பரபரப்பாக எக்ஸைல் வெளியீட்டு விழா முடிந்தாலும், அதன் தாக்கம் முடியவில்லை. நாவலை இப்போதுதான் ஒவ்வொருவராக படித்து முடித்து கருத்துக்கள் சொல்ல ஆரம்பித்துள்ளார்கள்.
நாவல் குறித்த என் கருத்து இரண்டு நாளில் வெளியிடப்படும்.
அல்ட்டிமேட் ரைட்டர் சாருவின் புத்தக விழா அமர்க்களமாக நடந்து முடிந்தது.
சொற்பொழிவுகளின் முழு ரிப்போர்ட் ஏன் வெளிடவில்லை என பலர் என்னிடம் உரிமையுடன் கேட்ட்னர்.
நாளை வீடியோ தொகுப்பு வெளியாக இருக்கிறது. எனவே வார்த்தைக்கு வார்த்தை ரிப்போர்டிங் செய்ய விரும்பவில்லை.
ஆனால் வீடியோ கண்ணில் சிக்காத சிலவற்றை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்..
- வாலியும், இந்திரா பார்த்த சாரதியும் மேடையில் சும்மா அமர்ந்து இருந்த போது கூட , நாவலைப்பற்றி பாராட்டி தமக்குள் பேசிக்கொண்டு இருந்தனர். அருகில் இருந்தவர்களுக்கு அது தெளிவாக கேட்டது.
- இந்திரா பார்த்தசாரதி வெகு உற்சாகமாக நாவலை பாராட்டி பேசி அமர்ந்தார். பேசி முடித்தும் அவருக்கு திருப்தி இல்லை. ம்தன பேச அழைக்கப்பட்டு, மேடை ஏறிய பின், மதனிடம் அனுமதி கேட்டு , மேலும் கொஞ்சம் பாராட்டி பேசிவிட்டு சென்றார் இ பா
- இவ்வளவு பெரிய கூட்டத்தில் , தன் இலக்கிய வாழ்வில் பேசியதில்லை என்றார்
- நான் ஞானி அருகில் அமர்ந்து இருந்தேன். ஓ பக்கங்களால் தான் அடையும் சிரமங்கள் சொல்லி மாளாது என சாரு நகைச்சுவையாக பேச , அதை ரசித்து சிரித்தார் ஞானி ( அது என்ன நகைச்சுவை என்பது வீடியோவில்)
- சென்ற முறை போல பீர் அபிஷேகம் செய்யப்படவில்லை. ஜென் குருவாக அல்ட்டிமேட் ரைட்டர் வளர்ச்சி பெற்ற நிலையில் பீர் அபிசேகம் செய்வதில் சற்று தயக்கம் இருந்தது.
- சில எழுத்தாளர்கள் ”சில காரணங்களால்” வர இயலாமல் போனது நல்லதாக போயிற்று, இதனால் மதனுக்கு பேச நேரம் கிடைத்தது. சிங்கம் போல மேடை ஏறி கர்ஜித்தார். எந்த தயாரிப்பும் இல்லாமல் வந்து , அறிவார்ந்த முறையில் பேசி , அனைவர் மனதையும் கொள்ளை கொண்டார். நானும் சாருவின் வாசகன், உங்கள் சார்பாக பேசுகிறேன். என்று பேசி அனைவர் மனதிலும் இடம் பிடித்தார்
- பிரெஞ்ச் மொழி பெயர்ப்பில் சாருவுக்கு தெரிந்த ஒரு வார்த்தை குறித்து விளக்கினார். அது என்ன என்பதை வீடியோ இணைப்பில் பாருங்கள். எனக்கும் பிரெஞ்ச் மீது காதல் ஏற்பட்டு, மூன்று மாதங்களில் பிரஞ்ச் கற்கும் புத்தகம் வாங்கி விட்டேன்
No comments:
Post a Comment
NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]