Friday, September 30, 2011

பிரபஞ்ச வரலாற்றில் மாபெரும் கண்டுபிடிப்பு- சில சந்தேகங்கள்

இது வரை நடந்துள்ள அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கெல்லாம் உச்சமாக , புதிய கண்டு பிடிப்பு நிகழ்ந்துள்ளதாக அறிவியல் உலகம் பெருமையில் மகிழ்ந்து போய் இருக்கிறது.. அறிவியலாளர்கள் பிரமித்து போய் இருக்கின்றனர்... ஒரு வேளை இந்த கண்டு பிடிப்பு உறுதி செய்யப்பட்டால், நாம் இது வரை படித்த அறிவியலின் அடிப்படையே தகர்ந்து போய் விடும்.. ஒரு செயல் என்றால் அதற்கு விளைவு இருக்க வேண்டும் என்பது நம் அடிப்படை நம்பிக்கை.. நிகழ்காலம் என்பது இறந்த காலத்தில் இருந்து , எதிர்காலம் நோக்கி செல்லும் பயணத்தில், ஒரு மைய இடம் என நினைக்கிறோம்... இது எல்லாம் தவறாகி விடும் , இந்த புதிய கண்டுபிடிப்பு நிரூபிக்கப்படும் பட்சத்தில்..

அப்படி என்ன பெரிய கண்டுபிடிப்பு?

ஒளியை விட விரைவாக பயணம் செல்லக்கூடிய பொருளை கண்டுபிடித்து இருக்கிறார்களாம். ஒளியை விட வேகமாக எதுவும் எல்ல முடியாது என்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் கொள்கை தவறாகி விட்டதாம் ..
இதுதான் அந்த கண்டுபிடிப்பு.

எப்படி இதை செய்தார்கள்?

நியூட்ரினோக்கள் என்ற பொருட்களை ஜெனிவாவில் உருவாக்கினார்கள்.. இவற்றை இத்தாலியில் இருக்கும் ஒரு இடத்துக்கு அனுப்பி வைத்தார்கள்..இது அங்கு செல்ல எடுத்து கொண்ட நேரம், ஒளி அங்கு செல்ல எடுத்து கொண்ட நேரத்தை விட குறைவாக இருந்தது.

அதாவது ஒளியை விட விரைவான பொருள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது..

ஒளியை விட விரைவான பொருள் இருக்க முடிந்தால், கடந்த காலத்துக்கு செல்லுதல் போன்ற வினோதமான செயல்களும் சாத்தியம்தான் என்பது அறிவியல்... ( இது எப்படி என்பதற்கு , முந்தைய பதிவுகளை பார்க்கவும் )


நாங்கள் பல முறை ஆராய்ந்து இந்த முடிவை அறிவிக்கிறோம்... தவறாக அறிவித்து அசிங்கப்படக்கூடாது என்பதற்காக முயற்சி எடுத்து இதை செய்து இருக்கிறோம்... யார் வேண்டுமானாலும் சோதித்து பார்த்து கொள்ளுங்கள் என்கிரன்றனர் இதை நடத்திய விஞ்ஞானிகள்..

இதை தகுந்த சோத்னைக்கு உட்படுத்திய பின்பே அதிகாரபூர்வமாக அறிவிப்பார்கள்... அப்படி அதிகாரபூர்வமாக அறிவித்தால், நமது நம்பிக்கைகள், கருத்துக்கள், செயல்-விளைவு தத்துவம், என எல்லாமும் மாறிவிடும்..

இது ஒரு புறம் இருக்க, இது தவறாக இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது...

எப்படி?

1 செல்லும் ஊடகத்தை பொறுத்து, ஒளியின் வேகம் லேசாக மாறுபடக்கூடும்.. ஆனால் நியூட்ரினோக்கள் சீரான வேகத்தில் செல்லும்... ஊடகம், ஒளியின் வேகத்தை குறைத்து இருக்க கூடும்..

2. சோதனை நடந்த அந்த இத்தாலி பிரதேசத்தில், சமீபத்தில் நில நடுக்கம் ஏற்பட்டது.. எனவே அவர்களின் தூர கணக்கீடு தவறாக போய் இருக்கலாம்.. வேகம் = தூரம் / நேரம்.. தூரம் தவறு என்றால் வேகம் தவறாக கண்க்கில் வரும்..

3 எத்தனையோ நட்சத்திரங்களை ஆராய்கிறார்கள்..எரி நட்சதிரங்களை , தன் ஒளியை வைத்து அறிகிறர்கள்...ஒளியை விட சீக்கிரமா எதுவும் வந்து அடைந்ததாக சரித்திரம் இல்லை

4

இபப்டி பல சந்தேகங்களும் இருக்கின்றன...

என்னதான் நடக்க போகிறது என பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்..

5 comments:

  1. இந்த நியூடிர்னோ பற்றி ஆய்வு கூடம் தேனீ மாவட்டத்தில் உள்ள ஒரு மலையை குடைந்து அமைக்க போகிறார்கள். இந்த நியூடிர்னோ எந்த பொருளையும் உடுருவும் தன்மை கொண்டது மேலும் அது இந்த பிரபஞ்சம் முழுவதும் நிறைந்து உள்ளது எனவே இந்த நியூடிர்னோக்கள் முலம் ஆய்விற்கு எந்த இடையூறும் இல்லாமல் இருக்க, அவைகளை ஆய்வு செய்ய ஒரு கிலோமீட்டர் ஆழத்தில் கிராநைட் மலையை குடைந்து வைக்க போகிறர்களாம்.
    இந்த நியூடிர்னோக்கள் பற்றிய ஆய்வில் உலகில் மிக சில நாடுகள்தான் முனைப்பாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    ReplyDelete
  2. http://www.thehindu.com/news/states/tamil-nadu/article836333.ece

    ReplyDelete
  3. தகவல்களுக்கு நன்றி!

    உங்களைப் பற்றி வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.com/2011/10/blog-post.html -ல் சொல்லியுள்ளேன். முடிந்த போது பார்க்கவும்!

    ReplyDelete
  4. அருமையான பதிவு நண்பரே!!

    நானும் இந்த குறித்த நிறைய செய்திகட்டுரைகளை தொடர்ந்து படித்து வருகிறேன்..

    இதனை கண்டுபிடித்தவர்களை தவிர வேறு யாரும் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை.. அளவீடுகள் தவறாக இருக்கும் என்கின்றனர்..

    இந்த நியூட்ரின்களின் வேகத்திற்கும், ஒளியின் வேகத்திற்கும் உள்ள வித்தியாசம் மிகக்குறைந்த அளவே (5-7 km/s) ஆனாலும் அது ஐன்ஸ்டீனின் கொள்கைகளை உடைத்துவிடும்!!

    அறிவியல் வரலாற்றில்.. ஒருவரின் கூற்று தவறு என்று கூறி புதிய கூற்றுக்களை சொல்வது இது புதிதல்ல (கலிலியோ உட்பட பல பேர்)

    எனவே நான் மூன்றாவது நபர் அல்லது அமைப்பு உறுதிசெய்யும் வரை நாம் பொறுத்திருந்து பார்க்கலாம்(வேறு வழியும் இல்லை நமக்கு)

    நேரம் கிடைக்கும்போது நம்ம பதிவையும் வந்து பாருங்களேன்..

    http://kudimakan.blogspot.com/2011/09/blog-post_18.html

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா