மாதா , பிதா , குரு அதன் பின் தெய்வம் என்பது இந்திய மரபு.
ஆனால் ஆங்கிலேயர் ஆட்சி மற்றும் ஐரோப்பிய பாதிப்பில் அந்த நிலை இன்று மாறி விட்டது.
சில ஆண்டுகளுக்கு முன்பு கூட ஆசிரியர்கள் என்றால் மாணவர்களுக்கு ஒரு மரியாதை இருக்கும் நிலை இருந்தது . இன்று ஆசிரியர் என்பது ஒரு பணியாளர் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்களும் முன்பு போல அளவு கடந்த உரிமை , அக்கறை எடுத்துக்கொள்வதில்லை. தன் பணியை முடித்தோமா சென்றோமா என இருக்க பழகிக்கொண்டு விட்டனர்.
இப்படி நாம் மறந்து போனவை ஏராளம்.
ஆங்கிலேயர் வரவால், இப்படி நாம் மறந்து போன பலவற்றை நமக்கு அறிமுகப்படுத்தும் நாவலை எழுதி முடித்துள்ளார் இறைவன் நமக்களித்த இதயக்கனியான அல்ட்டிமேட் ரைட்டர் சாரு அவர்கள்.
இது சுய முன்னேற்ற் நூலா, ஆன்மிக் பெட்டகமா , இலக்கிய கருத்துக்களை சுமந்து வரும் ஒட்டகமா, இலக்கியத்தின் உச்சமா, இறைவன் நமக்களிக்க மறந்த உன்னதங்களின் மிச்சமா , நவீன எழுத்தை தமிழுக்கு கொண்டு வரும் ஒப்ப்ற்ற முயற்சியா என்பதை எல்லாம் என்னால் மதிப்பிட முடியாது. ஆன்றோர்களும் சான்றோர்களும்தான் மதிப்பிட முடியும்.
இலக்கிய உலகின் இறைவனான சாருவுக்கு நம்மால் எந்த கைமாறும் செய்ய இயலாது. ஆனால் நம் அவர் மேல் வைத்து இருக்கும் மரியாதையை எந்த வகையிலாவது காட்டியாக வேண்டும்.
அவர் மேல் நாம் காட்டும் மரியாதை சாரு என்ற தனி நபர் மேல் காட்டும் மரியாதை அன்று.
அவருக்கு செலுத்தும் மரியாதை , தமிழுக்கு செலுத்தப்படும் மரியாதை, இலக்கியத்துக்கு செலுத்தப்படும் மரியாதை, நம் பண்பாடுகளுக்கு செலுத்தப்படும் மரியாதை
ஏன் அப்படி சொல்கிறேன்? விளக்குகிறேன்
நம் ஊரில் அறிவு ஜீவி என பெயர் எடுக்க சில டெம்ப்ளேட் ஃபார்முலாக்கள் உள்ளன.

- தன்னை நாத்திகவாதியாக காட்டிக்கொள்வது
- வாசகனை மதிக்காமல் இருப்பது
- எதையும் படிக்காத அறிவிலியாக இருந்து கொண்டு , தமிழ் கலாச்சாரம் என உதார் விடுவது
- உலக இலக்கியம் பற்றிய எந்த அறிவும் இல்லாமல் , மேம்போக்காக பழம் பெருமை பேசுவது
- ஆளும் கட்சி எது செய்தாலும் திட்டுவது
அல்ட்டிமேட் ரைட்டர் இது எதையும் செய்வதில்லை
தன் எழுத்தால், தன் அறிவால், தன் உழைப்பால் மட்டுமே மக்கள் மனதில் நிற்கிறார். அவர் உழைப்பு , தமிழ் ஆளுமை , உலக இலக்கிய ஞானம் எல்லாம் போற்றத்தக்கது. வணங்கத்தக்கது..
நாம் எதை வணங்குகிறோமோ, அந்த குண்ங்கள் நம்மிடமும் வளரும் என்பது மனோதத்துவ உண்மை
அந்த அடிப்படயில், எழுத்துலக விடி வெள்ளி சாருவின் பிறந்த நாளான டிசம்பர் 18 ல் குரு பூஜை செய்ய இருக்கிறோம்
ஆன்மிக மரபு சார்ந்த பூஜையாக இது இருக்கும்
இது குறித்த மேலதிக விபரங்கள் , அடுத்த பதிவில்...
பொதுவாக குருபூஜை இறந்தவர்களுக்கு தானே செய்வார்கள்?
ReplyDeleteதன்னை நாத்திகவாதியாக காட்டிக்கொள்வது//
ReplyDelete.
.
அய்யா உங்க சாருவும் ஒரு காலத்தில் அப்படிதானே இருந்தார்?தாந்தேயின் சிறுத்தை படிக்கவில்லையா?
ஆளும் கட்சி எது செய்தாலும் திட்டுவது//
ReplyDelete.
.
ஆளும் கட்சி எதை செய்தாலும் ஆதரிப்பது மட்டும் ஆரோக்கியமானதா?நீங்கள் யாரையோ மனதில் வைத்து சொல்றீங்க!மம்மி ரிட்டன்ஸ் னு கட்டுரை எழுதுன சாரு இப்போ ஏன் அம்மாவுக்கு ஜால்ரா போடுறார்?ஜெயா சுயனலமில்லாதவர்னு சொன்னது எந்த அளவு உண்மை?அது உண்மைன்னா எப்படி அவர் 66 கோடி சொத்து சேர்த்தார்?
*
பேருந்து கட்டண உயர்வை எந்த வகையில் நீங்கள் ஆதரிக்கிறீர்கள?மாதம் 3000 சம்பளம் வாங்குபவரின் கதி தெரியுமா உங்களுக்கு?சம்பளத்தை உயர்த்த அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?அல்லது உங்களை போன்ற அறிவு ஜீவிகள் அதுக்கும் ஒரு ஐடியா சொல்லலாமே?
"உங்க சாருவும் ஒரு காலத்தில் அப்படிதானே இருந்தார்?"
ReplyDeleteநாத்திகவாதி எப்படி இருக்க வேண்டும் என அன்று வாழ்ந்து காட்டினார். ஒரு ஆன்மிகக வாதி எப்படி இருக்க வேண்டும் என இன்று வாழ்ந்து காட்டுகிறார்.
சிலர் வெறும் பெருமைக்காக் நாத்திக வேஷம் போட்டு விட்டு, ரகசியமாக கோயில் செல்கிறார்களே, அதைத்தான் சுட்டி காட்டினேன்
"பொதுவாக குருபூஜை இறந்தவர்களுக்கு தானே செய்வார்கள்? "
ReplyDeleteஇல்லை.. சித்தர் மரபில் , தன் குருவுக்கு பூஜை செய்து, ஆசி பெறுவது இயல்பான ஒன்று.. ஒருவர் இருக்கும்போதே மரியாதை செலுத்த வேண்டும்.. உங்களுக்கு சாருவை பிடிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, உங்களு பிடித்த உங்கள் குருவுக்கு பூஜை செய்யுங்கள்
தன்னை நாத்திகவாதியாக காட்டிக்கொள்வதுஆளும் கட்சி எது செய்தாலும் திட்டுவது//
ReplyDelete.
.
அய்யய்யோ இந்த கண்டிஷங்களில் ஜெமோவும் வராரே!தெய்வ குத்தம் ஆகி போச்சே!
நாத்திகவாதி எப்படி இருக்க வேண்டும் என அன்று வாழ்ந்து காட்டினார். ஒரு ஆன்மிகக வாதி எப்படி இருக்க வேண்டும் என இன்று வாழ்ந்து காட்டுகிறார்.///
ReplyDelete.
.
நீங்கள் சொல்லும் போலி நாத்திகவாதத்தை நானும் கண்டிக்கிறேன்,.ஆனால் சாரு நாத்திகவாதியாக இருந்து பின்னர் தான் மிகவும் திட்டிய தம்மபதத்தை பின்பற்றும் புத்த மதத்துக்கு சென்று பின்னர்தானே இந்து மதத்துக்கு வந்தார்?
நாத்திகவாதி எப்படி இருக்க வேண்டும் என அன்று வாழ்ந்து காட்டினார். ஒரு ஆன்மிகக வாதி எப்படி இருக்க வேண்டும் என இன்று வாழ்ந்து காட்டுகிறார்.//
ReplyDelete.
.
அடுத்து Agnostic எப்படி இருக்க வேண்டுமென்பதை வாழ்ந்து காட்ட போறாரா?
"அடுத்து Agnostic எப்படி இருக்க வேண்டுமென்பதை வாழ்ந்து காட்ட போறாரா? "
ReplyDeleteசிலர் சரித்திரம் படிப்பார்கள் .. சிலர் சரித்திரம் படைப்பார்கள்..
"ஆனால் சாரு நாத்திகவாதியாக இருந்து பின்னர் தான் மிகவும் திட்டிய தம்மபதத்தை பின்பற்றும் புத்த மதத்துக்கு சென்று பின்னர்தானே இந்து மதத்துக்கு வந்தார்"
ReplyDeleteஅந்தந்த நேரங்களில் தனக்கு உண்மை என தோன்றுவதை துணிச்சலுடன் சொல்கிறாரே .. அதுதான் சாரு.
நடக்கட்டும்.
ReplyDeleteஅந்தந்த நேரங்களில் தனக்கு உண்மை என தோன்றுவதை துணிச்சலுடன் சொல்கிறாரே .. அதுதான் சாரு.///
ReplyDelete.
.
இதையே சேஷாசலம் என்னும் பெரியார்தாசன் என்னும் சித்தார்த் என்கிற அப்துல்லா செய்திருக்கிறார்!அவருக்கும் ஒரு குரு பூஜை ரெடி பண்ணுங்க!