Pages

Friday, December 23, 2011

ரஜினிக்கு இளையராஜா கொடுத்த அட்வைஸ்- கவிதைக்கு பொய் அழகு, கவிஞருக்கு?

எழுத்துகளில் இரு வகை உண்டு..

எழுத்து பாணிக்காகவும், நடைக்காகவும் மட்டுமே சிலவற்றை ரசிக்கலாம்.

சில எழுதுகளை நடை பற்றி கவலைப்படாமல் , கண்டெண்ட்டுக்காக ரசிக்கலாம் ( சில எழுத்துகளில் இரண்டு அம்சமே நன்றாக இருக்கும் )

இசைஞானி இளையராஜாவின் கட்டுரைகளை அதில் இருக்கும் கண்டெண்ட்டுக்காகவே விரும்பி படிப்பது என் வழக்கம்..

அவர் எழுத்து எதிர்பாராத பத்திரிக்கைகளில் எல்லாம் வெளிவரும். எனவே பல கட்டுரைகளை தவற விட்டு வருந்தி இருக்கிறேன்,

இந்த நிலையில், அவர் கட்டுரை தொகுப்புகள் புத்தகமாக வரும்போது அதை கச்சிதமாக கவ்வி கொள்ள நான் தவறுவதில்லை..

எப்போதோ படித்த புத்தகம் என்றாலும் இன்னும் என் நினைவில் நிற்கும் ஒரு புத்தகம்தான் , பால் நிலாப் பாதை 

அவர் வாழ்வில் நடந்த சில முக்கிய்மான நிகழ்ச்சிகளை நம்முடன் இதில் பகிர்ந்து இருக்கிறார்.  சிலவற்றை அப்படியே சொல்லி இருக்கிறார், சிலவற்றில் கிடைக்கும் பாடங்களையும் சுட்டி காட்டி இருக்கிறார்.

முந்தானை முடிச்சு வெற்றி விழா நிகழ்ச்சி. முதல்வர் எம் ஜி ஆர் அனைவருக்கும் தங்க மோதிரம் அணிவிக்கிறார். இளையராஜாவுக்கோ தங்கம் அணியும் பழக்கம் இல்லை. நாமாக இருந்தால் , மறுக்காமல் வாங்கி கொண்டு வேறு யாருக்கேனும் கொடுத்து இருப்போம். ஆனால் அவ்ரோ எம் ஜி ஆரிடம் அதை வாங்க மறுக்கிறார். எம் ஜி ஆருக்கு கவுரப்பிரச்சினை ஆகி விடுகிறது..

கோபத்துடன் அவர் விரலில் அணிவித்து விடுகிறார்.

அதற்கு இளையராஜாவின் எதிர் வினை நம்ப முடியாதாது. ஆனால் உண்மையில் நடந்தது. அன்று அது பரபரப்பான செய்தியாக இருந்தது, மங்கலாக நினைவுக்கு வருகிறது ( அப்போது நான் குட்டிப் பையன் )

அதன் பின் வேறு சில விவகாரங்களிலும் எம் ஜி ஆருடன் மோதல் ஏற்பட்டதை , சொல்லி இருக்கிறார்.

ஆனால் அதை எல்லாம் மனதில் வைத்து கொள்ளாமல் , இளையராஜா வீட்டி நிகழ்ச்சியில் எம் ஜி ஆர் கலந்து கொண்டது ( உடல் நலம் சரியில்லாத நிலையில் ) வரலாறு..

அதே போல சிவாஜியுடன் கொண்டு இருந்த நெருக்கமான உறவையும் , பாசத்தையும் சொல்லும் இடம் நெகிழ வைக்கிறது. சிவாஜி மறைந்ததை அறிந்து இவர் உடல் நலம் சீர்கெட்டதையும், அதை பொருட்படுத்தாமல் மும்பையில் இருந்து வந்ததையும் சொல்லி இருக்கிறார்.

இறுதி ஊர்வலத்தில் ரஜினிக்கு அவர் அட்வைஸ் ஒன்று வழங்கினார். அதை நானும் பின் பற்றுகிறேன். ரஜினி இளையராஜாவை சாமி என அழைப்பதும், இளையராஜா உரிமையுடன் ரஜினிக்கு அட்வைஸ் வழங்குவதும், அதை ரஜினியும் அடக்கத்துடன் கேட்பதும் வியப்பாக உள்ளன.

அதே போல கமலுடனான அனுபவத்தையும் சொல்லி இருக்கிறார்.

ஹே ராம் படத்துக்கு முதலில் இன்னொருவர் இசையமைத்து பாடல் காட்சிகளும் படமாகிவிட்டன, ஆனால் சில காரணங்களுக்காக அந்த இசை அமைப்பாளருக்கும் கமலுக்கும் ஒத்து போகவில்லை.

எனவே இளையராஜாவை அணுகி பின்னணி இசை அமைத்து தருமாறு கேட்கிறார்.
பின்னணி இசை மட்டும் தனியாக செய்ய முடியாது என ராஜா மறுக்கிறார்.
சரி . பாடலும் நீங்களும் செய்யுங்கள்.. ஏற்கனவே எடுத்த பாடல் காட்சிகளை தூக்கி போட்டு விட்டு , புதிதாக படம் எடுக்கலாம் என்கிறார் கமல். பணம் செலவானாலும் பரவாயில்லை என்று துணிகிறார் கமல்.

தேவையற்ற செலவை கமலுக்கு ஏற்படுத்த ராஜா விரும்பவில்லை. எனவே ஏற்கனவே எடுத்த பாடல் காட்சிகளுக்கு ஏற்ப , புதிதாக இசை அமைக்கிறார் அவர். ஒருவர் இசை அமைத்து எடுக்கப்பட்ட காட்சிகளுக்கு  ஏற்ப இன்னொருவர் இசை அமைப்பது எவ்வளவு பெரிய சவால் !!! அதை செய்கிறார் ராஜா..


இப்படி ஏராளமான தகவல்கள் ...

கவிதைக்கு பொய் அழகு , தர்மத்துக்கு பொய் அழகா என்ற தலைப்பில் ஒரு கட்டுரை.
ஏதோ ஒரு கவிஞரை பற்றி எழுதி இருக்கிறார். அது எந்த கவிஞர் என தெரியவில்லை :) தெரிந்தால் சொல்லுங்கள்

ஒரு கவிஞரை அறிமுகப்படுத்தி வாய்ப்பளித்தாராம். ஆனால் தொடர்ந்து வாய்ப்பளிக்க முடியவில்லையாம். கவிஞர் உதவி கேட்டு கெஞ்சுவாராம். ராஜாவும் உதவினாராம்..

இந்த நிலையில், புது இசையமைப்ப்பாளரை காக்காய் பிடித்து , அந்த கவிஞர் பெரிய ஆள் ஆகி விட்டாராம். அதன் பின் அவர் நடந்து கொண்ட விதம் ராஜாவை செருப்பால் அடித்தது போல இருந்ததாம்..

யார் அந்த கவிஞர் ? : )

ஆப்பரேஷன் நடந்து , பேச முடியாத நிலையில் இருந்த போது ரஜினி படத்துக்கு விசில் மூலமே , விசில் அடித்து இசை அமைத்த செய்தி ஆச்சர்யமாக இருக்கிறது. அப்படி இசை அமைக்கப்பட்ட பாடல் என்ன ?




” ளிளி மகள் திதிதி மிமி மிமி செத்தாள் ”
இதன் அர்த்தம் என்ன ?

புத்தக கண் காட்சியில் இந்த புத்தகம் கிடைக்காவிட்டால், நானே சொல்லி விடுகிறேன் :)

பால் நிலா பாதை
இளையராஜா
அரும்பு பதிப்பகம்

சிறப்பம்சங்கள் 


  • பாரதிராஜா, கமல்ஹாசன் முன்னுரைகள்
  • சிறுகதைகளைப் போன்ற கிராம அனுபவங்கள்









2 comments:

  1. மிக்க நன்றி அறிமுகத்திற்கு !!!
    கண்டிப்பாக வாங்கி படிக்கணும் !!!

    ReplyDelete
  2. Ilayaraja's fall goes with his pride; that he was very egoistic is not news to any one. Let him be so. After all he kept aloft Tamil film music at very great heights from late 70s upto late 90s.
    But his writing ? His presumptions about life and his philosophy. Like Rajini he is also half baked in his writings. All that status Rajini enjoys in TN is make believe. JK used to say during his heydays that all the rejects and scums of our neighbouring states land up here. JK had a different person in his mind. Like many of JK's statements this also is time proven. TN films would have scaled better heights if not for Rajini. Any way that's how it goes. About IR there are many things to share. But later.

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]