Pages

Thursday, November 17, 2011

கதைக்கு பின் இருக்கும் கதை- சிறுகதை போட்டி அனுபவங்கள்

ஒரு மிகப்பெரிய வேலையை , சற்றும் பொறுப்பன்றி செய்யலாம். ஒரு சாதாரண் வேலையை  மிக கவனத்துடனும் , கலை நயத்துடனும் செய்யலாம்.  ஒவ்வொரு செயலுக்கும் அதற்குரிய எதிர் வினை உண்டு. கடந்த வாரங்களில் எனக்கு கிடைத்த நல்ல அனுபவங்கள் , மகிழ்ச்சியான நிகழ்வுகள் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு.

எனக்கெல்லாம் தமிழ் எழுதவே வாய்ப்பில்லாமல் இருந்தது.  தமிழ் மறந்து விடுமோ என்று கூட பயமாக இருந்தது. என் தமிழ் ஆர்வத்துக்கு உயிர் கொடுத்தது வலைப்பூவும் அதனால் கிடைத்த நண்பர்களும்தான்.எழுத்தில் தவறு ஏற்பட்டால் உரிமையுடன் போன் செய்து அதை தட்டி கேட்கும் நண்பர்களை எல்லாம் நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கும். இத்தனை நல்லவர்களை எல்லாம் வலைப்பூ இல்லாமல் இருந்தால், தெரியாமலேயே போய் இருக்கும்.

எனவேதான் வலைப்பூ சம்பந்தப்பட்ட செயல்களில் ஆர்வமாக கலந்து கொள்வதை என் கடமையாக நினைத்து வருகிறேன்.

ஆதி மற்றும் பரிசல் ஆகியோர் சிறுகதைப்போட்டி அறிவித்தபோது, மகிழ்ச்சியாக இருந்தது. இது உண்மையிலேயே பாராட்டத்தக்க தொண்டு என்றே சொல்ல வேண்டும், ஒரு பத்திரிக்கை போட்டி போல நேர்த்தியாக  நடத்தக்கூடியவர்கள் அவர்கள்.

 இம்முறை வழக்கமான துப்ப்றியும் கதை, கற்பனை கதை எல்லாம் எழுதாமல் யதார்த்தவாத பாணியில் ஒரு முயற்சி செய்ய நினைத்தேன்.

ஆனாலும் ஜஸ்ட் ஒரு  ஜாலிக்காக  பாப்பா போட்ட தாப்பா !!!! ( சவால் சிறுகதை-2011)  கதை எழுதினேன்.
கத்தியின்றி ரத்தமின்றி ( சவால் சிறுகதை 2011 ) க்தையில் ஆரம்ப வரிகள் இப்படி ஜாலியான மூடில் எழுதியவைதான்.

ஆனால் அடுத்த கதையை இப்படி கற்பனையாக எழுத விரும்பவில்லை. அன்றாட வாழ்வில்  நாம் காணும்  விஷ்யங்களை கூர்ந்து கவனித்தால் ,  நம்மைப்பற்றியே எத்தனை விஷ்யங்கள் தெரிகின்றன !!


போலீஸ்  லஞ்சம் வாங்குகிறார்கள் என்போம்.  ஆனால் நாம் சாலை விதிகளை மதிப்பதில்லை. சாலை விதியை  மீறுவதை பெருமையாக நினைபோம். அதிகாரிகள் பொறுப்பின்மையால் சில உயிர்கள் பலியாவதை உருக்கமாக மற்றவர்களிடம் சொல்வோம். ஆனால் நாம் பொறுப்பில்லாமல் , பீச்சில் பீர் அருந்தி விட்டு, பாட்டில்களை அங்கேயே போட்டு விட்டு , பெருமையாக இண்டர்னெட்டில் போட்டோக்களை போட்டு கொள்வோம்..


இது போன்ற எண்ணற்ற விஷ்யங்களை கூர்ந்து கவனித்த போது அதிர்ச்சியாக இருந்தது. சில அதிர்ச்சியூட்டும் படங்களை நானே நேரடியாக எடுத்தேன்.

சில அதிர்ச்சியூட்டும் விளையாட்டுத்தனமான சம்பவங்களை நானே உருவாக்க்கினேன் . அதை எல்லாம் வெளியிட்டு இருந்தால் செம ரகளை ஆக இருந்து இருக்கும். படிப்பவர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவம் கிடைத்து இருக்கும்.


அப்போதுதான் ஒரு திருப்பு முனை. அலுவலக் சக ஊழியர் ஒருவருடன் காரில் சில இடங்களுக்கு செல்ல வேண்டி இருந்தது. அவருடன் எனக்கு பெரிய பழ்க்கம் இல்லை. அலுவல் ரீதியான பயணம்.

பயணத்தின் போது ஆங்காங்கு கண்ட வித்தியாசமான சம்பவங்களை ப்டம் எடுத்து வந்தேன்.

அவர் என்னை ஆச்சர்யமாக கவனித்தார். நான் ஒரு முன்னாள் பத்திரிக்கையாளன் என்பதால் , ஏதோ பத்திரிக்கைக்காக எடுக்கிறேன் என நினைத்தார்.

 நம் மக்களின் ஒழுங்கின்மை குறித்து அவரிடம் பேசினேன். சிறு நீர் கழிக்காதே என்ற போர்டில் சிறு நீர் கழிப்பது , குப்பை கொட்டாதே என்ற இடத்தில் குப்பை கொட்டுவது போன்றவற்றை சுட்டி காட்டினேன்.

அவர் அமைதியாக , மக்களையே குற்றம் சாட்டுவது தவறு என்றார். சிறு நீர் கழிக்க வசதியான இடம் மக்களுக்கு அமைத்து கொடுக்காமல், பொது இடத்தில் சிறுனீர் கழிக்கிறார்கள் என சொல்வது தவறு என்றார்.  நிறைய பேசினார்.

இந்த ஆண்டு எனக்கு அளித்த பரிசு அவர் நட்பு என நினைக்கிறேன்.

பெரியவர்களின் தவறுகளை விட்டுவிட்டு, எளியவர்களின் தவறை சுட்டிக்காட்டி வெற்றி பெற்ற சில திரைப்படங்களை சுட்டி காட்டினார்.

இத்தனையும் அவர் , என்னை ஒரு பத்திரிக்கையாளனாக நினைத்தே பேசினார்.

அவர் சொன்னது எல்லாவற்றையும் ஏற்கவில்லை. ஆனாலும், எளிய மனிதர்களின் தவறுகளை சுட்டி காட்ட விரும்பவில்லை.

எனவே நான் கஷ்டப்பட்டு எடுத்து சில முக்கிய படங்களை எல்லாம் அழித்தேன். ( கதையில் இருக்கும் படங்கள் நான் எடுத்தவை அல்ல. நெட்டில் இருந்து எடுக்கப்பட்டவை )

புத்தர் சிரிக்கிறார் ( சவால் சிறுகதை 2011 ) என்ற கதை வேறு மாதிரி வந்திருக்க வேண்டியது,

ஆனாலும் சும்மா பிரசுரித்து வைத்தேன்.

அணுசக்திக்கு எதிரான பிரச்சார கதை என நடுவர்கள் கருதி விட்டார்கள். உண்மையில் அணு சக்தி விவகாரம்  அதில் கொஞ்சம்தான். ஆனால் அந்த க்தை வடிவம் அவர்களை அப்படி நினைக்க வைத்து விட்டது.

க்தையில் நல்ல கதை, கெட்ட கதை என்று இல்லை. இதே சூழ்னிலைக்கு முழு நீள போர்னோ கதை கூட எழுதி வைத்து இருந்தேன்.

ஆனாலும், புத்தர் சிரிக்கிறார் கதை தோல்வி அடைந்து பாப்பா போட்ட தாப்பா  கதை வென்று இருந்தால் எனக்கு க்‌ஷ்டமாக இருந்து இருக்கும். இரண்டுமே வெற்றி பெறாதது மகிழ்ச்சி.

ஒரு விளையாட்டைகூட சின்சியராக செய்தால், கண்டிப்பாக அதற்கு பலன் உண்டு எனபது எனக்கு கிடைத்த புது நட்பின் மூலம் உணர முடிந்தது.

அதே நேரத்தில் , நான் கூர்ந்து கவனித்த பல விஷ்யங்கள் என் எண்ணப்போக்கில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளன.

   நேர்மையான தோல்வியில் கிடைக்கும் மகிழ்ச்சியை உணர்வது இதுவே முதல் முறை என்ற வகையில், இந்த விளையாட்டு என்னை பொறுத்த வரை பெஸ்ட் கேம்.





1 comment:

  1. சவாலை எதிர்கொண்டு இத்தனை கதை எழுதினீர்களே வாழ்த்துக்கள்

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]