Pages

Saturday, December 31, 2011

படிக்காமலேயே புத்தக விமர்சனமா?- பொறுக்கி மொழியில் வெறுப்பை கக்கிய “எழுத்தாளர்”

ஒரு சிறுவன் இருந்தான். நன்றாக படிக்க கூடியவன். ஆனால் படிப்புக்கேற்ற வேலை கிடைக்கவில்லை. அலைந்து திரிந்து பார்த்து விட்டு மன நோயாளியானான். ரோட்டில் செல்பவர்களுடன் வம்பு சண்டை போடுவது அவன் இயல்பாகிவிட்டது .

சிலர் பொறுமை இழந்து அவனை தாக்கியதன் விளைவாக , படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.

பேச்சு மூச்சில்லாமல் கிடந்த அவனை நினைத்து அவன் தாயார் கவலைப்பட்டு வந்தார். நெடு நாட்களுக்கு கழித்து அவனுக்கு லேசாக நினைவு திரும்பியது. அவன் பேச்சை கேட்க அவன் தாயாரும் மற்றவர்களும் ஆவலாக காத்து இருந்தனர்.

கண் விழித்த அவன் , தன் தாயை பார்த்து ஒரு கேள்வி கேட்டான்.
“ அம்மா..  அப்பா எப்ப சாவாரு ?”

கேட்ட அனைவரும் திடுக்கிட்டு போனார்கள். இதற்கு இவன் பேசாமலேயே இருந்திருக்கலாமே என வருந்தினார்கள்..

************************************************************

எண்பதுகளில் கதை எழுத ஆரம்பித்து 90கள் வரை எழுத்தின் ஆரம்ப கட்டத்திலேயே இருந்து , அதற்கு மேல் இலக்கியம் தனக்கு ஒத்து வராது என ஒதுங்கி போனவர் விமலாதித்த மாமல்லன் என்ற எழுத்தாளர்.

உருப்படாத கதைகளை எழுதி வந்தாலும் , அவரையும் மீறி ஓரிரு  நல்ல கதைகள் அவர் பெயரில் வந்து இருப்பதை மறுக்க இயலாது. மலத்தில் சோற்றை பொறுக்குவது போல , அந்த ஓரிரு நல்ல கதைகளை நம்பி , அவரது சிறுகதை தொகுப்பு வெளியிட்டார்கள். அதுவும் பத்தோடு பதினொன்றாக மற்றவர்கள் புத்தகங்களுடன் இவர் புத்தகத்தையும் வெளியிட்டார்கள்.

இதில் என்ன கொடுமை என்றால் , அவர் புத்தகதோடு வெளியான பல புத்தகங்கள் புதியவர்களால் எழுதப்பட்டவை. அவை எல்லாம் அபாரமான விற்பனை ஆகின . ஆனால் முப்பது ஆண்டுகளாக இலக்கியத்தில் இருக்கும் இவர் புத்தகம் ஒன்று கூட விற்கவில்லை..

இனி மேல் கதை எழுதி பெயர் வாங்க முடியாது என்பதை புரிந்து கொண்ட அவர் விபரீதமான வழியை பின்பற்ற ஆரம்பித்தார். அனைவரையும் கேவலமாக திட்ட ஆரம்பித்தார்.

ரோட்டில் நின்று சத்தம் போட்டு ரகளை செய்பவனுக்கு ஒரு வித “ புகழ் ஒளி “ கிடைக்கும் அல்லவா  ? அது போன்ற ”புகழ் ஒளிதான் ”இவரின் இலக்கு .

இதற்கு ஏற்ப பொறுக்கி மொழி ஒன்றை தனக்காக ஏற்படுத்தி கொண்டார் இவர். பொறுக்கி உரை நடை என கூகுளில் சர்ச் செய்தால் இவர் பெயர்தான் வரும். 

எந்த சர்ச்சையில் சிக்காத எஸ் ராமகிருஷ்ணனை கூட இவர் விட்டு வைக்கவில்லை என்றால் பார்த்து கொள்ளுங்கள்.. ஒருவரையும் விட்டு வைக்காமல் அனைவரயும் திட்டுவதையே தன் பாணியாக உருவாக்கினார்.

அவரை இலக்கிய உலகம் காமெடி பீசாக இன்றைய  இளம் வாசகர்கள் நினைத்த நிலையில், அவரது சிறுகதை ஒன்றை சாரு நிவேதிதா தன் வலைத்தளத்தில் அறிமுகப்படுத்தினார். அப்போதுதான் மாமல்லன் சிறுகதைகூட எழுதுவார் என்பதே பலருக்கு தெரிய வந்தது. அதுவரை அவரை வெறும் இலக்கிய சண்டியர் என்றே நினைத்து வந்தனர்.

 ஒரு உதாவாக்கரைக்கு ஏன் விளம்பரம் கொடுக்கிறீர்கள் என சில நண்பர்கள் சொன்னதை சாரு கேட்கவில்லை


ஆனால் இதில் ஒரு காமெடி நடந்தேறியது. அது தான் எழுதிய கதை என்பதையே மறந்து விட்டு, அதை ஆபாசமாக விமர்சித்து ஒரு கட்டுரை ஒன்றை எழுத முனைந்தார். நண்பர்கள் சிலர் தலையிட்டு அதை தடுத்தனர்.

ஆனால் அவர் ஃபார்முலா அனைவருக்கும் தெரிந்து விட்டதால் , அவர் ரகளைக்கு வரவேற்பு குறைந்தது. யோசித்த அவர் இப்போதைய ஹாட் நாவலான எக்ஸைலை கண்டபடி திட்டி , தனக்கே உரிய பொறுக்கி மொழியில் ஒரு விமர்சனம் எழுதினார். அதீத போதையில், தான் அந்த நாவலை படிக்காமல் விமர்சனம் எழுதியதையும் உளறித்தொலைத்து விட்டார்.

சற்று ஆழ்ந்த்து படித்திருந்தால் , காமத்திலிருந்து கடவுளுக்கு , ஆன்மீகம் , உண்மையான நாத்திக்கம் , பெண் அடிமைத்தனம் என எண்ணற்ற விஷ்யங்களை பார்த்து இருக்கலாம். ஆனால் அவதூறு போதையில் இதையெல்லாம் விட்டு விட்டார் அவர்

விமர்சனம் என்பது வரவேற்கத்தக்கதே.. படியுங்கள், பிடித்தால் பாராட்டுங்கள். பிடிக்காவிட்டால் கிழி கிழி என கிழியுங்கள் என்ற சொன்ன பின்பும், அறிவு நாணயம் இன்றி, படிக்காமலேயே நாவல் விமர்சனம் எழுதிய அவரைத்தான் இந்த வருடத்தின் இலக்கிய காமெடி பீசாக இலக்கிய உலகத்தினர் நினைக்கிறார்கள்.

அவர் எப்படியோபோகட்டும். இவர் போன்ற காமெடியன்களால் , நல்ல எழுத்து வருவது தடைபட்டு விடக்கூடாதே என்பதுதான் வாசகர்களின் கவலை



Thursday, December 29, 2011

யாரிடம் இருந்து எழுத்தை திருடுகிறேன் ?- சாரு நிவேதிதா மனம் திறக்கிறார்

" கந்தசாமி அவன் நம்பிக்கையால் ரொம்பவே கஷ்டப்பட்டு விட்டான் “
” என்ன நம்பினான் ? “

” அவன் ஷூ சைஸ் 7 .. ஆனால் 4 போதும் என நம்பினான் “

***********************************

இந்த கதை ஜோக் போல தோன்றினாலும் இது சுட்டி காட்டும் கருத்து ஆழமானது.
எது உண்மை என்பதை விட , நம் நம்பிக்கைகளே நமக்கு முக்கியமாகி விடுகின்றன. இதனால் பல பிரச்சினைகளை சந்தித்தாலும் நம் நம்பிக்கைகளை கைவிட நாம் தயாராக இல்லை.

கடவுளை நாம் பார்த்ததில்லை.. ஆனால் அவர் இல்லை என  நம்புகிறோம் ..

கடவுள் அனுபவம் இல்லாமல் அவர் இருக்கிறார் என நம்புவதற்கும், இல்லை என்ப்தற்கு அதிக வித்தியாசம் இல்லை என்ற நிலையில், கடவுள், ஆன்மீகம் , மனித சக்திக்கு அப்பாற்பட்ட சக்திகள் போன்ற பல விஷ்யங்களை தனக்கே உரிய சுவாரஸ்யமான நடையில் சாரு நிவேதிதா அலசி இருக்கும் நூல்தான் “ கடவுளும் நானும் “ என்ற கட்டுரை தொகுப்பு. ( ஆரம்பத்தில் வரும் ஜோக் அந்த புத்தகத்தில் வருவதுதான் )..

 கடவுள் இல்லை என ஏற்கனவே முடிவு எடுத்து விட்டவர்கள் , இந்த நூலை படித்து தங்கள் பொன்னான நேரத்தை வீணடித்துவிடலாகாது என்ற நல்ல நோக்கத்தில், நாஸ்திகர்கள் இந்த நூலை படிக்க வேண்டாம் என ஆரம்பத்திலேயே தடுப்பு சுவர் போட்டு விடுகிறார் சாரு.

அந்த தடுப்பு சுவரை தாண்டி உள்ளே நுழைந்தால் , எண்ணற்ற தகவல்கள் , அனுபவங்கள் என விருந்து காத்திருக்கிறது..

இசை, மது , இலக்கியம் என ஒரு வித்தியாசமான பாணியில் ஆன்மீகம் பேசுகிறது இந்த புத்தகம்..

கடவுளின் வருகை என்ற முன்னுரை அபாரம்.

சாருவின் ஆன்மீக தேடல் இன்று நேற்று ஏற்பட்டத்தல்ல என்பதை சீரோ டிகிரியின் சில பகுதிகள் மூலம் சொல்வது அழகு.

ஜோசப் ப்ராட்ஸ்கி நோபல் பரிசு பெற்ற கவிஞர். எந்த பயிற்சியும் இல்லாமல் அவரால் எப்படி கவிதை எழுத முடிந்தது. அதற்கு அவர் சொன்ன பதில் “ என் கவிதைகள் எனக்கு கடவுளால் அனுப்பப்படுகின்றன “

இதை சொல்லும் சாரு, தனக்கும் தன் எழுத்து கடவுள் மூலமே அனுப்பப்படுகின்றன என்கிறார். அவருடன் பழகும் வாய்ப்பு பெற்றவர்கள் இதில் இருக்கும் உண்மையை அறிவார்கள். என் எழுத்தையெல்லாம் கடவுளிடம் இருந்தும், என் கனவுகளிடம் இருந்தும்தான் திருடுகிறேன் என அவர் சொல்வது மிகையான வார்த்தைகள் அல்ல.

க்டவுள்  நம்பிக்கை இல்லாமல் எந்த எழுத்தாளனும் இல்லை என தாஸ்தயேவ்ஸ்கி, டால்ஸ்டாய் என பல உதாராணங்களுடன் அவர் சொல்வது ஆச்சர்யமாக இருக்கிறது.

அதே நேரத்தில் இன்னொரி விஷ்யம். கடவுள் நம்பிக்கையாளனுக்கும், நாத்திகனுக்கும் கடவுளின்  எண்ணிக்கையில்தான் வித்தியாசம். ஒரு குறிப்பிட்ட கடவுளை நம்புபவன் , அந்த கடவுளைத்தவிர வேறு யாரையும் நம்புவதில்லை.  நாத்திகன் எந்த கடவுளையும் நம்புவதில்லை.. ஆக 100 கடவுள்கள் இருந்தால், ஆத்திகவாதி 99 கடவுள்களை நம்புவதில்லை.. நாத்திகவாதி 100 கடவுள்களை நம்புவதில்லை. எனவே இருவருக்கும் வித்தியாசம் ஏதும் இல்லை என்பதையும் தன் பாணியில் சொல்கிறார் சாரு.

கடவுள் என்பது மதங்களுக்கு அப்பாற்பட்டது என்ப்தை அழகாக சொல்கிறார்.

தேவாலயங்களை இழுத்து மூடியதால் , ரஷ்யாவில் ஏற்பட்ட சீர்கேடுகளை அவர் சொல்லும்போது அதிர்ச்சியாக உள்ளது.

இந்த நூலில், கிறிஸ்தவ, இஸ்லாமிய , ஹிந்து கருத்துக்கள் மதங்களுக்கு அப்பாற்பட்ட முறையில் சொல்லப்பட்டு இருப்பது தனி சிறப்பு.
இஸ்லாம் ம்தம் வாள் வலிமையால் பரப்பப்பட்ட மதம் அன்று. மாபெரும் இஸ்லாமிய மகான்கள், கரீப் நவாஸ் போன்ற சுஃபி ஞானிகள் மற்றும் இஸ்லாமிய மதத்திம் சிறப்பால்தான் இஸ்லாம் நம் வாழ்வுடன் கலக்க முடிந்தது என்று அவர் உண்மையை உரக்க சொல்கிறார்.

இஸ்லாம் என்பது வன்முறை மார்க்கம் என்று சிலர் பொறுப்போ, விஷ்ய ஞானமோ இல்லாமல் எழுதுவதுதான் அதிகம் என்ற நிலையில் இவர் எழுத்து உவப்பாக இருக்கிறது.

பட்டினத்தார், பாபா, செகாவ் சிறுகதை, திருப்பாவை, பாலகுமாரன், ஜெயமோகன் என பல விஷ்யங்களை இந்த சிறு புத்தகத்தில் சாரு தொட்டுள்ளார்.

ஆங்காங்கு சில முக்கிய விஷயங்களுக்கு லிங்க் கொடுத்து இருப்பது தனி சிறப்பது.. அவர் அனுபவித்த பாடல்கள், உரைகளை நாமும் கேட்டு உணரலாம்..   அவர் படித்தவற்றை நாமும் படிக்கலாம்.





பூச்செடிகளை வளருங்கள்
உங்களை சுற்றி பூந்தோட்டம் உருவாகும்
முள் புதர்க்ளை வளர்காதீர்கள்
அவை உங்கள் பாதங்களை காயப்படுத்தும்

என்ற ரஹ்மான் பாபாவின் வரிகளே இந்த புத்தகத்தின் செய்தி..

வெர்டிக்ட் - கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம். 

Tuesday, December 27, 2011

சோவியத் யூனியன் - திட்டமிட்ட படுகொலை

டிசம்பர் என்றால் நம் நினைவுகளில் பல விஷயங்கள் எட்டிப் பார்க்கும். அதில் நல்லவையும் இருக்கலாம் கெட்டவையும் இருக்கலாம்.
ஆனால் உலக அளவில் மறக்க முடியாத ஒரு நிகழ்வு டிசம்பரில் நடந்தது. அதன் பாதிப்பில் இருந்து உலகம் இன்னும் முழுதுமாக வெளிவரவில்லை.

12.12.1991  . இந்த நாளில்தான் பலரின் உயிர் தியாகத்தால் , பலரின் முயற்சியால் உருவான லட்சிய நாடான சோவியத் யூனியன் தன் மூச்சை நிறுத்தி கொண்டது.

ஒரு பொய்யை திரும்ப திரும்ப கூறினால் அது உண்மையாகி விடும் என்ற தத்துவத்தின் அடிப்படையில், சோவியத் யூனியன் வீழ்ச்சி குறைத்து தவறான கருத்துகளே இன்று மக்கள் மனதில் இருக்கின்றன.

கம்யூனிச கொடுங்கோலாட்சி பிடிக்காமல் , மக்கள் புரட்சி செய்து ஆட்சி மாற்றம் ஏற்படுத்தினார்கள் என நினைக்கிறோம். இது தவ்று.

சோவியத் யூனியனில் நீடிக்க விரும்புகிறீர்களா அல்லது பிரிந்து செல்ல விரும்பிகிறீர்களாக என்ற கருத்து கணிப்பில் , பெரும்பாலான மக்கள் ( 76 சதவிகிதத்தினர் ) சோவியத் யூனியனில் நீடிப்பதையே விரும்பினார்கள். ஆனால் சில ஆட்சி மாற்றங்கள் , பொருளாதார மாற்றங்களை விரும்பினார்கள்.  கடும் பொருளாதார நெருக்கடி, உணவு பஞ்சம் , நிர்வாக குளறுபடிகள் நிலவியபோதும் பிரிந்து செல்வதற்கு எதிராக அவர்கள் வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் பிரிவினைக்கான போராட்டங்களும் ஆங்காங்கு நடந்தன. சில குடியரசுகள் பிரிவதாக அறிவித்தன. இந்த நிலையில், அதிகார பகிர்வுக்கு வழி செய்யும் ஒப்பந்தம் கை எழுத்தாக இருந்தது. இதன் படி, மிக சொற்பமான அதிகாரங்கள் மட்டுமே கொண்ட சோவியத் தலைமையின் கீழ் அதிக அதிகாரங்கள் கொண்ட குடிய்ரசுகள் , ஒரே நாடாக நீடிக்கும்.

ஆனால் மக்கள் கருத்தை பற்றி கவலைப்படாமல், மூன்றே மனிதர்கள் ( ரஷ்ய அதிபர் எல்ட்சின் , யுக்ரேன் அதிபர், பெலோரஸ் அதிபர் ) தன்னிச்சையாக முடிவெடுத்து, ஒரு கையெழுத்து போட்டு , சோவியத் யூனியனை முடித்து வைத்தனர். சோவியத் யூனியம் அதிபராக இருந்த கார்ப்பசேவ் கையாலாகாத நிலையில் இதை பார்த்து கொண்டு இருந்தார்.

இதற்கு பின்னணியில் பல காரணங்கள் இருந்தன.


  • சோவியத் யூனியனை ஒழித்து கட்ட வேண்டுமென பல ஆண்டுகளாகவே வெளி நாடுகள் சதி செய்து வந்தன
  • செயற்கையான உணவு பஞ்சம் ஏற்படுத்தப்பட்டது. 
  • கம்யூனிஸ்ட் கட்சியின் கண்காணிப்பில் இருந்த ஊடக துறை கை மாறி சென்றது. எனவே அரசுக்கு ஆதரவான செய்திகள் மக்களிடம் போய் சேரவில்லை

அப்படி என்றால் இந்த மூவர் செய்த சதிக்கு எதிராக பெரும் எதிர்ப்பு ஏன் ஏற்படவில்லை?

1991ல் கோர்ப்பசேவ் ஆட்சியை கவிழ்க்க ஒரு முயற்சி நடந்தது. அந்த ஆட்சி கவிழ்ப்பு தோல்வியில் முடிந்ததும், உடனடியாக சோவியத் ஆதரவாளர்கள் பதவி நீக்கம் செய்யப்படனர், சிலர் கைது செய்யப்பட்டனர். என்வே ஆதரவாளர்கள் குரல் அமுக்கப்பட்டு விட்டது.

அப்ப்டி இருந்தும் , பிரிவினைக்கு பெரும்பாலானோர் ஆதரவளிக்கவில்லை. எனவே காமன்வெல்த் ஆஃப் இண்டிபெண்டட் ஸ்டேட்ஸ் என்ற கூட்டமைப்பின் கீழ் நாம் ஒன்றாகவே இருப்போம் என சொல்லி ஏமாற்றினார்கள்.

சோவியத் யூனியன் என்ற அமைப்பு தொடர்ந்து இருந்தால், தற்காலிக சோதனைகளில் இருந்து மீண்டு என்று வலிமை பெற்ற நாடாக இருந்திருக்கும் என்றே அங்கு தற்போது நினைக்கிறார்கள்

சோவியத் யூனியனின் மறைவு என்பது இயற்கையாக நிகழ்ந்தது அன்று. சில சுய நலவாதிகள் செய்த படுகொலை என்பதே அங்கு தற்போது நிலவும் கருத்து.







Monday, December 26, 2011

சசிகலா நீக்கம் - சோ பேட்டி


கேள்வி: அ.தி.மு.க.வில் இருந்து சசிகலாவை நீக்கியதற்கு என்ன காரணம் என்று கருதுகிறீர்கள்?.
 
பதில்:- சசிகலாவை நீக்கியதற்கான காரணத்தை அனுமானத்தின் அடிப்படையில்தான் கூறமுடியுமே தவிர முழு விஷயமும் எனக்கு தெரியாது. அ.தி.மு.க.வில் இருந்து சசிகலாவும், அவரது உறவினர்களும் நீக்கப்பட்டது நல்ல நிர்வாகத்தை அளிக்க ஜெயலலிதா மேற்கொண்ட தீர்க்கமான உறுதியான நடவடிக்கையாகவே நான் பார்க்கிறேன்.  
 
தமிழகத்துக்கு நல்ல ஆட்சியையும், நேர்மையான நிர்வாகத்தையும் கொடுக்க ஜெயலலிதா விரும்புகிறார். ஆட்சியும், நிர்வாகமும் வெளிப்படையாக நடைபெற வேண்டும் என்று நினைக்கிறார். அதற்கு தடை ஏற்படுத்தும் விதமாக மாநிலத்தில் மற்றொரு அதிகார மையம் செயல்படுவதில் அர்த்தம் இருக்க முடியாது.
 
எனவே அந்த வகையில், இந்த நடவடிக்கை சரியானது, தீர்க்கமானது என்று கூறுகிறேன். இந்த நடவடிக்கை அவரது தனிப்பட்ட விருப்பு வெறுப்பின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கையாக இருக்க வாய்ப்பில்லை. சிலரின் நடவடிக்கைகள், அரசின் செயல்பாட்டுக்கு இடையூறாக இருப்பதாக அவர் உணர்ந்து இருக்கிறார். அதனால் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். இதுதான் என்னுடைய அனுமானம்  
 
கே:- சசிகலா கட்சியில் இருந்து விலக்கினாலும் மீண்டும் சிறிது நாளில் கட்சியில் சேர்ந்து விடுவார் என்றும் இதற்கு முன்பு இதேபோல் ஒதுக்கி வைக்கப்பட்டு பிறகு மீண்டும் சேர்ந்திருக்கிறார் என்றும் சிலர் கூறுகிறார்களே?
 
ப:- அந்த கட்சியினர் அப்படி நினைக்கவில்லை. அதற்கு மேல் சொல்ல எனக்கு ஒன்றுமில்லை.  
 
கே:- முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நீங்கள் அவ்வப்போது ஆலோசனை வழங்குவதாக பேசுகிறார்களே?
 
ப:- நாட்டு நடப்பையும் அரசு நிர்வாகத்தையும் மிக நன்றாக அறிந்த முதல்- அமைச்சருக்கு நிர்வாக அனுபவமே சற்றும் இல்லாத நான் ஆலோசனை வழங்குவதாக சொல்வது மிகப்பெரிய தமாஷ். ஏற்கனவே 10 வருடம் முதல்-அமைச்சராக பதவி வகித்து வந்தவருக்கு ஒரு வினாடிகூட எந்த பதவியும் வகிக்காத என்னைப்போன்றவர்கள் ஆலோசனை வழங்குவதாக கூறுவது சரியல்ல.  
 
கே:- சசிகலா நீக்கப்பட்ட பிறகு அந்த இடத்துக்கு இன்னொரு அதிகார மையம் உருவாகும் வாய்ப்பு உள்ளதா?
 
ப:- இன்னொரு அதி காரமையம் என்ன என்பதை மற்றவர்கள் சுட்டிக்காட்டினால்தான் அது தெரியவரும். யார் அது? எந்த வகையில் அதிகாரம் செய்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்ட வேண்டும். அப்போதுதான் எதுவும் சொல்லமுடியும்.
 
கே:- இவ்வளவு நாள் இல்லாமல் இப்போது திடீரென சசிகலா நீக்கத்துக்கு உங்கள் ஆலோசனைதான் காரணம் என்று கூறப்படுகிறதே?
 
ப:- இவ்வளவு நாள் இல்லாத பேச்சாக உள்ளது. சசிகலா நீக்கத்திற்கு நான்தான் காரணம் என்பதில் எந்த அர்த்தமும் இல்லை. ஏதோ இப்போதுதான் எனக்கும் முதல்-அமைச்சருக்கும் திடீரென நட்பு ஏற்பட்டதுபோல் பேசுகிறார்கள். எங்கள் நட்பு 50 வருடத்துக்கு மேலானது. அப்படி இருக்கும் போது இப்போது நான் திடீரென ஏதோ ஆலோசனை சொல்லிவிட்டதாக கூறுவதில் துளிகூட அர்த்தம் இல்லை.  
 
கே:- அ.தி.மு.க.வில் பெரிய அளவில் நடவடிக்கை எடுத்துள்ள ஜெயலலிதாவுக்கு தேசிய அளவில் முக்கிய பங்கு வகிக்க வாய்ப்பு ஏற்படும் என நினைக்கிறீர்களா?
 
ப:- தேசிய அளவில் அவர் முக்கிய பங்கு வகிக்க விரும்புவதாக எனக்கு தெரியாது. முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் எந்த பதவியிலும் சிறப்பாக செயல்பட முடியும் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. ஆனால் தேசிய அளவில் அவர் செயல்பட விருப்பம் இல்லாமல் இருக்கவும் வாய்ப்பு உண்டு என கருதுகிறேன். எனவே தற்போதைய அதிரடி நடவடிக்கைக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இருக்க முடியாது.

Friday, December 23, 2011

ரஜினிக்கு இளையராஜா கொடுத்த அட்வைஸ்- கவிதைக்கு பொய் அழகு, கவிஞருக்கு?

எழுத்துகளில் இரு வகை உண்டு..

எழுத்து பாணிக்காகவும், நடைக்காகவும் மட்டுமே சிலவற்றை ரசிக்கலாம்.

சில எழுதுகளை நடை பற்றி கவலைப்படாமல் , கண்டெண்ட்டுக்காக ரசிக்கலாம் ( சில எழுத்துகளில் இரண்டு அம்சமே நன்றாக இருக்கும் )

இசைஞானி இளையராஜாவின் கட்டுரைகளை அதில் இருக்கும் கண்டெண்ட்டுக்காகவே விரும்பி படிப்பது என் வழக்கம்..

அவர் எழுத்து எதிர்பாராத பத்திரிக்கைகளில் எல்லாம் வெளிவரும். எனவே பல கட்டுரைகளை தவற விட்டு வருந்தி இருக்கிறேன்,

இந்த நிலையில், அவர் கட்டுரை தொகுப்புகள் புத்தகமாக வரும்போது அதை கச்சிதமாக கவ்வி கொள்ள நான் தவறுவதில்லை..

எப்போதோ படித்த புத்தகம் என்றாலும் இன்னும் என் நினைவில் நிற்கும் ஒரு புத்தகம்தான் , பால் நிலாப் பாதை 

அவர் வாழ்வில் நடந்த சில முக்கிய்மான நிகழ்ச்சிகளை நம்முடன் இதில் பகிர்ந்து இருக்கிறார்.  சிலவற்றை அப்படியே சொல்லி இருக்கிறார், சிலவற்றில் கிடைக்கும் பாடங்களையும் சுட்டி காட்டி இருக்கிறார்.

முந்தானை முடிச்சு வெற்றி விழா நிகழ்ச்சி. முதல்வர் எம் ஜி ஆர் அனைவருக்கும் தங்க மோதிரம் அணிவிக்கிறார். இளையராஜாவுக்கோ தங்கம் அணியும் பழக்கம் இல்லை. நாமாக இருந்தால் , மறுக்காமல் வாங்கி கொண்டு வேறு யாருக்கேனும் கொடுத்து இருப்போம். ஆனால் அவ்ரோ எம் ஜி ஆரிடம் அதை வாங்க மறுக்கிறார். எம் ஜி ஆருக்கு கவுரப்பிரச்சினை ஆகி விடுகிறது..

கோபத்துடன் அவர் விரலில் அணிவித்து விடுகிறார்.

அதற்கு இளையராஜாவின் எதிர் வினை நம்ப முடியாதாது. ஆனால் உண்மையில் நடந்தது. அன்று அது பரபரப்பான செய்தியாக இருந்தது, மங்கலாக நினைவுக்கு வருகிறது ( அப்போது நான் குட்டிப் பையன் )

அதன் பின் வேறு சில விவகாரங்களிலும் எம் ஜி ஆருடன் மோதல் ஏற்பட்டதை , சொல்லி இருக்கிறார்.

ஆனால் அதை எல்லாம் மனதில் வைத்து கொள்ளாமல் , இளையராஜா வீட்டி நிகழ்ச்சியில் எம் ஜி ஆர் கலந்து கொண்டது ( உடல் நலம் சரியில்லாத நிலையில் ) வரலாறு..

அதே போல சிவாஜியுடன் கொண்டு இருந்த நெருக்கமான உறவையும் , பாசத்தையும் சொல்லும் இடம் நெகிழ வைக்கிறது. சிவாஜி மறைந்ததை அறிந்து இவர் உடல் நலம் சீர்கெட்டதையும், அதை பொருட்படுத்தாமல் மும்பையில் இருந்து வந்ததையும் சொல்லி இருக்கிறார்.

இறுதி ஊர்வலத்தில் ரஜினிக்கு அவர் அட்வைஸ் ஒன்று வழங்கினார். அதை நானும் பின் பற்றுகிறேன். ரஜினி இளையராஜாவை சாமி என அழைப்பதும், இளையராஜா உரிமையுடன் ரஜினிக்கு அட்வைஸ் வழங்குவதும், அதை ரஜினியும் அடக்கத்துடன் கேட்பதும் வியப்பாக உள்ளன.

அதே போல கமலுடனான அனுபவத்தையும் சொல்லி இருக்கிறார்.

ஹே ராம் படத்துக்கு முதலில் இன்னொருவர் இசையமைத்து பாடல் காட்சிகளும் படமாகிவிட்டன, ஆனால் சில காரணங்களுக்காக அந்த இசை அமைப்பாளருக்கும் கமலுக்கும் ஒத்து போகவில்லை.

எனவே இளையராஜாவை அணுகி பின்னணி இசை அமைத்து தருமாறு கேட்கிறார்.
பின்னணி இசை மட்டும் தனியாக செய்ய முடியாது என ராஜா மறுக்கிறார்.
சரி . பாடலும் நீங்களும் செய்யுங்கள்.. ஏற்கனவே எடுத்த பாடல் காட்சிகளை தூக்கி போட்டு விட்டு , புதிதாக படம் எடுக்கலாம் என்கிறார் கமல். பணம் செலவானாலும் பரவாயில்லை என்று துணிகிறார் கமல்.

தேவையற்ற செலவை கமலுக்கு ஏற்படுத்த ராஜா விரும்பவில்லை. எனவே ஏற்கனவே எடுத்த பாடல் காட்சிகளுக்கு ஏற்ப , புதிதாக இசை அமைக்கிறார் அவர். ஒருவர் இசை அமைத்து எடுக்கப்பட்ட காட்சிகளுக்கு  ஏற்ப இன்னொருவர் இசை அமைப்பது எவ்வளவு பெரிய சவால் !!! அதை செய்கிறார் ராஜா..


இப்படி ஏராளமான தகவல்கள் ...

கவிதைக்கு பொய் அழகு , தர்மத்துக்கு பொய் அழகா என்ற தலைப்பில் ஒரு கட்டுரை.
ஏதோ ஒரு கவிஞரை பற்றி எழுதி இருக்கிறார். அது எந்த கவிஞர் என தெரியவில்லை :) தெரிந்தால் சொல்லுங்கள்

ஒரு கவிஞரை அறிமுகப்படுத்தி வாய்ப்பளித்தாராம். ஆனால் தொடர்ந்து வாய்ப்பளிக்க முடியவில்லையாம். கவிஞர் உதவி கேட்டு கெஞ்சுவாராம். ராஜாவும் உதவினாராம்..

இந்த நிலையில், புது இசையமைப்ப்பாளரை காக்காய் பிடித்து , அந்த கவிஞர் பெரிய ஆள் ஆகி விட்டாராம். அதன் பின் அவர் நடந்து கொண்ட விதம் ராஜாவை செருப்பால் அடித்தது போல இருந்ததாம்..

யார் அந்த கவிஞர் ? : )

ஆப்பரேஷன் நடந்து , பேச முடியாத நிலையில் இருந்த போது ரஜினி படத்துக்கு விசில் மூலமே , விசில் அடித்து இசை அமைத்த செய்தி ஆச்சர்யமாக இருக்கிறது. அப்படி இசை அமைக்கப்பட்ட பாடல் என்ன ?




” ளிளி மகள் திதிதி மிமி மிமி செத்தாள் ”
இதன் அர்த்தம் என்ன ?

புத்தக கண் காட்சியில் இந்த புத்தகம் கிடைக்காவிட்டால், நானே சொல்லி விடுகிறேன் :)

பால் நிலா பாதை
இளையராஜா
அரும்பு பதிப்பகம்

சிறப்பம்சங்கள் 


  • பாரதிராஜா, கமல்ஹாசன் முன்னுரைகள்
  • சிறுகதைகளைப் போன்ற கிராம அனுபவங்கள்









Thursday, December 22, 2011

சில இலக்கியவாதிகளும் , சில பழ மொழிகளும்

தமிழ் மொழியின் பொக்கிஷங்களாக திகழ்வது பழமொழிகள்.. ஒவ்வொரு விதமான ஆட்களுக்கும் சம்பவங்களுக்கும் பொருத்தமான பழ்மொழிகள் தமிழின் தனி சிறப்பு...

சில இலக்கியவாதிகளுக்கு பொருத்தமான பழ்மொழிகளைப் பாருங்கள்

சாரு நிவேதிதா 

  • மூன்று முறை முகத்தில் அடித்தால் புத்தருக்கும் கோபம் வரும்.
  • முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ
  • மலை அத்தனை சாமிக்குக் கடுகு அத்தனை கற்பூரம் .
  • அறிவுடையாரை அரசனும் விரும்புவான்.
எஸ் ராமகிருஷ்ணன் 

  • மாடு கெட்டால் தேடலாம் மனிதர் கெட்டால் தேடலாமா?
  • மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா?
  • இரண்டு வீட்டிலும் கலியாணம், இடையிலே செத்ததாம் நாய்க்குட்டி.

மனுஷ்யபுத்திரன் 

  • புத்திகெட்ட இராசாவுக்கு மதிகெட்ட மந்திரி.
  • அடாது செய்தவன் படாது படுவான்.
  • அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்
ஜெயமோகன் 




  • ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.
  • எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கொடுத்தான்
  • ஓட்டை பானையிலும் சர்க்கரை இருக்கும்
பாலகுமாரன் 



  • கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு.
  • ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று
  • ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்.



அவதூறு விமர்சகர்கள்

  • அவசரக்காரனுக்குப் புத்தி மட்டு
  • அற்ப அறிவு அல்லலுக்கு இடம்
  • கங்கையில் மூழ்கினாலும் காக்கை அன்னம் ஆகுமா?



உயிர்மை 


  • .அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?
  • ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி.
  • நாய்க்கு வேலையில்லை நிறக நேரமும் இல்லை

.










Sunday, December 18, 2011

பின் நவீனத்துவ பிதாமகனுக்கு பீர் அபிஷேகம்- அர்ச்சனை, சிறப்பு வழிபாட்டுடன் சாருவின் பிறந்த நாள் கொண்டாட்டம்

இலக்கியம் என்றால் ஏன் அலறுகிறோம்..? ஏன் நமக்கு பிடிப்பதில்லை.

காரணம் இலக்கியம் என்றால் கடினமானது , வாழ்க்கைக்கு தேவையில்லாத ஒன்று என்ற எண்ணம் நம் மனதில் பதிந்து விட்டதுதான்.

இந்த நிலை ஏற்பட இலக்கியவாதிகளும் ஒரு காரணம். 

ஒருவர பிரபலமாகி விட்டால் , அவரை இலக்கியவாதி என ஏற்க மறுப்பது, எளிமையான எழுத்துக்களை ஏற்க மறுப்பது , ஆழமான விஷ்யங்களை தெரிந்து கொள்ள எந்த முயற்சியும் செய்யாமல் , குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுவது , வேறு மொழி இலக்கியங்கள் அறியாமல் இருப்பது போன்றவையே , தமிழக இலக்கியவாதிகளின் அடையாளமாக இருந்து வந்தது.

இந்த நிலையில் வெளி வந்த சீரோ டிகிரி , ஒரு புதிய வகை எழுத்தை தமிழுக்கு அறிமுகப்படுத்துயது. இளைஞர்கள் கொஞ்சம் தமிழையும் வாசிக்க தொடங்கினர்,

பின் நவீனத்துவம், சார்த்தர் , போர்ஹேஸ் போன்ற பெயர்கள் சர்வசாதாரணமாக அனைவருக்கும் தெரிகிறது என்றால் அதற்கு முழு காரணம் அல்ட்டிமேட் ரைட்டர்தான்

இண்டர் நெட் எல்லாம் அந்த காலத்திலேயே அவர் எழுதிய விஷ்யங்களைப்பார்த்தால் நமக்கெல்லாம் பிரமிப்பாக இருக்கிறது. அப்போதெல்லாம் வாசிப்பு பழக்கம் இன்றைய நிலையை விட மோசமாக இருந்தது. அப்படி இருந்தும், அதைப்பற்றி கவலைப்படாமல், எல்லோருக்கும் பெய்யும் மழை போல , உயர்ந்த விஷ்யங்களை படைத்து வழங்கி வந்தவர் சாரு..

அவரை ஒருவர் போற்றுகிறார் என்றால் , சாரு என்ற தனி மனிதனை போற்றவில்லை. உழைப்பை, , படிப்பை, மொழி ஆளுமையை, சமுதாயத்தின் மேல் கொண்ட அன்பை, படைப்பு திறனை சாருவை வணங்குவதன் மூலம் வணங்கிறார் , போற்றுகிறார் .

அந்த வகையில், சாருவின் பிறந்த நாளை குரு பூஜையாக கொண்டாட , சிலர் விரும்பினார்கள்...  பாத பூஜை செய்யவும் திட்டமிடப்பட்டது 

வெறும் வாயை மெல்பவர்களுக்கு அவல் கிடைத்தது போல இந்த மேட்டர் உருவானது.

எக்ஸைல் விழா வெற்றிகரமாக நடந்தது உங்களுக்கு தெரியும். ஆனால் பொறாமை கண்களால் பாதிக்கப்பட்டு சில பாதிப்புகள் ஏற்பட்டது யாருக்கும் தெரியாது.. திருஷ்டி சுற்றி போடுதல் போன்றவற்றில் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு இது தற்செயலாக தோன்றலாம். ஆனால் இது உண்மை என்பது அனுபவப்பட்டவர்களுக்கு தெரியும்..

எனவே குரு பூஜையை சாருவின் இல்லத்தில் நடத்தும் மாற்றப்பட்டு ஆலயத்தில் நடத்தப்பட்டது.. 

பல்வேறு ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன 

இனிப்புகள் வழங்கப்பட்டன..  

பீர் அபிஷேகம் , அர்ச்சனை, நெய் தீப வழி பாடு, எக்ஸைல் நூலுக்க்கு சிறப்பு ஆராதனை என தூள் கிளப்பப்பட்டது.

ஆலயத்தின் உள்ளே புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை.  முடிந்த வரை எடுத்த படங்கள் உங்கள் பார்வைக்கு,,,
















Tuesday, December 13, 2011

கூறுகெட்ட கவிஞர்களின் குணக்கேடு - விபச்சார "வேலைக்கு" ஆள் எடுக்க சொன்னவரின் விபரீத விமர்சனம்


    ஒரு காலத்தில் கவிஞர்கள் என்றால் கவிதை நினைவுக்கு வந்தது. இன்றைய நிலையில் கவிஞர்கள் என்றால் , குறுக்கு புத்தியும் துரோகமும்தான் நினைவுக்கு வருகிறது.

சாருவிடம் இருக்கும் மிகப்பெரிய மைனஸ் பாயிண்ட் என்றால் அவருக்கு நடிக்க தெரியாது. போலியாக புகழ தெரியாது.  மேடையிலேயே ஒரு முறை புத்தகத்தை கிழித்து எறிந்ததை மறந்து இருக்க மாட்டீர்கள் . யாருக்கு ஆதரவாக , யாருடைய இழிவை நீக்க அதை செய்தாரோ , யாரை காப்பாற்ற ப்ல எதிர்ப்புகளை சந்தித்தாரோ,  அந்த நபரே பிற்காலத்தில் துரோகியாக மாறினார்.
ஓசியில் கட்டுரை எழுதி கொடுத்து அந்த கவிஞரின் பத்திரிகை வளர உதவிய சாருவுக்கு அவர் சமீபத்தில் நன்றியை பின் வருமாறு காட்டினார்.
சாருவுக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் ஒருவர் இருக்கிறார் . அறிவில் சிறந்த அவர் , புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டால்  , வாசகர்களுக்கு பயனுள்ளாதாக அமையும் என கருதி அவரை அழைத்தார், அந்த எழுத்தாளருக்கும் சாருவை மிகவும் பிடிக்கும்,. தேகம் விழாவில் அவர் பேசியது இன்றும் விரும்பி கேட்கப்படுகிறது , படிக்கபடுகிறது .

எனவே அவர் விழாவிற்கு வருகிறேன் என ஆர்வமாக ஒப்புக்கொண்டார். ஆனால் அந்த கவிஞர் , எழுத்தாளருக்கு டார்ச்சர் கொடுத்து விழாவிற்கு போக முடியாமல் செய்தார் . சீப்பை ஒழித்து வைத்தால் கல்யாணம் நின்று விடுமா என்ன ? விழா சிறப்பாக நடந்தது.
இப்போது நான் சொல்ல வருவது அந்த சம்பவத்தை பற்றி அன்று.

      விஷயத்துக்குள் போகும் முன்பு ஒரு   ஃபிளேஷ் பேக்.

********************************************************

அந்த காலத்தில் தமிழகத்தில்  தேவதாசி என்ற முறை இருந்தது. சில விளிம்பு நிலை குடும்பங்களில் சிறிய வயதிலேயே பெண்களை ( சிறுமிகளை )  வீட்டில் இருந்து பிரித்து, கோயில் சொத்தாக ( ? ! ) ஆக்கி விடுவார்கள்.அதாவது அவர்கள் ஊரின் பொதுச்சொத்து. தேவர் அடியார் என்பது அவ்ர்கள் பெயர் . அந்த பெயர்தான் திரிந்து இன்று வேறு பெயரில் வழங்கப்படுகிறது.

இப்படி ஒரு அநியாயம் , அனீதி சில குடும்பங்களுக்கு இழைக்கப்படுவதை நிறுத்த பல பெரியவர்கள் போராடினார்கள். பெரியார் இதில் தீவிரமாக இருந்தார். குடியரசு இதழில் எழுதியுள்ள்ளார்.

இந்த பெரும் போராட்டத்துக்கு பின், சட்டசபையில் தேவதாசி முறை ஒழிப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

பழமைவாதிகள் தேவதாசி முறையை ஒழிக்க கூடாது என்றனர். அவர்களின் தலைவர் சத்தியமூர்த்தி அய்யர் ஆவேசமாக பேசினார் “ தேவதாசி முறை ஒழிந்தால் , பாலுணர்வுக்கு வடிகால் இல்லாமல் போய் விடும். எனவே ஊரில் கற்பழிப்பு போன்ற பாலியல் குற்றங்கள் பெருகும். தேவதாசி முறை என்பது பாலியல் குற்றங்களை தடுக்கும் பெரும் சேவையாகும் . எனவே இந்த முறை தொடர வேண்டும் . தேவதாசிகளாக பணியாற்றினால் மோட்சம் கிடைக்கும்  “ என்றார்.

    தேவதாசி ஒழிப்புக்கு போராடிய முத்து லட்சுமி எழுந்தார். அய்யரின் கண்களை பார்த்து சொன்னார் “ எங்கள் இனப்பெண்கள் இத்தனை நாள் மோட்சம் பெற்றது போதும். இனி உங்கள் இனப்பெண்களை இந்த சேவைக்கு அனுப்பலாமே “

கேட்டதும் அய்யர் வாய் பேசாமல் அம்ர்ந்தார்.

அய்யரை வாயடைக்க செய்வதற்காக அப்படி சொன்னாரே தவிர, எந்த இனப் பெண்களாக இருந்தாலும் தேவதாசி முறையில் ஈடுபடக்கூடாது என்பதே அவர் நிலைப்பாடு.

இப்படி பல நல்லவர்கள் போராடித்தான் தேவதாசி முறையை ஒழித்தனர். அதன் பலனாக பெண்கள் இன்று நல்ல நிலைக்கு வந்த்துள்ளனர்.  நல்ல பணிகளுக்கு செல்கின்றனர்..ஆண்களை மிஞ்சி பல துறைகளில் வளர்ந்து வருகின்றனர்
***********************************

     ஓர் இளம் கவிஞர் சாருவை தன கவிதை புத்தக வெளியீட்டுக்கு அழைத்தார்.

சாரு பொதுவாக , மிகவும் யோசித்துதான் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார். ஆனால் அழைத்தவர் இளைஞர், அறிமுகமானவர் என்பதால் ஒப்புக்கொண்டார். கவிஞர் புத்தகத்தை கொடுத்து விட்டு சென்றார்

அந்த புத்தகத்தை படிக்க தொடங்கியதும் சாருவின்  முகம் மாறியது.  புதிய கவிஞர் என்பதால், கவிதைகள் கத்துக்குட்டித்தனமாகத்தானே இருக்கும் , இதில் கோபப்பட என்ன இருக்கிறது  என அவர் அருகில் இருந்த நண்பர்களுக்கு புரியவில்லை.

அவர் நெருங்கிய நண்பர் அந்த புத்தகத்தை படித்து பார்த்தார், பார்த்ததுமே சாருவின் கோபத்துக்கு காரணம் புரிந்தது.

கவிதை அழகுணர்ச்சியோ, மொழி நயமோ, தரமோ இல்லாமல் இருந்தது பிரச்சினை அல்ல, கவிதைக்கு பின் இருந்த அருவருப்பான கேவலமான சிந்தனையே ( perversion ) , அவர் முக மாற்றத்துக்கு காரணம்..

    பாலியல் தொழில் தள்ளப்பட்டுள்ள அப்பாவி பெண்கள் ஏராளம். இந்த பரிதாபத்துக்குரிய பெண்கள் உடல் சுகத்துக்காகவோ, ஆடம்பர வாழ்வுக்காகவோ இதில் ஈடுபடுவதில்லை. அவ்ர்கள் விருப்பம் இன்றி இதில் தள்ளப்படுபவர்களே அதிகம்..

இதை எல்லாம் புரிந்து கொள்ளாமல் , தன் கருத்தை அள்ளி வீசி இருந்தார் கவிஞர்...

            விபசாரத்தை சட்டபூர்வமாக அங்கீகரிக்க வேண்டும், இதை ஒரு தொழிலாக அங்கீகரித்து , மேலும் பல பெண்களை இந்த தொழில் சேர்த்தால், ஊரில் பாலியல் குற்றங்கள் குறையும், பணிக்கு சென்று சிரித்து பேசும் பெண்கள் எல்லாம் ஒரு வகையில் விபச்சாரம் செய்கிறார்கள் என்றெல்லாம் பெண்மையை கேவலப்படுத்தி இருந்தார் அவர்.

அந்த ஆபாச ஆணாதிக்க சிந்தனை களஞ்சியத்தில் இருந்து , ஓரளவு பிரசுரிக்க தகுந்த சில உங்கள் பார்வைக்கு..

  • இன்றைய தேதியில் இங்கே
    எவளுக்கும் சாத்தியமில்லை -
    பெய்யெனப் பெய்யும் மழை
  • மதிப்பெண் வாங்கப் பேராசிரியரிடத்தோ
    பேரம் பேசுகையில் கடைக்காரனிடத்தோ
    வட்டி வாங்கவரும் கடன்காரனிடத்தோ
    லஞ்சம் கேட்கும் அரசு அதிகாரியிடத்தோ
    நீண்ட வரிசையில் முன் நிற்பவனிடத்தோ
    பல்லிளித்துக் குழைந்து நின்றிருக்கக்கூடும்
    உம் வீட்டுப்பெண்டிர் – அதன் பெயர் என்ன?
  • வேசிகளை யொழிக்குமொரு
    கலாசாரத்தில் கணிசமாகும் -
    கற்பழிப்பும் கள்ளத்தொடர்பும்.
கற்பழிப்பை குறைக்க வேண்டுமானால், பல பெண்களை வேசிகளாக்க வேண்டும், இந்த தொழில் தள்ளப்பட்டவர்களை மீட்க கூடாது, மாறாக அவர்களுக்கு அங்கீகாரம் தர வேண்டும் என்பது போன்ற இந்த வரிகளை படித்து , நண்பர்கள் ஆவேசப்பட்டனர். ஒரு நோய்மையான மனதில் ( sick mind) இருந்து தோன்றிய  இந்த கவிதை நிகழ்ச்சியில் கலந்து கொள்வது சாருவின் தகுதிக்கு தகாது என நினைத்தனர். 

சாரு இந்த ஆபாச புத்தக வெளியீட்டில் கலந்து கொண்டு, உணர்ச்சி வசப்பட்டு ஏதாவது செய்து விட்டால், பிரச்சினை ஆகி விடுமே என்ற அக்கறையில், இதில் நீங்கள் கலந்து கொள்ள கூடாது என உரிமையுடன் வற்புறுத்தினர்.


நண்பர்களின் எதிர்ப்பையும் மீறி , சாரு அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்றால், அதற்கு காரணம் ஓர் இளைஞனை ஊக்குவிக்க வேண்டும் என்ற நல்லெண்ணம்தான்.

அவர் கலந்து கொண்டதே , அந்த நிகழ்ச்சிக்கு பரவலான கவனத்தை பெற்று தந்தது . ஆனால் போலியாக பாராட்டவும் விரும்பவில்லை.. ம்னதில் இருந்த குமுறல்களை கொட்டி தீர்க்கவும் இல்லை. 

பொதுவான சில விஷ்யங்களைப்பற்றி மட்டும் பேசினார். அந்த பேச்சு சிறப்பாக அமைந்தது. ஆனாலும் அந்த கவிஞருக்கு ஏமாற்றம்.

பாரதிக்கு அப்புறம் இவர்தான் சிறந்த கவிஞர் என்றெல்லாம் பாராட்டுவார் என எதிர்பார்த்த அவருக்கு அப்படி நடக்காதது வருத்தமே.. இப்படி பாராட்டுவதற்கென இன்னொருவர் இருப்பது அவருக்கு தெரியவில்லை. இந்த ஆபாசத்தை பாராட்ட முடியாது என சொல்லி விட்டுத்தான் மேடைக்கு வந்தார் சாரு. அப்படி இருந்தும் அந்த கவிஞருக்கு ஏமாற்றம்.

 அதில் இருந்து சாரு மீது குரோதத்துடன் இருந்து வந்தார் அவர். இந்த நிலையில் எக்சைல் வெளியானது.

    ஒரு எண்டர்டெய்னர் போன்ற விறுவிறுப்பான நடையுடன் , ஓர் இலக்கிய படைப்பு வருவது இதுவே முதல் முறை. முதல் பக்கம் முதல் , கடைசி பக்கம் வரை தொய்வே இல்லாத நாவல். ஆன்மீகம் , கலை, சினிமா , இசை, காமம் , காதல் என அது தொடும் எல்லைகள் ஏராளம். ஒவ்வொரு வாசிப்பிலும் ஒவ்வொரு உணர்வை தரும் மாஸ்டர் பீசாக இருப்பதால்தான், மதன்  , இந்திரா பார்த்த சாரதி, வாலி போன்றோர் இதை உலகத்தரம் மிக்கது என்றனர்.


 அதற்காக எல்லோரும் இதை பாராட்ட வேண்டும் என்பதில்லை . தாராளமாக விமர்சிக்கலாம். 

 நண்பரும், பத்திரிக்கையாளரும் , பதிவருமான லக்கிலுக் யுவகிருஷ்ணா தேகம் நாவல் தன்க்கு பிடிக்கவில்லை என விமர்சித்தார். அதற்காக அவர் மீது எந்த கோபமும் இல்லை. ஏனென்றால் அவர் விமர்சனத்தில் நேர்மை இருந்தது. தன்க்கு தோன்றுவதை வேறு உள் நோக்கம் ஏதுமன்றி கூறினார். அதை ரசிக்கும்படியும் கூறினார். அவர் கருத்தை ஏற்கவில்லை என்றாலும், அந்த விமர்சன கட்டுரை நன்றாக இருப்பதை அன்றே போன் செய்து பாராட்டினேன். 

இப்போது கூட சாருவின் ஆன்மீக நிலைப்பாடு தன்க்கு பிடிக்கவில்லை என லக்கி வெளிப்படையாக சொல்லி வருகிறார். தாராளமாக சொல்லலாம். இப்படி சொல்வது அவர் மீதான மதிப்பை கூட்டுகிறதே தவிர குறைக்கவில்லை.

மீண்டும் சொல்கிறேன். எதிர் கருத்து கூடாது என்பதல்ல.. எதிர் கருத்தை ஆதாரபூர்வமாக சொல்லுங்கள்.. சுவையாக சொல்லுங்கள் . வன்மத்தோடு , உள் நோக்கத்தோடு சொல்லாதீர்கள்.

உதாரணமாக நானும் கடவுளும் என்ற சாருவின் நூலை படித்தேன். மிகவும் பிடித்து இருந்தது,

இதற்கு எதிராக நாத்திகவாதி என்ன எதிர் வினை ஆற்றுவார் என்பதை தெரிந்து கொள்ள எனக்கு ஆவலாக இருந்தது. லக்கி யுவாவுக்கு , புத்தகம் அனுப்பி அவர் விமர்சனம் வாங்கி வெளியிட இருக்கிறேன். அதாவது எதிர் கருத்து என்ன தெரிந்து கொள்ள அந்த அளவுக்கு ஆவலாக இருக்கிறேன். 

ஆக எதிர் கருத்து சொல்வது தவறல்ல. எதிர் கருத்து சொல்பவர்கள் எதிரிகளும் அல்லர்.

ஆனால் உள் நோக்கத்துடன் சகதியை வீசி எரிவது விமர்சனம் என்ற பிரிவில் வராது. அது அவதூறு எனற பிரிவில் வரும். 

நல்ல ஒரு விஷ்யம் வரும்போது, இப்படி அதை களங்கப்படுத்தினால் நாளை யாருமே நல்ல விஷ்யம் படைக்க முன் வர மாட்டார்கள் என்பதால்தான், இந்த அவதூறுக்கான எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டி இருக்கிறது.

 வலைப்பூ என்பது சொந்த வீடு போன்றது. அங்கு வாந்தி எடுத்து வைத்தால், கண்டு கொள்ளாமல் சென்று விடலாம். ஆனால் தமிழ் பேப்பர் போன்ற இணைய தளங்கள் , அனைவருக்கும் பொதுவான பூங்கா போன்றவை. அங்கு வாந்தி எடுத்தால், எதிர்ப்பை பதிவு செய்தாக வேண்டும்..

     இது போன்ற அவதூறுகளால் , ஒரு புத்தகத்தின் வெற்றியை தடுக்க முடியாதுதான். ஆனால் அடுத்த தலை முறை படைப்பாளிகளை இது போன்ற அவதூறுகள் பாதிக்கும். இவ்வளவு எதிர்ப்புகளை தாண்டி எழுதித்தான் ஆக வேண்டுமா என்ற மனச்சோர்வு அடுத்த தலை முறை எழுத்தாளர்களுக்கு வந்தால் , அது தமிழுக்கு நல்லதல்ல. என்ன கஷ்டப்பட்டாலும் , எழுதுக்கொண்டே இருப்பேன் என்ற சாரு போன்றவர்களின் பிடிவாதம் , இனி வரக்கூடியவர்களுக்கு இருக்குமா என்பது சந்தேகமே..

எனவே நல்ல விஷ்யம் இழிவு படுத்தப்படும்போது, ஆதரவுக்குரல் எழுப்புவது தார்மீக கடமை. இப்படி எழுப்புவது எழுத்தாளனை காக்கவோ, அந்த படைப்பை காக்கவோ அல்ல..  ஆக்க்பூர்வமான படைப்புகளுக்கும் ஆதரவாளர்கள் என்றும் இருப்பார்கள் என்பதை வெளிக்காட்டும் முயற்சியே இது.

இதை விமர்சனம் என சொல்லாமல் ஏன் அவதூறு என்கிறேன்? ஏன் உள் நோக்கம் கொண்ட கட்டுரை என்கிறேன் ?

அந்த விமர்சனத்தின் சில வரிகளை பாருங்கள்

  •  ”அவரது கடைசி நாவலான தேகம் படித்த பின் அவர் மீதான நம்பிக்கை கிழவன் குறி போல் சுத்தமாகப் படுத்து விட்டது. ஆனாலும் விதி அப்படி சும்மா விடுமா?”

  • ” கடந்த இருபது வருடங்களுக்கு மேலாய் சாரு அரைத்து வரும் அதே பழைய புளித்த மாவு ”

  • “ ‘இது ( எக்சைல் ) என்ன மயிரு மாதிரி?’ என்று தோன்றும். ”

  • “ எக்ஸைல் நாவலைப் படித்ததிலிருந்து மதுமிதா இரவில் தூங்கும் போதெல்லாம் ”Oh Shit” என்று இடைவெளியே இல்லாமல் சொல்லி அரற்றிக் கொண்டிருந்தாள்.”

  • ” இப்படி ஒன்றுக்கும் மற்றதற்கும் எவ்வகையிலும் சம்பந்தமற்ற‌ விஷயங்களின் சுவாரஸ்யமற்ற குழப்பக் கலவைதான் இந்த‌ எக்ஸைல் நாவல்.”

  • குமுதம் வார இதழ், குமுதம் ரிப்போர்ட்டர், குமுதம் ஜோதிடம், குமுதம் பக்தி ஸ்பெஷல், குமுதம் சினேகிதி, குமுதம் ஹெல்த் ஸ்பெஷல், குமுதம் தீராநதி ஆகிய ஒவ்வொன்றிலும் சில பக்கங்களைக் கிழித்தெடுத்து சீட்டுக்கட்டு போல் கலக்கியெடுத்து அச்சுக்கனுப்பி நாவலாக்கி விட்டார்களோ எனத்தோன்றுகிற‌து.

மேற்கண்ட வரிகளை  நடு நிலையான ஓர் ஆள் எழுதவே முடியாது. எக்சைல் சொல்லும் கருத்துக்கள் குறித்தும், பேசு பொருள் குறித்தும் , அபிப்ராய பேதங்கள் இருக்கலாமே தவிர , சுவாரஸ்யமற்ற கலவை என சொல்லவே முடியாது.
 மேலும் அவர் பயன்படுத்தி இருக்கும் வார்த்தைகளைப்பாருங்கள். எந்த அளவுக்கு வெறுப்பு மண்டி கிடக்கிறது.ஓர் எதிரி இப்படி எழுதி இருந்தால் புரிந்து கொள்ள இயலும். நேற்று வரை நண்பராக இருந்தவர் ஏன் இப்படி எழுதுகிறார்? 

  • இருபது ஆண்டுகளாக சாரு அரைத்த மாவையே அரைக்கிறார் என்றால் , ஏன் இந்த ஆண்டு வரை அவர் நூல்களை படிக்கிறார்?

  • தேகம்  நாவலில் சாரு மீதான நம்பிக்கை போய் விட்டால் , மீண்டும் ஏன் எக்சைலை படிக்கிறார்?
  • எக்சைல் ம** மாதிரி இருக்கிறது என்றால் , அதன் வடிவமும் , அதன் கேரக்டர்களும் எப்படி மனதில் நிற்கின்றன? எக்சைல் வடிவ  பாணியில் விமர்சனம் எழுதி இருக்கிறாரே ?
  • பகடி என்பது ஒரு எழுத்தின் , செயலின்  சாரத்தை உள்வாங்கி அதை தன் பாணியில் கிண்டல் செய்வது . ( உ.ம் எக்சைலின் 66 , 67 பக்கங்கள் ) ஒருவர் எழுத்தை அப்படியே காப்பி பேஸ்ட் செய்து , சில வார்த்தைகளை மாற்றி போடுவது பகடி அல்ல.. காப்பி.. அதாவது சாரு போல எழுத முயன்று , முடியாததால் இப்படி பிதற்றுகிறாரா?
  • ”சீட்டுக்கட்டு போல் கலக்கியெடுத்து அச்சுக்கனுப்பி நாவலாக்கி விட்டார்களோ எனத்தோன்றுகிற‌து” பின் நவீனத்துவ எழுத்து எப்படி இருக்க வேண்டும் என தெரியாவிட்டால் பரவாயில்லை. எக்சைலிலேயே குறிப்பு இருக்கிறதே..படித்தாரா? படித்து இருந்தால் இப்படி எழுதி இருக்க மாட்டார். படிக்காவிட்டால், விமர்சனமே எழுதி இருக்க கூடாது



இவ்வளவு விரிவாக நான் எழுத என்ன காரணம்?

ஒரு எதிர் விமர்சனத்தால் புத்தக விற்பனை படுத்து விடப்போவதில்லை..

உண்மை நிலையை , இலக்கிய வட்டாரத்துக்கு வெளியே இருக்கும் ,வாசிப்பு பழ்க்கம் கொண்டவர்களுக்கு உணர்த்துவதற்காகவே இதை எழுதினேன்.

சாருவிடம் சிலவ்ற்றை எதிர் பார்க்கிறார்கள்.. அது தார்மீக நெறிகளுக்கு புறம்பாக இருப்பின் சாரு அதை மறுத்து விடுகிறார். இந்த ஏமாற்றத்தில் அவதூறுகளை கிளப்புகிறார்கள்.

அதில் ஒரு கேஸ் ஸ்டடியாகத்தான் இந்த விவகாரத்தில் இருக்கும் பின்னணி சமாச்சாரங்களை விளக்கினேன்.

இது போலத்தான் பல்வேறு விஷயங்கள் நடக்கின்றன.

இந்த நண்பர் சும்மா எழுவதோடு நிறுத்தினார். இவருக்கு முன்னோடியான இன்னொரு கவிஞர் சொல்லவொண்ணா பிரச்சினைகளை சதி வேலைகள் மூலம் செய்தார்.

இரண்டுக்கும் மோட்டிவ் என்பது ஒன்றுதான் .



Perversion + jealousy   = Poisonous thoughts 





Sunday, December 11, 2011

அல்ட்டிமேட் ரைட்டரின் எக்ஸைல் - பின் நவீனத்துவ ரகளை


மிழக இலக்கிய வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தை பிடிக்கும் அளவுக்கு பிரமாண்டமாக நடந்தது அல்ட்டிமேட் ரைட்டரின் எக்ஸைல் நாவல் வெளியீட்டு விழா.

முன்பு ஒருவர் சாருவின் மீது கொண்ட பொறாமையை மனதில் வைத்து மட்டம்தட்டி வந்தார். ஆண்டுக்கு 80 புத்தகங்கள்தான் விற்கின்றன என கணக்கு காட்டி ஏமாற்றினார். அவர் ஒட்டு மொத்தமாக விற்ற புத்தகங்களின் எண்ணிக்கையை விட , விழா அன்று விற்ற புத்தகங்களின் எண்ணிக்கை பல மட்ங்கு அதிகம்.

இந்திரா பார்த்தசாரதி பாராட்டு மழையில் புத்தகத்தை நனைத்தார். பேசி முடிந்து இருக்கைக்கு திரும்பியவர், மீண்டும் எழுந்து வந்து பாராட்டினார்.

பேசும் ஐடியா இல்லாமல் வந்த மதன், சாருவின் வேண்டுகோளுக்கிணங்க, குறிப்புகள் ஏதும் இல்லாமல் மனமார நாவலை பாராட்டினார்.

இப்படி எத்தனையோ சாதனைகளை வெளிவரும் முன்பே எக்சைல் செய்தது
ஆனால் ஒரு வாசகன் படிக்க ஆரம்பிக்கும்போது, இந்த அம்சங்கள் எல்லாம் அவன் கணக்கில் வராது.

தன் கையில் தவழும் புத்தகம் , அவன் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறதா இல்லையா என்பதே கேள்வி.

எனவே விருப்பு , வெறுப்பு என்றி இந்த நாவலை அலசுவது நம் கடமை. இந்த நாவல் என்ன சொல்கிறது? எப்படி சொல்கிறது? ஒரு சாராசரி வாசகனின் பார்வையில் நாவல் எப்படி இருக்கிறது?

பார்க்கலாம்..

முதலில் ஒன்று சொல்லி விடுகிறேன்.

இது வரை வந்த தமிழ் நாவல்களில் இது சற்றே வேறுபட்டது. இது ஒரு த்ரீ இன் ஒன் நாவல்.

இதை நீங்கள் ஒரு கட்டுரைத்தொகுப்பாக படிக்கலாம்.. சுய சரிதையாயாக படிக்கலாம். அல்லது நாவலாகப் படிக்கலாம்..

எப்படி படித்தாலும், சுவாரஸ்யமாகவும் பலன் மிக்கதாக இருக்கும் என்பதே இதன் சிறப்பு.

கட்டுரை தொகுப்பாக படித்தால் ஏராளமான விஷயங்கள் கொட்டிக்கிடக்கின்றன,

வாழ்வில் வெற்றி பெறும் சூத்திரங்கள், மருத்துவ குறிப்புகள், வயகாரவை மிஞ்சும் வீரிய விருத்து லேகியம்  சில சமையல் குறிப்புகள், முக்கிய புத்தங்கள் பட்டியல், ஆன்மீக குறிப்புகள், சித்தர் பற்றிய குறிப்புகள், தரிசிக்க வேண்டிய ஆலயங்கள், தரிசிக்க வேண்டிய முறைகள், இஸ்லாமிய சுஃபி மகான் பற்றிய குறிப்புகள் , மது வகைகள் , பின் நவீனத்துவம் என்றால் என்ன என்பதற்கு விளக்கம் என ஒவ்வொரு பக்கமும் தகவல் சுரங்கம்.

அம்ர்ந்தால் ஒரே மூச்சில் அரை நாளில் படித்து விடலாம்.

சுய சரிதையாக படித்தால், ஓர் எழுத்தாளனின் உழைப்பு , அவன் சந்திக்கும் பிரச்சினைகள் என ஒரு சர்வதேச தரத்திலாம சுயசரிதை புத்தகம் படித்த திருப்தி கிடைக்கும்.,, ஆனால் இது முழுமையான சுய சரிதை நூல் அன்று என்பதால், இந்த கோணத்தில் படிப்பது நாட் ரெகமெண்டட்.

இந்த கோணத்தில் படித்தாலும், ஒரே அமர்வில் படித்து முடிக்கலாம்

நாவல் என்ற கோணத்தில் படித்தால்தான் , எக்ஸைலின்  முழு வீச்சயும் உள்வாங்க முடியும். ஆனால் இப்படி படித்தால் அரை நாளிலெல்லாம் படிக்க முடியாது, படிக்கவும் கூடாது.

காரணம் இந்த நாவல் வாசகனின் உழைப்பையும் கோருகிறது. சவால் விடுகிறது.

நாவலை ஆரம்பித்தால் ஜெட் வேகத்தில் செல்லும்தான். ஆனால் கஷ்டப்பட்டு பிரேக் போட்டு நிறுத்தி ஆங்காங்கு சற்று எழுத்தை முழுமையாக உள்வாங்க வேண்டும்.

நானெல்லாம் சிலவற்றை நிபுணர்களுடன், நண்பர்களுடன் பல பகுதிகளை விவாதித்த பின்பே அடுத்த பகுதிக்குள் சென்றேன்.

உதாரணமாக ஓர் இடத்தில், லக்காம் சொல்லும் woman does not exist கோட்பாடு பற்றி தெரியுமா என கேட்டு விட்டு நாவல் தொட்ரகிறது. அந்த கோட்பாடு தெரியவில்லை என்றால் , அது என்ன என தெளிவு படுத்திக்கொண்டு நாவலை தொடர்ந்தால்தான் நல்லது. சும்மா ஸ்கிப் செய்து விட்டு சென்றால் அந்த பகுதியின் அர்த்தம் சரிவர புரியாது

மேலோட்டமாக படித்தாலும் நன்றாக இருக்கும்தான். ஆனால் இப்படி படித்தால் சாரத்தை இழந்து விடுவோம். கடலுக்கு மீன் பிடிக்க செல்கிறோம். மீன் பிடித்து திரும்பி விடலாம். இன்னும் கொஞ்ச தூரம் போனால் , விலை உயர்ந்த பொக்கிஷங்கள் கிடைக்கும் என்றால் , கூடுதல் எஃபோர்ட் கொடுக்கலாம் அல்லவா? எது போல கொஞ்சம் எஃபோர்ட் கொடுத்தால், நாவலில் பல புதையகல்கள் அள்ளலாம்.

எக்சைல் என்ற பெயரே ஆழமான அர்த்தம் கொண்டது. நாடு கடத்தப்படல் என்பது இதன் பொருள்.

மரண தண்டனையை விட கொடுமையானது இது.
பல சந்தர்ப்பங்களில் நாடு கடத்துதல் என்பது நேரடியாக இருக்காது.

படித்து விட்டு வேலையில்லாமல் இருக்கிறீர்கள். வீட்டில் அவமானப்படுத்துகிறார்கள் என்றால் வீடை விட்டு வெளியேறுவீர்கள். அது ஒருவகை எக்சைல்தான்.

மயக்கம் என்ன படத்தில் தனுஷ் அனுபவிப்பது ஒரு வகை எக்சைல்தான்.

அதே போல தமிழ் நாட்டில், எழுத்தாளர்கள் புறக்கணிக்கப்பட்ட நிலையில், சொந்த நாட்டுக்குள்ளேயே எக்சைல் வாழ்க்கை வாழ்கின்றனர் என்பது ஒரு கோணம்.

ஒரு நடிகனுக்கோ , அரசியல் தலைவனுக்கோ பால் அபிஷேகம் செய்கிறீர்கள் என வைத்து கொள்ளுங்கள், யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள்.

ஓர் எழுத்தாளனுக்கு அப்படி செய்ய நினைத்தால் தொலைத்து விடுவார்கள். எழுத்தாளன் என்றால் அடங்கி இருக்க வேண்டும்,. அவனுக்கு ஏன் இந்த ஆர்ப்பாட்டம். ஆச்சாரம் கெட்டு விட்டது என ரகளையே நடக்கும்.

( இதை மீறும் பொருட்டு, இலக்கியவாதிகளின் அடையாளத்தை பிரதிபலிக்கும் ஆடையை சாரு தவிர்த்து விட்டு, வேறோர் உடையில் விழாவில் தோன்றியதை பார்த்து இருப்பீர்கள் )

இப்படிப்பட்ட சமூகத்தில் , சொந்த நாட்டிலேயே , நாடு கடத்தப்பட்டவன் போல  வாழும் உதயா என்ற எழுத்தாளனின் கதைதான் எக்ஸைல்.

ஆனால் இது அவன் கதை மட்டும் அன்று. அவன் கோணத்தில் மட்டும் கதை சொல்லப்படுவதில்லை. தன் வீட்டிலேயே அடக்குமுறையை சந்திக்கும் அஞ்சலி, ஆதிக்க சாதியில் பிறந்த ஒருவன் , குப்பை அள்ளும் வேலையில் , ஏமாந்து போய் சேரும் நிலை, உதயாவின் மகள், அஞ்சலியை காதலிக்கும் உதயா ஒரு கட்டத்தில் தானே அவளை அடக்குமுறைக்கு உட்படுத்த நினைக்கும் வினோதம் , காரணமே இல்லாமல் துன்புறுத்தப்படும் சொறி நாய், தற்கொலைக்கு தூண்டப்படும் பூங்கொடி , சிறுவர்களின் விளையாட்டால் அல்லல்படும் வளர்ப்பு நாய் என பல்வேறு பாத்திரங்கள். ஒவ்வொன்றும் மறக்க முடியாதவை. ஒரு விதத்தில் இவர்களும் கூட புகலிட வாழ்வுதான் வாழ்கிறார்கள்.

ஒருவரை எந்த காரணமும் இல்லாமல் துன்புறுத்துவதை  பல இடங்களில் பார்க்கிறோம்.

அன்பை போதிக்கும் ஆன்மீக வாதிகள்கூட அடக்குமுறையை பயன்படுத்துவதை நாவல் சுட்டிக்காட்டுகிறது..

இதை எல்லாம் பார்த்தால் , நாவல் ரொம்ப சீரியசாக இருக்குமோ என நீங்கள் நினைக்கலாம்.

அதுதான் கிடையாது.

நாவலின் துவக்க பகுதியில் இருந்து , கிளைமேக்ஸ் வரை, துள்ளல்தான், ரகளைதான் , கொண்டாட்டம்தான்.

பொது இடங்களில் அமர்ந்து படிக்காதீர்கள். படித்தால் சிரிப்பை அடக்க முடியாது. எல்லோரும் உங்களை வினோதமாக பார்ப்பார்கள்..

குறிப்பாக 66 , 67 பக்கங்களை சிரிக்காமல் படிப்பவர்களுக்கு விருது கொடுக்கலாம். செம கிண்டல்.

“ ஆரூர் சிம்மன் சாமான்ய ஆள் அல்ல. மூன்று தமிழ்களுக்கு வேந்தராக கருதப்படும் அவர் தமிழ் மொழிக்கு ஆற்றி இருக்கும் தொண்டை ஃபெர்னினான்ந்த் தெ சஸூரோடும் , க்ளோத் லெவி ஸ்த்ராஸோடும் மட்டுமே ஒப்பிட முடியும்” என ஆரம்பித்து..


”அப்போது முத்தமிழ் அறிஞர் செய்த ஒரு காரியத்தை நெல்ஸன் மண்டேலா கூட யோசித்து பார்த்து இருக்க மாட்டார் ” என்றும்


“ அப்பாவித் தமிழ்ர்கள் மேல் ராணுவத்தாக்குதல் தொடர்ந்தது. இது பற்றி முத்தமிழ் அறிஞரிடம் கேள்வி கேட்டனர். அதற்கு அவர் சொன்ன பதிலில்தான் நீங்கள் அவர் தமிழ் அறிவை புரிந்து கொள்ள வேண்டும் .அவர் சொன்னார் “ மழை விட்டும் , தூவானம் விடவில்லை .


இப்பேர்பட்ட கீர்த்தியை கொண்ட முத்தமிழ் அறிஞருக்கும், கவிச்சக்கரவர்த்திக்கும் இடையேதான் இந்த ஆண்டின் பாரதிய ஞான பீட பரிசுக்கு போட்டி. உண்மையில் இதை நீங்கள் பாப்லோ நெரூதாவுக்கும் க்ளோத் லெவி ஸ்த்ராஸுக்கும் இடையேயான போட்டியாகவே எடுத்து கொள்ள வேண்டும் .


இத்தகைய பின் நவீனத்துவ காமெடி நாடக சூழலில் “

என்று இரண்டு பக்கங்க்ளுக்கு பகடி என்றால் என்ன பாடம் எடுத்திருக்கிறார் சாரு.

இதை டைப் செய்யும்போது கூட என்னால் சிரிப்பை கண்ட்ரோல் செய்ய முடியவில்லை.


 நடிகர்  கமல் ஹாசனை ஆரம்பத்திலேயே கிண்டல் செய்து முடித்து விடுகிறார்.

சொய்ங் வாத்தியார், நிதானமில்லாமல் தண்ணி அடித்து விட்டு மணலில் கவிழ்ந்து கொள்ளும் ஞானம், கன்னமிட்டு என்று சொல்லி குழப்பும் விலை மாது, நாவலில் கலக்கும் கொக்கரக்கோவுக்கே பெப்பே காட்டும் சூப்பர் கொக்கரக்கோ, கொக்கரக்கோ கொடுக்கும் வினோத தண்டனை,  BJ என்ற குட்மார்னிங் மெசேஜ்,  “ பாக்க முடியுது...     முடியுது.. தூக்க முடியலயே என்ற அங்கலாய்ப்பு , பொது இடத்தில் உள்ளாடை அணியாமல் வந்த நடிகையை தொட மறுக்கும் பக்கிரி சாமி  , முல்லா கதை , அரசர்- ஆடு மேய்ப்பவன் கதை , உறங்காவில்லி, கருவூரார், தந்தைக்கு எழுதும் ஆபாச கடிதம்

என ரகளை செய்து இருக்கிறார் சாரு.

சீரோ டிகிரியில் பயன்படுத்திய அவரது மேஜிக் எழுத்தை நாம் காணும் இடம் ஓன்று வருகிறது. அப்பப்பா. கிளாஸ்.

சதிப்பின்னலுக்குள் உதயாவை சிக்க வைக்கும் இடமும் , புராண சம்பவமும் இணைந்து ஓர் இடம் வரும். படிக்கும்போது வித்தியாசமான உணர்வை தரும். நாவலின் முக்கியமான் இடங்களில் ஒன்று இந்த பகுதி.

திவாகர், பெரியார் படத்தை வைத்து இருக்கும் குருசாமி, நாய் கலவியை விடியோ எடுப்பவன் ( என் எடுக்க வேடனும் என்பதற்கு காரணம் இருக்கிறது , சிவா, கருவூரார் என ஒவ்வொரு கேரகடரும் நம் கண் முன் நடமாடுவது அவரின் எழுத்துக்கு வெற்றி



இதை பாருங்கள்

மது பான விருந்தின்போது ஒரு நண்பர் போர்ட்டிகோவிலேயே மூத்திரம் போனார். போதையாம். என்னங்கடா இது ? அதற்கு அட்டகாசமான பின் நவீனத்துவ விளக்கம் வேறு கொடுத்தார், அவர் அறையில் கிச்சன் , ஹால் , டாய்லெட் எல்லாம் அருகருகில் இருக்குமாம் . அந்த பழக்கத்தில் போய் விட்டாராம்.

சீரியசான ஒரு கதைக்களனை எடுத்து கொண்டு , பக்கத்துக்கு பக்கம் ரகளை செய்துள்ளார் சாரு.

அஞ்சலியின் கதை மனதை உருக்குகிறது.

வழக்கமாக , கதாசிரியர்கள் அஞ்சலியின் பார்வையில் இருந்தேதான் அனைத்தையும் பார்ப்பார்கள். ஆனால் , அஞ்சலி அதுவரை சொன்ன சம்பவங்களை , கொக்கரக்கோ தன் பாணியில் கிளைமேக்ஸில் சொல்லும் போது ஒட்டு மொத்தமாக வேறொரு பார்வை நமக்கு கிடைக்கிறது. ( மொத்தம் ஐந்து கிளைமேக்ஸ் )

ஆனால் யார் சொல்வது சரியான பார்வை என கதாசிரியர் எந்த முடிவையும் நம் மேல் திணிக்கவில்லை.

ஒரு சம்பவம் நடக்கும்போதே இன்னொரு கோணத்தையும் சொல்லி , காலம் வெளி தர்க்கம் என அனைத்தையும் கடந்து செல்கிறது நாவல்.

உதாரணமாக அய்யப்பன் அருளால் ஒரு மாபெரும் அதிசயம் நிகழ்கிறது. ஆனால் அதே அய்யப்பன் கோயிலில் விபத்தும் நடக்கிறது. இரண்டையும் வெளிப்படையாக சொல்வது சூப்பர்.

அதே போல, சிலர் செய்த தவ்றுகளுக்கு பாம்பு தகுந்த பாடம் புகட்டுகிறது. ஆனால் இன்னொரு பகுதியில் எந்த தவறுமே செய்யாமல் பலர் துன்புறுகிறார்கள்.

சிவா குறித்து உதயா சொன்னது அனைத்தும் பொய் என கொக்கரக்கோ சொல்லும்போது, நாவலின் முழு வீச்சு புரிகிறது..

பக்கிரிசாமி எனும் ஆவி சொல்லும் கதை , கேசவன் எனும் யானையின் கதை என எத்தனை முறை படித்தாலும் திகட்டாத எண்ணற்ற விஷயங்கள் நாவலில் புதைந்துள்ளன.

*******************************************************************


சரி..எனக்கு பிடித்த சில வரிகள்



  • அங்கே தத்துவவாதி என்றால் மிஷல் ஃபூக்கோ. இங்கே கமல்ஹாசன்,.காரணம் அவர்தான் சினிமாவில் நிறைய தத்துவங்கள் உதிர்க்கிறார். 
  •  நீ பேண்டீஸ் போடு , போடாமல் இரு , அது உன் இஷ்டம், ஆனால் என் கோபம் என்னவென்றால்....
  • இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி , சஞ்சய் காந்தி ஆவிகள் இங்குதான் அலைகின்றன. ஆனால் எனக்குதான் அவர்களை சந்திக்க ஆர்வம் இல்லை. எங்கள் கட்சியை ஒழித்து கட்டிய கட்சியை சேர்ந்த ஆவிகள் ஆயிற்றே
  • முன் பின் தெரியாத ஒரு பெண்ணுடன் ( டபுள் மீனிங்தான் )எப்படி சாட் செய்ய வேண்டும் 
  • கார்னிவலை எங்க ஊர்ல நடத்துங்க, எங்க ஊர்ல நடத்துங்க என சில வாச்கர்கள் யோசனை கூறினர். சரி நீங்க பொறுப்பு எடுத்து செய்ங்க என்றதும் அந்த பேச்சு நின்ற்து
  • சிவாஜியின் காதலிகள் அவருக்கு துரோகம் செய்து விட்டு, இன்னொருவரை கல்யாணம் செய்து கொள்ளும்போது, அந்த திருமணத்தில் பியானோ வாசிப்பார் சிவாஜி.அட அடா.. அப்படி ஒரு நடிப்பை மார்லன் பிராண்டோவால் கூட நடிக்க முடியாது
  • துறவை துறவுக்காக விரும்பி ஏற்பது வேறு. ஏதோ ஒன்றை வெறுத்து போய் இதை தேர்ந்தெடுப்பது வேறு
  •  நானும் வாயே திறக்காமல் அழுத்தமாக இருக்கிறேன் ( என்னது . வாயே திறக்க மாட்டீர்களா - அடிப்பாவிகளா ! - கொக்கரக்கோ ) இந்த கொக்கரக்கோதான் நாவலின் ஹீரோ. இது போல அடிக்கடி கமெண்ட் கொடுப்பார்
  • கலவி என்பது சிறிய மரணம் ( la petit mort )
  • "  நான் கடவுளை நம்புபவன். நம்பாதவன் மாதிரி நடிக்கிறேன். இல்லாவிட்டால் இந்தியாவில் எழுத்தாளனாக ஜீவிக்க முடியாது “
  • நம்முடைய மனதையும் , குணாம்சத்தையும், சிந்தனை போக்கையும் நிர்ணயிப்பதில் நாசிக்கு பெரும் பங்கு இருக்கிறது
  • எத்தனையோ தீர்த்தங்களை கண்டு வெற்றி கொண்ட கொக்க்ரக்கோவுக்கு, தன் கையில் இருக்கும் தக்கினியூண்டு தீர்த்தத்தை என்ன செய்ய வேண்டும் என தெரியவில்லை

*********************************************

பிளஸ் 

  • துள்ளல் நடை
  • புதுமையான வடிவம்
  • சமகால பிரச்சினையை அலசுவது
  • ஏராளமான தகவல்கள்
  • வாசகனை யோசிக்க வைப்பது
  • நகைச்சுவையின் உச்சத்தை தொட்டு இருப்பது
மைனஸ்

  • ஃபிரெஞ்ச் கவிதைகள் வரும் இடங்கள் கதை வேகத்தை தடுக்கின்றன ( என் போன்ற தற்குறிகளுக்கு தமிழைத்தவிர வேறு ஏதும் தெரியாது )

  • சாட் விவகாரத்தில் , கதானாயகனை சிக்க வைக்கும் பெண்ணின் மோட்டிவ் குறித்து சரி வர விளக்கவில்லை. அந்த பெண்ணுக்கும் , கதானாயகனுக்கும் முன் விரோதம் இல்லை. யாரோ தூண்டி விட்டு தான் இது நடந்து இருக்கும். அந்த சதிகாரன் யார் என்பது விளக்கப்படவில்லை

***********************************************

வெர்டிக்ட் 

 தமிழ் வாசிக்க தெரிந்த ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய  நாவல் ( குழந்தைகள் படிக்க கூடாது )

எக்சைல்- குறி தவறாத மிஸைல்