Pages

Wednesday, September 14, 2011

பதிவுலகம் அழிந்து வருகிறதா?

ஃபேஸ்புக், பஸ் போன்றவற்றால் பிளாக் எழுதுவது குறைகிறதா? பிளாக் உலகம் அழிகிறதா என்பது கேள்வி..

உடனடி ஃபீட் பேக், விவாதம் என சில வசதிகள் அவற்றில் இருப்பது உண்மை.. பிளாக்கில் பிசியாக இருந்த சிலர் அங்கு பிசியாக இருப்பதும் உண்மை..
இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன?

ஒவ்வொருவருக்கும் ஒரு ரசனை உண்டு.. ஆர்வம் உண்டு. இதில் உயர்ந்தது தாழ்ந்தது என எதுவும் இல்லை...

சிலருக்கு பரபரப்பு ஏற்படுத்துவது பிடித்து இருக்கலாம். அரட்டை பிடித்து இருக்கலாம்..  கூட்டம் சேர்ப்பது பிடித்து இருக்கலாம்..

இவர்களுக்கும் பிளாக் இடம் அளித்தது...  “ என்ன எழுதவது..ஒன்றுமே இல்லை “ என கூட சிலர் பதிவிடுவதும், அதற்கு சிலர்  விமர்சன பின்னூட்டம் இடுவதும் உண்டு..

ஆனால் இந்து போன்ற கேளிக்கைகளுக்கு பிளாக்கை விட ஃபேஸ் புக், பஸ் போன்றவை உகந்தது என்பதால், மேற்கண்ட பாணியிலான எழுத்துக்கள் தற்போது பிளாக்கில் குறைந்து விட்டன.

அதே நேரத்தில் , கூட்டம் சேர்ப்பதைப்பற்றி கவலைப் படாமல், தம் சிந்தனைகளை , நல்ல தகவல்களை பகிர்பவர்கள். முன்னைக்காட்டிலும் அக்கறை எடுத்து பிளாக் எழுத ஆரம்பித்துள்ளனர்..

தற்போது , பிளாக்கில் ஆரவார எழுத்துக்கள் குறைந்து விட்டதால் , நல்ல எழுத்துக்களை , நிதானமாக படிக்க முடிகிறது..

திரட்டிகளில் இனைத்தல், ஓட்டு  போடுதல் என்பதெல்லாம் தெரியாத சில தமிழ் அறிஞர்கள் பிளாக் எழுதி வருவது இப்போதுதான் என் பார்வைக்கு வந்தது .. கிரேட்.. மிக பயனுள்ளதாக இருக்கிறது..

அதே போல , சரக்குள்ள பழைய பதிவர்கள் மட்டுமே இன்றும் எழுத்தை தொட்ர முடிகிறது என்பதால், அவர்களின் எழுத்தும் மேம்பட்டுள்ளது..

இந்த நிலை எனக்கு மகிழ்வளிக்கிறது... தொடர்ந்து எழுதுங்கள் என அனைவரையும் கேட்டு கொள்கிறேன்

13 comments:

  1. நல்ல பகிர்வு பார்வையாளன், ஒரு கதை போஸ்ட் பண்ணி இருக்கிறேன் பாருங்களேன். நீங்கள் என் வலைப்பூவின் ஆதர்ச வாசிப்பாளர் அல்லவா?

    ReplyDelete
  2. //இந்த நிலை எனக்கு மகிழ்வளிக்கிறது... தொடர்ந்து எழுதுங்கள் என அனைவரையும் கேட்டு கொள்கிறேன்
    //



    எனது கருத்தும் இதுவே..

    நண்பரின் பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  3. டிவிட்டர்,ஃபேஸ்புக் நேரத்தைத் தின்னும் என்பதாலோ என்னவோ
    இதுவரை அங்கு தலை வைத்துப் படுக்க வில்லை. இருந்தும் பிளாக் எழுதுவதற்கு எனக்கு முன்பு போல் ஆர்வம் வரவில்லையே ஏன்,
    ஒரு வேளை சரக்கு குறைந்து விட்டதோ இல்லை 'சமயம்' கிடைக்க வில்லையோவென யான் அறியேனே தோழா :)

    ReplyDelete
  4. உண்மையில் பெரும்பாலானவர்கள் தங்கள் தொழில்களில் பிஸியாகிவிடுவதால் பதிவுகள் குறைவதாக எண்ணுகின்றேன். பதிவுலகத்தில் இப்போது களப்பிலா காலம் நடக்கின்றது எனபதும் உண்மைதான்

    ReplyDelete
  5. புதுசு புதுசா பதிவர்கள் வந்துண்டேதான் இருக்கா கலக்கலா பதிவுகளும் போட்டுண்டுதானே இருக்கா.

    ReplyDelete
  6. "சரி அப்புறம்..."

    மிக சிறந்த முறையில், பதிவர் சந்திப்பு நடந்ததில் உங்கள் ஈடுபாட்டை கேள்வி பட்டேன் . மகிழ்ந்தேன்..

    ReplyDelete
  7. ”பிளாக் எழுதுவதற்கு எனக்கு முன்பு போல் ஆர்வம் வரவில்லையே ஏன், ”

    அதற்கு காரணம் பொறுப்புணர்வு... வெறுமனே எதையும் எழுத விரும்பாமல், வெயிட்டான விஷ்யத்திற்காக காத்து இருக்கிறீர்கள்...

    ReplyDelete
  8. ’ஒரு கதை போஸ்ட் பண்ணி இருக்கிறேன் பாருங்களேன்.’

    அதை நீங்கள் வெளியிட்ட தினமே பார்த்து விட்டேனே... இப்போதெல்லாம் , எழுதுவதை விட , படிப்பதில்தானே அதிக நேரத்தை பயன்படுத்துகிறேன் !!

    ReplyDelete
  9. உண்மையில் பெரும்பாலானவர்கள் தங்கள் தொழில்களில் பிஸியாகிவிடுவதால் பதிவுகள் குறைவதாக எண்ணுகின்றேன். ”

    தேவயற்ற அக்கப்போர்கள்தான் குரைந்துள்ளன..

    ReplyDelete
  10. புதுசு புதுசா பதிவர்கள் வந்துண்டேதான் இருக்கா கலக்கலா பதிவுகளும் போட்டுண்டுதானே இருக்கா.”

    உண்மை

    ReplyDelete
  11. ” வாழ்த்துக்கள்
    என் நண்பா.”

    ந்ன்றி நண்பரே

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]