Friday, November 25, 2011

சர்க்கரை பந்தலில் தேன் மழை - எஸ் ராமகிருஷ்ணனுக்கு ஒரு கடிதம்

அன்புள்ள உயர்திரு எஸ் ரா அவர்களுக்கு..

சிலர் நன்றாக எழுதுவார்கள். ஆனால் சரி வர உரையாற்ற தெரியாது . நல்ல பேச்சாளர்கள் சிலருக்கு எழுத தெரியாது.

எழுத்து , பேச்சு என இரண்டிலும் நிபுணத்துவம் பெற்றவர்கள் நீங்கள்..

உங்களது உப பாண்டவம் நாவலை படிக்கும்போதோ அல்லது நடந்து செல்லும் நீரூற்று போன்ற சிறுகதைகளை படிக்கும்போதோ கிடைக்கும் உன்னத உணர்வு உங்கள் சொற்பொழிவை கேட்கும்போதும் கிடைக்கும்.

இந்த ஆண்டு மதுரை புத்தக கண்காட்சியில் சில புத்தகங்கள் வாங்கினேன்

புத்தக வாங்க வந்ததை விட உங்கள் சொற்பொழிவை கேட்கத்தான் வந்தேன். கவிதை நூல் வெளியிட்டு பேசினீர்கள்.

அட்டகாசமான பேச்சு. என்றோ கேட்ட பேச்சு. இன்னும் அந்த நினவுகள், அப்போது பெற்ற உணர்வுகள் நினைவில் இருக்கின்றன

 நீங்கள் வெளி நாட்டில் பிறந்து இருந்தால் , ஒரு மணி நேர சொற்பொழிவுக்கு கணிசமான டாலர் கட்டணம் பெறும் , மிகப்பெரிய பேராசிரியராக போற்றப்பட்டு இருப்பீர்கள்.

தமிழ் நாட்டில் அறிவு சார்ந்த விழிப்புணர்வு இல்லை.. ஒரு நடிகனுக்கு கிடைக்கும் கவனிப்பு எழுத்தாளனுக்கு இல்லை.

அப்படி இருந்தும்  உங்கள் பேச்சுக்கு , எழுத்துக்கு , அறிவுக்கு ஏராளமானோர் ரசிகர்களாக இருக்கின்றனர் - என்னையும் சேர்த்து.

தமிழ் நாட்டில் மட்டும் அன்று. தமிழ் பேசும் மக்கள் இருக்கும் அனைத்து நாடுகளிலும் உங்களுக்கு வரவேற்பு உண்டு.

அல்ட்டிமேட் ரைட்டர் சாரு பக்தர்களுக்கு உங்கள் மேல மாபெரும் மரியாதை உண்டு. தேகம் நாவல் விழாவில் உங்கள் பேச்சு என்றும் மறக்க முடியாத ஒன்று.

இந்த நிலையில் எக்சைல் நாவல் விழாவில் நீங்கள் பேசவில்லை என்ற செய்தி எங்களை வருத்தமுற செய்தது. இந்த வருத்தத்துக்கு காரணம் உங்கள் மீது கொண்ட பாசம்தான்.

சிலர் வராவிட்டால் சந்தோஷம்.. ஆனால் நீங்கள் வந்து பேசினால் , அது ஓர் உன்னதமான அனுபவம். அதானால்தான் வருத்தமாக இருந்தது.

ஆனால் நீங்கள் விழாவிற்கு வருகிறீர்கள் என்ற செய்தி வந்துள்ளது.

வாவ்..

சாரு சம்பந்தமான நிகழ்ச்சி என்றால் அது சர்க்கரையால் ஒரு பந்தல் அமைத்தமாதிரி இனிமையாக் , இனிப்பாக இருக்கும்.


அதில் உங்கள் வருகை என்பது சர்க்கரை பந்தலில் தேன் மழை பெய்தது மாதிரி இருக்கும்

வருக வருக,, என மலர் தூவி வரவேற்கிறோம்



4 comments:

  1. ithu nalla seithiyaakave padukirathu... pakirvukku vaalththukkal

    ReplyDelete
  2. உங்களுக்கு பிடித்த நல்ல எழுத்தாளர்களை வெளிப்படையாக பாராட்டுவதில் மிகச் சிறந்தவர் நீங்கள் பிச்சைக்காரன்

    ReplyDelete
  3. நேத்து போட்ட பதிவும்.. இன்னைக்கு போட்ட பதிவும்.. முற்றிலும் முரண்.

    சாரு புத்தக வெளியீட்டு விழாவுக்கு எஸ்.ரா வரார்னு இப்படி போட்டுடிங்களா?

    ReplyDelete
  4. ஆபிரகாமிய மதங்களின் கற்பனா சக்தியை படிக்க Karen Armstrong எழுதிய A history of god படி!
    அப்படியே இதையும்
    http://senkodi.wordpress.com/

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா