Thursday, December 8, 2011

தர்க்கா, இறை நேசர்கள் , மகான்களுக்கு சக்தி உண்டா? - இஸ்லாம் என்ன சொல்கிறது?

இஸ்லாம் குறித்து சில தகவல்களை பார்த்தோம்..

சில கேள்விகளுக்கு பதில் அளித்து விட்டு , முக்கியமான சில விஷயங்களை விவாதிக்க இருக்கிறோம்...

இவை எல்லாம் என் முடிவான கருத்துக்கள் அன்று, என் தேடலில், வாசிப்பில் இருந்து புரிந்து கொண்டவை மட்டுமே.

தகவல் பிழையோ , சொற் பிழையோ இருந்தால் சொல்லுங்கள்.. திருத்தி கொள்கிறேன்.

1. இஸ்லாம் பற்றி எழுத அந்த மதத்தில் பல நிபுணர்கள் இருக்கிறார்களே.. நீங்களும் ஏன் இஸ்லாம் குறித்து எழுதுகிறீர்கள்? சீக்கிய, புத்த மதங்கள் பற்றி எழுத வேண்டியதுதானே ?


 நான் மத அடிப்படையில் எழுதவில்லை.. இஸ்லாமிய நூல்கள் படித்த போது எனக்கு ஏற்பட்ட பிரமிப்பை பகிர்ந்து கொள்கிறேன். அவ்வளவே. இதன் மூலம் எழும் விவாதங்கள் மூலம் என வாசிப்பை மேலும் அதிகப்படுத்தி கொள்கிறேன்.


2 தர்ககா வழிபாட்டை சில முஸ்லீம்கள் ஏற்கிறார்கள்.. சிலர் ஏற்பதில்லை.. உங்கள் கருத்து என்ன?

நான் படித்ததில் இருந்து புரிந்து கொண்டது, மகான்களுக்கு சில சக்திகள் உள்ளன என்பதை இஸ்லாம் ஏற்கிறது. அவர்களை மதிக்கவும் சொல்கிறது. ஆனால் இப்படி மதிப்பதை, சிலர் இணை வைப்பதாக நினைத்து எதிர்க்கிறார்கள்..

இடல் சரியில்லை என மருத்துவமனை போகிறோம், அதற்காக , இறைவனை நம்பாமல் டாக்டரை  நம்புகிறோம் என சொல்ல முடியுமா?

3 அதெல்லாம் இருக்கட்டும். அடக்கஸ்தலதுக்கு மதிப்பு உண்டா இல்லையா?


நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தமது தாயாரில் அடக்கத் தலத்தை சியாரத் செய்த போது அழுதார்கள். அவர்களைச் சுற்றியிருந்தவர்களும் அழுதனர். அபோது அவர்கள் என் தாயாடுக்காக பாவ மன்னிப்பு தேட நான் என் இறைவனிடம் அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. என் தாயாரின் அடக்கத்தலத்தை சியாரத் செய்ய் அனுமதி கேட்டேன். அதற்கு அல்லாஹ் அனுமதித்தான். எனவே நீங்களும் கப்ரை ஸியாரத் செய்யுங்கள். ஏனெனின் அது மரணத்தை நினைவுபடுத்தும் என்று கூறினார்கள்.


4 மகான்களாக இருந்தாலும் , சாதாரணர்களாக இருந்தாலும் இறப்பு அனைவருக்கும் பொதுதானே ? 


குர் ஆன் அப்படி போதிக்கவில்லை 


அல்லாஹ்வுடைய பாதையில் வெட்டப்பட்டவர்களை மவுத்தானவர்களென்று சொல்லாதீர்கள். அவர்கள் ஹயாத்தையுடையவர்கள். ஆனால், அறியமாட்டீர்கள்" (2:154)


ஆண்டவனுடைய பாதையில் வெட்டப்பட்டவர்களை மரணித்தவர்கள் என்று நினைக்கவும் வேண்டாம். ஆனால் அவர்கள் ஜீவனுள்ளவர்கள். ஆண்டவன் பக்கமிருந்து ரிஸ்கை கொடுக்கப் படுகிறார்கள், ஆனந்தமாக இருக்கிறார்கள் (3:169,170)


5 சரி.. அவர்கள் இறந்தாலும் உயிர்ப்புடன் இருப்பதாகவே வைத்து கொள்வோம். என் கேள்வி என்னவென்றால், மகான்களுக்கு சக்தி உண்டா? 




ஸஹீஹுல் புஹாரியில் குறிப்பிடப்பட்டுள்ளது: உமர் இப்னு கத்தாப் அவர்களது காலத்தில் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்பட்ட போது, அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் அவர்கள் மூலம் மழை தேடிப் பிரார்த்தித்துள்ளார்கள். யாஅல்லாஹ்! நாங்கள் உனது நபியின் பொருட்டினால் தண்ணீர் வேண்டிய போதெல்லாம் நீ எமக்கு மழையைத் தருவித்தாய். இப்போது அந்த நபியினது பெரிய தந்தையின் பொருட்டினால் கேட்கின்றோம். எமக்கு மழையை அருள்வாயாக|| இப்பிரார்த்தனையின் பின் அவர்கள் மீது அல்லாஹ்வினால் மழை பொழியப்பட்டது. 




நிச்சயமாக பூமியில் உலா வந்து கொண்டிருக்கும் சில மலக்குகள் அல்லாஹ்வுக்கு உள்ளனர். அவர்கள் எனது உம்மத்துகளிடமிருந்து எனக்கு ஸலவாத்தைச் சேர்ப்பித்துக் கொண்டிருப்பார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறி: இப்னு மஸ்ஊத்(ரலி) நூல்: இமாம் நஸயீ(ரஹ்), இமாம் தாரமீ(ரஹ்))




ஜாபிர்(ரலி) அறிவித்தார்.

போர் நடக்கவிருந்தபோது என்னுடைய தந்தை அன்றிரவு என்னை அழைத்து, ‘நபி(ஸல்) அவர்களின் சகாக்களில் (நாளை போரில்) முதலில் நானே கொல்லப்படுவேன் எனக் கருதுகிறேன். மேலும் எனக்குப் பின் நான்விட்டுச் செல்பவர்களில் நபி(ஸல்) அவர்களைத் தவிர மற்றவர்களில் உன்னைத் தவிர வேறு யாரையும் நான் மதிப்பிற்குரியவராகக் கருதவில்லை. என் மீது கடன் உள்ளது. அதை நீ அடைப்பதுடன் உன்னுடைய சகோதரிகளிடம் நல்ல முறையில் நடந்து கொள்” என்றார். மறுநாள் (போரில்) அவர்தான் முதலில் கொல்லப்பட்டார். அவருடன் இன்னொருவரும் அடக்கம் செய்யப்பட்டார். இன்னொருவருடன் அவரை கப்ரில்விட்டுவைப்பதை என்னுடைய மனம் விரும்பவில்லை. எனவே, (அடக்கப்பட்ட) ஆறு மாதங்களுக்குப் பின்பு அவரின் உடலை நான் கப்ரிலிருந்து வெளியிலெடுத்தேன். அப்போது அன்றுதான் சற்று முன்னர் அடக்கம் செய்யப்பட்டவர் போன்று அவரின் காதைத் தவிர உடம்பு அப்படியே இருந்தது. 

(இமாம் புகாரி(ரஹ்))




6 தர்க்கா கட்டுவது சரியா தவறா? 


ஆதாரத்தை பாருங்கள் 




இன்னும், நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது என்றும், நிச்சயமாக கியாம நாளிலும் சந்தேகமில்லை என்றும் அப்பட்டணவாசிகள் அறிந்து கொள்வதற்காகவே, இவ்வாறு அவர்களைப் பற்றிய (விஷயத்)தை வெளியாக்கினோம்; (அப்பட்டணவாசிகளோ) "இவர்கள் யார் என்பதை பற்றி தர்க்கித்துக் கொண்டதை (நபியே! நினைவு கூறும்) "இவர்கள் (இருந்த இடத்தின்) மீது ஒரு கட்டடத்தைக் கட்டுங்கள்; இவர்களை(ப் பற்றி) இறைவனே நன்கறிவான் என்றனர்; இ(வ்விவாதத்)தில் எவர்களுடைய கருத்து மிகைத்ததோ அவர்கள்; "நிச்சயமாக அவர்கள் மீது ஒரு மஸ்ஜிதை அமைப்போம்" என்று கூறினார்கள். (18:21).

அல்ஃகப் மஜ்ஜித் என்னும் இடத்தில் நபிமார்களின் 70 கப்ருக்கள் இருந்தன என நபி(ஸல்) அவர்கள் கூறினதாக இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்,

இமாம் ஹைதமி(ரஹ்), இமாம் பஜ்ஜார்(ரஹ்)

8 comments:

  1. இது மார்க்கத்தின் நிலைப்பாடை பற்றிய பதிவு, இறையில் சம்பத்தப்பட்டது. வேணும்னா யாரவது ஒன்று இரண்டு லிங்க் கொடுப்பாங்க. இதை பற்றி நான் இப்படி நினைக்கிறன் என ஒருவர் கூட எழுத மாட்டார்கள். எல்லா மதங்களிலும் இந்த மாதிரியான சிந்தனை இருக்கத்தான் செய்கிறது கிறிஸ்துவத்தில் புனிதர் வழிபாடு ரோமர் கத்தோலிக்கத்தில் உண்டு மற்ற பிரிவில் இல்லை.

    ReplyDelete
  2. இஸ்லாமில் விவாகரத்து
    http://senkodi.wordpress.com/2011/12/08/islam-divorce/#comment-6136

    ReplyDelete
  3. கவியின் காதலன்December 8, 2011 at 10:09 PM

    அல்லா ஜானே அல்லா ஜானே
    அல்லா ஜானே அல்லா ஜானே
    அல்லா ஜானே அல்லா ஜானே
    அல்லா ஜானே அல்லா ஜானே

    கண்ணீர் அறியா கண்களும் உண்டோ
    மண்ணில் பெருகா குருதியும் உண்டோ
    நன்மைகள் தீமைகள் யார் தான் அறிவார்
    நாளையின் தீர்ப்பை யார் தான் தருவார்

    அல்லா ஜானே அல்லா
    அல்லா ஜானே அல்லா

    வீதிகள் எங்கும் வேதனை நிழல்கள்
    வீடுகள் எங்கும் விம்மிடும் குரல்கள்
    வீட்டுக்கு போகும் பாதைகள் எங்கே
    வேட்டை முடிந்து ரோம்புதல் எங்கே

    அல்லா ஜானே அல்லா ஜானே
    அல்லா ஜானே அல்லா ஜானே
    அல்லா ஜானே அல்லா ஜானே
    அல்லா ஜானே அல்லா ஜானே

    பிள்ளைகள் நடுங்கும் பேய்களின் நடனம்
    பேரிருள் இன்று நிலவினை திருடும்
    அழிந்தவர் குரல்கள் சுவர்களில் கேட்கும்
    அடுத்தவர் மொழிகள் திசைகளை அசைக்கும்

    அல்லா ஜானே அல்லா
    அல்லா ஜானே அல்லா

    வெல்பவர்கள் எல்லாம் போர்களில் இங்கே
    விழுந்தவர்கள் எல்லாம் பெயர்களும் இல்லை
    முகங்கள் இல்லா மரணத்தின் பாதை
    முடிவென்றும் இல்லா அறிவின், பாதை

    அல்லா ஜானே அல்லா ஜானே
    அல்லா ஜானே அல்லா ஜானே
    அல்லா ஜானே அல்லா ஜானே
    அல்லா ஜானே அல்லா ஜானே

    அல்லா ஜானே அல்லா ஜானே
    அல்லா ஜானே அல்லா ஜானே
    அல்லா ஜானே அல்லா ஜானே
    அல்லா ஜானே அல்லா ஜானே

    அல்லா ஜானே அல்லா ஜானே
    அல்லா ஜானே அல்லா ஜானே
    அல்லா ஜானே அல்லா ஜானே
    அல்லா ஜானே அல்லா ஜானே

    ReplyDelete
  4. //தர்க்கா, இறை நேசர்கள் , மகான்களுக்கு சக்தி உண்டா? - இஸ்லாம் என்ன சொல்கிறது?

    சில கேள்விகளுக்கு பதில் அளித்து விட்டு , முக்கியமான சில விஷயங்களை விவாதிக்க இருக்கிறோம்... //


    ஒரு மனிதரை மகான் என்று நாம் தீர்மானம் செய்ய முடியுமா?

    அல்லாஹ்வும் அவனது தூதரும் யாரை மகான்கள் என நமக்கு அறிவித்தார்களோ அவர்களுக்குஇறைத் தனமையோ அல்லது இறைத் தன்மையில் சிறு பகுதியோ உண்டா?

    மகான்கள் அல்லாஹ்விடம் பெற்றுத் தருவார்கள் என்ற நம்பிகையில் மகான்களைப் பிரார்த்திப்பது தவறா?

    தர்காக்களில் அற்புதங்கள் நிகழ்வது எப்படி?

    மகான்கள் கனவில் வந்து கட்ட்ளை இடுவது பொய்யா?

    மக்கத்துக் காஃபிர்களின் கொள்கைக்கும் தர்கா வழிபாடு செய்வோரின் கொள்கைக்கும் இடையே வித்தியாசம் உண்டா?

    நம்மைப் போன்ற சாதாரணமானவர்கள் அல்லாஹ்வை நெருங்க முடியுமா?

    வஸீலா தேடுவது தவறா?

    தர்கா கட்ட மார்க்கத்தில் அனுமதி உள்ளதா?

    நல்லடியார்கள் மரணித்த பிறகும் உயிருடன் இருக்கிறார்களா?

    சிலைகளைத் தான் வணங்கக் கூடாது; மகான்களை வணங்கலாம் என்பது சரியான வாதமா?


    என்பன போன்ற ஏராளமான கேள்விகளுக்கு தக்க சான்றுகளுடன் விடை


    அன்பர்களே

    இந்த சுட்டியை சொடுக்கி பூரண விளக்கத்தையும் அறிந்து கொள்ளுங்கள்.

    >>>>>> தர்கா வழிபாடு <<<<<<

    .

    ************
    [im]http://onlinepj.com/design/books%20title/dharga%20valipadu.jpg[/im]
    .

    ReplyDelete
  5. //தர்க்கா, இறை நேசர்கள் , மகான்களுக்கு சக்தி உண்டா? - இஸ்லாம் என்ன சொல்கிறது?

    சில கேள்விகளுக்கு பதில் அளித்து விட்டு , முக்கியமான சில விஷயங்களை விவாதிக்க இருக்கிறோம்... //


    ஒரு மனிதரை மகான் என்று நாம் தீர்மானம் செய்ய முடியுமா?

    அல்லாஹ்வும் அவனது தூதரும் யாரை மகான்கள் என நமக்கு அறிவித்தார்களோ அவர்களுக்கு இறைத் தனமையோ அல்லது இறைத் தன்மையில் சிறு பகுதியோ உண்டா?

    மகான்கள் அல்லாஹ்விடம் பெற்றுத் தருவார்கள் என்ற நம்பிகையில் மகான்களைப் பிரார்த்திப்பது தவறா?

    தர்காக்களில் அற்புதங்கள் நிகழ்வது எப்படி?

    மகான்கள் கனவில் வந்து கட்ட்ளை இடுவது பொய்யா?

    மக்கத்துக் காஃபிர்களின் கொள்கைக்கும் தர்கா வழிபாடு செய்வோரின் கொள்கைக்கும் இடையே வித்தியாசம் உண்டா?

    நம்மைப் போன்ற சாதாரணமானவர்கள் அல்லாஹ்வை நெருங்க முடியுமா?

    வஸீலா தேடுவது தவறா?

    தர்கா கட்ட மார்க்கத்தில் அனுமதி உள்ளதா?

    நல்லடியார்கள் மரணித்த பிறகும் உயிருடன் இருக்கிறார்களா?

    சிலைகளைத் தான் வணங்கக் கூடாது; மகான்களை வணங்கலாம் என்பது சரியான வாதமா?


    என்பன போன்ற ஏராளமான கேள்விகளுக்கு தக்க சான்றுகளுடன் விடை.


    அன்பர்களே

    இந்த சுட்டியை சொடுக்கி பூரண விளக்கத்தையும் அறிந்து கொள்ளுங்கள்.

    >>>>> தர்கா வழிபாடு <<<<<


    .

    ReplyDelete
  6. ஸலாம் சகோ.பார்வையாளன்,
    //இவை எல்லாம் என் முடிவான கருத்துக்கள் அன்று, என் தேடலில், வாசிப்பில் இருந்து புரிந்து கொண்டவை மட்டுமே.

    தகவல் பிழையோ , சொற் பிழையோ இருந்தால் சொல்லுங்கள்.. திருத்தி கொள்கிறேன்.//

    மிக்க நன்று சகோ.

    தங்களின் தவறான புரிதலை (2 to 6) தாங்கள் திருத்திக்கொள்ள... இஸ்லாமிய அடிப்படியில் ஆதாரப்பூர்வமான மற்றும் லாஜிக்கலான வாதங்களுடன் கூடிய விபரமான விடைகள்.... சகோ.வாஞ்சூர் அவர்களின் சுட்டியில் உள்ள புத்தகத்தில் உள்ளது.

    அவசியம் படியுங்கள். அதில் தங்களுக்கு மாற்றுக்கருத்து இருப்பின் இறைநாடினால் பின்னர் விவாதிக்கலாம் சகோ.

    ReplyDelete
  7. ஸலாம் சகோ.Nirmal

    //வேணும்னா யாரவது ஒன்று இரண்டு லிங்க் கொடுப்பாங்க.//

    ---நாம் சொல்ல வந்த கருத்தையே ஏற்கனவே ஒருவர் சொல்லி இருந்தால் எதற்கு உட்கார்ந்து வேலை மெனக்கெட்டு டைப் அடிக்க வேண்டும்..? சுட்டி கொடுத்து படிக்க சொல்வதில் தப்பில்லை என்றே நினைக்கிறேன்.

    //இதை பற்றி நான் இப்படி நினைக்கிறன் என ஒருவர் கூட எழுத மாட்டார்கள்.//

    ---உண்மைதான்..! சரியாக சொன்னீர்கள் சகோ.நிர்மல். நன்றி. இஸ்லாத்தில்... மார்க்க விஷயங்களில்... தன் சொந்தக்கருத்தை 'நான் இப்படி நினைக்கிறேன்' என்று சரியான முஸ்லிம் ஒருத்தர் கூட எழுத மாட்டார். குர்ஆனில் இப்படி உள்ளது... ஹதீஸில் இப்படி உள்ளது என்றுதான் இஸ்லாம் பற்றி ஒரு முஸ்லிம் பேச முடியும்..!

    ReplyDelete
  8. பிரவீன்December 9, 2011 at 9:43 PM

    நேத்து நைட்டு போலி பகுத்தறிவு பேசும் ஒரு டிவியில் ஒரு ஆசாமி பேசினார்!தனது மதத்தை தவிர மற்ற மதங்கள் எல்லாவற்றையும் படு கேவலமாக பேசிகொண்டிருந்தார்!இப்படி இவுரோட மதத்த எவனாவது பேசுனா அவ்வளவுதான்!கதை கந்தல்!சாந்தியும் சமாதானமும் இப்படிதான் உண்டாகும் போல!ஏன் இப்படி?உங்கள் மதத்தை பெசிகொள்ளுங்கள்!ஆனால் அடுத்த மதத்தவரை புண்படுத்துவது தப்பில்லையா?

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா