Monday, November 14, 2011

டாப்-15 - அதிகாரபூர்வமற்ற சவால் சிறுகதை-2011 முடிவுகள்


1   கனவில் எழுதப்படும் கதை    -நந்தாகுமாரன்   
Recursive தொடர் கனவுகளாக சவால் சூழல் சித்திரிக்கப்படுகிறது.  அருமையான உத்தி.  முடிவிலிருந்து தொடக்கத்திற்கு சர்க்குலர் லிங்க் இருக்கிறது.  ஆனால் முதல் காட்சியும் இரண்டாம் காட்சியும் சரியாக இணையவில்லை.  புதுமையான முயற்சிக்கு பாராட்டுகள்.   ஸ்பெஷல் பாராட்டுகள்.
*****
2   நீதானே என் பொன்வசந்தம்..    -மனோ   
இன்ஃபார்மர் பார்வையிலிருந்து சொல்லப்பட்டிருக்கும் கடத்தல் கதை.  அதனால் சவால் சூழல் சரியானபடிக்கு பொருந்தவில்லை.  ஆனாலும் அது பேக்ட்ராப்பில் எங்கேயோ நிகழ்ந்திருக்கின்றது என்று புரிகிறது.  இன்ஃபார்மர் என்பது ஒரு நெட்வொர்க்கிலிருந்து கொண்டு தகவல்களை வெளியே கசிய விடுவது.  மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டு எந்தமாதிரியான நிழல் அமைப்புகளிலிருந்து தகவல் பெறுகிறார் என்பது தெரியாததால் கதையின் நம்பகத்தன்மை குறைகிறது.  மற்றபடி நல்ல முயற்சி.
3   பீமனின் பராக்ரமம்        -இராஜராஜேஸ்வரி   
தொன்ம வரலாற்றின் பின்னணியில் புதிய கதைக்களன்.  மஹாவிஷ்ணுவின் அவதாரமாக சாரங்கபாணி எஸ்பி கோகுலாக வருகிறார். பிறகு அவருக்கே விஷ்ணு ஃபோன் செய்கிறார் என்னும்போது லாஜிக் இடர்கிறது. தவறான குறியீட்டால் பீமன் பாதி சிக்கிக் கொள்கிறான் என்னும் கற்பனை ரசிக்க வைக்கிறது.  நல்ல முயற்சி
உளவுத்துறை        -பன்னிக்குட்டி ராம்சாமி   
கம்ப்யூட்டர் கேம் பிரியரான எஸ்பிக்கும் இன்ஃபார்மர் விஷ்ணுவிற்கும் நடக்கும் கம்யூனிகேஷன் பற்றி போலிஸார் குழம்புகிறார்கள்.  சவால் சூழலுக்கு பொருத்தமாகவே கதை இருக்கிறது.  முடிவில் வாசகர்களிடம் புதிரையெல்லாம் விடுவித்து விளக்கம் சொல்லிவிடுகிறார்.  சுவாரசியத்தை இன்னும் அதிகபடுத்தியிருக்கலாம்.
5   விண்டேஜ்            -பினாத்தல் சுரேஷ்   
விண்டேஜ் கார் வாங்க நடக்கும் போட்டி.  சார், கோகுல், ரெட்டி என்று பலரும் ஏலத்தில் போட்டி போட விஷ்ணு யாருக்கு வேலை செய்கிறான் என்ற சஸ்பென்ஸ். கதை வெகு சுவாரசியம்.  ஆனால் சங்கேத கோட் எதற்கு பரிமாறிக் கொள்கிறார்கள் என்றுதான் புரியவேயில்லை.
போர்க்களத்தில் சாய்ந்தால் கூட    -சன்   
மந்திரவாதம், ஊடு மாந்த்ரீகம் என்று வித்தியாசமான பின்னணி.  ஆங்கில குறியீட்டை எப்படியோ மாந்த்ரீகத்திற்கு கொண்டு சென்று விட்டார்.  நல்ல சரடு.  முதலில் வரும் காதல் சம்பவங்கள் கதையில் ஒட்டுவதில்லை.  முடிவில் அமானுஷ்யமான திருப்பம்.  நல்ல முயற்சி. 
பிரபல எழுத்தாளன் எழுதியது    -பறக்கும் குதிரை   
" 
இணையத்தில் நடந்த பிரபல தமிழ் எழுத்தாளர்களிடையேயான விவாதத்தை அப்படியே கதை செய்திருக்கிறார்.  விஷ்ணுதர வட்டம், எழுத்தாளர் ஜெயராமன், எழுத்தாளர் ஆறு என்றெல்லாம் வருகிறது.  நல்ல முயற்சி."
உதயசூரியன்    -கார்த்திக் பாலா   
தொடக்கம் நன்றாக இருக்கிறது. கதாபாத்திரங்கள் அறிமுகம் கொஞ்சம் நீளம்தான். எஸ்பி திறமையாக சதியை முறியடித்தபிறகு நடக்கும் சம்பவங்கள் சற்றே குழப்பமாக இருக்கிறது.  'உதயசூரியன்' என்ற புத்தகம் கதையில் இடம்பெறுகிறது.  அதற்கும் இந்தக் கதையின் தலைப்பிற்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. முடிவில் கொஞ்சம் ஷாக்கான ட்விஸ்ட் அமைந்திருக்கிறது. நல்ல முயற்சி.
9   அலைபேசி        -அபிமன்யு   
தொடக்கத்தில் நல்ல விறுவிறுப்பு.  மர்மம், தீவிரவாத கும்பல், ரகசிய குறியீடு என்றெல்லாம் சுற்றி கடைசியில் கதைப் போட்டி நடத்துபவர்களை கலாய்ப்பதோடு முடிகிறது.  நல்ல முயற்சி.  மீண்டும் படிக்கத் தூண்டுமளவுக்கு சுவாரசியம்.
***
10   கீழே உள்ள குறிப்புகளையும் படிக்கவும்    -சரவணவடிவேல்.வே   
கதையாக இல்லாமல், வாசகனோடு உரையாடலாக எழுதியிருக்கிறார். நல்ல நகைச்சுவை வருகிறது இவருக்கு.  சவால் சூழலை பொருந்தாமல் பொருத்தி ஒரு சைக்காலஜிக்கல் பிராஜெக்ட் என்று சமாளித்து விட்டார்.  கடைசியில் 'இந்த புகைப்படத்திற்கு இந்தக் கதை போதும்' என்று ஒரு வரி சேர்த்திருப்பதை போட்டி அமைப்பாளர்கள் பார்வையில் பட்டதா? படாவிட்டால் இப்பொழுதாவது படட்டுமே.
11    சட்டென நனைந்தது ரத்தம்    -ஜேகே   
முதலில் கொஞ்சம் புரிதல் சிக்கல் இருந்தது.  மீண்டும் வாசித்தபோது, இரு பத்திகளை மாற்றிப் போட்டிருக்கிறார் என்று புரிந்தது. திலீபன் குமரனை சந்தேகிக்கும் இடம் சற்று சறுக்கினாலும், நல்ல சஸ்பென்ஸ் த்ரில்லராக அமைந்திருக்கிறது. சவால் சூழலை இயல்பாக பொருத்தி இருந்தார்.  அருமை.
***
12   சிலை ஆட்டம்    -ஆர்விஎஸ்   
சஸ்பென்ஸ் த்ரில்லருக்கு ஏற்ற கதை உத்தி.  முதலிலேயே ஒரு மரண வாக்குமூலம், பின் கொலை, துப்பு துலக்குதல் என்று பரபரவென தொடங்குகிறது. சவால் சூழலை வெகு நேர்த்தியாக பொருத்தியிருக்கிறார்.  கதையும் முழுமையான வடிவத்தில் திருப்பங்களுடனும், தர்க்கத்துடனும் அமைந்திருந்தது.  சங்கேத குறிப்புக்கு நீளமான விளக்கமும் வருகிறது. முடிவு கொஞ்சம் டல்தான். சாகும் தறுவாயில் அவசர அவசரமாக எழுதுபவன் 'வஸந்த் பவன் மசால்தோசையும், டிகிரி காபியையும் ருசித்தி...' என்றெல்லாமா எழுதுவான் என்று கேள்வி எழாமல் இல்லை.  இந்த சவால் சூழலுக்கு பொருத்தமான சிறப்பான கதை.
13    கோவை ப்ரீத்தியின் கொலைவழக்கு    -சி.பி.செந்தில்குமார்   
தலைப்பும், கதை உத்தியும் வித்தியாசம்தான்.  டைரி குறிப்புகள் வழியாக கதையை கொண்டு போயிருக்கிறார்.  டைரி குறிப்புகள் ஒப்புதல் வாக்குமூலம் ரேஞ்சுக்கு 'அவளை கரெக்ட் பண்ணினேன். இவ ரோலை அவ செய்வா' இல்லாம இயல்பா இருந்திருக்கலாம்.  சவால் சூழலை நல்லா பொருத்தமா இணைச்சிருக்கார்.  புஷ்பா தங்கதுரை ஸ்டைல்ல நல்ல த்ரில்லர்.
14    பாப்பா போட்ட தாப்பா!    -பார்வையாளன்   
முதல் வரியிலேயே கதைக்குள் இழுத்து விடுகிறார். பிறகு ஒரு A ஜோக் வேறு வருகிறது. வித்தியாசமான கதை சொல்லும் முறையோடு ஆங்கங்கே சில நகைச்சுவைகளும் நன்றாக வந்திருக்கின்றன. முதலில் சில தர்க்கக் குழப்பங்கள் ஏற்பட்டாலும், முடிவில் வரிசையாக விளக்கங்கள் கொடுத்து ட்விஸ்ட்டோடு முடிகிறது கதை.  கொஞ்சம் Rawவாக இருந்தாலும் படிக்க சுவாரசியம். 
15    தனக்கென்று வந்துவிட்டால்..    -ராஜி வெங்கட்   
நல்ல சஸ்பென்ஸோடு எழுதப்பட்ட த்ரில்லர்.  சிம்பிளான நடையில் குழப்பமில்லாமல் இருக்கிறது. கடத்தின பொண்ணுங்களை மூணு மாசம் மறைச்சி வச்சிருந்து கப்பல்ல கொண்டு போவாங்களா போன்ற கேள்விகள் எழுந்தாலும், சவால் சூழலை சரியானபடிக்கு பொருத்தி எழுதியிருக்கிறார்.  நல்ல முயற்சி.

5 comments:

  1. Thalaikeezha padikkanumaa.?!!

    Ungalukkum idam kidaiththatharku athikaarapoorvamarra vaazhthukkal!

    ReplyDelete
  2. I am disappointed, not to be listed with in the first 15.

    ReplyDelete
  3. நண்பரே . இது எனது பட்டியல் அன்று. பட்டியல் எப்படி இருக்க கூடும் என்ற அனுமானம் .

    ReplyDelete
  4. மனப்பூர்வமான வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா