Pages

Wednesday, November 16, 2011

சாரு நிவேதிதாவை வன்மையாக கண்டிக்கிறேன்

ஹாய் சாரு..

உங்களை உங்கள் எழுத்துக்காக கொண்டாடுபவர்கள் ஏராளம். உங்களுடன் இருக்கும் போது கிடைக்கும் எனர்ஜெடிக் ஃபீலிங்கிற்காக கொண்டாடுபவர்களும் ஏராளம். உங்கள் படிப்புக்காக , உழைப்புக்காக , அன்பிற்காக கொண்டாடுபவர்கள் எல்லாம் இருக்கிறார்கள்.


இதையெல்லாம் தவிர  உங்களை ஒரு  குருவாக எண்ணி போற்றும் பலரும் இருக்கிறார்கள்.  உங்களை பார்ப்பது ஒரு ஜென் குருவைப்பார்ப்பது போல இருப்பதாக , நம் வாசக நண்பர்கள் சிலர் என்னிடம் கூறி இருக்கிறார்கள்.

எங்களுக்கு தீபாவளி என்பது , டிசம்பரில்  நடக்க உள்ள , தமிழில் எழுதப்பட்டுள்ள உலக நாவல் வெளியீட்டு விழாதான்.

புத்தாண்டு என்பது என்ன என நீங்கள் கேட்கலாம்..

தமிழ் புத்தாண்டு தை மாதமா, சித்திரையா என்பது அரசியல் பிரச்சினை..

ஆனால் எங்களுக்கு அந்த குழப்பம் எல்லாம் இல்லை.

எங்களை பொறுத்தவரை தமிழ் புத்தாண்டு, இலக்கிய புத்தாண்டு, எழுத்துல புத்தாண்டு என எல்லாமே டிசம்பர் 18தான் ... அன்றுதான்  நவீன தமிழ் இலக்கியத்துக்கு பிறந்த நாள்..

அந்த நன்னாளில் நீங்கள் வெளி நாடு செல்ல இருப்பதாக கேள்விப்பட்டேன், அதை வன்மையாக கண்டிக்கிறேன்..

2012 என்பது எக்சைல் நாவலுக்கான ஆண்டாகும். அந்த நாவல் வெளி வந்த பிறகு, உங்கள் ரீச் பல மடங்கு அதிகரித்து விடும். நாங்களெல்லாம் இப்போது போல எளிதாக அணுகி பேச முடியுமா என தெரியவில்லை.
எனவே இந்த டிசம்பர் 18 வெளி நாடு செல்லாமல் எங்களுடன் கொண்டாட வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.

பால் அபிஷேகம் , குரு பூஜை என இலக்கிய உலகின் ஒரு புது அத்தியாயமாக இந்த ஆண்டின் டிசம்பர் 18 அமைய இருக்கிறது. அதை மாற்றி விட வேண்டாம்..

   மக்கள் நாடி துடிப்பை அறிந்தது போல சீன் போடும் சிலர் , தி மு கதான் ஆட்சி அமைக்கும் என்று அடித்து சொன்னபோது, வாஷ் அவுட் ஆகும் என கூலாக நீங்கள் துக்ளக்கில் எழுதினீர்கள்.

நானே கூட அதை நம்பவில்லை. ஆனால் அதன் பின் நடந்தது வரலாறு.

அதே போல அண்ணா நூலக விவகாரத்திலும் ஆட்டு மந்தை கூட்டத்தில் சேராமல் , சிங்கமென கர்ஜித்தீர்கள். அதை அப்போது பலர் ஏற்கவில்லை. இப்போது சிறிது சிறிதாக ஏற்று வருகிறார்கள்.

அதே போல எக்சைல் நாவல் வரலாறு படைக்கும் என்ற உங்கள் வாக்கும் பலிக்கத்தான் போகிறது.

எனவே இந்த பிறந்த நாளை சென்னையில் கொண்டாட வேண்டும் என அன்புடன் கேட்டு கொள்கிறேன்.




7 comments:

  1. உங்களை மாதிரி ஊருக்கு நாலு பேர் இருந்தா போதும்... இப்போ சாருவை பிடிக்கிறவங்களுக்கு கூட பிடிக்காம போயிடும்....

    தொடரட்டும் உங்கள் பொன்னான சேவை...

    ReplyDelete
  2. நடிகர்களை கொண்டாடுகிறோம். அரசியல்வாதிகளை போற்றுகிறோம். எழுத்தாளனை கொண்டாடினால் வினோதமாக தோன்றுகிறது

    ReplyDelete
  3. ரசிப்பது - கொண்டாடுவது - ஆராதிப்பது இதையெல்லாம் தாண்டி நீங்கள் வேறு ஏதோ ஒரு பரவச நிலைக்கு சென்றுவிட்டீர்கள்...

    ReplyDelete
  4. I don't believe in worshiping actors or politicians or writers but looks like some of the die-hard fans have gone beyond hero worshiping which I think is insanity and madness. I think if Charu asks these guys to lick his feet, these guys will not hesitate as he is the zen guru and these "sishyas" can get "moksha"!

    ReplyDelete
  5. அது இருக்கட்டும், என்ன பார்வையாளன் பரிசை கோட்டை விட்டுட்டீங்க ?

    ReplyDelete
  6. என்ன பார்வையாளன் பரிசை கோட்டை விட்டுட்டீங்க ?"

    உங்களைப் போன்ற நல்லவர்களின் பாராட்டு கிடைத்ததே பெரிய பரிசுதானே? :)

    ReplyDelete
  7. aama i read pichaikaarans all articles about chaaru for a comedy experience

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]