Monday, October 24, 2011

பாப்பா போட்ட தாப்பா !!!! ( சவால் சிறுகதை-2011)


 ஷ்ஷ்.. மெதுவா ..வலிக்குது 

 ஆள் அரவமற்ற சாலையில் நடந்து சென்று கொண்டு இருக்கும்போது, இப்படி ஒரு சிணுங்கல் சத்தம் ( அதுவும் பெண்ணின் சத்தம் )  ஒரு தனி வீட்டில் இருந்து கேட்டால் என்ன செய்வீர்கள்?

ஒன்றும் செய்ய மாட்டீர்கள்.. 

ஆனால் அசோகன் உங்களைப்போன்றவன் அல்லன்..வம்பை விலை கொடுத்து வாங்குவதிலும், தேவை அற்ற விஷயங்களில் தலை இடுவதிலும் அவனுக்கு நிகராக இருப்பது அவன் மட்டுமே..


 எனக்கு இதெல்லாம் பழ்க்கம் இல்லை  ஆண் குரல்..

 சுகமா இருக்குனு தானே உங்க்ளை செய்ய சொல்றேன் .  நான் சொல்லி தறேன்  பெண் குரல்

ஆர்வக்கோளாறு அசோகனுக்கு தலை வெடிப்பது போல இருந்தது... 

 என்னடி செய்யணும்... அப்படியே உள்ளே  விடணுமா? “

 அட சீ.. இதை எல்லாம் பார்த்து செய்யணும்.. முதலில் அதை லேசா தடவி கொடுங்க.. அப்பத்தான் அது தயார் ஆகும்..எடுத்தேன் கவுத்தேன்னு செஞ்சு என்னை அழ வச்சுடாதீங்க 

டே .. பாவம்டா.. அந்த பொண்ணை அழ வச்சுடாதே..

 ம்ம் ..அப்படித்தான் ... மெதுவா உள்ளே தள்ளுங்க..ஆ.. பார்த்து... அப்படித்தான் 

 என்னடி என்னவோ சொர்க்கத்துக்கே போன மாதிரி எக்ஸ்பிரஷ்ன கொடுக்ற? இந்த சின்ன துவாரத்துக்குள்ள அவ்வளவு சுகமா இருக்கு ?”

 ம்ம்ம்... இதெல்லாம் சொன்னால் புரியாதுயா...உம்ம்.. ஆஆஅ.அய்யோ .யோவ்... எடு அதை ..ஏன் ஹார்ஷா  செஞ்ச ? ரத்தம் வருது பார் 

அசோகனுக்கு அதற்கு மேல் பொறுமை இல்லை... கதவை உடைத்துக்கொண்டு உள்ளே போல எத்தனித்தான்.. ஆனால் அவன் வீரத்துக்கு வேலை வைக்காமல் கதவு திறந்தே இருந்தது.. உள்ளே ஆவேசத்துடன் நுழைந்தான்..

உள்ளே ஓர் ஆண்..


ஒரு பெண்...

பெண் காதில் ரத்தம்

 அடங்கொய்யால.. காது குடைய அதற்கான சாதனங்களை கூவி கூவி விக்கிறாங்க... பென்சிலை வச்சு காது குடைஞ்சு அவ காதை ரண களமாக்கிட்டியேடா.. என் நேரம் வேற வீணாப்போச்சேடா  ஆவேசத்துடன் அலறிய அசோகனை அதிர்ச்சியுடன் பார்த்த அவர்கள் இருவரும் திடீரென எழுந்து ஓட தொடங்கினர்..

 யார் நீங்க ... ஓடாதீங்க...  என்று கத்திய படி , ஒரே பாய்ச்சலாக பாய்ந்து அவனையோ அல்லது அவளையோ அல்லது இருவரையுமோ பிடிக்க நினைத்தான்.. ஆனால் கால் சுளுக்கி கொண்டு விட்டதால் கத்த மட்டுமே முடிந்தது..



சோர்ந்து போய் நாற்காலியில் அமர்ந்தான்..


 அட என்ன இது... செல் போனை விட்டு விட்டு சென்று இருக்கிறார்களே..சரி... நாம் பயன்படுத்தி கொள்ளலாம்

சிந்திப்பது போன்று நடித்தவாறு சற்று கண் அயர்ந்தான்.


அலை பேசி  ஒலிக்க தொடங்கியது... திடுக்கிட்டு கண் விழித்தான்.

இன்ஃபார்மர் விஷ்ணுவிடம் இருந்து அழைப்பு என்றது அலை பேசி.

யார் இந்த விஷ்ணு? யாரை அழைக்கிறான்..



அட்டெண்ட் செய்து பார்க்கலாம்...


 சார்..  உங்க வீட்ல எங்க செல்போனை மறந்து விட்டுட்டோம்.. நான் சொல்ற அட்ரஸ்க்கு அனுப்ப முடியுமா? “

 அனுப்பவெல்லாம் முடியாது... நேர்ல வந்து வாங்கிக்கங்க.. நீங்க யார்.. என் அனுமதி இல்லாம என் வீட்டுக்குள் எப்படி நுழைஞ்சீங்க ..எல்லாம் விளக்கிட்டு வாங்கிட்டு போங்க


 சார்..சார்.. பிரச்சினையை பெருசு ஆக்காதீங்க..போன் கூட வேண்டாம்.. அந்த மேஜைல ரெண்டு துண்டு சீட்டுகள் கிடக்கும்... அதில் ஒரு பாஸ் வோர்ட் இருக்கும்.. அதை மட்டும் சொல்லுங்க... போதும்.. உங்க பேங்க் நம்பர் சொன்னா , ஒரு அமவுண்ட் அனுப்ப்றேன் 

இணைப்பை துண்டித்தான் அசோகன்..

இதில் ஏதோ விஷ்யம் இருக்கு...  விட்டு பிடிப்போம்.


        சாலை விபத்து வாலிபர் பலி. தினத்தந்தியில் -நேற்று பார்த்த- விஷ்ணுவின் போட்டோவை பார்த்து அதிர்ந்தான் அசோகன்.  அய்யோ.. இது பெரிய இடத்து சதி.. கண்டிப்பாக சிலை கடத்தல் , வைர கடத்தல் மேட்டர்தான்” 


 துப்பறியும் நிபுணர்தான் இதை டீல் செய்ய முடியும், அவரை எங்கே பிடிப்பது?முன்ன பின்ன செத்து இருந்துதானே சுடுகாடு தெரியும். 


டிக்கட் எடுக்க கூட மறந்து , பஸ்ஸில் யோசித்தபடி வந்தவன் முகம்,ஜன்னல் வெளியே பார்த்ததும் மலர்ந்தது...  ஸ்டாப்..பஸ்ஸை நிறுத்துங்க  அலறினான்..

 சாவு கிராக்கி.. பஸ் டிராபிக்ல சிக்கி நின்னுக்கிட்டுதானே இருக்கு . இறங்கி தொலை  என நடத்துனர் அன்பாக இறக்கி விட்டார்..

அவன் முகம் மலர காரணமான , சிறிய அலுவலகம் நோக்கி சென்றான்.. ஜூஸ் கடை, பத்திரிக்கை கடை, சிறிய ஆடைக்கடை ( சிற்றாடைக்கடை அன்று.. சிறியதாக இருந்த ஆடைக்கடை ) இவற்றுக்கு மத்தியில் அந்த அலுவலகம் இருந்தது..

இவ்விடம் சகாய விலையில் துப்பறிந்து தரப்படும்  இந்த அறிவிப்பு பலகைதான் அவனை கவர்ந்து ஈர்த்தது..


உள்ளே சென்றான்..

துப்பறியும் நிபுணர் ரமேஷ் என எழுதப்பட்ட மேஜைக்கு பின் இருந்த நாற்காலியில் யாரும் இல்லை....

இன்னொன்றில், அவரது உதவியாளர் அனந்த் என எழுதப்பட்ட நாற்காலியில் ஒருவர் என்னவோ சிந்தித்தபடி அமர்ந்து இருந்தார்..

 சார்”’  அழைத்தான்.. சலனம் இல்லை

சார்  மீண்டும் அழைத்தான்... நோ ரெஸ்பான்ஸ்

 யோவ்  காட்டு கத்த கதற , அனந்த் திடுக்கிட்டு விழித்தான்..

மலங்க மலங்க விழித்தபடி, அனந்த் மெதுவாக சுய நினைவுக்கு வந்தான்..

 சார்.. துப்பறியும் நிபுணர் அலுவலகம் இதுதானே? “ அசோகன் கேட்டான்..

 அப்படியெல்லாம் இங்கே யாரும் இல்லைங்க.. நீங்க நேரா போயி லெஃப்ட்ல திரும்பினா என  ஆரம்பித்த அனந்த் சுதாரித்து கொண்டான்  ஆமாம்.. இது தான் துப்பறியும் நிறுவனம் .. கொஞ்ச நேரம் இங்கே  வெயிட்டுங்க... பாஸ் ஷேவிக்கிட்டு இருக்கார்.. காலைலதான் பெண்களூர்ல இருந்து வந்தார்.. 

அசோகம் ஙே என விழித்தான்..

 வெயிட்டுதல், ஷேவுதல், பெண்களூர் - இதெல்லாம் என்னங்க? “ அப்பாவித்தனமாக கேட்ட அசோகனை அலட்சியமாக பார்த்தான் அனந்த்.

 இதெல்லாம் எங்க தலைவர் அறிமுகப்படுத்திய துப்பறியும் கலையின் முக்கிய வார்த்தைகள்..  இன்னும் நிறைய இருக்கு,, தம்பி... நீங்க பாட்டுக்கு துப்பறியணும்னு தைரியமா வந்துட்டீங்க.. இதெல்லாம் ப்யங்கர ஏரியா.. குழாய திறந்தா தண்ணி வராது.. ரத்தம்தான் வரும் 

அசோகனுக்கு மயக்கம் வருவது போல இருந்தது..

 பாஸ் வர வரைக்கும் இந்த கலைசொல் அகராதியை ரீடிக்கிட்டு இருங்க... அவர்கிட்ட தெளிவா சுருக்கமா பேசணும். இல்லைனா டென்ஷன் ஆகிடுவார் . அவரு பெங்களூர் போய்ட்டு வந்ததை , வேறு கிரகத்து போய்ட்டு வந்தது போல பெருமையா பேசுவார் ... கண்டுக்க கூடாது..சரியா


கலைசொல் அகராதியை புரட்டினான்

ஷேவுதல் - சவரம் செய்தல் 
வெயிட்டுதல் - காத்திருத்தல் 
ரீடுதல் - வாசித்தல் 
தபாரு  - இதோ  பாரு 
பெண்களூர் - பெங்களூரு

படிக்க படிக்க கொஞ்சம் தன்னம்பிக்கை வந்தது.

 அதற்குள் ரமேஷ் வந்து விட்டான்..
 ஹாய்.. ஐ ஆம் ரமேஷ் ,... வாட் கேன் ஐ டூ ஃபார் யூ 

 சார் .. நான் அசோகன். மேற்கு மாம்பழத்துல இருந்து வறேன்  என சொல்லி விட்டு பெருமையாக அனந்தை பார்க்க , மகிழ்ந்தான் அனந்த்


சரி சொல்லுங்க .. நாங்க என்ன துப்பறியணும் ? “

 சொல்றேன் சார்... இன்னிக்கு காலை.. சுமார் 8 மணி இருக்கும்...  மேகம் சூழ்ந்திருந்த வானம்

கையில் ஓர்  ஊது பத்தி சுருளை வைத்து கொண்டு பேச ஆரம்பித்த அசோகனை பதறியபடி நிறுத்தினான் ரமேஷ்.

 ஸ்டாப்..ஸ்டாப் 

 என்ன பாஸ்..என்ன ஆச்சு ? “

 என்னடா..இவன் பாட்டுக்கு ஃபிளாஷ் பேக் போறான்.. ஃபிளாஷ் பேக் வறதுக்கு அனுமதி இல்லையே

 பாஸ்..அது போன வருஷ சிறுகதை போட்டி... இப்ப அனுமதி உண்டு.. நீங்க சொல்லுங்க அசோகன்  “

’  ஆரம்பத்துல இருந்து சொன்னா, 1500 வரிகளை தாண்டிடுமே சார்.. பரவாயில்லையா? “

கணேஷ் முறைத்தான்..

 குதூகலமா போற கதைல , கும்மி அடிச்சுட்டு போய்டாதே ராசா.. நீ கிளம்பு 

அனந்த் குறுக்கிட்டான்...

 ஒண்ணு பண்ணு .. ஒரு நிமிஷம் அமைதியா இரு,,, அப்புறம் இதுதான் சார் நடந்ததுனு  சொல்லு.. நாங்க புரிஞ்சுக்குவோம் 


          ” துதான் சார் நடந்தது... அவர்கள் யார் .. ஏன் அந்த வீட்டுக்கு வந்தனர்.. அந்த குறியீடுகள் என்ன? யோசித்து வைங்க,,, இந்த துண்டு சீட்டு, போனை பிடிங்க நான் ரெஃப்ரஷிட்டு  வந்துட்றேன் 

 ” இதெல்லாம் ஒரு கேசாடா? வேண்டாம் “

” பாஸ். ட்விட்டினேன் , அட்டெண்டினேன், ரிஜெக்டினேன்  என்றெல்லாம் பேசக்கூடிய நம்மை மிஞ்சிய துப்பறியும் நிபுணர்கள் வந்துட்டாங்க,, நமக்கு கேஸ் வரது இல்லை.. அதனால் சும்மா மோதி பார்ப்போம்  

அதற்குள் அசோகன் வந்து விட்டான்..

 ஓக்கே சார் நான் கிளம்புறேன்.. எப்படியும் கடைசி வரியிலதான் என் கேள்விக்கு பதில் கண்டு பிடிப்பீங்க... நான் அப்ப வந்து உங்களை மீட்டுறேன்... 



 தம்பி... தேவை இல்லாம ஒட்டு கேட்டு, இப்ப கஷ்டபட்ற.. தேவையா உனக்கு ? “ அனந்த் ஆதரவாக விசாரித்தான்..

இருக்கையில் இருந்து அவசரமாக எழுந்து , அறைக்கு நடுவில் நின்று மெல்ல புன்னகைத்தான் அசோகன்..

 என்னடா செய்ற ? “

 இதுதாங்க மையமா சிரிக்கிறது 

அடிங்கொய்யால  ரமேஷ் ஆவேசமாக பாய, எகிறி குதித்து தாவி ஓடி தப்பினான் அசோகன்..





 சரிடா .நாம் துப்பறியலாம்..  துப்பறிதலை ஆரம்பத்தில் தொடங்க வேண்டும். அப்படியே தொடர வேண்டும். முடிவு வரும்போது நிறுத்த வேண்டும் என பிரபல ஆங்கில நிபுணர்.. ம்ம் 

அதற்கு மேல் மறந்து விட்டது

இடம் பொருள் ஏவல் அறிந்த அனந்த் அதை கண்டு கொள்ளாமல்  ஓகே பாஸ்.புரியுது. உடனடியா அந்த சம்பவம் நடந்த வீட்டுக்கு போகலாம் :” 

  போனார்கள். தனி வீடு. யாரும் குடி இருப்பதாக தெரியவில்லை. 



 ஓர் ஆணும் பெண்ணும் ஒரு முன் பின் தெரியாத வீட்ல, சும்மா ரிலாக்ஸா பேசிக்கிட்டு இருக்காங்க... அது காவல் இல்லாத, எந்த பொருளும் உள்ளே இல்லாத வீடு. சோ அவங்க திருடவோ, வேறு தவறுகள் செய்யவோ அங்கே போகல... தவ்று செய்ய நினைத்தாலும் அங்கே அதற்கான வசதி இல்லை... தனிமை இல்லை... வேற எங்கோ போறவங்க, கேசுவலாக இங்கே வந்து இருக்காங்க

 கரக்ட்.. திருட்டும், செக்சும் ரூல்ட் அவுட் ... மேல சொல்லு 

 அப்ப அந்த பொண்ணு தன் போனை விட்டுட்டு போய்ட்டா... அந்த ஆள் கால் வருது. அதுல இன்ஃபார்மர் விஷ்ணுனு அவன் பெயரை பதிவு செஞ்சு வச்சு இருக்கா. 

” 

இந்த போன்ல பார்த்தா இன்ஃபார்மர் ராஜா, இன்ஃபார்மர் சரோஜானு ஆயிரம் நம்பர்கள் இருக்கு.

பாஸ்..இன்ஃபார்மர்கள்னா இதில் என்ன அர்த்தம்னு புரியுது, இருங்க .கன்ஃபார்ம் பண்றேன் 

ஓர் எண்ணை தன் செல்லில் இருந்து டயலினான்.

ஹலோ.. சரோஜாவா... ஃப்ரெஷ் கர்ல்ஸ் வேணும்.. சின்ன பொண்ணுங்களா..ஆமாகட் செய்தான்..

கன்ஃபார்ம்ட் பாஸ்

    சில முயற்சிகளுக்குப்பின், விஷ்ணுவுடன் அந்த வீட்டுக்கு வந்த பெண் பெயர் சில்க் என அறிந்தனர்.

 “ அனந்த். நீ உடனே சில்க் வீட்டுக்கு போய் அவளிடம் பேச்சு கொடுத்து , விஷ்யம் கறக்க முடியுமா என பார்

     சில்க் சின்ன வயசாக, சிக் ( sick அல்ல ) என இருந்தாள். 
உன்னிடம் கொஞ்சம் பேசனும் அனந்த் பேச ஆரம்ப்பிக்கும் முன் சட் என கதவை தாழிட்டாள்..
அய்யோ.. நான் கற்புக்கரசன்.. என்னை ஒண்ணும் செஞ்சுடாதே..அவன் கதறல் வீணானது. 

எல்லாம் முடிந்த பின் நீயெல்லாம் அண்ணன் தம்பியோடு பிறந்தவளா..இப்படி என்னை நாசம் பண்ணிட்டியேகதறினான் அனந்த்.

சாரி சார்.. மஜ்னுவுக்கு அப்புறம் அழகும் அறிவும் ஒண்ணா சேர்ந்த ஆள் நீங்கதான்.அதுதான் மனம் தடுமாறிட்டேன் ஆதரவாக சொன்னாள் சில்க்.

மஜ்னுவா ? யாரது ? “

எங்கள் வாழ்வில் விளக்கேற்றி வைத்தவர் அவர்தான்.. இந்த தொழிலில் போலீசின் கெடு பிடி அதிகம் ஆயிடுச்சு.. அதனால் இவர் புது மெத்தட் ஒண்ணு கொண்டு வந்தாரு.. 


வாடிக்கையாளர்கள் எங்களிடம் நேரிடையா காசு தர மாட்டாங்க.. காசு பத்தி பேசவும் மாட்டாங்க.மஜ்னு எங்களுக்கு காசு கொடுத்துட்டு ஒரு பாஸ் வேர்டும் கொடுப்பார் .. விஷ்ணு வாடிக்கையாளர்களிடம் காசு வாங்கிட்டு , அதை மஜ்னுவிடம் கொடுத்து பாஸ் வேர்டு வாங்க்கிக்குவான். இதை வாடிக்கையாளர்கள் அவனிடம் இருந்து வாங்கிகிட்டு ,  எங்களிடம்  வந்து சொன்னா போதும்.. நோ மனி டிரான்சாக்சன்  அந்த விஷ்ணுதான் இப்ப நேசனல் பெர்மிட் லாரி மோதி இறந்துட்டான்

லவ்லி..சரி..எஸ் பீ கோகுல்னா யாரு? “

சொறிப் பய கோகுல் என்பத்தைத்தான் எங்க வட்டாரத்தில் அப்படி சொல்வோம்.. புதுசா ஒரு பொண்ணு இந்த தொழிலுக்கு வந்தா, தனக்குதான் முதலில் அவளோட பாஸ்வேர்ட் தரணும்னு , காசை கொட்டி கொடுப்பவன் அவன்... அவனோட அண்ணன் வெட்டிப் பய ராகுல் ( வீ பீ ராகுல் ) ரெண்டு பேருக்கும் போட்டி இதில்

அனந்துக்கு விஷ்யம் புரிவது போல இருந்தது... 

யாரோ ஒரு புது பொண்ணோட பாஸ்வோர்ட் விஷ்ணுவுக்கு கிடைச்சு இருக்கு.. அதை வச்சு டபுள் கேம் ஆட முயற்சித்து இருக்கான்..அதை உரியவர்களுக்கு அனுப்பும் முன் இறந்து விட்டான்.. 

இதில் வைரம், சிலை கடத்தல் எதுவும் இல்லை.. துப்பறிய எதுவும் இல்லை. ஆனாலும் அனந்த் முற்றும் போட விரும்பவில்லை..

சரி..எனக்கு தொழிலுக்கு நேரம் ஆச்சு.. நீங்க ஓய்வெடுத்துட்டு கிளம்புங்க... மஜ்னு கூட வெளினாடு போகும் முன் இங்குதான் தங்கிட்டு போனாரு

அவள் சென்றதும், ரூமை அலசினான்.. அவன் தேடல் வீண் போகவில்லை. மஜ்னுவின் டைரி ஒன்று கிடந்தது.

ரீசண்ட் அடிஷன் என்ற தலைப்பில் , இரு பெண்கள்- வாவ் திரை நட்சத்திரங்கள்-

S W H2 SF       S W 22 SF என எழுதி இருந்தான்.. ஆனால் யாருக்கு எந்த பாஸ்வேர்ட் என தெரியவில்லை..

அடடா... அது மட்டும் தெரிந்தால் போதுமே. ஒரே கல்லில் இரண்டு காய்களை வீழ்த்தலாமே,,

நடிகை1 அருகே ஒரு கமெண்ட் எழுதி இருந்தான்  Sweet woman one of 2 , sexy and f***le 

இன்னொரு நடிகை அருகில்  Sweet woman two of 2 , sexy and f***le 


ஒன்றும் புரியவில்லை.

திடீரென புரிந்தது..

ம்ம்.. ஓகே... இன்னிக்கு டபுள் விருந்துதான்.. கிளம்பினான்..

போன் அடித்தது..

ரமேஷ்..

என்ன ஆச்சு
அது சிலை கடத்தல் மேட்டர் பாஸ்.. நம்ம ஸ்கோப்ல வராது

பரவாயில்லை... குரல் என்னடா ஒரு மாதிரி இருக்கு... உடம்பு சரியில்லையா.. டாக்டரை பார்த்து ஊசி போட்டுக்க

ஊசி போடத்தான் போய்க்கிட்டு இருக்கேன் பாஸ்

                 


8 comments:

  1. பார்வையாளன் என்னாதிது ?"

    சாரி மேடம்.. ஹி ஹி

    கொஞ்சம் ஓவாரத்தான் போயிட்டெனோ

    ReplyDelete
  2. //முதலில் அதை லேசா தடவி கொடுங்க.. அப்பத்தான் அது தயார் ஆகும// pencil எப்படி??????
    மத்தபடி கதை சூப்பர்...
    அப்படியே என்னோட கதையையும் படிச்சுடுங்க..
    http://venpuravi.blogspot.com/2011/10/blog-post_30.html

    ReplyDelete
  3. அப்பத்தான் அது தயார் ஆகும// pencil எப்படி??????”

    இங்கே “ அது “ என்பது காதைக்குறிக்கிறது. பென்சிலை அன்று. ஹி ஹி

    ReplyDelete
  4. செம்ம flow... சூப்பர் பாஸ்.

    - Rajesh - Chennai

    ReplyDelete
  5. செம்ம flow... சூப்பர் பாஸ்.

    நன்றி நன்றி

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா