ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு அலட்சியமாக டிப்ஸ் வைக்கும் பலருக்கும் ஒரு ஃபிளாஷ் பேக் இருக்கும். அதை காசு வந்ததும் மறந்து விடுவது வாடிக்கை.
இப்போது அலட்சியமாக காசு செலவழிக்கலாம். ஆனால் வேலை தேடும் காலத்தில் ஒரு ரூபாய் கூட முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் . வெளியே பார்ப்பதற்கு , சலவை சட்டை பேண்ட், ஷூ , டை என இருந்தாலும் , பாக்கெட்டில் பத்து ரூபாய்தான் இருக்கும் . ஒரு டீ குடிக்க கூட ஆயிரம் முறை யோசிக்க வேண்டும்.
இப்படி கணக்காக காசு எடுத்து வந்தவர்களுக்கு பேருந்தில் திடீர் அதிர்ச்சி. இனி மேல் பழைய கட்டணம் பொருந்தாது. டிக்கெட் விலை ஏறி விட்டது என்றார்கள் நடத்துனர்கள்.
இதை சிலர் முணுமுணுப்புடன் ஏற்றாலும், சிலருக்கு இது தாங்க முடியாத விலை உயர்வு. பஸ் இல்லாமல் நடந்தே கூட செல்ல வேண்டி வரும்.
பாஸ் கட்டணம் ஆயிரம் ரூபாய். பழைய கட்டண பாஸ் செல்லுபடி ஆகாது. கூடுதல் கட்டணம் கட்டி முத்திரை வாங்க வேண்டும்.
ஆயிரம் ரூபாயெல்லாம் நலிந்த மக்களுக்கு மிகப்பெரிய தொகை.
இதற்கு காரணம் அரசு நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக சொல்கிறார்கள்.
ஒரு பிலேட் சிக்கன் பிரியாணிக்காக , ஒரு பிரச்சினையில் முடிவு எடுக்கும் தமிழ் அறிவு ஜீவிகளும் இதற்கு ஒரு காரணம்.
சினிமா தியேட்டருக்கோ , டாஸ்மாக்குக்கோ போனால், ஐம்பது ரூபாய் கொடுத்தால்தான் ஏசி கிடைக்கும், அண்ணா நூலகத்தில் இலவசமாக ஏசி கிடைக்கிறது என மகிழ்ந்து போய் சொன்னார்கள் அல்லவா?
இலவசம் என்றால் எட்டு அடுக்கு மாளிகைக்கு , கழிப்பிடம் உள்ளிட்ட பகுதிகளுகு ஏசி செய்யும் காசை யார் ஸ்பான்சர் செய்கிறார்கள் என்பதை இவர்கள் எண்ணி பார்க்கவில்லை.
இது உண்மையில் இலவசம் அன்று. மக்கள் பணத்தில்தான் இந்த வசதிகள் செய்யப்படுகின்றன என்ற அடிப்படை உண்மை கூட இவர்களுக்கு புரியவில்லை.
நலிந்த மக்களின் அடிப்படை வசதிகளுக்கு ப்யன்பட வேண்டிய பணம் ஆடம்பரத்த்க்கும், சொகுசுக்கும் பயன்படுவதன் விளைவே , நலிந்த மக்கள் மேலும் மேலும் துன்புறுகிறார்கள்..
இந்த சொகுசை அனுபவிக்கும் அறிவு ஜீவிகள் வாக்கு சாவடிக்கு செல்லப்போவதே இல்லை.
ஆனால் நலிந்த மக்கள் வாக்கு சாவடிக்கு செல்வார்கள். ஆட்சி மாற்றம் ஏற்படுதுவார்கள்/
எனவே அரசு நலிந்த மக்களுக்கே சாதகமாக செயல்பட வேண்டும். பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்.
நூலகம் சின்ன உதாரணம் . இது போன்ர ஆடம்பர செலவுகள் பல உள்ளன. அவையும் இனம் காணப்பய்ட்டு குறைக்கப்பட்டால் மக்களுக்கும் நன்று , ஆட்சிக்கும் நன்று..
ஆமா மக்களின் வரிப்பணத்தில்தானே இந்த வசதிகள் செய்து தருகிரார்கள்.
ReplyDeleteபஸ் கட்டணத்தையும் அண்ண நூலகத்தையும் முடிச்சுப்போட்டு எழுதிய விதம் மிக அருமை.நல்ல அதிவு வாழ்த்துக்கள்.
ReplyDelete