நான் ரசிக்கும் பதிவர்களில் ஒருவர்,,
தரமான எழுத்து அவர் பாணி.

அவர் புத்தக காதலர் என சொல்ல முடியாது... அவரது முதல் காதல் உலக சினிமாதான்.. புத்தகங்களும் படித்தாலும், தன் அறிவுக்கு பசிக்கு புத்தகங்களை மட்டும் அவர் நம்பி இருப்பதில்லை...

ஆனால் , புத்தக கண்காட்சி நடந்தால் , அதைப்பற்றி உடனே பதிவிட்டு விடுவார்.... எனக்கு தனிப்பட்ட முறையில் போன் மூலம் தெரிவிப்பார்...

இது போல சமீபத்தில் , ஒரு புத்தக கண்காட்சி அவர் மூலம் கேள்விப்பட்டு சென்றேன்.. அவரைப்பார்த்து  நாளாகி விட்டதால், அவரையும் வர சொல்லி இருந்தேன்.

அவரும் குறிப்பிட நேரத்துக்கு வந்தார்..
அவருடன் உரையாடுவது தனி அனுபவம்... தரம் குறையாமல் , அதே நேரத்தில் உறுதியாக தன் கருதுக்களை சொல்வதிலும் , வாதம் புரிவதிலும் திறமைசாலி அவர்..

இருவரும் புத்தகங்கள் எடுக்க ஆரம்பித்தோம்.... அவர் பரபரப்பாக புத்தங்கள் செலக்ட் செய்வது பார்த்து ஆச்சரியமாக இருந்தது....

பிறகு தெரிந்தது... அவர் எடுத்த புத்தகங்கள் அவருக்கு அல்ல ( அவருக்கு தேவையானதை முன்பே வாங்கி விட்டார்) இப்போது வாங்குவது அவரது அன்னைக்கும், நண்பர்களுக்கும் பரிசளிக்க...

மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது...

அதன் பின் பில் போடும் இடத்தில், இன்னொரு சர்ப்ரைஸ்...

” நீங்கள் வாங்கிய அனைத்து புத்தகங்களும் என் பரிசாக வைத்து கொள்ளுங்கள் “ என சொல்லி விட்டு தானே பில் கொடுத்து விட்டார் அவர்...

ஒரு சகோதரன் போல அவர் காட்டிய அன்பு மகிழ வைத்தது என்றால், அதன் பின் அவர் இல்லம் சென்ற போது, அவர் அன்னை , என்னையும் ஒரு மகனாக நினைத்து அன்புடன் பேசியது நெகிழ வைத்து விட்டது...

விடை பெற மன்ம் இல்லாமல் , கிளம்பி வந்தேன்,,,

இது போன்ற நல்லவர்களை பற்றி பேசினால்தான், நல்லது பரவும்..மீண்டும் மீண்டும் சில துரோகிகளை பற்றி பேசினால், கசப்புதான் பரவும் என்பதால் இந்த பதிவு.

8 comments:

  1. நல்ல பதிவு நண்பரே..சிவா மேல் கொண்ட மரியாதை/அன்பு இன்னும் அதிகம் ஆகிறது.

    ReplyDelete
  2. இது போன்ற நல்லவர்களை பற்றி பேசினால்தான், நல்லது பரவும்.

    ....My principle!!! :-)
    இந்த குறிப்புக்கு பொருத்தமாகத் தான், நானும் இந்த வார பதிவு போட்டு இருந்தேன்.

    ReplyDelete
  3. பார்வையாளன் சார். எந்த வித ரத்த சம்மந்தமும் இன்றி இறுதி வரை நமக்காக தோள் குடுக்கும் நண்பர்களை விட உயர்ந்த உறவு இல்லை. இது என் அனுபவம். பதிவுலக நட்பும் என்றும் நிலைத்து நிற்கும். விரைவில் மீண்டும் சந்திப்போம். மிக்க நன்றி!!

    ReplyDelete
  4. மிகவும் அருமை.தோள்கொடுக்கும் நண்பர்கள் நமக்கு
    மிக உயர்ந்த உறவுதான்.பதிவுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. சிவக்குமார் பதிவுலகில் ஒரே...ஒரே....நல்லவர்(ன்)

    ReplyDelete
  6. உடனடியா அந்த நல்லவரை பார்க்கணும் போல இருக்கே..

    ReplyDelete
  7. சிவாவிடம் மொபைல் லில் பேசி உள்ளேன் தவிர பார்த்தது இல்லை .. உங்கள் பதிவை படித்ததும் பார்க்க தோன்றுகிறது

    ReplyDelete
  8. சிவா நல்ல நண்பர், பழகுவதற்கு இனிமையானவர், உங்கள் வார்த்தை 100% சரியானது

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]