Pages

Sunday, December 18, 2011

பின் நவீனத்துவ பிதாமகனுக்கு பீர் அபிஷேகம்- அர்ச்சனை, சிறப்பு வழிபாட்டுடன் சாருவின் பிறந்த நாள் கொண்டாட்டம்

இலக்கியம் என்றால் ஏன் அலறுகிறோம்..? ஏன் நமக்கு பிடிப்பதில்லை.

காரணம் இலக்கியம் என்றால் கடினமானது , வாழ்க்கைக்கு தேவையில்லாத ஒன்று என்ற எண்ணம் நம் மனதில் பதிந்து விட்டதுதான்.

இந்த நிலை ஏற்பட இலக்கியவாதிகளும் ஒரு காரணம். 

ஒருவர பிரபலமாகி விட்டால் , அவரை இலக்கியவாதி என ஏற்க மறுப்பது, எளிமையான எழுத்துக்களை ஏற்க மறுப்பது , ஆழமான விஷ்யங்களை தெரிந்து கொள்ள எந்த முயற்சியும் செய்யாமல் , குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுவது , வேறு மொழி இலக்கியங்கள் அறியாமல் இருப்பது போன்றவையே , தமிழக இலக்கியவாதிகளின் அடையாளமாக இருந்து வந்தது.

இந்த நிலையில் வெளி வந்த சீரோ டிகிரி , ஒரு புதிய வகை எழுத்தை தமிழுக்கு அறிமுகப்படுத்துயது. இளைஞர்கள் கொஞ்சம் தமிழையும் வாசிக்க தொடங்கினர்,

பின் நவீனத்துவம், சார்த்தர் , போர்ஹேஸ் போன்ற பெயர்கள் சர்வசாதாரணமாக அனைவருக்கும் தெரிகிறது என்றால் அதற்கு முழு காரணம் அல்ட்டிமேட் ரைட்டர்தான்

இண்டர் நெட் எல்லாம் அந்த காலத்திலேயே அவர் எழுதிய விஷ்யங்களைப்பார்த்தால் நமக்கெல்லாம் பிரமிப்பாக இருக்கிறது. அப்போதெல்லாம் வாசிப்பு பழக்கம் இன்றைய நிலையை விட மோசமாக இருந்தது. அப்படி இருந்தும், அதைப்பற்றி கவலைப்படாமல், எல்லோருக்கும் பெய்யும் மழை போல , உயர்ந்த விஷ்யங்களை படைத்து வழங்கி வந்தவர் சாரு..

அவரை ஒருவர் போற்றுகிறார் என்றால் , சாரு என்ற தனி மனிதனை போற்றவில்லை. உழைப்பை, , படிப்பை, மொழி ஆளுமையை, சமுதாயத்தின் மேல் கொண்ட அன்பை, படைப்பு திறனை சாருவை வணங்குவதன் மூலம் வணங்கிறார் , போற்றுகிறார் .

அந்த வகையில், சாருவின் பிறந்த நாளை குரு பூஜையாக கொண்டாட , சிலர் விரும்பினார்கள்...  பாத பூஜை செய்யவும் திட்டமிடப்பட்டது 

வெறும் வாயை மெல்பவர்களுக்கு அவல் கிடைத்தது போல இந்த மேட்டர் உருவானது.

எக்ஸைல் விழா வெற்றிகரமாக நடந்தது உங்களுக்கு தெரியும். ஆனால் பொறாமை கண்களால் பாதிக்கப்பட்டு சில பாதிப்புகள் ஏற்பட்டது யாருக்கும் தெரியாது.. திருஷ்டி சுற்றி போடுதல் போன்றவற்றில் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு இது தற்செயலாக தோன்றலாம். ஆனால் இது உண்மை என்பது அனுபவப்பட்டவர்களுக்கு தெரியும்..

எனவே குரு பூஜையை சாருவின் இல்லத்தில் நடத்தும் மாற்றப்பட்டு ஆலயத்தில் நடத்தப்பட்டது.. 

பல்வேறு ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன 

இனிப்புகள் வழங்கப்பட்டன..  

பீர் அபிஷேகம் , அர்ச்சனை, நெய் தீப வழி பாடு, எக்ஸைல் நூலுக்க்கு சிறப்பு ஆராதனை என தூள் கிளப்பப்பட்டது.

ஆலயத்தின் உள்ளே புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை.  முடிந்த வரை எடுத்த படங்கள் உங்கள் பார்வைக்கு,,,
















6 comments:

  1. என்ன தவம் செய்தனை
    இப்படி ஒரு வாசகனைப் பெற - சாரு

    ReplyDelete
  2. auditorium la 400 per thaan irunthaangalaam???? neenga 1400 pernu kadha adikareengala? oru photo kooda podaliyee??

    ReplyDelete
  3. oru photo kooda podaliyee?”

    ஒரு போட்டோவா? நூறு போட்டோ போட்டாச்சே ??

    ReplyDelete
  4. avanga wife kooda ipadi senchu iruka matanga..neenga super vasagar thaan poonga ? bread and butter ku ena panreenga sir ?

    ReplyDelete
  5. நண்பரே! எக்ஸ்சைல் படித்து முடித்து விட்டேன்!

    பெரும்பாலும் சாரு ஏற்கனவே கூறிய விஷயங்கள் திரும்ப வந்தாலும் Zero Degree-யைவிட நான்றாகவே இருந்தது.

    சாருவுக்கு L R ஈஸ்வரியின் குரக் பிடிக்காது. காலம் போன போக்கில் L R ஈஸ்வரி பாடிய 'கலாசலா' அவருக்கு மிகவும் பிடித்து விட்டது. ஏனென்றால் 'கலாசலா' வாலி எழுதிய பாடல். கடந்த வருடம் 'நந்தலாலா' எப்படி பிடித்ததோ அதே காரணம். நல்லவேளை நாவல் பத்தி வாலி எதுவும் பேசவில்லை, தப்பித்து விட்டார்.

    ஒரு பெண்ணுடன் chat விவகாரத்தில் சிக்கிய விஷயத்தில் நீங்கள் மட்டும்தான் 'சதி' என்று சொல்கிறீர்கள். இதற்கு விடை அவர் நாவலில்கூட இல்லை.

    சாறு ஒரு வித்தியாசமான படைப்பாளி, தமிழ் உலகம் அறியாத புது விஷயங்களை எழுத்தின் மூலம் அறிமுகப்படுத்துகிறார். மற்றபடி நம்மைப்போல் விருப்பு வெறுப்பு உள்ள மனிதர்.

    அவர் வாழும் காலத்தில் நானெல்லாம் வாழ்கிறேன் என்பதே பெருமை என்று உங்களை போன்றவர்கள் சொல்லிக்கொண்டு இருப்பது மிகவும் மிகையான விஷயம்.

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]