ஹாய் சாரு..
நலமா..
தமிழ் நாட்டில் தற்போது நடந்து வரும் ஆபாச கூச்சலில் இருந்து நீங்கள் ஒதுங்கி இருப்பது ஒரு விதத்தில் நல்லது என்றாலும், உண்மைகள் ஊமை ஆகும் போது பொய்கள் ஊர்வலம் வருகின்றன என்ற நிலையும் அச்சமூட்டுகிறது.
ஒரு நூலகத்தில் பல புத்தகங்கள் இருக்கலாம். ஆனால் ஒரு புத்தகத்தில் பல நூலகங்கள் இருப்பதை ராச லீலாவில்தான் காண இயலும். அந்த புத்தகத்தை எத்தனை தமிழர்கள் படித்து இருப்பார்கள் என்பது கேள்விக்குறியே..
இந்த நிலையில் நூலக இட மாற்ற விவகாரம்தான் பெரிய சீரழிவு போல சிலர் போலியாக கூச்சலிடுவது அருவருப்பாக இருக்கிறது.
இப்படி கூச்சலிடுபவர்களில் பலர் நூலகம் சென்றதும் இல்லை. புத்தகங்கள் படிப்பதும் இல்லை.
வெறுமனே தினத்தந்தியை படித்து விட்டு நூலக மாற்றத்தை எதிர்க்கிறார்கள்.
சுகி சிவம் எல்லாம் எத்தனை புத்தகங்கள் படித்து இருக்கிறார்? எத்தனை நூலகங்கள் சென்று இருக்கிறார். சன் டிவி வாய்ப்புக்காக போலியாக அங்கலாய்க்கிறார்.
ஓர் எழுத்தாளனை கொஞ்சம்கூட இரக்கம் இல்லாமல் , இண்டர்னெட் பிச்சைக்காரன் என வர்ணித்த ஞானி , இப்போது புத்தக காவலராக நடிக்கிறார்.
கோடிகணக்காண ரூபாய்களை ஒரே இடத்தில் முடக்காமல் , இந்த நிதியை பிரித்து செலவிட்டு இருந்தால் , மாவட்டங்கள் தோறும் நூலகங்கள் அமைத்து இருந்தால் , பலரும் பயன்பெற்று இருப்பார்கள்.
ஆனால் சுய விளம்பரத்துக்காக சென்ற அரசு சுய விளம்பரத்தை மட்டுமே கருத்தில் கொண்டு ஜெயலலிதாவுக்கு போட்டியாக - அவர் வேறு பணிகளுக்காக தேர்ந்தெடுத்து வைத்து இருந்த- கோட்டூர்புரத்தில் நூலகம் அமைத்தது. உண்மையில் பயனாளிகள் மீது அக்கறை இருந்து இருந்தால் , எழும்பூர் போன்ற பகுதிகளில்தான் நூலகம் கட்டி இருக்க வேண்டும்.
எது எப்படி இருந்தாலும், இந்த விவகாரத்தில் கருத்து கூறும் தகுதி உங்களுக்க்கு மட்டுமே உண்டு. ஆனால் சில இலக்கியவாதிகள் - இலக்கியவியாதிகள்- உங்களை தவிர்த்து விட்டு அவர்கள்தாம் தமிழ் நாட்டின் பிரனிதிகள்போல சீன் போடுகிறார்கள்.
இந்த நிலையில் உங்கள் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது. இந்த வாய்ச்சொல் வீரர்களின் கருத்துக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. ஆனால் உங்கள் கருத்துதான் முக்கியமானவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், உங்கள் அதிகாரபூர்வ கருத்தை தமிழகம் எதிர்பார்க்கிறது.
கூலிக்கு மாரடிப்பவர்கள், அறிவு வியாபாரிகள், சவடால் பேர்வழிகள் , அறியாமையில் கிடப்பவர்கள் எல்லாம் சப்தமிடும் இன்றைய நிலையில் , தமிழக்மே இருளில் மூழ்கி கிடப்பது போன்ற அச்சம் ஏற்படுகிறது. உங்களால் மட்டுமே இந்த இருளில் வெளிச்சத்தை கொண்டு வர இயலும்.
இந்த மாதிரி கருத்தை கூறுவதற்கு பதில் நீங்கள் அறிவு பிச்சையெடுத்து ஆழ்ந்து யோசிக்கலாம்.
ReplyDeleteஇந்த மாதிரி கருத்தை கூறுவதற்கு பதில் தாங்கள் பிச்சையெடுத்து தேடலில் ஈடுபட்டுக்கொண்டேயிருக்கலாம்.
ReplyDeleteஅறிவாவது வளரும்.
கிண்டல் பண்றீங்களா..அல்லது உண்மையாகவே அழைக்கிறீர்களா...? ஒண்ணுமே புரியலை....
ReplyDeleteஅறிவு பிச்சையெடுத்து ஆழ்ந்து யோசிக்கலாம்."
ReplyDeleteஉண்மைதான்.. அறிவு பிச்சை எடுத்து கொண்டேதான் இருக்கிறேன்.
டி பி அய்க்கு நூலகம் வந்தால் என்னால் இன்னும் சிறப்பாக அறிவு பிச்சை எடுக்க இயலும் என்பதால் அதை வரவேற்கிறேன்.
பிச்சை தேவைப்டாத சிலர்தான் , இந்த இடமாற்றத்தை எதிர்க்கிறார்கள்
ReplyDelete//கூலிக்கு மாரடிப்பவர்கள், அறிவு வியாபாரிகள், சவடால் பேர்வழிகள் , அறியாமையில் கிடப்பவர்கள் எல்லாம் சப்தமிடும் இன்றைய நிலையில் , தமிழக்மே இருளில் மூழ்கி கிடப்பது போன்ற அச்சம் ஏற்படுகிறது. உங்களால் மட்டுமே இந்த இருளில் வெளிச்சத்தை கொண்டு வர இயலும்.//
ReplyDeleteமுடியல !
சாருவிடம் கருத்து கேட்பதில் தவறில்லை, அதற்காக சுகி சிவம் மற்றும் ஞானியை அவமதிக்க தேவையில்லை. நம் நாட்டில் உள்ள அரசு நடவடிக்கைகள் பற்றி கருத்து கூற இந்நாட்டு குடிமக்கள் அனைவருக்கும் உரிமை உண்டு.
யார் வேண்டுமானாலும் கருத்து சொல்லலாம்தான் . ஆனால் நூலகம் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் படிப்பிலேயே ஊறிப்போன சாருவின் கருத்துதான் பொருத்தமாக இருக்கும்
ReplyDeleteபிச்சைக்காரன், இது வலுவற்ற வாதம். அங்கு மாணவர் படிப்பறை எப்போதும் நிறைந்து உள்ளது. வார இறுதியில் மட்டும் ஆயிரம் பேருக்கு மேல் வருகிறார்கள். பலருக்கும் பயன்படும் ஒரு இடத்தை மாற்றி வைக்க ஒரு தர்க்கரீதியான காரணம் சொல்லுங்கள் பார்ப்போம். நூலகத்தை மாற்றி அமைத்தால் அது மேலும் சிறக்கும் என்றோ, அங்கு இருப்பதால் மக்களுக்கு தீங்கு என்றோ. யோசிக்க தெரியாவிட்டால் எழுதக் கூடாது.
ReplyDeleteநீங்கள் குறிப்பிடும் சாருவின் திரு வாய் மொழி இது :
ReplyDelete//இன்றைய நிலையில் மிக அடிப்படையான தேவை, மாணவர்களுக்கு நல்ல தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிய வேண்டும்.//
முதலில் அவரை அவரது நாவலுக்கு தமிழில் பெயர் சூட்டச் சொல்லுங்கள்.
பேசாம உம்ம பேரை பைத்தியக்காரன்னு மாத்திக்கோங்க.
ReplyDelete"அவரது நாவலுக்கு தமிழில் பெயர் சூட்டச் சொல்லுங்கள்."
ReplyDeleteஅவர் ஆங்கிலத்துக்கு எதிரானவர் அல்லர். நாவலைப் படித்து பாருங்கள்.. தமிழ் எவ்வளவு வலுவான , திறன்மிக்க மொழி என்பது புரியும்
//உங்கள் கருத்துதான் முக்கியமானவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், உங்கள் அதிகாரபூர்வ கருத்தை தமிழகம் எதிர்பார்க்கிறது.// பார்ப்போம்!
ReplyDelete”ஒரு இடத்தை மாற்றி வைக்க ஒரு தர்க்கரீதியான காரணம் சொல்லுங்கள் பார்ப்போம்”
ReplyDeleteநூலகங்களுக்கு எப்போதாவது ஒரு முறை செல்பவர்களுக்கு இந்த பிரச்சினையின் வீரியம் புரியாது. சிலர் இருக்கிறார்கள். காலையிலேயே சாப்பாட்டை எடுத்து கொண்டு , வேலைக்கு செல்வது போல நூலகம் வந்து விடுவார்கள். இவர்கள் வேலைகளுக்கு முய்ற்சிப்பவர்கள் மற்றும் தேர்வுகளுக்கு படிப்பவர்கள். சிலருக்கு சாப்பாடு கொண்டு வரும் வசதி கூட இருக்காது. ஒரே வேளை சப்பாடுதான், கன்னிமராவுக்கு எதிரே பிரட் ஆம்லெட் மட்டும். அதன் பின் நடந்தே தேவனேய பாவாணர் நூலகம் செல்வார்கள். இவர்களுக்கெல்லாம் கோட்டுர்புரம் அலைவது எல்லாம் முடியாது. கன்னிமராவுக்கு அருகிலேயே இன்னொரு நூலகம் இருந்தால்தான் இவர்களுக்கு நல்லது. அங்கேயே படித்து விட்டு அருகில் இருக்கும் ரயில் நிலையம் நடந்து சென்று மாதாந்திர பாஸ் மூலம் தம் அறைகளுக்கு சென்று விடலாம். இப்படி எல்லாம் வேலை தேடுபவர்கள் இருக்கிறார்கள் என்பது பலருக்கு தெரியாது. கன்னிமரா எங்கி இருக்கிறது. டி பி அய் எங்கு இருக்கிறது, தேவ நேய பாவாணர் நூலகம், கோட்டுர்புரம் எங்கிருக்கிறது என்பதெல்லாம் புரியாமல் , டீக்கடையில் அரசியல் பேசுவது போல பேசிகிறார்கள் .ஆக,இடம் மாறினால் நூலகம் சிறப்படையும் என்பதே உண்மை
”பேசாம உம்ம பேரை பைத்தியக்காரன்னு”
ReplyDeleteகன்னிமரா எங்கு இருக்கிறது. கோட்டூர்புரம் எங்கு இருக்கிறது , எங்கு இடம் மாற்றம் செய்ய இருக்கிறார்கள் என்பதெல்லாம் தெரியாத குஷ்பூ, நூல்க இடமாற்றத்தை எதிர்ப்பதை மகிழ்வுடன் ஏற்கும் தமிழ் சூழலில் , உண்மையை யதார்த்தத்தை பேசுபவர்கள் பைத்தியக்காரர்கள்தான்.
Do you honestly think Charu is a writer? What conviction he held longer than holding a fart? He is just an attention seeker living under the shadow of adolosent stupids.
ReplyDelete"Do you honestly think Charu is a writer?"
ReplyDeleteI think honestly and true to my heart that he is more than a writer. He is a Zen master who is expert in writing . His mastery in Tamil is added advantage . But his main plus point is His love of society and people
இந்த நூலகம் அமைக்கப்பட்ட போது நீங்களோ அல்லது சாருவோ அதை எழும்பூரில் அமைக்க வேண்டும் என்று எழுதினீர்களா, ஆம் எனில் சான்று தரவும்.
ReplyDeleteஇல்லை ஜெயலலிதாதான் அன்று அதை எழும்பூரில் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தாரா.
இப்போது ஜெயலலிதாவிற்கு ஜால்ரா போடும் சாரு
ஒரு காலத்தில் கனிமொழிக்கு ஜால்ரா போட்ட பேர்வழிதானே. அத்தனை செலவில் நூலகத்திற்காக கட்டிடம் கட்டப்பட்டு நூலகமும் செயல்பட்டு வரும் போது நூலகத்தினை இடம் மாற்றத் தேவை என்ன.
@ வெண் புரவி
ReplyDeleteதோழரே..
கன்னிமரா நூலகம் சென்று பார்த்தால், கனவுகளை கண்களில் சுமந்து கொண்டு படித்து கொண்டிருக்கும் இளைஞர்களை பார்க்க முடியும். இவர்களுக்கு சாதகமான முடிவை அரசு எடுக்கும்போது , கட்சி சார்பற்று அதற்கு ஆதரவு கொடுப்பது நம் கடமை. கோர்ட் , அது இதுவென காலம் தாழ்த்தாமல் , மாற்றத்தை உடனடியாக செய்ய கோரி , உரியவ்ர்களிடம் மனு கொடுக்க இருக்கிறோம். விருப்பம் இருந்தால் இணையுங்கள்
மாற்று கோணத்தில் கருத்து சொல்கிறேன் பேர்வழி என்று எதையாவது எழுதவேண்டாம்..
ReplyDeleteநூலக இடமாற்றம் சம்பந்தமான மூன்று இடுகைகளையும் படித்ததிலிருந்து.. நீங்கள் முன்வைக்கும் ஒரேயொரு காரணம். வேலை தேடுபவர்கள் தான் நூலகத்தை பயன்படுத்துகின்றனர் என்பதுபோலும். எத்தனை நூலகம் அமைத்தாலும் அதை எழும்பூரில் தான் ஏற்படுத்தவேண்டும் என்றும்தான் கூறுகிறீர்கள். சுய விளம்பரத்துக்காக கட்டப்பட்ட நூலகம் என்றும், அதற்கு பதில் மாவட்டம்தோறும் நூலகம் அமைத்திருக்கலாம் என்றும் சொல்லியிருந்திங்க, இதை சரி செய்வதற்கு நூலகத்தை ஏற்கனவே இரண்டு நூலகங்கள் உள்ள பகுதியில் மூன்றாவது நூலகத்தையும் மாற்றிவிடுங்கள் என்று முதல்வருக்கு கடிதம் போட்டு இருக்கிறீர்கள். இது எந்த ஊர் தர்க்கம் என்றுதான் புரியவில்லை.
வேலை தேடுபவர்கள் தவிர்த்து வேறு யாரும் நூலகத்தை பயன்படுத்தவில்லை என்பதற்கு புள்ளிவிவரங்களுடன் ஏதாவது ஆதாரம் வைத்திருகிறீர்களா? நீங்கள் சொல்வதுபோல் தேவை இருப்பவர்கள் அதாவது வேலை தேடுபவர்கள் பெரும்பான்மையாக நூலகத்தை பயன்படுத்துகிறார்கள் என்றே வைத்துகொன்டாலும், அவர்களுக்காக ஏற்கனவே இரண்டு நூலகங்கள் இருக்கும்போது.. பொழுதுபோக்குக்காக நூலகம் சென்று வாசிப்பவர்களுக்காக ஒரு நூலகம் இருக்கட்டுமே அதிலென்ன தவறு? அவர்களின் வரிபணத்தில்தானே நூலகம் கட்டப்பட்டது. மேலும் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களும், ஐ.ஐ.டி மாணவர்களும் நூலகத்தை கோட்டூர்புர நூலகத்தை பயன்படுத்துகிறார்கள் என்பதையும் உணரவேண்டும்.
அதி புத்திசாலி சாரு தான் இதற்கு கருத்து சொல்ல சரியானவர், மற்றவர்கள் யாருக்கும் தகுதியில்லை என்பதுபோல இருக்கிறது நீங்கள் சொல்வது ரசிக்கும்படியாக இல்லை. ஓட்டுபோட்டு ஜெயிக்க வைத்த ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசின் முடிவை விமர்சிக்க உரிமை உண்டு..
சுகிசிவம், ஞாநி ஆகியவர்கள் நூலகத்து பக்கம் தலைவைத்துகூட படுத்ததில்லை என்பதை எப்படி அறுதியிட்டுக் கூறுகிறீர்கள்? ஒரு கருத்தை பெரும்பாலானோர் கூறும்போது அதை செவிமடுத்து கேட்கும் தன்மை வேண்டும்
மீண்டும் சொல்கிறேன்
மாற்று கோணத்தில் கருத்து சொல்கிறேன் பேர்வழி என்று எதையாவது எழுதவேண்டாம்..
மஞ்சள் புத்தகம் எழுதுவார்கள் எல்லாம் எழுத்தாளரா?? கொடுமை...
ReplyDelete"மேலும் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களும், ஐ.ஐ.டி மாணவர்களும் நூலகத்தை கோட்டூர்புர நூலகத்தை"
ReplyDeleteஇந்த மாணவர்களுக்கு னல்ல புத்தகங்கள் கிஅடைக்கும் வாய்ப்பை அவர்கள் சார்ந்த கல்வி நிலையங்களே அளித்து விடுகின்றன. ஆனால் இந்த வாய்ப்புகள் இல்லாத தென் மாவட்டங்களில்- அவ்வளவு தூரம் கூட வேண்டாம் , சென்னையின் சுற்றுப்புற பகுதிகளில்- வசிக்கும் மாணவர்கள் என்ன பாவம் செய்தார்கள்? ஒன்று இந்த பகுதிகளில் நூல்கம் அமைக்க வேண்டும் , இல்லை என்றால் சென்னையின் ஒரே இடத்தில் எல்லா நூலகங்களையும் அமைத்தால் , இவர்கள் சென்று வர எளிதாக இருக்கும்.ரயில் வசதி கொண்ட எக்மோர் இதற்கு பொருத்தமாக இருக்கும் என்பது என் அனுபவம்
”சுகிசிவம், ஞாநி ஆகியவர்கள் நூலகத்து பக்கம் தலைவைத்துகூட படுத்ததில்லை என்பதை எப்படி அறுதியிட்டுக் கூறுகிறீர்கள்”
நான் பிச்சை எடுத்தபடி வேலை தேடிய கால கட்டத்தில், இண்டர்வியூவுக்கு படிக்கும் பொருட்டு காலை முதல் நூலகம் அடைக்கும் வரை நூலகத்திலேயேதான் இருப்பேன். அப்போதிருந்த நூலகர்களுக்கு என்னை நன்றாக தெரியும். அப்போதெல்லாம் ஞானி, சுகி சிவம் போன்றோரை அங்கு பார்த்ததி இல்லை. சில நிகழ்ச்சிகளுக்காக வருவது வேறு. ஆனால் ஒரு வாசகன் என்ற முறையில் வந்தது இல்லை. பிறகு எப்படி ஒரு வாசகனின் தேவை இவர்களுக்கு தெரியும்.
”ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசின் முடிவை விமர்சிக்க உரிமை உண்டு..”
உரிமை உண்டுதான். ஆனால் சரியான கருத்தை யார் சொல்ல முடியும் என்பது இருக்கிறது அல்லவா. தொலைக்காட்சியில் கிரிக்கெட் பார்த்தவாறு , டோனிக்கு பேட்டிங் டிப்ஸ் கொடுக்க நமக்கு உரிமை உண்டுதான். ஆனால் அவர் ஏற்பது கிரிக்கெட் கோச்சின் அறிவுரைகளைத்தானே. அதே போலத்தான், இலக்கிய உலக பிதாமகன் சாரு சொல்ல்வதுதான் சரியாக இருக்கும், மற்றவர்களும் எதையாவது சொல்லலாம் என்றபோதிலும்
”வேலை தேடுபவர்கள் தவிர்த்து வேறு யாரும் நூலகத்தை பயன்படுத்தவில்லை என்பதற்கு புள்ளிவிவரங்களுடன் ஏதாவது ஆதாரம் வைத்திருகிறீர்களா”
ReplyDeleteஹாஹா.. நண்பரே .. நீங்கள் சென்னையில் வசிப்பவராக இருந்தால் என்னுடன் வாருங்கள். ஃபேன் காற்றில் அமர்ந்து தூங்குபவர்களையும், நடிகைகளின் படத்தை பிளேடால் கிழித்து செல்பவர்களையும் காட்டுகிறேன். வேலை தவிர்த்த புத்தகங்களை தமிழர்கள் படிப்பதில்லை என்பதற்கு பெரிய ஆராய்ச்சியெல்லாம் தேவையில்லை. எழுத்தாளர்களையும், புத்தக வெளியீட்டாளர்களையும் கேட்டால் போதுமே.
"மஞ்சள் புத்தகம் எழுதுவார்கள் எல்லாம் எழுத்தாளரா?? கொடுமை..."
ReplyDelete@ குடிமகன்.
மேற்கண்ட பின்னூட்டமே உங்களுக்கு விளக்கம் அளித்து இருக்கும் என நினைக்கிறேன். 200 கோடியில் கட்டப்பட்ட நூலகம், கடவுளும் நானும், மனம் கொத்தி பறவை போன்ற எழுத்துக்களை மக்களிடம் கொண்டு செல்லாததால்தானே , அந்த தோழர் ஓர் எழுத்தாள்ரை மஞ்சள் புத்தக எழுத்தாளர் என நினைக்கிறார். அவ்வளவு பணம் வீணல்லவா. அந்த பணத்தை பிரித்து , பரவலாக கிராமங்களில் நூலகங்கள் அமைத்து இருந்தால் பலனளித்து இருக்குமே
Hello,
ReplyDeleteThe move has nothing but political vengeance.
Cant you build a new hospital, cant you make the existing one as the best one. I didn't opposed changing Secretariat. but I am opposing this because you wont get any good government library so easily . This is the library making the people to read..
" The move has nothing but political vengeance "
ReplyDeleteI don't want to make any political comments. It may be politically motivated. But the end result is good for public.
"You wont get any good government library so easily"
l
Yes. we have to urge Government to re-install Library within a specific time frame. If they don't do at this time, then they have to be condemned . and public protest should be organised
பேசாம எக்மோர் ஸ்டேஷன் யும் கன்னிமரா மற்றும் தேவநேய பாவாணர் நூலகத்தையும் கொட்டுர்புரம் மாற்றி விட்டால் என்ன? நீங்களும் உங்க லாஜிக் உம்......
ReplyDeleteஐயையோ கொரட்டூர் நூலகத்தையும் மாத்துறாங்களா?சொல்லவே இல்ல.......
ReplyDeleteபேசாம எக்மோர் ஸ்டேஷன் யும் கன்னிமரா மற்றும் தேவநேய பாவாணர் நூலகத்தையும் கோட்டூர்புரம் மாற்றி விட்டால் என்ன? " அப்ப்டி மாற்றுவதை விட ,கோட்டூர்புரம் நூலகத்தை எக்மோர் மாற்றுவதுதானே எளிது?!!
ReplyDelete"ஐயையோ கொரட்டூர் நூலகத்தையும் மாத்துறாங்களா?சொல்லவே இல்ல......."
ReplyDeleteபின்னூட்டத்தில் ஏற்பட்ட பிழையை சுட்டிக்காட்டியதற்கு நன்றி.
// ஓர் எழுத்தாளனை கொஞ்சம்கூட இரக்கம் இல்லாமல் , இண்டர்னெட் பிச்சைக்காரன் என வர்ணித்த ஞானி //
ReplyDeleteஒருவேளை ஞாநி உங்க ப்ளாக்கை படிச்சிருப்பாரோ...
"ஒருவேளை ஞாநி உங்க ப்ளாக்கை படிச்சிருப்பாரோ"
ReplyDeleteha ha
காழ்ப்புணர்ச்சி காரணமாக நூலகம் இடம் மாற்றம் செய்வதை எதிர்ப்பது நியாயம் தான். உங்கள் கருத்துடன் உடன்பட வில்லை.
ReplyDeleteஆர். அபிலாஷும், குடிமகனும் சொல்வதை முற்றிலும் வழி மொழிகிறேன்.
ReplyDeleteஆர். அபிலாஷும், குடிமகனும் சொல்வதை முற்றிலும் வழி மொழிகிறேன்.
ReplyDelete" காழ்ப்புணர்ச்சி காரணமாக நூலகம் இடம் மாற்றம் செய்வதை எதிர்ப்பது நியாயம் தான். "
ReplyDeleteகாழ்ப்புணர்ச்சியோ , அன்பு உணர்ச்சியோ. நமக்கு நல்லது நடக்கிறது. அது போதுமே
"ஆர். அபிலாஷும், குடிமகனும் சொல்வதை முற்றிலும் வழி மொழிகிறேன்."
ReplyDeleteஅவர்களுக்கு அளித்த பதில்களை பார்த்து விட்டீர்ர்களா?
அன்புள்ள பிச்சைக்காரனுக்கு
ReplyDeleteவணக்கம்.
சாரு நிவேதிதாவுக்கு இண்ட்டர்நெட் பிச்சைக்காரன் என்ற பெயரை நான் சூட்ட்டவில்லை. சில வலிப்பூக்கலில் அவர் அவ்வாறு வர்ணிக்கப்பட்டதையே நான் குறிப்பிட்டிருந்தேன். இதற்காக என் மீது ஏற்பட்ட கோபத்தி அவர் நான் ஜெயல்லிதாவிடமிருந்து சூட்கேஸ்கள் வாங்குவதாக எழுதினார். பின்னர் ஒரு பொது நிகழ்ச்சியில் சந்தித்தபோது , தன் கருத்து தவறானது என்றும் அதற்காக வருத்தப்படுவதாகவும் என்னிடம் தெரிவித்தார். சாருவுக்கும் எனக்கும் கருத்து வேறுபாடுகள் உண்டென்றாலும், இருவரும் ஒருவர் மற்றவரிடம் விரோத பாவத்தில் இருந்ததில்லை. சிநேகமாகவே இருந்துவருகிறோம்.
அண்ணா நூலகம் பற்றி நான் எழுதிஅய்தை நீங்கள் படிக்கவில்லை என்று தோன்றுகிறது. நவம்பர் 3 அன்று பேஸ் புக்கில் நான் எழுதியது இதுதான் : “கோட்டூர்புரத்திலிருந்து அண்ணா நூலகத்தை எழும்பூருக்கு மாற்றும் ஜெயலலிதாவின் முடிவு தேவையற்றது. தவறானது. அராஜகமானது. தமிழகம் தொடர்ந்து கருணாநிதி-ஜெயலலிதா தனிச் சண்டையால் சீரழிக்கப்படுகிறது. ராணி மேரி கல்லூரியை இடித்து புதிய தலைமைச் செயலகம் கட்ட ஜெயலலிதா திட்டமிட்டபோது கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. அப்போது அவர் கோட்டூர்புரத்தில் புதிய தலைமைச் செயலகத்துக்கு இடம் ஒதுக்கி புரோகிதர்களுடன் பூமி பூஜை நடத்தினார். ஆட்சி மாறியதும் கருணாநிதி அதே இடத்தில் அண்ணா
நூலகத்தைக் கட்டினார். ஜெயலலிதாவின் திட்டத்தை முறியடிப்பதுதான் கருணாநிதியின் அசல் நோக்கம். 200 கோடி செலவில் சென்னையிலேயே ஒரு நூலகம் கட்டுவதற்கு பதில் 30 மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட நூலகங்களுக்கு தலா 7 கோடி கொடுத்தால் அவை சிறப்பான நூலகங்களாகியிருக்கும். தமிழகம் முழுவதும் பயன் கிட்டியிருக்கும். ஆனால் கருணாநிதியின் நோக்கம் போட்டி ச்ரசியல்தான். ஜெயலலிதாவுடையதும் அதுவே. இருவரின் வழிமுறைகள் மட்டுமே வேறு. கருணாநிதி சாமர்த்தியமாக செய்வார். ஜெயலலிதா ஆணவமாக செய்வார். அண்ணா நூலகத்தைப் பொறுத்த மட்டில் அது சிறப்பாக இருப்பதாலும் அப்பகுதிக் கல்வி வளாகங்கள் இருப்பதாலும் அதை கோட்டூர்புரத்திலிருந்து மாற்றத் தேவையில்லை என்பதே என் கருத்து. குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமனையை ஓமந்த்தூரார் தோட்டத்தில் கருணாநிதி கட்டிய சட்டசபை கட்டடத்தில் ஜெயலலிதா அமைக்கப் போகும் பொது மருத்துவமனையுடன் சேர்த்து வைத்துவிடலாம். எழுத்தாளர்கள், பேராசிரியர்கள் எல்லாரும் கோட்டூர்புரம் நூலகம் வாசலில் கூடி “ ஆக்குப்பை வால்ஸ்டீர்ட்” போல ” நூலகத்தை வசப்படுத்துவோம்” போராட்டம் நடத்த வேண்டும்.”
தவிர, கருணாநிதி அண்ணா நூலகத்தைக் கட்டும்போதே நான் அதை எதிர்த்தேன். அந்தப் பணம் மாவட்ட நூலகங்களுக்கு செலவிடப்படவேண்டுமென்று அப்போதே ஓ பக்கங்களில் எழுதியிருக்கிறேன்.
நான் எழுதுவதை முழுமையாக படித்துவிட்டு முரண்படுங்கள். திட்டுங்கள். எனக்கு அதில் அவமானம் எதுவும் இல்லை. நான் என் கருத்துகளில் உறுதியாக இருப்பவன். என்னைப் படிக்காமலே திட்டுவது, திட்டுபவர்களுக்குத்தான் அவமானமானது.
அன்புடன் ஞாநி
@ பார்வையாளன்
ReplyDeleteபார்வைஜி... ஞாநியின் பதிலை இந்த இடுகையில் பிற்சேர்க்கையாகவோ அல்லது தனி இடுகையாகவோ சேர்க்கவும்...
@பிரபாகரன
ReplyDeleteதிரு.ஞானி மேலும் சில விளக்கங்களை அளித்திருக்கிறார் . அதையும் , என் வருத்தத்தையும் சேர்த்து தனி பதிவாக இட இருக்கிறேன்
அரசின் செயல்முறைகளை விமர்சிக்க நமக்கு அனைவருக்கும் உரிமை உண்டு. இதில் இவர் தகுதியானவர், அவர் தகுதியற்றவர் போன்ற வரம்புகள் ஏன்? மேலும் நீங்கள் சொல்ல வந்த செய்தியை விட்டு விட்டு ஒருவரை இதுகுறித்து இகழ்வதும் ,மற்றவரை கொண்டாடுவதும் ஏன்? நூலகம் இடமாற்ற வேண்டும் என நீங்கள் எண்ணினால் அதற்குண்டான ஆணித்தரமான கருத்துக்களை , காரணங்களை சொல்லலாமே! வீணாக ஞானி, சுகி சிவம் போன்றவர்களை திட்டவேண்டுமா என்ன?
ReplyDelete/// இந்த நிலையில் உங்கள் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது. இந்த வாய்ச்சொல் வீரர்களின் கருத்துக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. ஆனால் உங்கள் கருத்துதான் முக்கியமானவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், உங்கள் அதிகாரபூர்வ கருத்தை தமிழகம் எதிர்பார்க்கிறது. ///
இதெல்லாம் ரொம்ப ஓவர் இல்லையா? ஒரு வேலை அவரை கிண்டலடிதீர்களா என்ன? :))
அதிமுக வுக்கும் அம்மாவுக்கும் சொம்படிக்க அவருக்கு ஒரு வாய்ப்பை உருவாக்கித் தருவதே உங்களின் நோக்கம். அதனை அவரும் சிறப்பாக செய்து விட்டார்.
ReplyDeleteஞானி பற்றிய வரிகள் தேவை இல்லை என சொல்லி விட்டு, அவர் பதிவில் கருணாநிதியை ஏகத்துக்கு வாரியிருக்கிறார்.
தன் எழுத்துக்களை என்பது புத்தகங்களுக்கு மேல் விற்க முடியாத ஒரு எழுத்தாளர், இம்மாதிரி ஜால்ரா அடித்துதான் பிழைப்பை நடத்த முடியும் என்கிற நிலைக்கு வந்துவிட்டாரா என்ன?
திரு .சாரு நிவேதிதா என்று ஜெயலலிதா சுயநலமில்லாதவர், நிர்வாகத்திறமை மிக்கவர் என்று சொன்னாரோ அன்றே அவருடைய கருத்துக்கு மதிப்பில்லாமல் போய்விட்டது.
ReplyDeleteஇம்மாதிரி ஜால்ரா அடித்துதான் பிழைப்பை நடத்த முடியும் என்கிற நிலைக்கு வந்துவிட்டாரா என்ன"
ReplyDeleteஜால்ரா அடிக்க வேண்டும் என நினைத்து இருந்தால் , தி மு க ஆட்சியில் இருந்தபோதே , அதை விமர்சித்து இருப்பாரா?
தெல்லாம் ரொம்ப ஓவர் இல்லையா?”
ReplyDeleteஇல்லை..
நூலகம் , புத்தகம் பற்றி கருத்து கூற ஓர் இலக்க்ய்வாதிக்கு மட்டுமே தகுதி உண்டு. நக்கீரன் படித்து விட்டு சிலர் உணர்ச்சி வசப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.. அதுதான் ஓவர்
"இந்த நூலகம் அமைக்கப்பட்ட போதுஅதை எழும்பூரில் அமைக்க வேண்டும் என்று எழுதினீர்களா"
ReplyDeleteஅந்த நூலகம் கோட்டூர்புரத்தைல் வேண்டாம். கிராமங்களில் அமையுங்கள் என்பதே அனைவரின் கோரிக்கையாக இருந்தது. சான்றாக திரு ஞானியின் கட்டுரையை அடுத்த இடுகையில் கொடுத்துள்ளேன். படித்து பாருங்கள்
ஜெய் ஜாக்கி..ஜெய் சாரு.....
ReplyDeleteBasically charu nivedas writing is a baseless.He praises himself.i recently read the novel Dhegam.worst novel,in the time of the novel release he praises himself a lot.And many of his articles are truth-less.Am so surprised that how he writing a false one in front of the literature society.And he uses the name gnani a lot for his cheap popularity.A gud writer should guide the society and gnani do that perfectly.And charu nivedita a "Ching Chang" for kanimozhi and nityanandha in the past and now for jayalalitha.
ReplyDelete”.i recently read the novel Dhegam.worst novel”
ReplyDeleteTastes differs . I believe it is best novel.
But I accept the fact that peoples taste differs, But I afraid u might have missed the essence that novel. I welcome u to attend discussions about that novel which may given u some insight
அப்போ இவரை பத்தி யாரும் எதுவும் சொல்ல கூடாது, சொன்ன உடனே அவுங்க JJ கிட்டே போட்டி வாங்கிட்டாங்க அப்பிடின்னு சொல்லுவார்,
ReplyDeleteஇல்லை அவர் இளையராஜா பத்தி தப்பா பேசினார்ன்னு சொல்லுவார், இல்லை அவர் என் புத்தகத்தை விக்காம மொடக்கி வட்சார்னு சொல்லுவார்!!! ஒரு காலத்துல நானும் இவரோட ரசிகன் தான், இவரோட இந்த புத்தி புரியற வரைக்கும்!!! I will still read him, as he is a good writer, he writes very interesting articles. But he is not a good human being. உடனே அவரோட பழகி பார்த்தா தான் தெரயும்ன்னு சொல்லாதீங்க, I used to be in his inner circle a decade ago.
unwanted controversy. when u comment abt others that they are taking side with dmk. i also suspect about u and charu that you both are doing jaalra to jj.
ReplyDelete"i also suspect about u and charu that you both are doing jaalra to jj"
ReplyDeleteDefinitely not. பொதுப்புத்தியில் இருந்து விலகி இருப்பது தவ்றாக தெரியலாம். ஆனால் நீங்களும் இதை சரியென உணரும் காலம் வரும்