காப்காவின் இந்த கதை உலக புகழ் பெற்ற ஒரு கதை... மிகவும் யோசிக்க வைத்து , என் நினைவில் நீங்கா இடம் பெற்ற இந்த கதையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
************************************************************************
கடந்த சில வருடங்களில் பட்டினி கலைஞர்களின் மீதான ஆர்வம் வெகுவாக குறைந்து விட்டது. ஒரு காலத்தில் பட்டினி கிடக்கும் இந்த அரிய கலையை பயன்படுத்தி , சுய தொழில் செய்ய முடிந்தது. வெகுவாக பணமீட்டவும் முடிந்தது.
இப்போது இது சாத்தியமில்லை.
அதெல்லாம் ஒரு காலம். அப்போதெல்லாம் ஒரு பட்டினி கலைஞன் , ஒட்டு மொத்த ஊரின் கவனத்தை ஈர்த்து வைத்திருப்பான். உண்ணாவிரத்தை ஆரம்பித்து அதை முடிக்கும் வரை , நாளுக்கு நாள் பார்வையாளர்கள் அதிகரித்தவண்ணம் இருப்பார்கள். உண்ணாவிரத கலைஞனை , ஒவ்வொரு நாளும் ஒரு முறையேனும் பார்த்து விடுவார்கள்.நிகழ்ச்சிக்கான அனுமதி சீட்டை மொத்தமாக வாங்கி கொண்டு நாள் முழுதும் , அந்த உண்ணா விரத கலைஞன் அமர்ந்து இருக்கும் சிறிய கூண்டின் முன் அமர்ந்து ஆவலாக கவனிப்பவர்களும் உண்டு. இரவில் இந்த நிகழ்ச்சியை கண்டு மகிழ்பவர்களும் உண்டு. இரவை பகலாக்கும் ஒளி வசதி , இந்த நிகழ்வை மேலும் சிறப்பாக்கியது.
சில பிரத்தியேக நாட்களில் அந்த கூண்டு திறந்த வெளிக்கு எடுத்து வரப்பட்டு , பட்டினி கலைஞன் மக்கள் பார்வைக்கு - குறிப்பாக சிறுவர்களின் பார்வைக்கு - வைக்கப்படுவான்.பெரியவர்களை பொருத்தவரை இந்த கலை நிகழ்ச்சியை ஒரு நகைச்சுவையாகத்தான் நினைத்தார்கள். ஆனால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது நாகரிகம் என கருதப்பட்டதால் இதில் கலந்து கொண்டனர்.ஆனால் சிறுவர்கள் , இதை வாய் மூடாமல் பிரமிப்புடன் பார்த்தார்கள். ஒருவர் கரத்தை ஒருவர் பாதுகாப்பாக பற்றியவண்ணம் நிகழ்ச்சியை பார்த்தார்கள்.
அந்த கலைஞன் கூண்டில் அமர்ந்து இருப்பான். சில சமயம் மென்மையாக தலையசைப்பான். வலுக்கட்டயமாக வரவழைக்கப்ப்ட்ட புன்னகையுடன் கேள்விகளுக்கு பதில் அளிப்பான். ,
சமயங்களில் தன் கைகளை வெளியே நீட்டி , சாப்பிடாமல் தான் மெலிந்து போயிருப்பதை பார்வையாளர்களுக்கு உணர்த்துவான்.ஆனால் இது கொஞ்ச நேரம்தான். அதன்பின் வேறு எதிலும் கவனம் செலுத்தாமல் தன்னுள் ஆழ்ந்து விடுவான். அந்த கூண்டில் இருக்கும் கடிகாரம் உட்பட எதையும் கவனிக்க மாட்டான். கண்கள் கிட்டத்தட்ட மூடப்பட்ட நிலையில் தன் முன்புறமாக பார்வையை செலுத்திகொண்டு இருப்பான். அவ்வப்போது சிறிய குடிவையில் இருக்கும் தண்ணீரை சற்று உறிஞ்சி , தன் உதடுகளை ஈரமாக்கிக் கொள்வான்.
அவ்வப்போது பார்த்து செல்லும் பார்வையாளர்களைத்தவிர சில நிரந்தரமான பார்வையாளர்களையும் பொதுமக்கள் நியமித்து இருந்தனர். இதில் வினோதம் என்னவெனில் அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் , கசாப்புக்கடைக்காரர்கள். எந்த நேரத்திலும் மூன்று பேர் கொண்ட அந்த குழு இரவும் பகலுமாக அந்த கலைஞனை கண்காணிக்கும். ரகசியமாக அவன் உணவு அருந்த வில்லை என்ப்தை உறுதி செய்வது இந்த குழுவின் வேலை.
ஆனால் இது சம்பிரதாயமான ஒன்று. இந்த கண்காணிப்புக்கு அவசியமே இல்லை. எந்த ஒரு நிலையிலும், வற்புறுத்தப்பட்டால் கூட , அந்த கலைஞன் ஒரு துளி உணவைக்கூட எடுத்துக்கொள்ள மாட்டான் என்பதை அனைவரும் அறிவர். அந்த கலையின் கவுரவம் அதை ஏற்காது.
அந்த கண்காணிப்போர் குழுவுக்கு இது புரியவில்லை. வேண்டுமென்றே சற்று தொலைவில் அமர்ந்து தீவிரமாக சீட்டாடுவார்கள். தம் கவனம் முழுதும் ஆட்டத்தில் இருக்கும்ப்போது அந்த கலைஞன் ரகசியமாக சாப்பிடக்கூடும் என்பது அவர்கள் எண்ணம்.
இது போன்ற கண்காணிப்பை போல வேதனை தருவது வேறு ஒன்றும் அந்த கலைஞனுக்கு இல்லை. அவனை அவர்கள் நோகடித்தார்கள். அந்த கலையை கடினமாக்கினார்கள். இதை சமாளிப்பதற்காக, அவர்கள் பார்க்கும்போது பாடுவது அவன் வழக்கம். அவர்கள் சந்தேகம் எவ்வளவு தவறானது என இப்படி உணர்த்த முயற்சிப்பான். ஆனால் அதில் பயன் அதிகம் இல்லை. பாடிக்கொண்டே எப்படியோ சாப்பிட்டு விடுகிறானே என அவர்கள் ஆச்சரியத்துடன் தங்களுக்குள் பேசிக்கொள்வார்கள் அவர்கள்.
அந்த அறையின் மங்கலான வெளிச்சத்தில் திருப்தி அடியாத நிகழ்ச்சி நிர்வாகி மின் ஒளி விளக்குகளை பார்வையாளர்களுக்காக ஏற்பாடு செய்திருந்தார். இந்த ஒளி வெள்ளம் அந்த கலைஞனை கொஞ்சமும் பாதிக்கவில்லை. பொதுவாக அவனால் தூங்க முடிந்ததே இல்லை. எந்த வெளிச்சத்திலும், எந்த சத்தத்திலும் , கூட்டத்திலும், எந்த நேரமாக இருந்தாலும் சற்று கண் அயர்வான் . அவ்வளவுதான்.
தன்னை கண்காணிக்க பார்வையாளர்கள் இருப்பது இந்த கலைஞனுக்கு மகிழ்சி ஏற்படுத்தும். அவர்களுக்காக இரவு முழுதும் தூங்காமல் இருப்பான். அவர்களுடன் கலகலப்பாக பேசியும், பழங்கதைகள் பேசியும் , அவர்கள் கதையை சொல்ல சொல்லியும், அவர்களை தூங்காமல் பார்த்து கொள்வான். தான் உண்மையிலேயே சாப்பிடாமல் இருப்பதை இப்படி நிரூபிப்பான். ஆனால் காலையில் தன செலவிலயே அவர்களுக்கு காலை உணவு வழன்கி மகிழ்வான். இரவு முழுதும் விழித்து இருந்து கடுமையாக பணியாற்றிய அவர்கள் ஆவலாக உணவை எடுத்துக்கொள்வார்கள்.. ஆனால் இதுவும் ஒரு சாராரிடையே சந்தேகத்தை கிளப்பியது. காலை உணவு வாங்கி கொடுத்து , கண்காணிப்பாளர்களை பொய் சாட்சி சொல்ல வைக்கிறான் என குற்றம் சாட்டினர் சிலர்.. சரி, உணவு வாங்கி தரவில்லை.. நீங்கள் வந்து கண்காணியுங்கள் என அழைப்பு விடுத்தால், சாக்கு போக்கு சொல்லி நழுவினர். ஆனாலும் அவர்கள் சந்தேகம் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது
ஆனால் இந்த சந்தேகம் தவிர்க்க முடியாத ஒன்று . ஏனென்றால் இரவு பகலாக , அவன் அருகேயே அமர்ந்து அவனை கண்காணிப்பது சாத்தியமற்ற ஒன்று. அதனால் தன அனுபவத்தை மட்டும் வைத்து ,அவன் சாப்பிடாமல் ஏமாற்றாமல் தொடர்ந்து உண்ணாவிரதம் இருக்கிறான் என யாரும் சொல்லும் நிலையில் இல்லை.. அந்த கலைஞனுக்கு மட்டுமே உண்மை தெரியும்,. அதே சமயம்&கலைஞனின்;;உண்ணாவிரத செயல் திறமை மீது முழு திருப்தி கொண்ட ஒரே பார்வையாளனும் அந்த கலைஞன் மட்டும்தான்.
ஆனால் அவன் திருப்திக்கு காரணம் வேறு. இந்த நிறைவுக்கு காரணம் , அவனை எழும்பும் தோலுமாக ஆக்கி , சிலர் பார்க்க விரும்பாத பரிதாப தோற்றத்தை தந்த , இந்த உண்ணாவிரதம் அன்று. இந்த உண்ணாவிரதம் எவ்வளவு சுலபமான ஒன்று என அவைக்கு தெரியும். அதை சொல்லியும் இருக்கிறான்., ஆனால் யாரும் இதை நம்ப தயாராக இல்லை..சிலர் தன்னடக்கம் என நினைத்தனர் அவனை ஏமாற்றுக்காரன், விளம்பர மோகம் படித்தவன் என நினைத்தனர் . .
(தொடரும் )
ரொம்ப நாளாக உங்கள் பதிவையே காணோமே என்று நினைத்தேன். நலமா?
ReplyDelete