அண்ணா நூலக இட மாற்ற விவகாரத்தை பொறுத்தவரை, நக்கீரனை படித்து விட்டு பொங்கி எழுபவர்கள் ஒரு புறம். கோழி பிரியாணி எழுத்தாளர்கள் சங்கத்தினரின் அழிச்சாட்டியம் ஒரு புறம்.
இதில் தனக்கே உரிய தெளிவுடன் விளக்கம் அளித்து , மக்கள் மனதில் மேலும் உயர்ந்தவர் சாரு நிவேதிதா.
ஞானியை பொறுத்தவரை, அவர் நேர்மையானவர். சில தகவல்கள் அவர் கவனத்துக்கு வரவில்லை என நினைத்து அவருக்கு சில தகவல்கள் அனுப்பினோம். தொடர்ந்து அவர் அளித்த விளக்கம்
சார்.. வணக்கம்.. நூலக விவகாரத்தில் உங்கள் கருத்தில் ஏதும் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறதா?
எந்த மாற்றமும் இல்லை. என் கருத்து பிளாக் அல்லது ஒயிட் என்பது இல்லை. நடுவே பல பழுப்பு வண்ணங்கள் உள்ளன. சேர்த்தே பார்ப்பதுதான் என் வழக்கம். அண்ணா நூலகம் கட்டியிருக்க தேவையில்லை என்பதுதான் என் கருத்து. அதைக் கட்டும்போதே சொன்னேன். இப்போதும் அதே கருத்துதான். கட்டிவிட்ட பிறகு மாற்றுவது தேவையற்றது என்பதே என் கருத்து. கண்ணகிக்கு சிலை வைத்திருக்கவே தேவையில்லை. வைத்தது தவறு. அதை எடுத்ததும் தவறு. மறுபடியும் வைப்பதும் தவறு. இப்படித்தானே நம் அரசியல் இருக்கிறது
ஒக்கே சார். இருக்கட்டும்.. கழிப்பறை உட்பட அனைத்து இடங்களுக்கும் ஏசி செய்ய்பட்ட அந்த நூலகம் இயங்க செய்ய்ப்படும் செலவை ஈடுகட்ட , நலிந்த மக்களின் பணம்தானே பயன்படுத்தப்படுகிறது. ? இயக்க செலவு, பாதுக்காப்பு செலவு போன்ரவற்றுகு 30 கோடி செல்வாகிறது என்கிறார்களே …
கட்டப்பட்ட செல்வை விடுங்கள்.. பராபமிப்பு செலவே பெரும் சுமையாக இருக்கிற்தே.
அந்த நூலகத்தை இடம் மாற்றுவது தேவையற்ற இன்னொரு பெரும் செலவை ஏற்படுத்தும். அதில் இருக்கும் தேவையற்ற செலவுகளைக்கண்டறிந்து குறைக்கச் சொல்லலாம். குழந்தைகள் மருத்துவமனை எழும்பூரில் ஏற்கனவே உள்ளது. அங்கேயே சிறப்பு மருத்துவ பிரிவை ஏற்படுத்தலாம். அல்லது கருணாநிதி கட்டிய சட்டமன்ற தலைமைச் செயலக வளாகத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைப்பதாக் சொல்லியிருக்கிறார்கள். அங்கேயே குழந்தைகள் பிரிவையும் ஏற்படுத்தலாம்
ப்ஸ் கட்டணத்தை முன் அறிவிப்பு இன்றி அதிகரித்து இருக்கிறார்களே
பஸ், பால், மின்சார
விலை உயர்வுகள் ஆழமாக விவாதிக்கபப்டவேண்டியவை. மத்திய, மாநில அரசுகளின் தாராளமய பொருளாதாரக் கொள்கையோடு பின்னியிருப்பவை. அத்துடன் தமிழகக்கட்சிகளின் நிர்வாக திறமையின்மையும், வர்க்க சார்பும் சேர்ந்துள்ளன.
கேணி கூட்டத்தின் அடுத்த பேச்சாளர் யார் ?
அடுத்த கேணி கூட்டம் டிசம்பர் 11ல்தான். இன்னும் பேச்சாளர் முடிவாகவில்லை.
ஒரு முறை அழைத்தவரை மீண்டும் அழைப்பதில்லை என முடிவு செய்திருக்கிறீர்களா? சிலரை மீண்டும் அழைத்தால் நல்லது என்பது என் கருத்து
கேணியில் ஒருமுறை அழைத்தவரை திரும்ப அழைப்பதில்லை என்பதே முடிவு. ஏனென்றால முதல்முறையாக அழைக்கப்படவேண்டியவர்கள் இன்னும் பலர் இருக்கிறார்கள்.
மக்களுக்கு, நம் பணம் எவ்வளவு வீணடிக்கப்பட்டு பிறரது பெயர் நிலைக்கிறது என்பது தெரிவதற்காகவாவது இப்படிப்பட்ட அதிரடி அறிவிப்புகள் தேவை என்றே நான் எண்ணுகிறேன்
ReplyDelete